நேற்று எதர்ச்சையாக ஒரு தம்பிட்ட கார்ல போகும் போது பழைய நினைவுகளை பேசிட்டு போனோம் பேச்சுவாக்கில அப்பவெல்லாம் engineerன்னு கதையை ஆரம்பித்து நான் படிக்க வந்த சூழலை பற்றி பேச ஆரம்பித்தோம் உண்மையாவே ஒரு நெகிழ்வை தந்தது அதை பகீர்ந்து கொள்கிறேன்..
என் ஊர்ல பல தர சாதி மதம்ன்னு கலந்த ஊர் எல்லோரும் அங்க அங்க குழுவாகவே இருப்பாங்க ஆனால் ஒற்றுமையா இருந்தாங்ங அந்த ஊர்க்கு இருக்கறது ஒரே அரசு பள்ளி 5ம் வகுப்பு வரை நூறு வருடத்தை தாண்டி இன்றும் இருக்கிறது அங்க இருந்துதான் ஆரம்பமாச்சு 100வருசமா பள்ளியிருந்தும் எல்லோரும் படிச்சடலை
அந்த ஊரை தேடி பார்த்தால் அப்ப அப்ப யாராவது பெரிய அளவு படிச்சிருப்பாங்க வசதி படைத்தவர்களின் பிள்ளைகளாக இருப்பாங்க.. ஒரு ப்ரபெஷர் இருந்தார் அப்புறம் டிப்பளமோ கோல்ட் மெடலீஸ்ட் ஒருத்தர் இருந்தார் அக்ரி படிச்ச சிலர் இருந்தனர் Msc படித்த சிலர் இருந்தார் BE படித்தவர்கள் யாரும் இல்லை
எனக்கு ஒரு 10வருட வித்தியாசத்தில அந்த ப்ரபெசர் பையன் மட்டும் engineering முடித்திருந்தார் அப்படியிருக்க 12ல படிச்சது EMR (electrical motor rewinding ) vocation group புடிச்சுதான் எடுத்தேன்.. இப்ப என்ன செய்ய டிப்பளமோ போகனும் engineering போறது எப்படின்னு தெரியாது
Result வரும்போது ஊர்ல இருந்து வந்தேன் இங்க வந்தா கோச்சிங் கிளாஸ் போறானுக எதற்குடானா? Engineering க்குனானுக, ஏதே engineering கோச்சிங் போகனுமா? சிவாஜி செத்தட்டாருன்னு கேட்டமாதிரி கேட்டேன் அதற்குள்ள ஒருத்தன் மச்சான் கேட்ரீங் படிக்கலாம்ன்டா 5star hotel abroad shipல வேலைன்னான்
வூட்டுல போய் சொன்னேன் அந்த சமையல்காரன் கூட போ அதபடிக்கறதுக்குனாங்க, சரி குடும்பத்தல எவனாவது படிச்சவன் இருப்பான்னு support செய்வான்னு பார்த்தா ஒருத்தனும் இல்லை எல்லோரும் 10 வது IT யாரும் தாண்டலை சோகமா திண்ணையில உட்காந்திருந்தேன் ஆழ்ந்த சிந்தனையோடு தெரிஞ்ச அண்ணா வந்தார்
எங்கண்ணு கப்பலா மூழ்கிடுச்சுனாரு என்னபடிக்கறதுன்னு தெரியலை எவனை கேற்கறதுன்னும் தெரியலை அதான்னு சொன்னேன்.. சட்டென பண்ணடாம் வகுப்புல என்ன படிச்சையோ அதையே படி லைட்டு பேன்னெல்லாம் மட்டதானே படிச்ச அதுல மேல படி கண்ணுனாரு.. சரி engineer போகமுடியாது சரி டிப்பளமோ படிப்போம்
ஈரோட்டல அத்தை மாமக்கு போன போட்டு விவரத்தை சொல்ல அவர் நீ வா இங்க சேர்த்தி விடுறேன்னு சேர்த்திவிட்டார் அந்த college ல நிறைய மாற்றம் கிடைத்திருந்தது ஒரு வழியா முடிச்சுட்டு வந்தாச்சு வேலைக்கா? படிக்கவான்னு ஒரு குழப்பம் குடும்ப சூழல் அம்மைபோட்டதால கவுன்சிலும் அப்பளை செய்யலை
சரின்னு வேலைக்கு போனேன் 1வருடம் textile automation field அப்ப கூட வேலை செஞ்ச பசங்க BSC electronics அவுங்க MSC படிக்க போறானுக அதனால என்னையும் BE படினானுக.. அவனுக சொன்ன விஷயம் நல்ல வேலை, சம்பளமும் கிடைக்கும் ஒரு stage மேல ஒரு கதவை தட்டுவ திறக்காது bz unqualified ன்னு சொல்லுவானுக
அதனால படுச்சுடுனானுக, அம்மாக்கு எங்கூட படிச்ச பசங்க clg போறானுக என்புள்ளை வேலைக்கு போறேன் அதனால படிக்கனும்னு அப்பாட்ட பேசி படிக்க சொன்னாங்க.. காசு? பேங்க் லோன் சரின்னு போனேன் அப்பா சில நாள் கழித்து பேங்க் லோன வேண்டாம் “என் புள்ளை கடனோட வாழ்க்கை தொடங்ககூடாது”னார் நான் பாத்துகரேன்
இப்படி பலரோட முயற்சியால நான் engineer ஆனேன் அதைவிட அந்த ஊர்ல நான் 2வதா engineer.. engineer coaching போனவனுகளால படிக்க முடியலை படிப்போமான்னு தெரியாத நான் engineer ஆனேன்.. நல்ல வேலை அதை படி இதை படின்னு படிக்காம புடிச்சதை படித்தோம் .. வழ்க்கை வெற்றியா தோல்வியான? தெரியலை
ஏதோ ஒரு முதல் படி வெச்ச திருப்தியோட வாழ்க்கை போவுது .. சாதிச்சமான்னு தெரியாது ஆனால் தோற்கவில்லை என்பது உண்மை.. படிப்புதான் கரையேத்தும் இப்ப குடும்பத்துல பலரும் என்ன படிக்கறதுன்னு கேற்கறப்ப புடிச்சதை படி அதிலிருந்து மேல போறதுக்கு வழி கிடைக்கும்.. அம்புட்டுதான்..
