சிந்தனை Profile picture
Apr 26 14 tweets 3 min read Twitter logo Read on Twitter
நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறை ,வெறியாட்டங்கள், வெறுப்புப் பேச்சுக்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறன. அரங்கேற்றப்படும் அந்த வன்முறைகளை மேலும் உசுப்பேற்றும் வகையில் பா.ஜ.க
தலைவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

ஆனால், அதே தலைவர்கள் மறுபுறம் கிறித்தவப் Image
பாதிரிமார்களை சடங்கிற்காக சந்தித்து, சிரித்து, படமெடுத்து அதனை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். இதன் மூலம் கிறிஸ்தவ மக்களின் வாக்குகளை அறுவடை செய்து கொள்ள முடியும் என்பது அவர்களது நம்பிக்கையாக இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவின் குறிப்பிடத்தக்க
பெருமை, அதன் பன்முகத் தன்மையாகும்.

ஆனால் இந்த பன்முகத்தன்மைக்கு வேட்டு வைத்தப் பிறகு, கிறிஸ்தவ மக்களின் வாக்குகளை எப்படி பாஜகவினரால் அறுவடைச் செய்ய இயலும்?

கடந்த 9 ஆண்டுகளில் கிறிஸ்தவ மக்கள் மீதான தாக்குதல்கள் ஒன்றா? இரண்டா? அவர்கள் பட்ட வலிக்கு அளவேதும் இருக்கிறதா?
நூற்றாண்டுகள் கடந்தாலும் மாறாத அந்த வலிக்கு, எந்த கைக்குலுக்கலும், முகஸ்துதியும் மருந்தாகி விடாது.

1999- ஆம் ஆண்டு ஒரிசா மாநிலத்தில், மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் அவரது இரு குழந்தைகளோடு மத தீவிரவாதிகளால்
உயிரோடு எரித்து கொல்லப்பட்டார்.

இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்களின் உடைமைகள், வாழ்விடங்கள், வழிபாட்டுத் தலங்கள் இன்று வரை குறி வைத்து தாக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

தங்கள் மீதான தாக்குதல் குறித்து புகார் அளிக்கச் செல்லும் கிறிஸ்துவ
பாதிரியார்கள் சிறையில் வைத்து அச்சுறுத்தப்படுகிறார்கள். அது மட்டுமல்ல கிறிஸ்தவர்கள் அளிக்கும் புகார்கள் பல மாநிலங்களில் பதிவு செய்யப்படுவதும் கிடையாது.

குறிப்பாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வெளிப்படையாகவே கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல்கள்
நடத்தப்படுகின்றன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறையால் கிறிஸ்துவ சகோதரர்கள் 1500க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.

கிறிஸ்துவ மக்கள் மீது தொடுக்கப்படும் வழக்குகளும், புகார்களும், ஜாமினில் வெளிவர முடியாத வகையிலேயே பதிவு செய்யப்படுகின்றன.

#சிறுபான்மையினர் ஆடை
சுதந்திரமும் பல மாநிலங்களில் பறிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் கல்விக் கூடங்களில் ஹிஜாப் அணிய அரசே தடை விதித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.

ஒரு மிகப்பெரிய அமைப்பில் மைனாரிட்டியாக இருக்கக்கூடிய மக்கள் என்ன உணவை சாப்பிட வேண்டும் என்ன உணவை சாப்பிடக்கூடாது என்பவற்றை கூட
அரசாங்கமே நிர்ணயிக்கும் அவலம் இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

உச்சக்கட்டமாக சிறுபான்மை மக்களுக்கு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. அதற்கு உதாரணமாக, கர்நாடகாவில் அண்மையில் முஸ்லிம்களுக்கான 4% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதை குறிப்பிடலாம்.

தெலுங்கானாவில் Image
பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்றும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவே பகிரங்கமாக பேசுகிறார்.

முஸ்லிம்களின் ஓட்டு தங்களுக்கு தேவை இல்லை என கர்நாடகா பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா பேசுகிறார்.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்
தொடர்பாக ஒரே ஆண்டில் 22,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளை குடியரசுத் தலைவரோ, பிரதமரோ இது வரை கண்டித்ததாக தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால், 2024 ஆம் நடக்கவுள்ள மக்களவை தேர்தலுக்காக, கிறிஸ்துவர்களின் ஆதரவை பெற நாடு
முழுவதும் கிறிஸ்தவ ஆயர் பெருமக்களை நேரில் சந்திக்கும் நாடகத்தை பா.ஜ.க. அரங்கேற்றி வருகிறது.

