ilango manivannan Profile picture
Apr 26 7 tweets 3 min read Twitter logo Read on Twitter
#புத்தர் பார்ப்பனியத்தை வீழ்த்த இயக்கம் கட்டினார்,

புத்தருக்கு பிறகு "பார்ப்பனிய எதிர்ப்பு" சிந்தனை கொண்ட அனைவரும் இயக்கமாக திரண்டு போராடாமல், பாடல்கள் மூலமாகவும், எழுத்துக்கள் மூலமாகவும் மட்டுமே பார்ப்பனியத்தை எதிர்த்து வந்தனர்.

ஆக, புத்தருக்கு பிறகு பார்ப்பனியத்தை வீழ்த்த ஓர்
இயக்கம் இந்த 2000 வருடங்களாக இல்லாமல் போனது.

2000 வருடத்திற்கு பிறகு, அதே வரலாற்றுத் தொடர்ச்சி என்பது #பெரியார் அவர்களால் நம்மண்ணில் நிகழ்ந்தது.

புத்தர் கட்டிய #பெளத்தம் என்ற இயக்கமென்பது, புத்தரின் மறைவிற்கு பிறகு சில நூற்றாண்டுகளில் #நாகார்ஜுனன் என்ற பார்ப்பனரின் ஊடுருவலால்,
மகாயானம், ஹீனயானம் என இரண்டாக சிதைக்கப்பட்டு, கடைசியில் ஓர் போராட்ட இயக்கமாக இல்லாமல், "பக்திமார்க்கமாக" பார்ப்பன கூட்டத்தால் மாற்றப்பட்டது.

இந்த வரலாற்றை எல்லாம் கணக்கில் கொண்ட பெரியார்,
பார்ப்பனியத்தை எதிர்த்து கட்டப்போகும் இயக்கத்திற்குள் பார்ப்பனர்கள் ஊடுருவாமல் செய்ய
வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வே மேலோங்கியிருந்தது.

அதன் விளைவாகவே தனது இயக்கத்திற்கு, பார்ப்பனக் கூட்டத்தால் ஊடுருவ முடியாததாகவும், ஆரிய பார்ப்பனக் கூட்டத்தால் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் ஓர் பெயரை சூட்ட வேண்டும் என்ற நோக்கத்தில்,
வரலாற்றுச் சிறப்புமிக்கதாக #திராவிடர்_கழகம்
என்ற பெயரை தனது இயக்கத்திற்கு சூட்டி,
அது நாள் வரை இம்மண்ணில் தமிழ் பேசிக் கொண்டே நம் மொழியை சிதைத்து, இனத்தை பிரித்து வஞ்சக வேலையை செய்து வந்த
ஆரிய பார்ப்பனக் கூட்டத்திற்கு "பேரிடியை" இறக்கினார்.

அதன் பின்னர் அந்த சொல்லை வீழ்த்த இன்று வரை பல கைக்கூலிகளை நம் இனத்தில் இருந்தே
தயார் செய்து, திராவிடம் என்ற சொல்லுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறது.

#திராவிடம் என்ற சொல் பார்ப்பனக் கூட்டத்தால் விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல், தொண்டையில் சிக்கிய முள்ளாய் சிக்கியது.

தன்னை எதிர்ப்பவர்களை அழிப்பது, முடியாவிட்டால் தனக்குள் இழுப்பது என்பது
பார்ப்பனியத்தின் குணம்,

#புத்தர் துவங்கி #வள்ளலார் வரை நீண்டு,
இன்று அம்பேத்கர் வரை இதுதான் பார்ப்பனியத்தின் பார்முலா.

இதில்
#பெரியார் மட்டும் விதிவிலக்கு...

#Vetriventhan_K

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ilango manivannan

ilango manivannan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ma_ilango

Apr 26
"ஊரடங்கு" கற்றுத்தந்த பாடம்...

பல ஆண்கள் பரட்டைத் தலையும் தாடியுமாக இருக்கிறார்கள்.. "சலூன் கடைகள்" திறக்கப்படாததால்...

வீட்டுல திடீர்னு டேங்க் மோட்டார் ஓடல கொஞ்சம் வந்து சரிசெஞ்சு தர முடியுமா..? "எலக்ட்ரீசியன்களுக்கு" போன் செய்கிறார்கள்..

'பாத்ரூம்' ஏதோ அடச்சிக்கிட்டு
பைப் லீக் ஆகுது.. என்னனு வந்து பார்க்கறீங்களா..? "பிளம்பிங்" தொழிலாளர்களுக்கு அழைப்பு..

