1/ ஊடகங்களுக்கு உண்மை தேவை இல்லை. உண்மையைப் போல வேஷம் போட்ட பொய்கள் இருந்தால் போதும். எதையாவது சொல்லுவது... இப்படி இருக்குமோ இருந்தாலும் இருக்கும் என்று நினைக்க வைப்பதுதான் ஊடகங்களின் வேலை. அதற்கு ஒரு நல்ல உதாரணம் சமீபத்தில் நடந்த ஜி ஸ்கொயர் ரைடு விவகாரத்தை @JuniorVikatanம் புதிய
2/ தலைமுறையும் எப்படிக் கையாண்டன என்பதுதான்.
யாரோ ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து விட்டது. அதனால் வருமான வரித்துறையினர் சோதனை செய்கிறார்கள் என்று எழுதினால் அதில் பெப் இருக்காது என்று இந்த ஊடகங்களுக்குத் தெரியும்.
பொதுவாக ஒரு ரியல் எஸ்டேட்
3/ நிறுவனத்தில் கருப்புப் பணம் புழங்குவது இயல்புதான். அதைத் தேடி சோதனை நடத்துவதும் சகஜம்தான். வருமானத்திற்கு அதிகமான பணம் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் சாதாரணம்தான் என்று டிவி வியூவர்ஸ் பெரிதாக இதில் அக்கறை காட்ட மாட்டார்கள் என்று ஊடகங்களுக்குத் தெரியும்.
4/ அந்த நேரத்தில்தான் டெல்லியில் இருந்து அவர்களுக்கு ஒரு அசைன்மென்ட் வருகிறது அல்லது ஒரு புரளி கிளப்பப்பட்டு அந்தப் புரளியை உண்மை போல வெளியிடும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. பொதுவாக புரளியை உண்மை போலச் சொன்னால் பணமும் கிடைக்கும். டிஆர்பியும் எகிறும் என்று கண்ணா ரெண்டு
5/ லட்டு திங்க ஆசையா என்று ரெண்டு லட்டு திங்க ஆசைப்பட்டார்கள்.
அது என்ன புரளி?
அதுதான் #திமுக வுக்கும் ஜிஸ்கொயருக்கும் சம்பந்தம் என்று கிளப்பி விடுவது.
திமுகவுக்கும் ஜிஸ் கொயருக்கும் சம்பந்தம் என்று சொல்லி விட்டால் என்ன? என்று முதலில் சிந்தித்தார்கள்.
6/ இல்லை அதை விட, ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கும் ஜி ஸ்கொயருக்கும் சம்பந்தம் என்று சொல்லி விடுவோம்... அப்பத்தான் இன்னும் கொஞ்சம் பெப் ஏறும் என்று முடிவு செய்தார்கள்.
புதிய தலைமுறை ஜி ஸ்கொயரில் நடந்த சோதனை பற்றி ஒரு சின்ன செய்தி போடுகிறது.
7/ அதில் ஜி ஸ்கொயரின் இயக்குனர் ரங்கசாமி ராமஜெயம்.
அவர் எல்எல்பி என்ற நிறுவனத்தை பிரசாந்த் ரெட்டியுடன் இணைந்து நடத்தி வருகிறார்.
பிரசாந்த் ரெட்டி சபரீசனுடன் சேர்ந்து லோட்டஸ் பெவின் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்... இந்த நிறுவனம் ஜி ஸ்கொயரில் முதலீடு செய்துள்ளதா
8/ என்று விசாரித்து வருகின்றனர் என்று புதிய தலைமுறை ஒரு செய்தியை வெளியிட்டது.
இந்தச் செய்தியை மேலோட்டமாகப் பார்த்தால் என்ன தெரியும்... அல்லது என்ன நினைப்பார்கள்...?
இப்போது சோதனை நடப்பது ஜி ஸ்கொயரில்.
9/ அந்த நிறுவனத்தின் உரிமையாளர் இன்னொருவருடன் சேர்ந்து மற்றொரு நிறுவனத்தை நடத்துகிறார்.
அந்த இன்னொருவர் சபரீசனுடன் சேர்ந்து தொழில் நடத்துகிறார்.
அதனால் ஜி ஸ்கொயருக்கும் சபரீசனுக்கும் தொடர்பு இருக்கும் என்று பார்ப்பவர்கள் நினைக்க வேண்டும். இதுதான் அந்தச் செய்தியின் நோக்கம்.
10/ இப்படிச் சொன்னால்தான் அவர்கள் விரும்பிய பெப்பும்.. துட்டும் கிடைக்கும். சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.
