கேரள மாநிலத்தின் பூர்ணா நதிக்கரையில் “காலடி” என்ற ஊரில் இறைவழிபாட்டிலும் தான தருமங்கள் செய்வதிலும் புகழ் பெற்று விளங்கிய சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதிகளுக்கு, பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தது.
இதனால் இத்தம்பதியர்கள் மன வருத்தமடைந்தனர்.
அவர்கள் திருச்சூருக்குச் சென்று “வடுகநாதன்” என்ற பெயரில் அங்கு குடிகொண்டிருக்கும் சிவபெருமானிடம் தங்களுக்குக் குழந்தை வரம் தர வேண்டி ஒரு மண்டலம் விரதம் இருந்தனர்.
இவ்விரதத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றினார்.
அவர்களிடம் “உங்களுக்குத் தீய குணங்களுள்ள பல குழந்தைகள் வேண்டுமா அல்லது நற்குணமும் இறை பக்தியும் கொண்டு, பலருக்கும் குருவாய் விளங்கக் கூடிய ஒரு குழந்தை வேண்டுமா?” என்று கேட்டார்.
இதை கேட்ட தம்பதியர்கள் இருவரும் சேர்ந்தவாறு, “எங்களுக்கு நற்குணமுடைய ஒரு குழந்தை போதும்” என்றனர்.
சிவபெருமானும், “உங்கள் விருப்பப்படியே நற்குணமுடைய ஒரு குழந்தை உங்களுக்குப் பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தை குறுகிய காலமே உயிர் வாழும். அந்தக் குறுகிய காலத்தில் உலகம் போற்றும் மகானாகவும் இருப்பார்.” என்று சொல்லி மறைந்தார்.
சிவபெருமான் அளித்த வரத்தின்படி 788 ஆம் ஆண்டு வசந்த ருதுவில் வைசாக சுக்லபக்ஷத்தின் ஐந்தாம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தில் அந்தத் தம்பதியருக்கு ஒரு குழந்தை பிறந்தது.
அத்தம்பதியரும் அந்தக் குழந்தைக்கு சிவபெருமானின் திருநாமங்களில் ஒன்றான “எல்லா நலனும் அளிப்பவர்” என்கிற பொருளிலான
சங்கரன் சிறு குழந்தையாக இருந்த போதே மிகச்சிறந்த அறிவுத் திறனுடன் விளங்கினார்.
சங்கரனுக்கு ஏழு வயதான போது அவர் தந்தை காலமானார்.
தந்தை காலமான பின்பு அவரது தாய் அவருக்கு உபநயனம் செய்வித்து அக்கால வழக்கப்படி
குருகுலத்திற்கு வேதபாடங்கள் கற்றுக் கொள்ள அனுப்பினார்.
குருகுலத்தில் படித்த போது, மாணவர்கள் தினமும் பிச்சை எடுத்து வந்து அதை இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்து, அதன் பின்பு உண்பது தான் வழக்கம்.
ஒரு முறை சங்கரர் ஏகாதசி விரதம் முடித்து விட்டு,
மறுநாள் துவாதசி நாளில் பிச்சைக்குச் சென்றார். அயாசகன் என்னும் ஏழை அந்தணர் வீட்டின் முன்பு நின்று, “எனக்குப் பிச்சை இடுங்கள்” என்று அழைத்தார்.
வீட்டிலிருந்து எந்தப் பதிலுமில்லை.
பிச்சை எடுக்கும் போது மூன்றுமுறை அழைக்க சாஸ்திரம் அனுமதிக்கிறது.
இதனால் மீண்டும் இருமுறை “எனக்குப் பிச்சை இடுங்கள்” என்று அழைத்தார்.
பிச்சை கேட்கும் குழந்தைக் குரலைக் கேட்டு, அந்த ஏழை அந்தணனின் மனைவி வாசலுக்கு வந்து பார்த்தார்.
அங்கு பச்சிளம் பாலகனான சங்கரர் பிச்சைப் பாத்திரத்துடன் நின்று கொண்டிருந்தார்.