இன்னைக்கு ஏன் குப்பை எடுக்க "சுத்தம் செய்யும்" ஆட்கள் வரல..? என நீங்கள் நினைத்திருப்பீர்கள்..

காய்கறிக்கடைக்குப் போனப்போ "செருப்பு" பிஞ்சிருச்சி.. அதை தச்சிக்கொடுக்க மாட்டாங்களா என்று
சாலையோரம் "செருப்புத் தைக்கும்" தொழிலாளர்களை உங்கள் கண்கள் தேடியிருக்கும்..

"வீட்டுவேலை செய்யும்" "பெண்கள்" வந்தால் நல்லா இருக்குமே.. எல்லா பாத்திரங்களையும் நாமே தேய்க்க வேண்டியிருக்கே...

'டூவீலர் பஞ்சர்' ஒட்டவோ, ரிப்பேர் பண்ணவோ உங்களுக்கு தெரிஞ்ச "மெக்கானிக்" எங்கேயாவது
Read 5 tweets
Apr 23
"பேரறிஞர் அண்ணா"வும் சி.பா. ஆதித்தனாரும்!

அண்ணாவுடன் 27 ஆண்டுகள் பழகும் வாய்ப்புப் பெற்றவர் "கவிஞர் கருணானந்தம்". பெரியாரின் முழு முதல் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அவர், "அண்ணா சில நினைவலைகள்" என்ற நூலையும் எழுதியிருக்கிறார். அந்த நூலில் உள்ள முக்கியமான சம்பவம் இங்கே:

அண்ணா முதல்
அமைச்சராகி சில நாட்களுக்குப் பின் ஒருநாள் இரவு 9 மணியிருக்கும். அண்ணா வீட்டு மாடியில் நானும் இருக்கிறேன். தொலைபேசி அழைப்பு. நேர்முக உதவியாளர் நண்பர் கஜேந்திரன், “அண்ணா, ஆதித்தனார் கேட்கிறார், நீங்கள் அவர் வீட்டுக்குச் சாப்பாட்டுக்குப் புறப்பட்டுவிட்டீர்களா என்று. கருணாநிதியும் வர
வேண்டுமாம். நேரமாகிவிட்டது என்று நினைவுபடுத்துகிறார்” என்றார்.

“சரி வாங்க, இப்போது புறப்படாவிட்டால் அவரே நேரில் வந்துவிடுவார். நீயும் வாய்யா” என்றார் என்னைப் பார்த்து. நான் வரலைண்ணா அவர் எனக்கு அறிமுகமே கிடையாது என்றேன்.
“பரவாயில்லை. என்னோடு வா நிச்சயம் பிரியாணியாவது இருக்கும்”
Read 16 tweets
Apr 22
"கொரோனா" பேரழிவு காலம் தொடங்கி இன்று வரை, வட இந்தியாவையும் தமிழ்நாட்டையும் ஒப்பிட்டு, "தமிழ்நாடு" எல்லா வகையிலும் முன்னேற்றம் கண்டுள்ளதற்கு "கலைஞர்"தான் முக்கிய காரணம் என கட்சி சார்பற்று பலரும் பதிவிட்டனர்.

இது ஒரு வகையில் மகிழ்ச்சியே, ஆயினும் அவர் உயிருடன் இருந்த காலத்தில் Image
செய்யாத தவறுக்கும் பல சில்லறைகள் அவர் மீது வன்மத்துடன் கல்லெறிந்தன, இப்போதும் எறிகின்றன. அதேப் போல அவர் செய்த எந்த ஒரு நற்செயலுக்கும் அதற்குரிய அங்கிகாரம் பெற்றவர் இல்லை. இப்படிபட்ட வன்மத்திற்கு பின்னுள்ள உளவியல் மிக எளிமையானது. எல்லோருக்கும் அது தெரிந்ததுதான். எனவே அதை கடந்து
செல்லலாம். ஆனால், இயற்கை பாரபட்சமற்றது. அவ்வியற்கைதான் இன்று #கலைஞர் என்ற மாமனிதனின் தொலைநோக்கு பார்வையை வெளிச்சமிட்டு காட்டுகிறது. பல்லாயிரம் குரல்களால் விளக்க முடியாததை சிறு சிறு செயல்களால் விளக்கி செல்கிறது.