Reinforcement rebars பார் இப்ப மார்டன் construction ல அதிகமாக பயன்படுத்த கூடியது.. இந்த rebars எதவாது specialலாக தயாரி்க்க கூடியதான அப்படி ஒன்னும் இல்லை ஆனால் இதை இணைக்கும் முறைதான் வித்தியசமானது.
நம்ம சாதரன வீடு கட்டும் போது ஒரு கம்பி மீது இன்னொரு கம்பியை வெச்சு கட்டு கம்பியால கட்டி ஓவர் லேப் செய்வோம் இதனால 1மீட்டர் கம்பி வரை வேஸ்ட் ஆகும் சின்னவீடு பிரச்சனை இல்லை இதே புரூஜ் கலீபா மாதிரி பெருசா இருந்தா? எவ்வளவு மீட்டர் வேஸ்ட் ஆவது ?
மெட்ரோ ட்ரேக்கா இருந்தா? செக்மெண்ட் திருப்புவதெல்லாம் நடக்காத ஒன்னு இங்கதான் இதை பயன்படுத்துறோம். எப்படி? Rebarல இரெண்டு பக்கம் திரெட் போடுறோம் couplerயை வெச்சு இணைத்து விடுகிறோம்.. இதுல coupler முறை மட்டும்தான் இருக்கா? இல்லை வேற முறைகளும் இருக்கு
#செல்ப்_திரெட் முதல் நாள் பள்ளி முதல் நாள் வகுப்பு எப்படியிருக்கும் செமையா இருக்குமில்லே
அவ்வளவு நாள் விடுமுறை அம்முச்சி ஊரு அப்பத்தா ஊருன்னு நல்லா ஊர் மேஞ்சுட்டு திரும்பும் போது இருக்க வேதனையே இருக்கே 😭 நம்ம X தான் புள்ளையிடம் மாமான்னு நம்மளை அறிமுக படுத்துற வேதனையைவிட கொடூரம்
தாத்தாட்ட கெஞ்சி கூத்தாடி ஒரு school bag வாங்குறதுக்குள்ள நம்ம படுற பாடு இருக்கே எப்பப்பா.. நம்மகூட வேற யாராவது கூட்டா வந்து கெஞ்சிட்டா bag தோள் பையா மாறிடும்.. சில நேரத்துல அக்கவோட bag 🤦🏼♂️ எதுவாயிருந்தாலும் நமக்கு புதுசுதானே என்று தயார் நிலையில் பழ பழன்னு வெச்சுருப்போம்
ஒரு செட் யூனிபார்ம்க்கு துணி இன்னொரு தாத்தாட்ட வாங்கி அதை தைக்க 2மாசத்திற்கு முன்னாடியே கொடுத்தாலும், நாளைக்கு முதல்நாள்னா இன்னைக்கு சாய்ங்காலம்தான் வெட்டுவார் நம்ம குமார் டைலர், கேட்டா நில்லுடா ஒரு மணிநேரம் என்பார்..இதை ஒரு எபிசோட்டாவே எழுதலாம்
நண்பன் குடும்பத்தோடு வெளியே போனோம் அப்ப அவருக்கு நடந்த ஒரு சம்பவம் அந்த இரவில் அந்த கொடூரம் யாருக்கும் நடக்க கூடாது.. சுவரஸ்யத்திற்காய் அவனே இங்கு கதை சொல்வான்..
எல்லா நாட்களைப் போலவும் சாப்பிட்டு குழந்தைகளையும் சாப்பிட்டு தூங்க போகலாம்ன்னு போனேன்..