பிச்சை கேட்கும் பாலகனைப் பார்த்த ஏழையான அவள், தன் கணவர் ஏகாதசி விரதமிருந்து விட்டு துவாதசியன்று விரதம் முடிப்பதற்காக சாப்பிட வைத்திருந்த நெல்லிக்கனியை எடுத்து வந்து அந்தப் பிச்சைப் பாத்திரத்தில் இட்டாள்.
தனக்காக, கணவனுக்கென வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் நல்ல மனதுடன் பிச்சை அளித்த அந்தப் பெண்மணியின் ஏழமை நிலை கண்டு வருந்திய சங்கரர் திருமகளை வேண்டி, “கனகதாரா ஸ்தோத்திரம்” என்ற துதியை இயற்றிப் பாட ஆரம்பித்தார்.
அவர் பாடி முடித்ததும் அந்த வீட்டின் கூரையிலிருந்து தங்க நெல்லிக்கனிகள் பல அந்த வீடு முழுவதும் சிதறி விழுந்தன.
அன்றிலிருந்து சங்கரரின் அற்புதச் செயல்கள் தொடங்கின.
முதுமை அடைந்த அவரது தாயால் ஆற்றிற்குச் செல்ல முடியவில்லை.
இதைக் கண்ட அவர் தன் தாய் இருக்கும்படி ஆற்றைச் செல்ல வைக்க நினைத்தார்.
அதன் படியே பூர்ணா நதியை அவர் தாய் இருந்த வீட்டிற்குப் பின்புறமாகச் செல்லும்படி பணித்தார்.
பூர்ணா நதியும் தன் போக்கை மாற்றி சங்கரர் வீட்டின் பின்புறமாகச் செல்லத் தொடங்கியது.
சங்கரரின் அற்புதச் செயல்களைப் போலவே, இளம் வயதிலேயே அவரது புலமையும் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.
இதையறிந்த அத்தேசத்து மன்னர் சங்கரரை தன் அரசவையில் புலவராக்க விருப்பம் கொண்டார்.
ஒரு யானை மற்றும் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களையும் கொடுத்து அவரை அரசவைக்கு அழைத்து வர தன் மந்திரியை அனுப்பி வைத்தார்.
அந்தப் பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள மறுத்த சங்கரர் தனக்கு “அரசவைப் பணியை விட ஆன்மிகப் பணியே விருப்பம்.
எனவே மன்னரின் விருப்பத்தை நிறைவேற்ற இயலாது” என்று சொல்லி மந்திரியைத் திருப்பி அனுப்பினார்.
மந்திரி மன்னரிடம் சங்கரர் சொன்ன பதிலைச் சொல்லவும், மன்னருக்கு சங்கரரை நேரில் காணும் ஆவல் ஏற்பட்டது.
மறுநாள் அவர் சங்கரரைப் பார்க்கப் புறப்பட்டார்.
அவர் சங்கரரிடம் பத்தாயிரம் பொற்காசுகள் மற்றும் சில நூல்களைப் பரிசாக வழங்கினார்.
சங்கரர் நூல்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு பொற்காசுகள் அனைத்தையும் அவரிடமே திருப்பி வழங்கினார்.
மன்னர் அவருடைய ஆன்மிக எண்ணத்தையும், அதற்கான செயல்பாட்டையும் பாராட்டி விடை பெற்றுச் சென்றார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சங்கரர் வீட்டுச் சூழலிலிருந்து வெளியேற விரும்பினார்.
ஆனால் சங்கரரின் தாய் வயதாகிவிட்ட நிலையில், மகனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினார்.
இதற்காக மகனைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்தார்.
ஆனால் சங்கரர் அதற்கு மறுப்பு தெரிவித்து தான் சந்நியாசத்தை விரும்புவதாகத் தெரிவித்து வந்தார்.
சங்கரரின் தாய் அதற்கு சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் ஒருநாள் பூர்ணா நதியில் சங்கரரும் அவரது தாயாரும் குளிக்கச் சென்றிருந்தனர்.
அப்பொழுது ஒரு முதலை சங்கரர் கால்களைக் கவ்வி
நீரினுள் இழுக்கத் தொடங்கியது.
இதைப் பார்த்த சங்கரரின் தாய் பயந்து மகனைக் காப்பாற்றும் படி கூச்சலிடத் தொடங்கினார்.
