இலவச மின்சாரம் கிடைத்ததால் தான் வீட்டில் ஒத்த லைட்டாவது ஒளிர்ந்தது
இலவச டிவி கொடுத்த பிறகு தான் அடுத்த வீட்டில் சென்று நிலைபடிக்கு வெளியில் அமர்ந்து டிவி பார்த்து அவமானப்பட்டது தடுக்கப்பட்டது. கலர் டிவியே அப்போது தான் புழக்கத்திற்கே வந்தது. @EllorumNamudan@V_Senthilbalaji
இலவச கேஸ் அடுப்பு கொடுத்த பிறகு தான் அடுப்பூதும் பெண்களின் நிலை மாறியது.
இலவச வேட்டி சேலை கொடுக்கப்பட்டபோது தான் வீட்டில் பெற்றோர் பலர் புதுத்துணி கட்டினார்கள்.
இலவச காலணி கொடுத்தபோது தான் முதல்முறையாக செருப்பை அணிந்தோம்.
பெண்களுக்கு பட்டமேற்படிப்பு வரை இலவச கல்வி இருப்பதால் தான் அரசு கல்லூரிகளில் சேர்ந்தோம். @Surya_BornToWin@_kabilans
இலவச சைக்கிள் கொடுத்ததால் தான் கிராமப்புற பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்தாத நிலைவந்தது.
இலவச உணவு கிடைத்ததால் தான் பள்ளிக்கே போனோம்.
இலவச உணவையே எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டமாய் மாற்றிய பிறகு தான் ஊட்டச்சத்து கிடைத்தது. @rajlingam78@Natuviral007
இலவச சத்துணவோடு முட்டை வழங்க கலைஞர் உத்தரவிட்டதால் தான் குழந்தைகளுக்கு புரதசத்து கிடைத்தது.@Varavanaisen@magizh_
இலவச கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தால் தான் கூரையை அகற்றினோம்.
இலவச காங்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்க குடிசைமாற்று வாரியத்தை கலைஞர் உருவாக்கியதால் தான் கூரையை விட்டு வெளியில் வந்தோம். @rajiv_dmk@suryaxavier1
இலவச கண்ணொளி திட்டத்தை கலைஞர் தொடங்கி வைத்ததால் தான் கண் அறுவை சிகிச்சை என்ற ஒன்றே இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
கூட்டுறவு வங்கிகள் மூலமாக கலைஞர் அரசு கொண்டுவந்த இலவச மாடு கொடுக்கும் திட்டத்தால் தான் பொருளாதர நிலை உயர வழி பிறந்தது.
இன்று அதுவே ஆடுமாடு கொடுக்கும் திட்டமாக அம்மையார் ஆட்சி காலத்தில் மலர்ந்தது. பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டது.
இலவச வீட்டுமனைப் பட்டா கிடைத்ததால் தான் எங்களின் பொறம்போக்கு என்ற நிலையே மாறியது.
இலவச பொங்கல் பை கொடுத்ததால் தான் பல பேர் வீட்டில் பொங்கல் கொண்டாடப்பட்டது.
இலவச லேப்டாப் கொடுத்ததால் தான் இன்டர் நெட் சென்டர்கள் ஒழிக்கப்பட்டு வீட்டிலேயே அறிவை வளர்த்தோம்.
இலவசமாக கலைஞர் இரண்டு ஏக்கர் நிலம் வழங்கியதால் தான் கூலி விவசாயிகள் பலர் சிறு குறு விவசாயிகள் ஆனார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பெண்களுக்காக பேருந்து பயணத்தை இலவசமாக்கியதால் தான் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நிம்மதி பிறந்தது.
இலவச மிக்சி கிரைண்டர் அம்மையார் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டபோது தான் கல்லில் மாவாட்டும் கொடுமை அகன்றது.
