ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து பெரிய ஹைப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கும் இந்த சிகப்புஅரிசியின் பயனை பற்றி உணவேமருந்து பகுதியில் பார்க்கப்போகிறோம்.
கடந்த 48 நாட்களாக நான் சாப்பிட்டுவரும் இந்த சிகப்பு அரிசி இலங்கையில் இருந்து துபாய்க்கு ஏற்றுமதியாகி வந்துள்ளது.
இந்த சிகப்புபுழுங்கல்அரிசி பட்டை தீட்டப்படாத அரிசி அதாவது பாலிஷ் செய்யப்படாத அரிசி இதில் நார்ச்சத்துக்கள் மிகுதியாக உள்ளது நான் சாப்பிட்ட வகையில் கடந்த 48 நாட்களாக ரத்தத்தில் சர்க்கரைஅளவு கட்டுப்பாட்டில் உள்ளது எலும்புவளர்ச்சிக்கு & உடல் எடை குறைக்க நல்லது . எளிதாக ஜீரணம் ஆகும்.
இதய சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள் வெள்ளைஅரிசிக்கு பதிலாக தொடர்ந்து சிகப்பு அரிசியை பயன்படுத்தினால் இதய பாதிப்புகள் குறையும் தோல் அலர்ஜி தோலில்அரிப்பு தோல் தடித்து இருப்பது மெலடின் தோளில் குறைவாக போன்ற காரணங்களால்பாதிப்பு உள்ளோர் சிகப்பு அரிசி தொடர்ந்து பயன்படுத்தினால் நல்லது
சளி தொந்தரவு மூச்சு பிரச்சனை ஆகியவற்றுக்கும் இந்த சிகப்பு அரிசி சாப்பிட்டால் நலம். இதில் கார்போஹைட்ரேட் அளவு வெள்ளை அரிசி காட்டிலும் குறைவு நார்ச்சத்து அதிகம் எளிதில் ஜீரணமாகும் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும் இந்த சிகப்பு அரிசியை தொடர்ந்து மதிய வேளையில் சாப்பிட்டு வரலாம்
மதியம் சற்று அதிகமாக சிகப்பு அரிசி சாதம் வடித்து மதியம் சாப்பிட்டது போக மீதி உள்ள சாதத்தில் நல்ல தண்ணீரை ஊற்றி வைத்து மறுநாள் காலை அதை சிகப்பு அரிசி நீர் ஆகாரமாக வடிகட்டி அதில் சிறிது அளவு உப்பு சேர்த்து வெறும் வயிற்றில் பருகினால் அமிர்தமாக இருக்கும்.
இவ்வளவு பயனுள்ள சிகப்பு அரிசி விலையிலும் அதிகம் இல்லை.வெள்ளை அரிசி பயன்பாட்டை சிறிது சிறிதாக குறைத்து சிகப்பு அரிசி பயன்பாட்டை அதிகப்படுத்தி கொண்டால் நோயின்றி வாழலாம் இந்த சிகப்பு அரிசி கேரளா மட்டை அரிசி அல்ல. இது தனியாக நம் தமிழ்நாட்டில் சாப்பிடக்கூடிய பொன்னி அரிசி போலவே உள்ளது.
தூத்துக்குடி முறப்பநாட்டில் மணல் திருட்டு பற்றி தகவல் கொடுத்த கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸின் மனைவி மற்றும் மகன் அவரது படுகொலையை பார்த்து கதறி அழும் பரிதாபக் காட்சி.
மேலே காணொளியில் கண்ட லூர்து பிரான்ஸின் படுகொலை பற்றிய செய்தி.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு என்ற பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் மணல் திருட்டு பற்றிய தகவல் கொடுத்ததால் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அவரது உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழும் காட்சி .
லூர்து பிரான்சிஸ் மிகவும் நேர்மையான அதிகாரி எனவும் ஏற்கனவே அரசுபுறம்போக்கு நிலத்தைஆக்கிரமித்த நபர்களுக்கு எதிராக போராடி அரசுநிலத்தை ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து பெற்றுக் கொடுத்தார் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறும் காட்சி. விடியா ஆட்சியில் அரசு அதிகாரி உயிருக்கே பாதுகாப்பு இல்லை?
மதுரைமாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுமுதலைக்குளம் என்ற கிராமத்தை கிராமகூட்டுறவு நியாயவிலைக்கடை சொசைட்டி தலைவராக இருமல்குமாரின் தந்தை இருந்த காலத்தில் நியாயவிலைக்கடைக்கு வரும் மண்ணெண்ணெயை ஆட்டைய போட்டு --Read More
#இருமல்குமார் அதாவது அநாகரிகமாக சொல்ல வேண்டுமென்றால் நியாய விலை கடை கிராமமக்களுக்கு வந்த மண்ணெண்ணையை திருடி அதை வெளிச்சந்தையில் நல்ல லாபத்துக்கு விற்று கிடைக்கப்பெற்ற அதீத லாபத்தைக் கொண்டு தன் மகனுக்கு திருமண மண்டபம், வயல்காடு ,வரப்பு ,தோப்பு ,துறவு ஆகியவைகளை வாங்கிப் போட்டதாக
ஒரு செய்தி வந்ததை அடுத்து நம் களப்பணி ஆய்வாளர்கள் அந்த நடுமுதலைக்குளம் கிராமத்திற்கு நேராக சென்று அங்கு வசிக்கும் மக்களிடம் நன்றாக விசாரித்து வந்த இந்த செய்தி உண்மைதான் என அவர்கள் கிராம மக்களே கூற கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட பின்பு இந்த பதிவை இடுகிறோம்.