அப்பொழுது தாயை அமைதிப்படுத்திய சங்கரர் தன் தாயிடம் “தாயே! நீங்கள் என்னை சந்நியாசம் ஏற்க அனுமதித்தால், இந்த முதலை என்னை விட்டு விடும்,
இல்லாவிட்டால் அதற்கு இரையாகி விடுவேன்,” எனக் கதறினார்.
தன் பிள்ளை உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அவர் தாயும் சந்நியாசத்திற்கு அனுமதித்தார்.
அதன் பிறகு அந்த முதலை அழகான கந்தர்வனாக மாறியது.
அவன் சங்கரரை வணங்கினான்.
சங்கரர் அன்று முதல் வீட்டைத் துறந்து ஞானியாகக் கிளம்பினார்.
அப்போது அவரது தாய் மகனிடம், தான் உலகைத் துறக்கும் காலத்தில் (மரணமடையும் நிலையில்) சங்கரர் எங்கிருந்தாலும் தாயிடம் வந்து சேர வேண்டும் என்பதுடன் மகனாகத் தாயின் இறுதிச் சடங்குகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்றும்
வேண்டுகோள் விடுத்தார்.
சங்கரரும் தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்து,
தன் வாழ்வின் குறிக்கோளை நோக்கி, இமயமலை நோக்கிச் செல்லத் தொடங்கினார்.
சங்கரர் இமயமலை நோக்கிச் செல்லும் போது வழியிலிருந்த பல புனிதத் தலங்களுக்கும் சென்று வணங்கினார்.
இமயமலைக்கு சென்ற அவர் பத்ரிநாத் பகுதியிலிருந்த கோவிந்த பகவத் பாதர் என்பவரை சந்தித்தார்.
அவர் மாண்டூக்ய, காரிக போன்ற உபநிடதங்களை எழுதிய கவுடபாதரின் சீடராவார்.
தனக்கென ஒரு குருவைத் தேடிக் கொண்டிருந்த சங்கரர் அவரைக் குருவாக ஏற்று கொண்டு வேதபாடங்களை கற்றுக் கொள்ள முடிவு செய்தார்.
அவரிடம், தான் கேரளாவிலிருந்து வருவதாகவும்,
தன்னுடைய இளம் வயதில் தந்தை காலமான பின்பு தாயின் பராமரிப்பில் அருகிலுள்ள குருகுலத்திற்குச் சென்று வேதங்கள் சாஸ்திரங்கள் கற்றதையும் தெரிவித்தார்.
தனக்கு தாய் திருமணம் செய்து வைக்க விரும்பியதையும்,
தான் அதை மறுத்து ஆன்மிக வழியில் ஈடுபட விரும்பியதையும் தெரிவித்தார்.
இதற்காக ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது தன் காலை முதலை ஒன்று கடித்ததாகவும்,
அதிலிருந்து விடுபட அம்மாவிடம் அனுமதி பெற்று ஆபத்த சந்நியாசத்தை மேற்கொண்டதையும்,
தெரிவித்தார்.
தற்போது முழு சந்நியாச தீட்சை அளித்து வேதாந்தத்தைத் தனக்கு முழுமையாகக் கற்றுத் தரும்படியும் வேண்டினார்.
அவருடைய உண்மையான பேச்சைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற கோவிந்த பகவத் பாதர் அவரைத் தம் சீடராக ஏற்றுக் கொண்டு துறவறத்தில் உயர்ந்ததும், சிறந்ததுமான
“பரமஹம்ச சந்நியாச தீட்சை” அளித்து தாம் தம் குருவிடமிருந்து கற்றவற்றைப் போதித்தார்.
வேதங்கள் முழுவதையும் அவருக்குக் கற்றுக் கொடுத்ததுடன் அத்வைத சித்தாந்தத்தையும் எடுத்துச் சொன்னார்.
அத்வைத சித்தாந்தத்தில் உலகில் தத்தம் கர்ம வினையினால் தோன்றும் எல்லா உயிர்களுக்குள்ளும் உறையும்
இறை தத்துவம் அல்லது ஆத்ம தத்துவம் ஒன்றே என்பதும், இறைவனும் ஆத்மாவும் ஒன்றே என்றும் கற்பிக்கப்படுகிறது.