ஜி ஸ்கொயர் ஓனர் A என்று வைத்துக் கொள்வோம்.. அவர் B என்பவருடன் சேர்ந்து வேறு ஒரு தொழில் செய்கிறார். அந்த B என்பவர் C என்பவருடன் சேர்ந்து வேறு ஒரு தொழில் செய்கிறார்.
11/ அப்படியானால் Aக்கும் Cக்கும் தொடர்பு இருக்கும்தானே என்று ஒரு புரளியைக் கிளப்பிவிடப் பார்க்கிறது புதிய தலைமுறை.
ஆனால் உண்மையில் ஜி ஸ்கொயர் நிறுவனம், எங்களுக்கும் சபரீசனுக்கும் தொடர்பு இல்லை என்று சொல்லி விட்டது. அடுத்து வருமான வரித்துறையினர் போனார்கள். சோதனை நடத்தினார்கள்...
12/ ..அதிலும் சபரீசனுக்கும் ஜி ஸ்கொயருக்கும் தொடர்பு இருப்பதாக ஆதாரம் எதையும் கண்டுபிடிக்கவில்லை. சோலி முடிந்தது... @vikatan ஜூனியர் விகடன் ஒரு சினிமா டைட்டில் போல "SABS ஆபரேஷன்" என்று டைட்டில் வைத்து ஒரு கதையைச் சொன்னது. அந்தக் கதை முழுவதையும் ஆழமாகப் படித்தால் ஒரே ஒரு
13/ இடத்தைத் தவிர, வேறு எந்த இடத்திலும் ஜி ஸ்கொயருக்கும் சபரீசனுக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்லவில்லை. நாம் ஏற்கனவே சொன்னதைப் போல தொடர்பு இருந்தாலும் இருக்கும் என்று நம்ப வைப்பதற்காக எழுதப்பட்ட கதை அது.
அந்த ஒரு இடம் ❓என்னவென்றால் ஆடிட்டர் சண்முகராஜா.
14/ அவர் சபரீசனுக்கும் ஆடிட்டர். ஜி ஸ்கொயருக்கும் ஆடிட்டர். அவரிடம் விசாரணை நடந்தது. அதனால் ஜி ஸ்கொயருக்கும் சபரீசனுக்கும் தொடர்பு இருந்தது என்று கிளப்பி விடுகிறது ஜீவி. இப்போது சபரீசன் @JuniorVikatan மீது அவதூறு வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன. 💥💥💥
15/ சரி ஒரு ஆடிட்டரிடம் விசாரணை நடந்தாலே... அவர் யாருக்கெல்லாம் ஆடிட்டராக இருக்கிறாரோ அவர்கள் எல்லாமே முறைகேடு செய்திருப்பதாக அர்த்தமா?
குப்புசாமி ஒரு ஓட்டலில் சாப்பிடப் போகிறார்... ராமசாமியும் அந்த ஓட்டலுக்கு சாப்பிடப் போகிறார் . ராமசாமி ஏதோ ஒரு கேசில் சிக்கி,
16/ அது பற்றி அவர் சாப்பிட்ட ஓட்டல் உரிமையாளரிடம் விசாரிக்கிறார்கள். உடனே அதே ஓட்டலில்தான் குப்புசாமியும் சாப்பிட்டார் அதனால் அவருக்கும் கேசில் தொடர்பு இருக்கிறது என்று கிளப்பி விட்டால் எப்படி இருக்கும்...
அதைத்தான் @vikatan ஜீவி செய்திருக்கிறது.
கடைசியில் குப்புசாமியே எனக்கும்
17/ ராமசாமிக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி, விசாரிக்கப் போனவர்களும் ஆமாம் சம்பந்தமில்லை என்று சொல்லி விட்டார்கள். சோலி முடிந்தது...
மொத்தத்தில் ஊழல் ஒழிப்பு முறைகேடு கண்டுபிடிப்பு என்பதில் எல்லாம் யாருக்கும் உண்மையான அக்கறை இல்லை.
18/ @BJP4India திமுகவை அரசியல் ரீதியில் ஒழித்துக்கட்ட நினைக்கிறது... எடுபடவில்லை.
கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சிக்கிறது அவ்வளவுதான் 🤔 அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று இறங்கி, அதற்கு #SappaShankar போன்ற புரோக்கர்களையும் ஜீவி, புதிய தலைமுறை போன்ற ஊடகங்களையும் பயன்படுத்துகிறது...
#திருப்போரூர்_சட்டமன்றத்தொகுதி க்கு உட்பட்ட #காஞ்சிபுரம்_வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு மற்றும் பேரூர் கழகம் சார்பில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி செயல்வீரர்கள் கூட்டம். கூட்டத்தை #திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.@IdhayavarmanSrl Ex.MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #திருப்போரூர் பேரூராட்சி மன்ற தலைவர் பேரூர் கழக செயலாளர் திரு.எம்.தேவராஜ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புயாற்றினார் #காஞ்சிபுரம்_வடக்கு
மாவட்ட கழக செயலாளர் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பு அண்ணன் @thamoanbarasan அவர்கள்.