அப்பதான் வூட்டம்மா குப்பையை போய் கொட்டிட்டு வான்னு சொல்ல நானும் கையில குப்பை கவரோட கிளம்ப முற்பட்டேன் உடனே சின்னவன் நானு நானு ன்னு துள்ளி குதிக்க ஒரு கையில கவரு இன்னொரு கையில அவனை தூக்கிட்டு நகர்ந்தேன் அழுகற சத்தம் கேட்க திரும்பினேன் ..
பெரியவன் சினுங்கிட்டு நானும் வரேன் என சொல்ல சரிவாடான்னு கவரோட அவன் விரலை பிடிக்க புன்னகையோட அடுத்த அடுத்த அடிகள் எடுத்து வைத்தான்.. ஒரு கையில சின்னவன் மறுகையில் குப்பை பெரியவன்னு கதவ தொறந்த பெரியவன் செருப்பு போட்டு விட சொன்னான் அப்பதான் அந்த சம்பவம் நடந்தது..
ஓர் அழகான காதல் கதை எழுத ஆசை அப்படி நான் சுவரஸ்யமான எந்த காதலையும் கடக்கததினாலே அப்படியான நிகழ்வுகள் இல்லை அதனலே எங்கோ படித்தது எங்கோ கேட்டது என ஓர் புனைவை முயற்சிக்கிறேன் இதில் நாயகனாக நானே பயணிக்கிறேன்..
பள்ளியில படிக்கும் போது தன்னோட வகுப்புல நமக்குனு ஒருத்தி இருப்ப
அவளை எப்படி கண்டுபிடிக்கிறது அதற்குதானே நமது நண்பர்கள் இருக்காங்க.. அவனுகளா ஒரு பெண்னோடு கோர்த்து விடுவானுக அப்படி ஒருவளை என்னோடு கோர்த்து விட்டார்கள் காலையில் பேருந்தில் ஆரம்பிக்கும் அந்த கிசு கிசுப்பு, நான் பேருந்தின் முதல் நிலையத்தில் ஏறிவிடுவேன்
படியின் முதல் இருக்கையில் அமர அனுமதியில்லை இரண்டாவது இருக்கையில் அமர்வது வழக்கம் சென்னையில ரூட்டு தலை போல அந்த சீட்ட பிடிக்க ஒரு போரட்டம் நடக்கும் ஆனால் சின்ன வயதுல சில அண்ணாக்களின் மடியில் அந்த சீட்டில் உட்கார்ந்ததால் எனக்கு இலகுவாக அரும்புமீசை முளைத்ததும் அந்த சீட் கிடைத்தது.
பெட்ரோல் கிடைத்த மகிழ்விலும் தமிழ் கேட்ட மகிழ்விலும் நேராக வண்டிய பக்கத்து பக்காலா(கடை) யில நிறுத்தி தண்ணி தீணின்னு வாங்கி போட்டேன் நேரம் 7யை நெருங்கியிருந்தது
ஏசி போடாம ஓட்டிட்டு வந்ததால டி சர்ட் புல்லா வேர்த்து நினைந்து இருந்தது, இப்ப ஏசியை போட சில்லென காற்று என் மீது படற நினைந்த உடலில் சில்லென்ற காற்று பட கூட இசைஞானி தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு என பாட கார் மெதுவாக மிதந்தது .. கொஞ்சம் நகர்ந்ததும் இருபுறமும்
இருபுறமும் உணவகங்களும் கடைகளும் நிறைய என் கார் பயணமானது, பசியில்லை தாயிஃப் போயி சாப்பிடுவது என முடிவோடு நகர்ந்தேன், அங்கேதான் அடுத்த படலம் ஆரம்பமானது ஆம் அது அவரு இரு வழி சாலை சைன் போர்ட் வலது புறம் காட்டுது ஆனால் அக்கா கூகுள் மேப் இடதுபுறம் நேராக போ என்கிறது.
இரண்டு வாரம் பயணம் முடிந்து ஜித்தாவில் இருந்து ரியாத் வர ஆயுத்தமானேன் வூட்டுகாரம்மவும் இல்லை நான் மட்டும் தனியாகதான் வந்தாக வேண்டும் ஜித்தாவிற்கு முதல் பயணம் அது long time so வண்டியில போனேன்.. ஜித்தாவில் இருந்து ரியாத் மொத்தாம 1000km
9மணி நேரப்பயணம், ஆனால் கடைசிநாளில் inventory plan செய்து இருந்தேன் office போகும் போது பெட்ரோல் அடிக்கவில்லை இல்லை மறந்துட்டேன், ஆபிஸ்ல இருந்து inventory முடிக்கும் போது 6மணி நல்ல rush time இருப்பினும் hotel vacate செய்தாச்சு ஷோ இப்படியே கிளம்பலாம் என முடிவு
அதன் படி மேப் போட்டேன் அது நான் வந்த வழியை காட்டவில்லை வேறொருவழியை காட்டியது இந்த 10நாளில் ஒரு அளவிற்கு customer place போக ரூட் கத்து வெச்சு இருந்தேன் இருப்பின் கூகுள் மேப் பொய் சொல்லாதுன்னு நம்பி வண்டியை எடுத்தேன் அப்பதான் பெட்ரோல் கம்மியாக இருப்பது புரிந்தது