குருகுலவாசம் முடிந்த பின்னர் சங்கரரை பாரத நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டு அத்வைதக் கொள்கைகளை அனைவருக்கும் உணர்த்தும் படி
கோவிந்த பகவத் பாதர் அறிவுறுத்தினார்.
குருவின் அறிவுறுத்தலுக்குப் பின்பு சங்கரர் காசி நோக்கிச் சென்றார்.
சங்கரர் காசியிலிருந்து தொடங்கி பாரதத்தில் பல சமயத் தலைவர்களுடன் சமயக் கருத்துக்களிலான விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.
அத்துடன் தன் குருவின் கட்டளைப்படி அத்வைதக் கொள்கைகளை நாடு முழுவதும் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஒருநாள் சங்கரர் ஆற்றுக்குக் குளிக்கச் சென்று கொண்டிருந்தார்.
இப்படி நாட்டின் பல பகுதிகளிலும் தன் புலமையால் வெற்றியைப் பெற்று தன் கொள்கைகளை வலியுறுத்திச் சென்று கொண்டிருந்தார்.
அவருடன் விவாதத்தில் தோற்ற பலரும் அவருடைய சீடராக மாறினார்கள்.
இந்நிலையில் சங்கரர் மஹிஷ்மதியில் கர்மமீமாம்சத்தில் தேர்ந்தவரும், சந்நியாசிகளை வெறுப்பவருமான மண்டன மிஸ்ரர் என்பவரை சந்தித்தார்.
சங்கரர் மண்டன மிஸ்ரரை பொதுவான விவாதத்திற்கு அழைத்தார்.
விவாதத்திற்கு ஒப்புக்கொண்ட அவர் சகல சாஸ்திரங்களிலும் பண்டிதையான தம் மனைவி சரசவாணியை (பாரத தேவி என்றும் குறிப்பிடுவர்) நடுவராகக் கொள்ள சம்மதித்தார்.
சங்கரர் தோல்வியுற்றால் கிருகஸ்தாஸ்ரமத்தைத் தழுவி திருமணம் செய்து கொள்வதாகவும்,
மண்டன மிஸ்ரர் தோற்றால் தம் மனைவியிடமிருந்தே காஷாயம் பெற்று சந்நியாசியாக வேண்டும் என்றும் சபையோர் முன்னிலையில் இருவரும் ஒப்புக் கொண்டனர்.
இரவும், பகலுமாக மண்டன மிஸ்ரருக்கும், சங்கரருக்குமிடையே வாத விவாதம் பதினேழு நாட்களுக்கு தொடர்ந்தது.
சரசவாணி இருவர் கழுத்திலும் மலர்ந்த புஷ்பங்களால் உருவாக்கப்பட்ட மலர் மாலைகளை அணிவித்து விட்டு தம் வேலைகளை கவனிக்கத் தொடங்கினார்.
கடைசியில் மண்டன மிஸ்ரர் அணிந்திருந்த மலர்மாலை முதலில் வாடத் தொடங்கியது.
இதன் பின்பு மண்டன மிஸ்ரர் தம் தோல்வியை ஏற்றுக் கொண்டார்.
காஷாயம் தரித்து சங்கரரின் சீடரானார்.
மண்டன மிஸ்ரர் மற்றும் அவரது மனைவி சரசவாணி இருவரும் சேர்ந்து தங்களுடைய செல்வம் அனைத்தையும் சங்கரருக்குக் கொடுத்தனர்.
தங்களைச் சீடராக ஏற்றுக் கொள்ளவும் வேண்டினர்.
சங்கரர் அதை அவ்வூரிலிருந்த ஏழை எளியவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் பகிர்ந்தளித்தார்.
மண்டன மிஸ்ரருக்கு சுரேஷ்வராச்சார்யா என்ற பெயரில் சந்நியாச தீட்சை அளித்து சிருங்கேரிக்கு அழைத்துச் சென்று அங்கு இருந்த மடத்திற்கு பீடாதிபதியாக்கினார்.
சரசவாணியை சிருங்கேரி மடத்தின் சாரதையாக இருக்கச் செய்தார்.