இன் நிகழ்சியில் திரு.@gselvam_mp அவர்கள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், திரு.@elamsurithi அவர்கள் மாமன்ற உறுப்பினர் மாநில @DMKNRIWing துணை
"ஒதுக்கீடு" உரிமையை பகிர்வது பெருமையா? - பாஜகவின் ஏமாற்று அரசியல்
......
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் @BJP4India வேட்பாளர் பட்டியலில் 30 SC + 16 ST இருப்பதை சுட்டிக்காட்டி, "சமமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் கட்சி பாஜக மட்டுமே" என அக்கட்சியின் இளைஞர்
அணியின் தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
பொய் சொல்வதையே பழக்கமாக கொண்ட மோடியின் தொண்டர் தேஜஸ்வி சூர்யா, தனது பெருமிதத்தில் பல உண்மைகளை புதைத்திருக்கிறார்.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 36 SC + 15 ST = 51 தொகுதிகள் அரசியலமைப்புச் சட்டப்படி ஒதுக்கப்பட்ட இடங்கள். ஆனால் பாஜக வெளியிட்ட பட்டியலில் 46 SC&ST வேட்பாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தின் படி,
🐐 அண்ணாமலையை கட்டி அணைச்சு உம்மா கொடுத்த போதே சிக்கப்போறார் சுரேஷ்னு தெரிஞ்சுப் போச்சு. @BJP4India ஓபிசி பிரிவின் துணைத் தலைவராக இருந்தவர் சுரேஷ். மாநில கலைப்பிரிவிலும் இவருக்குப் பதவி இருந்தது. அது கலைப்பிரிவா களவாணிப்
2/ பிரிவான்னே தெரியல.. திருடன் கிட்ட இருந்தே 12 கோடி ரூபாயை அபேஸ் பண்ணிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார் ஆர்,கே.சுரேஷ்.
ஆர்.கே.சுரேஷ் அண்ணாமலைக்கும் அமர் பிரசாத்துக்கும் நெருக்கமாக இருந்தார்.
இருவருக்கும் நெருக்கமாக இருந்தாலே ஆருத்ரா கோல்டுக்கு நெருக்கமாகத்தானே இருப்பார்.
3/ ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் முகவராக செயல்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரூசோ கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 கோடியே 40 லட்சத்தை முடக்கினர்.
இவர் ஒயிட் ரோஸ் என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத்
திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் மானாம்பதி ஊராட்சியில் புதியதாக கட்டி முடிக்கபட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார் #திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர்
திரு.எல்.இதயவர்மன் Ex.MLA அவர்கள். இன் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் திரு.க.தேவராஜ் அவர்கள், அருங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.ரா.அன்பரசு அவர்கள், திருநிலை ஊராட்சி மன்ற தலைவர் திரு.நாகம்மாள் துரைசாமி அவர்கள், மானாம்பதி தி.மு.கழக அவைத்தலைவர் திரு.தனப்பால்
அவர்கள், மானாம்பதி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் திரு.சங்கர் அவர்கள், மானாம்பதி திரு.ஜீவா அவர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர் அவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்றும் மக்கள் பணியில் @IdhayavarmanSrl
ஜெயில்ல இருந்து வந்ததும் கைதிகள் நேரே வீட்டுக்குத்தான் போவார்கள். எண்ணெய் தேய்த்து தலைமுழுகி விட்டு பிரிந்திருந்த மனைவி, குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவார்கள்.
2/ ஆனால், @BJP4India நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு எப்படித்தான் மூக்கில் வியர்க்குமோ தெரியாது. விடுதலையாகி வெளியே வரும் கைதிகளை, புள்ள புடிக்கிறவன மாதிரி வாரிப் போட்டுக் கொண்டு கமலாயத்துக்கு கொண்டு போய் சேர்ப்பதில் கில்லாடி.
3/ வசதியான அக்யூஸ்டுகளாக இருந்தா அமர் பிரசாத் காட்டுல மழை தான். அட்ரா அப்பாயின்மென்ட் ஆர்டரை என்ற கதையாக, இந்த கையில துட்டு..இந்த கையில பதவி கொடுக்கிறதுல அமர் பிரசாத் ரெட்டி கெட்டி என்கிறார்கள் பாஜகவினர்.
ஆனா.. எத்தனை நாளைக்குத் தான் இந்தப் பொழப்பு ஓடும்?