அன்னை அம்புஜாட்சி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறாள்.
உற்சவர் - சோமாஸ்கந்தர் – கானார்குழலி.
தல தீர்த்தம் சூரிய புஷ்கரணி ஆகும்.
தலவிருட்சமாக வெள்ளெருக்கு உள்ளது.
இரண்டு ஏக்கர் முப்பத்தேழு சென்ட் பரப்பளவு கொண்ட சூரிய புஷ்கரணி தீர்த்தம், சூரியன் நீராடிய பெருமைக்குரியது.
சூரியன் உதயமாகும் தருணத்தில், மந்தேசுரன் என்ற அரக்கன் சூரியனுக்கு அனுதினமும் தொல்லை அளித்து வந்தான்.
இதனால் அரக்கனிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள, உதயமாகும் நேரத்தில் சிவனும் விஷ்ணுவும் தன் மண்டலத்தில் இருக்கச் செய்யுமாறு பிரம்மனிடம் சூரியன் வரம் கோரினான்.
பிரம்மனோ, ‘அப்படியொரு வரத்தை தன்னால் தர இயலாது.
நீ மிருத்திகாவனம் சென்று பதஞ்சலீஸ்வரரை வணங்கி,
நான்கு வேதத்தின் சொரூபமாக அவ்வாலயத்தின் எதிரில் உள்ள ஆலமரத்தின் கீழ் அமர்ந்து ஈசனையும், விஷ்ணுவையும் நினைத்து தவம் செய்.
அப்படிச் செய்தால் நினைத்தது நிறைவேறும்’ என்று கூறி அனுப்பிவைத்தார்.
அதன் படி இங்குவந்த சூரியன் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனையும் விஷ்ணுவையும் வணங்கி தவம் செய்தான்.
அவனது தவவலிமையைக் கண்ட சிவனும் விஷ்ணுவும், தம்பதிசமேதராய் காட்சியளித்து சூரியன் வேண்டிய வரத்தை அருளினர்.
இதை நினைவுப்படுத்தும் விதமாக கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமை அன்று சுவாமி தீர்த்தக் கரையில் எழுந்தருள்வது இன்றளவும் நடைமுறையாக இருந்து வருகின்றது.
சூரியபுஷ்கரணியை தவிர கிழக்கில் காமதீர்த்தம்,
தெற்கில் விஷ்ணு தீர்த்தம்,
மேற்கில் பார்வதி தீர்த்தம்,
இதற்கு மேற்கில் இந்திர தீர்த்தம்,
வடக்கில் விநாயகர் தன் துதிக்கையால் அமைத்த கணாதீப தீர்த்தம் என ஆறு தீர்த்தங்கள் இத்தலத்தில் அமைந்துள்ளன.
கேரள மாநிலத்தின் பூர்ணா நதிக்கரையில் “காலடி” என்ற ஊரில் இறைவழிபாட்டிலும் தான தருமங்கள் செய்வதிலும் புகழ் பெற்று விளங்கிய சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதிகளுக்கு, பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தது.
இதனால் இத்தம்பதியர்கள் மன வருத்தமடைந்தனர்.
அவர்கள் திருச்சூருக்குச் சென்று “வடுகநாதன்” என்ற பெயரில் அங்கு குடிகொண்டிருக்கும் சிவபெருமானிடம் தங்களுக்குக் குழந்தை வரம் தர வேண்டி ஒரு மண்டலம் விரதம் இருந்தனர்.
இவ்விரதத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றினார்.
அவர்களிடம் “உங்களுக்குத் தீய குணங்களுள்ள பல குழந்தைகள் வேண்டுமா அல்லது நற்குணமும் இறை பக்தியும் கொண்டு, பலருக்கும் குருவாய் விளங்கக் கூடிய ஒரு குழந்தை வேண்டுமா?” என்று கேட்டார்.
இதை கேட்ட தம்பதியர்கள் இருவரும் சேர்ந்தவாறு, “எங்களுக்கு நற்குணமுடைய ஒரு குழந்தை போதும்” என்றனர்.
“இராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி எனில், ஏன் அவர் தன் வில்லைக் கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை.
வானரங்களை வைத்து ஏன் பாலம் கட்டினார்?”
எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டு பிடிக்க வேண்டும் என்று விரும்பினான்.
பாசுபதாஸ்திரம் வேண்டி அவன் சென்று கொண்டிருந்த போது, ஒரு நதிதீரத்தில் அனுமன் தனது சுய உருவை மறைத்து ஒரு சாதாரண வானரம் போல உருக்கொண்டு அமர்ந்து இராம நாமம் ஜபம் செய்து கொண்டிருப்பதை பார்க்கிறான்.
அவரிடம் சென்று, “ஏய்… வானரமே…
உன் இராமனுக்கு உண்மையில் திறன் இருந்திருந்தால் வில்லினாலேயே பாலம் கட்டியிருக்கலாமே…
ஏன் வானரங்களை கொண்டு பாலம் கட்டினார்?” என்றான் எகத்தாளமாக.
தியானம் களைந்த அனுமன், எதிர் நிற்பது அர்ஜூனன் என்பதை உணர்ந்து கொள்கிறார்.