(மண்டன மிஸ்ரர், சரசவாணி ஆகியோர் பிரம்மா, சரசுவதி ஆகியோரின் அம்சம் என்று சொல்கின்றனர்)
சங்கரர் என்றாலே அவர் சைவ அல்லது வைதிக மதத்திற்கு மட்டுமே ஆச்சார்யார் என்று பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால் சங்கரரை “ஷண்மத ஸ்தாபனாச்சார்யர்” என்று சொல்வார்கள்.
அவர் காலத்தில் இந்து மதப் பிரிவுகளில் ஏகப்பட்ட வேற்றுமைகள் மற்றும் வேதத்தின் அடிப்படை ப்ரமாணத்தை ஏற்காத நிலையிருந்தது.
மேலும் பெளத்த மற்றும் சமண சமயங்களால் பெருகிய வேற்றுமைகளால் இந்து மதம் அழிந்து போய்விடும் நிலையும் இருந்தது.
இந்நிலையில் சங்கரர் இந்துமத பிரிவுகளிடையிலான சண்டை, சச்சரவுகளை குறைக்க முடிவு செய்தார்.
அவர் காலத்தில் இந்து மதத்தில் மட்டும் சுமார் 72 பிரிவுகள் இருந்தன.
இந்த 72 பிரிவுகளையும் ஆராய்ந்து, பல பிரிவுகளை இணைத்தும், சில பிரிவுகளை ஒதுக்கியும் முடிவில், “சைவம், வைஷ்ணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம்” என்று முக்கியமான ஆறு வழிமுறைகளை வகைப்படுத்தினார்.
அவை;
1. சைவம் – சிவனை வழிபடுபவர்கள் – சைவர்கள்
2. வைணவம் – விஷ்ணுவை வழிபடுபவர்கள் – வைணவர்கள்
3. காணாபத்யம் – கணங்களுக்கு எல்லாம் அதிபதியான “கணபதி” வழிபாடு செய்பவர்கள் – காணாபத்யர்
4. கெளமாரம் – முருகனை வழிபடுபவர்கள் – கௌமாரர்கள்
5. சௌரம் – சூரியனை வழிபடுபவர்கள் – சௌரர்கள்
6. சாக்தம் – சக்தியை வழிபடுபவர்கள் – சாக்தர்கள்
இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட ஆறு பிரிவுகளும் சொல்லும் பல பெயர்களும் இறைவன் ஒருவனையே சாரும் என்றும் இவையனைத்தும் சேர்ந்து ஷண்மதம் என்றும் சொன்னார்.
ஒவ்வொருவரின் விருப்பமும் ஒவ்வொரு வகைப்படும். அதனால், “இவர் மட்டுமே உனக்குக் கடவுள்” என்று எவரையும் கட்டாயப்படுத்தாமல்,
இந்த அறுவரில் எவரை விரும்பினாலும் அவரையே முழு முதற் கடவுளாகப் போற்றலாம்” என்று வழி காட்டுகிறது சங்கரரின் அத்வைதம்.
இதுபோல், “உன்னுடைய விருப்ப தெய்வமே மற்ற கடவுளாகவும் வடிவம் தாங்கி இருக்கின்றது என்றும் இந்தச் சித்தாந்தம் சொல்கிறது.
ஆறு விதமான தெய்வ வழிபாடுகளைக் காட்டித் தந்த சங்கரர்,
அந்தந்தத் தெய்வங்களைப் போற்றுவதற்கான துதிகளையும் தானே இயற்றித் தந்தார்.
இந்நிலையில், சங்கரரின் தாய் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் இருப்பதை சங்கரருக்கு சிலர் தெரிவித்தனர்.
இதைக் கேள்வியுற்றதும் தாம் தாய்க்கு அளித்த வாக்குறுதியின் படி தம் சீடர்களிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு காலடிக்குத் திரும்பினார்.
தாய்க்கு வாக்களித்த படி “வெறுமனே” வர முடிந்ததே தவிர,குறித்த காலத்தில் வந்து கோ தானம், மந்திர ஜபம் எல்லாம் செய்து வைக்க அவரால் முடியவில்லை.
