புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்ட நாள் இன்று.
புனித ஜார்ஜ் கோட்டை இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும்.
இது 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டப்பட்டது.
வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால்,
புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.
இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது
1600 ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி சூரத்தில் அனுமதி பெற்ற வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது.
கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை
அவர்கள் அப்பகுதித் தலைவர் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி அதிலே ஒரு துறைமுகத்தையும், கோட்டை ஒன்றையும் கட்டத் தொடங்கினர்.
கோட்டை புனித ஜார்ஜ் பிறந்த நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால்,
இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது.
கடலையும், சில சிறிய மீனவர் ஊர்களையும் நோக்கிக் கொண்டிருந்த இக் கோட்டைப் பகுதி விரைவிலேயே வணிக நடவடிக்கைகளின் ஒரு மையமானது.
இக் கோட்டை, இப்பகுதியிலே ஜார்ஜ் டவுன் என்னும் புதிய குடியேற்றப் பகுதி உருவாகக் காரணமாயிற்று.
இது அங்கிருந்த ஊர்களையெல்லாம் தன்னுள் அடக்கி வளர்ந்து சென்னை நகரம் உருவாக வழி வகுத்தது.
தென்னிந்தியாவில் பிரித்தானியரின் செல்வாக்கை நிலை நிறுத்தவும், ஆர்க்காடு மற்றும் ஸ்ரீரங்கப்பட்டின அரசர்களையும், பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக்காரரையும் கண்காணிப்பில் வைத்திருக்கவும் உதவியது.
#ஐஸ்_ஹவுஸ்
மெட்ராஸ் வணிக மையமாகத் தொடங்கப்பட்டபோது ஆரம்பப் பரிவர்த்தனைகள் ஜவுளியில் மட்டுமே நடந்தன. சில ஆண்டுகளில் வணிகம் வரம்பில்லாமல் விஸ்வரூபம் எடுக்கவே, வர்த்தக மதிப்புள்ள எதுவும் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டது. யானைகள் முதல் வைரங்கள் வரை இங்கும் அங்குமாகக் கடல்களைக் கடந்தன.
ஆர்மேனியர்கள், யூதர்கள் மற்றும் போர்த்துக்கீசிய வர்த்தகர்கள் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு பொருள்களைக் கொண்டு வந்து குவியல்களாகக் கடற்கரையில் கொட்டி வைத்தனர். அவற்றில் மிக விசித்திரமான இறக்குமதியானது இன்று நாம் அனைவரும் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயன்படுத்துவதாகும்.
அந்த நாட்களில் அது ஒரு பிரம்மப்பிரயத்தனத்திற்குப் பிறகுதான் சென்னைக்கு இறக்குமதி செய்தனர். 1800களில் அதை அமெரிக்காவிலிருந்து கடல் வழியாக 10,000 மைல் கொண்டு வர, மிகவும் விரிவான திட்டமிடல் மற்றும் கடினமான பயணம் தேவைப்பட்டது.
அந்த இறக்குமதி – தண்ணீர். ஆனால் திட வடிவத்தில் கட்டியாக
பக்தி இலக்கியங்களில் மதுரையை "திருஆலவாய்" அல்லது "கூடல் மாநகர்" என்பர்
ஏனெனில், மதுரை என்பது சமணர்கள் வைத்த பெயர் என்றார்
அது சம்பந்தமா
Google செய்த போது இது வந்தது
#வேறுபெயர்கள்
கூடல் நகர்
மதுரையம்பதி
நான் மாடக்கூடல்
மீனாட்சி பட்டணம்
உயர் மாதர்கூடல்
ஆலவாய்
கடம்பவனம்
அங்கண் மூதூர்
சுந்தரேசபுரி
தென் மதுராபுரி
முக்கூடல் நகரம்
இவை காரணப் பெயர்
நம்ம ஆளுங்க
மல்லிகை நகர், வைகைநகர்
சிறப்பு பெயர் வைத்தனர்
#மலைநகர்
பக்கத்தில் ஆனைமலை திருப்பரங்குன்றம் இருப்பதால் மலை நகர்
அப்பவே பல மாநிலங்கள், தமிழ்நாட்டுக்கு வந்து இதன் நடைமுறை செயல்பாடு பற்றி அறிந்து சென்றன
இதனுடைய முக்கியத்துவம் ஒன்றிய அரசுக்கு உரைக்க 15 வருடம் ஆகியிருக்கிறது
கலைஞர் தன் காலத்தையும் தாண்டி சிந்தித்தவர் என பெருமை கொள்ள இன்னொரு வாய்ப்பு
இந்த உறுப்பு தான திட்டம் என்பது முதன்முதலில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. 2008இல் அவர் இதனைச் செய்தார். முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கூட இந்த அறுவைச் சிகிச்சையை ஒருவர் செய்துகொள்ளலாம் என அவர்தான் அறிவித்தார்.
அன்றைக்கு அவரிடம் இருந்த தொலைநோக்குப் பார்வைதான் இன்றைக்கு லட்சக் கணக்கான பேருக்கு புதிய உயிரையே கொடுத்துள்ளது. இந்திய அளவில் பலரும் பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் என இதை சுருக்கிப் பார்க்க முடியாது. அவர்தான் அதற்கு முழுக் காரணம். அதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
சென்னைல உள்ள புகழ்பெற்ற சர்ச்சில் உள்ள ஓவியம். புனிதர் ஒருவர் கொல்லப்படுவது சித்தரிக்கிறது. கிறிஸ்தவர்கள் இதனை Martyrdom என்பர்.
கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸ் தான் அவர். நான் சொல்ல போறது அவரது வரலாறு இல்லை
இவரிடமிருந்து ஆரம்பித்தால் தான் அதன் வீச்சு புரியும்
கிபி 52 இல் புனித தாமஸ், அன்றைய சேர நாட்டின் மலாபார் கடற்கரையில் வந்து இறங்கிய போது, அவருக்குத் தெரியவில்லை தன் வழி தோன்றல்கள், மானிட உயர்வுக்கு பாடுபட்டதுக்கு பின்னாளில் ஒரிசா என்று வழங்கப்போகும் கலிங்கத்தில் குடும்பமே உயிருடன் எரித்துக் கொல்லப்படுவார்கள் என்று
1800 வரை ஐரோப்பிய நாட்டினர் வருவதும் போவதுமாக இருக்க, ஆங்கிலேயர் ஆட்சியில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு தாங்கள் செய்ய வேண்டிய தலையாய பணி இதுதான் என புரிந்தது. தென் கேரளம் தமிழ்நாடு அடங்கிய திருநெல்வேலிக்கு பல மிஷனரிகள் வந்திருந்தனர் அவர்களில் ஒருவர் லண்டனை சேர்ந்த ஜான் டக்கர்