'டைம்ஸ் நவ் 'எனும் வட இந்திய ஊடகத்தில் விவாதத்தின் போது முறைதவறி பேசியதால் விசிக சிறுத்தை குட்டி
R. விக்ரமனை நடுநிலை நெறியாளர் திரு.ராகுல் சிவசங்கர் அடித்து விரட்டி வாயை மூடி உட்கார வைத்த அந்த அருமையான தருணம். #நாடககாதல்_விக்ரமன்
ஆஹா ஓடிடி தளத்தில் கலையரசன்&மிர்னா நடிப்பில் #புர்கா படம் கண்டேன் அருமையான கதைகளம்,தேர்ச்சியான நடிப்பு, நல்லதிரைக்கதை, அனைவரும் குடும்பத்துடன் காணவேண்டிய ஒரு விழிப்புணர்வு சித்திரம்! நடிகர்கள் கலையரசன்&மிர்னா மற்றும் இயக்குனர் சர்ஜின் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நான் கண்டு வியந்த ஒரு அருமையான அம்சம் புர்கா படத்தில் பெண்களை
மதிக்கப்படவேண்டும், பெண்ணியம் போற்ற பட வேண்டும், பெண்களுக்கும் ஒரு மனது உண்டு , மூடநம்பிக்கையின் பேரில் பெண் அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டியது இந்த சமூகத்தில் போன்ற விழிப்புணர்வு கருத்துக்கள் கொண்ட படம் .
தன் தாயின் அன்புக்காக ஏங்கியவன் முகம்தெரியாத ஒரு பெண்ணால் உயிர் காப்பாற்றப்பட்டு அந்தப் பெண்ணுக்கு மதசடங்கு, மூடநம்பிக்கையின் பேரில் அந்த பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டு மனம் வெதும்பும் திரைக்கதை. நல்ல காட்சி அமைப்பு, அருமையான நடிப்பு படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.#புர்கா
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் கோல்டன் விசா பெற்ற தென்னிந்திய நடிகர்கள்:-
உதயநிதிஸ்டாலின்,கமல்ஹாசன், திரிஷா, விஜய்சேதுபதி, மம்முட்டி, மோகன்லால், துல்ஹர்சல்மான், நிவின்பாலி, சரத்குமார், பார்த்திபன்,நாசர்,சிம்பு ,
ஆண்ட்ரியா ,காஜல் அகர்வால்,அமலாபால் பலர். கோல்டன் விசா என்றால் என்ன?
கோல்டன் விசா என்பது துபாயில் வழங்கப்படக்கூடிய 10 ஆண்டு குடியுரிமை. தங்கள் சம்பாதித்த பணத்தை தங்கள் உறவினர் பணத்தை பினாமி பணத்தை எந்த ஒரு தடங்கள் இன்றி ஐக்கியஅரபு அமீரகம் துபாயில் வந்து வணிகத்தில் முதலீடு செய்யலாம் அதற்காக துபாய் அரசுக்கு 50 ஆயிரம் திர்ஹாம் கட்டினால் போதுமானது.
எவ்வளவு பணம் வேண்டுமானாலும் ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் வணிக முதலீடு செய்து வரி செலுத்திய உடன் தாங்கள் கொண்டுவந்த பினாமி கருப்புபணத்தை வெள்ளை பணமாக ஆக்கி லாபத்தை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர முடியும் சட்டபூர்வமாக. இதுவே கோல்டன் விசா வைத்திருப்போர் செய்யும் முதலீடின் பலன் .
இன்று உணவே மருந்து பகுதியில் நாம் பார்க்கப்போவது சிறு குழந்தைகள் & வாலிபவயதுடையவர் சாப்பிட ருசியான சத்துமாவு கஞ்சி எப்படி தயாரிப்பது ?
இந்த சத்துமாவு கஞ்சியை ஆரோக்கிய பானங்களுக்கு பதிலாக கீழேகொடுக்கக்கூடிய செய்முறைபடி கஞ்சியாகசெய்து குடிக்கலாம்.
கீழே கொடுக்கக்கூடிய அளவுகளில் தானியங்களை வறுத்து/ சூரிய ஒளியில் காய வைத்து வறுத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து செய்முறை படி கஞ்சியாக செய்து குடிக்கலாம்.
கேழ்வரகு 400கிராம்
சம்பா கோதுமை 500கி
வறுத்த உப்பில்லாத வேர்க்கடலை 250 கிராம்
பொட்டுக்கடலை 250 கிராம் முந்திரிப் பருப்பு 100
பாதாம் பருப்பு 100 கிராம்
ஜவ்வரிசி 50 கி
மக்காசோளம் 100 கி
கம்பு 250 கி
சாமை 250 கி
வரகு 250 கி
குதிரைவாலி 250 கி
கொள்ளு 100 கி இவை அனைத்தையும் பொன்னிறமாக வறுத்து ரைஸ்மில் கொடுத்து மாவாக அரைத்து கொள்ளவும்