அவர் தன் தாயின் கால்களைத் தொட்டு வணங்கியபடி, “மாத்ரு பஞ்சகம்” என்று உள்ளம் உருகும் ஐந்து பாடல்களைப் பாடினார்.
தாயின் வேண்டுகோளுக்கேற்ப சிவபெருமானிடம் தாயின் அந்திம காலம் சிரமமில்லாமல் இருக்க வேண்டினார்.
இவரின் வேண்டுதலை அறிந்த சிவபெருமான் சிவகணங்களை அனுப்பி வைத்தார். சிவகணங்களின் உருவங்களைக் கண்டு அஞ்சிய ஆர்யாம்பாள் சங்கரரிடம்,
தனக்குப் பயமாக இருக்கிறது சிவகணங்களுடன் கைலாசம் செல்ல முடியாது என்றும் மறுத்தார்.
உடனே சங்கரர் விஷ்ணுவை வேண்டினார்.
விஷ்ணுவின் தூதுவர்கள் அவரது தாயாரை வைகுண்டம் அழைத்துச் சென்றனர்.
பழமைவாதிகளான நம்பூதிரி பிராமணர்கள் சன்னியாசியான சங்கரரை இறுதிச் சடங்கு செய்யக் கூடாது என்று தடுத்தனர்.
நம்பூதிரி பிராமணர்களின் உத்தரவை மீறி அவருக்கு உதவவும் அங்கிருந்த பலரும் மறுத்தனர்.
அவருடைய தாயின் இறுதிச் சடங்கிற்கு நெருப்பைக் கூட அளிக்க மறுத்தனர்.
ஆனால் சங்கரர் தன் தாய்க்குக் கொடுத்த வாக்குறுதிப்படி தானே தனியாகத் தன் தாயின் உடலைப் புழக்கடைக்கு எடுத்துச் சென்று வைத்து, வாழைமரப் பட்டைகளைக் கொண்டு அடுக்கி அதைத் தன் யோக சக்தியினால் எரியூட்டினார்.
அதன் பின்பு சிருங்கேரிக்கு திரும்பிய சங்கரர் தன்னைப் பின்பற்றியவர்களுடன் சேர்ந்து அத்வைத தத்துவத்தைப் பிரசாரம் செய்தவாறு இந்திய தேசத்தின் கிழக்குக் கடற்கரையோரமாக தல யாத்திரை மேற்கொண்டார். பூரியில் கோவர்தன மடத்தை நிறுவினார்.
பின்னர் துவாரகைக்குச் சென்று அங்கு சங்கர மடத்தை நிறுவினார்.
மண்டன மிஸ்ரருக்கு “சுரேஷ்வராச்சார்யா” என்ற பெயரில் சந்நியாச தீட்சை அளித்து சிருங்கேரி மடத்திற்கு பீடாதிபதியாக்கியது போல் பிற சீடர்களான பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகாசார்யா என்ற மூவருக்கும் முறையே
ஜகன்னாத மடம், துவாரகாமடம், ஜோஷியோ மடம் ஆகியவற்றின் பீடாதிபதிகளாக நியமித்தார்.
சங்கரரின் சந்நியாச தர்மத்தைப் பின்பற்றியவர்களில் முக்கியமான பத்து பிரிவுகளை ஏற்படுத்தினார்.
அவர்கள் தம் ஆசிரமப் பெயரின் பின்னால் சரஸ்வதி, பாரதி, புரி (சிருங்கேரி மடம்), தீர்த்தர், ஆசிரம (துவாரகா மடம்), கிரி, பர்வத, சாகர் (ஜோஷி மடம்), வன, ஆரண்ய (கோவர்தன மடம்) என்று இணைத்துக் கொள்ளுமாறு செய்து “தசநாமி சந்நியாசிகள்” என்ற அமைப்பையும் உருவாக்கினார்.
இவர்களில் ஆழமான வேதாத்தியானமும், தியானமும் செய்து தன்னை உணர்ந்தவர்கள் பரமஹம்சர்கள் என்றழைக்கப்பட்டனர்.
“சிவானந்த லஹரி” பாடி தம் பக்திப் பரவசத்தை அமுத தாரை வடிவில் உலகிற்கு வழங்கிய சங்கரர், உஜ்ஜயினிக்குச் சென்று மனிதர்களைக் கொன்று குவித்த பைரவர்களை வென்றார்.