அண்மையில் ஈஸ்டர் தினத்தில் டெல்லியில் உள்ள இருதய ஆண்டவர் தேவாலயத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை மேற்கொண்டு அது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோவையும் ட்விட்டரில் பதிவிட்டு
பெருமிதம் கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கேரளாவில் பிரதமர் மோடி, அம்மாநிலத்தை சேர்ந்த 8 பிஷப்புகள் கொச்சியில் நேற்று சந்தித்துள்ளார். அப்போது , கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்து பிரதமரிடம் பிஷப்புகள் பேசியுள்ளனர்.

ஏற்கனவே வட இந்திய பிஷப்புகள், குடியரசுத்தலைவரை நேரில்
சந்தித்து இதே பிரச்சினையை முறையிட்டு தீர்வை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் பிரதமருடனான பிஷப்புகளின் இந்த சந்திப்பாவது, ஆட்சியாளர்கள் மீது சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சிந்தனை

சிந்தனை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @mdunis59

Apr 27
புல்வாமா தாக்குதல்: அன்றே அம்பலப்படுத்திய திருமுருகன் காந்தி

*புல்வாமா தாக்குதல்: அன்றே அம்பலப்படுத்திய திருமுருகன் காந்தி*
- மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

2019ல் காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு, ராஜ்நாத் சிங் Image
தலைமையிலான அப்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே காரணம் என்றும், அப்போது பிரதமர் மோடி தன்னை அமைதியாக இருக்கச் சொன்னதாகவும் புல்வாமா தாக்குதல் நடந்தபோது ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் கூறியிருப்பது தற்போது கவனிக்கத்தக்க விடயமாக மாறியிருக்கிறது.

மேலும்
அவர், சிஆர்பிஎஃப் கேட்டபடி அவர்களுக்கு விமானங்களை வழங்கி இருந்தால் இது நடந்திருக்காது என்றும், இது நம்முடைய தவறு காரணமாகவே நடந்தது என்றும் அன்று மாலையே பிரதமர் மோடியிடம் கூறியதாகவும், அதற்கு பிரதமர் மோடி, இதைப் பற்றி பேசாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதேபோல
Read 26 tweets
Apr 27
*🔥PTR... அரசியல்_ பொக்கிஷம்..!*

பிடிஆர் பற்றி 100 ஆடியோ வரட்டும்

PTR குறித்த கேள்விகளுக்கு
கொடுத்துள்ள பதில்களை உள்வாங்க விசேஷ அறிவு திறன் எல்லாம் தேவையில்லை..

💥 பிடிஆர் நேர்மையான மனுசனா !?

*ஆம்*

💥 தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அரசியல் செய்ய வந்தவரா!?

*இல்லை.*
💥ஊழலோ கலக்சனோ செய்வாரா?

*இல்லை*

💥பிடிஆர் மாதிரி இதுவரை தமிழ்நாட்டில் நிதி அமைச்சர் இருந்தது உண்டா அல்லது இனி வருவதற்கு வாய்ப்பு இருக்கா?

*இல்லை*
*இனி வருவதும் அபூர்வம்.*

💥 *பிடிஆருக்கு ஏன் இத்தனை எதிரிகள் அதுவும் கட்சிக்கு வெளியிலயும் கட்சிக்கு உள்ளயும்?*

சங்கிகளை
உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை தேசிய ஊடகங்கள் என்று எல்லா இடங்களிலும் கதற வைக்கிறார்..

ஒன்றிய நிதியமைச்சரை நரேந்திர மோடியை எல்லாம் கிடைக்கிற கேப்ல எல்லாம் கோமாளியாக்கி சந்தி சிரிக்க வைக்கிறார்..

சங்கி அரசியலுக்கு துணையாய் நிற்கும் போலி சாமியார்களை துண்டைக்காணோம் துணிய
Read 11 tweets
Apr 27
*வியக்கவைக்கும் *கட்டுரை*

*பிரிட்டிஷார்* ✝️
*Vs*
*பார்ப்பனர்கள்*
🕎🕉️🚩

*பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும்,*

*சத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும்,*

*வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும்,*
*சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த,*
* *பார்ப்பனர்களின் மனுதர்மச் சட்டத்தை,**

*கிருஸ்தவ பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,*

*சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்,*

*1773 ஆம் ஆண்டு முதல் கிருஸ்தவ
பிரிட்டன் அரசு, பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.*

*சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை,*

*1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை,*
*கிருஸ்தவ வெள்ளையர்களால் வழங்கப்பட்டது.*

*1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை,*
Read 13 tweets
Apr 27
அவதூறுகளுக்கு பிறந்த பாஜக அவதூறு செய்தால் திமுக பதில் சொல்லனுமா?

கீழ்க்கண்ட எந்த குற்றச்சாட்டுக்காவது பிஜேபி பதில் சொல்லியுள்ளதா?