"கியூபா"வின் விடிவெள்ளி "பிடல் காஸ்ட்ரோ" சொன்னது தான் நினைவுக்கு
Read 4 tweets
Apr 4
#காந்தியார் படுகொலையும் பார்ப்பனர்களுக்கு எதிரான மக்கள் கோபமும்..!

காந்தியார் படுகொலையை தொடர்ந்து மக்களின் கோபம் இந்துத்துவ அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபை இயக்கங்களின் மீது திரும்பியது. அதிலும் மகாராஷ்டிராவில் இருந்த "பார்ப்பனர்கள்" மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.
காந்தியை கொன்றது சித்பவன் பார்ப்பனரான "கோட்சே" என்பதால் மகாராஷ்டிராவில் பார்ப்பனர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. பூனா, சத்தாரா, சாங்கிலி போன்ற பகுதிகளில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர் அவர்களில் சிலரது சொத்துக்கள் அழிக்கப்பட்டன. காந்தியை கோட்சே கொலை செய்து விட்டான் என்கிற செய்தி
மின்னல் வேகத்தில் நகரம் எங்கும் பரவியது. கொலைகாரனின் பெயர் பூனாவில் பரவத் துவங்கியதும் மக்கள் கொதிப்படைந்த நிலையில் இருந்தனர் கோட்சேவின் வீட்டையும் பத்திரிகை அலுவலகத்தை சுற்றி ஜனவரி 31ஆம் தேதி மக்கள் கூடினார். வீடு பத்திரிகை அலுவலகம் மீது கற்கள் வீசப்பட்டன காவல்துறையால் இரண்டும்
Read 10 tweets
Mar 30
"வைக்கம் போராட்டம்"

'வைக்கம் போராட்டம்' என்பது ஆலய நுழைவுப் போராட்டமல்ல. மாறாக கோயிலைச் சுற்றியிருக்கிற தெருக்களிலேயே தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், புலையர்கள் நடக்கக்கூடாது என்று இருந்த கொடுமையை எதிர்த்து நடைபெற்ற போராட்டமேயாகும். கேரள மாநிலம் வைக்கத்தில் அரசனின் அரண்மனை
உள்ளது. அரண்மனை வளாகத்திற்குள் ஒரு நீதிமன்றம் அமைந்திருக்கிறது. அன்று அரசனின் பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் நெரிசல் மிகுந்திருந்த காரணத்தால் நீதிமன்றத்திற்குச் செல்லும் வழக்கமான பாதை அன்று அடைக்கப்பட்டிருந்தது.

மாதவன் என்ற வழக்கறிஞர் அவசரமாக நீதிமன்றத்திற்குச்
சென்றவர், நீதிமன்றத்திற்கான பாதை அடைக்கப்பட்டிருப்பதை அறிகிறார். வழக்கின் முக்கியத்துவமும், அவசரமும் கருதி அரசனின் பிறந்தநாள் வழிபாடு அவ்விடத்தில் தொடங்கிவிட்ட நிலையிலும் அவ்வழியாக நீதிமன்றத்திற்குச் செல்கிறார். வழக்கறிஞர் மாதவன் ஈழவ சமுதாயத்தைச் சார்ந்தவர். ஈழவர்கள் அவ்வழியாக
Read 15 tweets
Mar 28
ரங்கராஜன் நரசிம்மன் @OurTemples என்ற இந்த நபர் இட ஒதுக்கீடு பெருவது பிச்சை என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இட ஒதுக்கீடு உரிமையை பெரும், இந்த மண்ணில் வாழும் ஒட்டுமொத்த பார்ப்பனரல்லாத மக்களையும் இழிவுபடுத்தும் வகையிலேயே இந்த நபரின் பதிவு உள்ளது.

இந்தியாவிலேயே ImageImageImageImage
சமூகநீதிப் பார்வையோடு இட ஒதுக்கீடானது கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான கடுமையான போராட்டங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக தந்தை பெரியாரின்
இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம், அனைத்து துறைகளிலும் வளர்ந்து, இன்று இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

வரலாறு இப்படி
இருக்க, 'சாதிய ஒழிச்சு கட்டிய டிராவிட மாடலைத்தான் பார்க்கிறோமே! இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் இருக்கிறது! கேவலமான பிச்சை எடுக்கும் பிழைப்புதான் இட ஒதுக்கீடு. திறமை இல்லைன்னா ஒதுக்கீடு கேட்டு வாழ வேண்டியதுதான் என டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரங்கராஜன் நரசிம்மன்,
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(