காஞ்சிபுரத்திற்குச் சென்று சாக்தர்களை வென்று கோவில்களைப் புனிதப்படுத்தினார்.
திருவிடைமருதூருக்குச் சென்று அங்குள்ள ஈசன் கோவிலில் தம் சித்தாந்தத்தை நிலை நிறுத்தினார்.
திருப்பதிக்குச் சென்று ஏழுமலையான் மீது “விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம்” பாடி
யந்திரங்களை கர்ப்பகிருகத்தில் பிரதிஷ்டை செய்து கோவிலை கணக்கற்ற பக்தர்கள் தேடி வருமாறு செய்தார்.
கொல்லூரில் மூகாம்பிகை கோவிலுக்கு சங்கரர் செல்கையில், காது கேட்காத, பேச முடியாத ஒரு அறிவு மிக்க அந்தணச் சிறுவனுக்கு நெல்லிக்கனி கொடுத்து ‘ஹஸ்தாமலகன்’ என்று பெயரிட்டு
தன்னுடைய முக்கியச் சீடர்களில் ஒருவராக்கிக் கொண்டார்.
கிரி என்ற சிறுவனை மந்தப் புத்தியுள்ளவன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்க அவனை “தோடகாஷ்டகத்தை” சொல்ல வைத்து “தோடகர்” என்று பெயரிட்டார்.
இவர் எழுதிய “சரீரிக் பாஷ்யா”, “சனட் சுஜாத்தியா”, “சஹஸ்ரநாம அத்யாயா”, “விவேக சூடாமணி”, “ஆத்ம போதா”, “அபரோக்ஷ அநுபூதி”, “ஆனந்த லஹரி”, “ஆத்ம அனாத்ம விவேக”, “த்ருக் த்ருஷ்ய விவேக”, “பஜகோவிந்தம்”, “உபதேச சஹஸ்ர” போன்ற பல நூல்கள் இன்றும்
இந்து சமய ஆன்மிக ஈடுபாடுடைய பலருக்கும் வழிகாட்டியாக இருக்கின்றன.
இப்படி சங்கரரின் அற்புதங்கள் எத்தனையோ உண்டு.
இந்தியா முழ்வதும் யாத்திரை சென்று பல அற்புதங்கள் நிகழ்த்திய மகான் சங்கரர் கடைசியாக இமயமலையை நோக்கிச் சென்று பத்ரியில் ஒரு கோவிலைக் கட்டினார்.
அங்கிருந்து உயர்ந்த இடத்தில் இருந்த கேதார்நாத்தில் ஒரு குகைக்குள் சென்ற சங்கரர் தன்னுடைய முப்பத்திரண்டாம் வயதில் ஈசனுடன் கலந்தார்.
முப்பத்திரண்டு வயதிற்குள் முக்தியடைந்த அவர் இன்றும் இந்து சமயத்தவர் பலராலும் நினைவில் கொள்ளப்படுகிறார்.
“இராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி எனில், ஏன் அவர் தன் வில்லைக் கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை.
வானரங்களை வைத்து ஏன் பாலம் கட்டினார்?”
எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டு பிடிக்க வேண்டும் என்று விரும்பினான்.
பாசுபதாஸ்திரம் வேண்டி அவன் சென்று கொண்டிருந்த போது, ஒரு நதிதீரத்தில் அனுமன் தனது சுய உருவை மறைத்து ஒரு சாதாரண வானரம் போல உருக்கொண்டு அமர்ந்து இராம நாமம் ஜபம் செய்து கொண்டிருப்பதை பார்க்கிறான்.
அவரிடம் சென்று, “ஏய்… வானரமே…
உன் இராமனுக்கு உண்மையில் திறன் இருந்திருந்தால் வில்லினாலேயே பாலம் கட்டியிருக்கலாமே…
ஏன் வானரங்களை கொண்டு பாலம் கட்டினார்?” என்றான் எகத்தாளமாக.
தியானம் களைந்த அனுமன், எதிர் நிற்பது அர்ஜூனன் என்பதை உணர்ந்து கொள்கிறார்.