பஞ்ச லிங்கம் அருளும் தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் :*
தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தென்குடி திட்டை என்ற திருத்தலம்.
இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
இறைவியின் நாமம் ‘மங்களாம்பிகை’ என்பதாகும்.
பிரளய காலத்தில் அழியாமல் இருந்து, மந்திர ஒலிகள் தோன்றிய மகத்தான தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், ஒரு பஞ்சலிங்க தலமாக விளங்கி வருகிறது.
இந்தக் கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக உள்ளார்.
பஞ்ச பூதங்களுக்கும் உரிய தலமாகவும் இது விளங்குகிறது.
இத்தலத்தில் உள்ள இறைவன் தானே தோன்றியதால் ‘ஸ்ரீவயம்பூதேஸ்வரர்’ என்றும், வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்டதால் ‘வசிஷ்டேஸ்வரர்’ என்றும், பசுக்கள் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் ‘பசுபதீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
அனந்தீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், ரதபுரீஸ்வரர், நாகநாதர், நாகேஸ்வரர் என்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு.
திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில், திட்டை குரு பகவான் ‘#ராஜகுரு’வாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர், வியாழ பகவான் எனப்படும் குரு.
மற்ற கிரகங்களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு.
நவக்கிரகங்களில்
சூரியன் - ராஜா.
சந்திரன் - ராணி.
செவ்வாய் – சேனாதிபதி.
புதன் – இளவரசர்.
குரு பகவான் – ராஜ மந்திரி.
மதி நிறைந்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ளனர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும், குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பொதுவாக அஷ்டமி, நவமி திதிகள் மற்றும் கரி நாட்களில் தொட்டது துலங்காது என்பர்.
மேலும் இந்நாட்களில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது.
தொடர்ந்து கொண்டே போகும் என்பர்.
*அஷ்டமி :*
அஷ்டமி திதிகளில் சுப காரியங்களான திருமணம், கிரப் பிரவேசம், சொத்து வாங்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஆனால் இந்நாள் தெய்வீக காரியங்களுக்கு தீட்சை பெறுவது,
மந்திரங்கள் ஜெபிப்பது உள்ளிட்டவைகளை மேற்கொள்ள உகந்த நாளாகும்.
குறிப்பாக செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி திதி ஏற்றவையாகும்.
கேரள மாநிலத்தின் பூர்ணா நதிக்கரையில் “காலடி” என்ற ஊரில் இறைவழிபாட்டிலும் தான தருமங்கள் செய்வதிலும் புகழ் பெற்று விளங்கிய சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதிகளுக்கு, பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தது.
இதனால் இத்தம்பதியர்கள் மன வருத்தமடைந்தனர்.
அவர்கள் திருச்சூருக்குச் சென்று “வடுகநாதன்” என்ற பெயரில் அங்கு குடிகொண்டிருக்கும் சிவபெருமானிடம் தங்களுக்குக் குழந்தை வரம் தர வேண்டி ஒரு மண்டலம் விரதம் இருந்தனர்.
இவ்விரதத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றினார்.
அவர்களிடம் “உங்களுக்குத் தீய குணங்களுள்ள பல குழந்தைகள் வேண்டுமா அல்லது நற்குணமும் இறை பக்தியும் கொண்டு, பலருக்கும் குருவாய் விளங்கக் கூடிய ஒரு குழந்தை வேண்டுமா?” என்று கேட்டார்.
இதை கேட்ட தம்பதியர்கள் இருவரும் சேர்ந்தவாறு, “எங்களுக்கு நற்குணமுடைய ஒரு குழந்தை போதும்” என்றனர்.