அதானி ஊழல்,
PM Care ஊழல்,
தேர்தல் பத்திர ஊழல்,
புல்வாமா ராணுவ வீரர்கள் கொலைச் சதி,
மோடியின் கல்வி,
ஹனிடிராப் செய்து சொந்த கட்சியினரையே மிரட்டுவது,
ஆருத்ரா ஊழல்,
KT ராகவன் வீடியோ

மேலும் விடை தெரியாத கேள்விகள் 👇🏻

*நவீன ஊழல் பிஜேபி*

PM CARE FUND பற்றி ஆரம்பத்திலேயே தெளிவாக விளக்கம் தராதது ஏன்?

Electoral Bonds மூலம் மக்களுக்கு உண்மை மறைக்கப்பட்டது ஏன்?

ரஃபேல் விமானம் ஏன் அதிக விலைக்கு வாங்கப்பட்டது ஏன்?

2014 க்கு பின்
வங்கிகளின் வாரா கடன் பல லட்சம் கோடி ஆனது ஏன்?

54 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு 588 கோடி சொத்து.
13 வருடங்களே ஆட்சி செய்த பாஜகவின் சொத்து 4847 கோடி சொத்து வந்தது எப்படி?

எல் ஐ சி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து அதானி நிறுவனங்களில் முதலீடு செய்தது ஏன்?
Read 5 tweets
Apr 27
*பார்ப்பனீய சொல்லாடல்கள்!*
*(ஒவ்வொரு சொல்லிலும் விஷம் கலந்திருக்கும்)*

*இந்திராவைக் கொன்றது சீக்கியன் என பஞ்சாபிகளை அடையாளம் காட்டினான்*

*இராஜீவைக் கொன்றது புலிகள்எனும் அமைப்பை அடையாளம் காட்டினான்*

*காந்தியாரைக் கொன்றவனை மட்டும் கோட்சே என்றே அடையாளம் காட்டினான்*
*அவன் இயக்கத்தையும் காட்டவில்லை*
*அவன் இனத்தையும் அடையாளம் காட்டவில்லை!*

*ஆரியர் வருகை என்றான்.*
*இசுலாமியர் படையெடுப்பு என்றான்*

*தியாகராயர் நகரை T.Nagar என்றான்*
*கலைஞர் கருணாநிதி நகரை K.K.Nagar என்றான்*
*அண்ணா சாலையை Mount Road என்றான்*

*என்றாவது சனாதன வாதிகளின் பண்பாட்டு
குறியீடுகளை இவர்கள் இப்படி சுருக்கிச் சொன்னதுண்டா??*

*அவர் வண்ணான்,*
*அவர் பறையன் என்றான்.*

*இவர் அய்யர்!மிகவும் நல்லவர் என்றான்*

*உரிமைக்காக உழைத்த கலைஞரை ஊழல்வாதி என கட்டமைத்தான். ஆனால் எந்த ஊழல் வழக்கிலும் தண்டனை பெற்றவரல்ல*

*ஊழலில் ஊறித் திளைத்து தண்டனை பெற்ற செயலலிதாவை
Read 5 tweets
Apr 27
*நம்ம பிரதமர் மோடி அவர்களும், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களும் "டபுள் இன்ஜின் - Double Engine " அரசியல் சித்து விளையாட்டுகளை பாருங்கள்!*

*RSS BJP அகராதியில் டபுள் இன்ஜின் ஆட்சி என்றால், பன்னீரில் குளிப்பாட்டி விட்டு செருப்பால் அடிப்பது என்று பொருள்!*

*ஒரு பக்கம் "காசி Image
தமிழ் சங்கம், குஜராத் சவுராஷ்டிரா தமிழ் சங்கம்" என்று சொல்லி ஏதோ தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மைகள் செய்வதைப் போல பாவ்லா காட்டிக் கொண்டே,*

*இன்னொரு பக்கம் எங்கெல்லாம் தமிழர்களுக்கு ஆப்பு வைக்க முடியுமோ, துரோகம் செய்ய முடியுமோ அதை எல்லாம் ஈவு இரக்கமின்றி செய்து
வருகிறார்கள்!*

*ஒன்றியரசு நிறுவனங்களில், அது வங்கியாகட்டும், பொது துறை நிறுவனங்களுக்கும் எல்லாவற்றிலும் பணியாற்ற தமிழர்களுக்கும் முற்றிலுமாக வாய்ப்பு மறுக்கப்படுகிறது!*

*மோடி அவர்களும், அமித் ஷா அவர்களுக்கும் தமிழ் நாட்டு மக்களை வஞ்சிப்பதில் போட்டி போட்டுக் கொண்டு
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(