தாலிக்கு 2 பவுன் இலவசமாக தங்கம் வழங்கியதால் ஏழைப் பெண்களின் வறுமைக்கு உதவியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மாணவிகளுக்கு மாதந்தோறும் ₹1000 ரூபாய் கொடுக்க உத்தரவிட்டிருப்பதன் மூலம் பெண் குழந்தைகளிம் கல்விக்கு குடும்பத்தை எதிர்பார்க்கும் சூழல் மாறியிருக்கிறது.
இப்படி அடுக்கிக்கொண்டே போனால் இந்த 50 ஆண்டு திராவிட அரசியல் முழுவதையும் பேசி தீர்க்க முடியும். இலவசம் என்று சீமான் எதை கேவலப்படுத்துகிறார் என்று தெரியவில்லை. இதில் எது வேண்டாம் என்கிறார். ? இதைக்கொண்டு தான் மேலே வந்தோம்.
சீமானுக்கு நினைவெல்லாம் சீமான் என்ற நினைவு இருக்கிறது போலும். பிறக்கும் போதே சீமான்களாக பிறப்பவர்களுக்கே இலவசங்களின் அருமை தெரியாது.அது எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டது என்ற பெருமை தெரியாது. @idumbaikarthi@SeemanOfficial
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Thread
பிராமணர் களாகிய நாங்களே ஆங்கிலேயர்கள் பள்ளிக்குப் போகாத போது சூத்திரனாகிய நீ உன் பையனைப் படிக்க அனுப்புவது தப்பு என்று தோன்றவே இல் லையா?” என்று உரத்த குரலில் கேட்டார்.
(1/1)
திலகர் பெருமானின் வழிகாட்டுதலில் நிச்சயமாக நாம் சுயராஜ்யம் பெற்றுவிடுவோம்” என்று உற்சாக மாகத் தன் நண்பர்களிடம் கூறிக்கொண்டு இருந்த இளைஞனாகிய வாசுதேவஹரி, திலகரிடம் பணி யாற்றும் சேடக் வருத்தம் தோய்ந்த முகத்துடன் சென்று கொண்டிருப்பதைக் கண்டு, அவரை அழைத்து விசாரித்தார்.(1/2)
தன் குடும்பச் செலவை ஈடுகட்ட, தனக் குத் தரப்படும் சம்பளம் போதவில்லை என்பதால் சம்பள உயர்வு கேட்டதாகவும், அதற்கு, நான் அளிக்கும் சம்பளம் அல்லாது, ஆங்கிலேயர்கள் தரும் சன்மானமும் கிடைத்துக் கொண்டிருக்க, சம்பள உயர்வுக்கு என்ன காரணம் என்று திலகர் பெருமான் கேட்டுவிட்டதாகவும்,(1/3)
எவ்வளவு அயோக்கியனானாலும் இந்த விரதத்தை கொண்டாடினால் மோட்சம் கிடைக்கும் என்று மக்கள் கருதி இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். (1/2)
ஒரு வேடன். அவன் தன் உணவுக்குத் தினமும் பல பிராணிகளை வேட்டையாடி கொன்று தின்பது வழக்கம், அந்தப்படி ஒரு நாள் காட்டில் வேட்டையாடி இரை தேட சென்றதில் அவனுக்குக் கொல்ல ஒரு பிராணியும் கிடைக்கவில்லை. அவன் மனக் கலக்கமடைந்து சோர்ந்து திரிந்தான். அந்நேரத்தில் அந்தக் காட்டில் ஒரு புலி,(1/2)
அவன் கண்ணுக்குத் தென்பட்டது. நேரமும் சற்று இருட்டி விட்டது. என்றாலும் வேடன் புலியைக் கண்டு ஓடினான். புலி விரட்டிற்று. வேடன் உடனே அங்கு இருந்த ஒரு மரத்தின்மீது அவசரமாக ஏறிக் கொண்டான்
புலி அவனைப் பார்த்த வண்ணமே மரத்தடியில் சிறிது நின்று கொண்டிருந்து படுத்துக் கொண்டது(1/3)
ஏன் இந்தப் புத்தகம் என்று கேட்டால், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த செய்திகள் இல்லாத நாளே இப்போது இல்லை. 90 ஆண்டுகளுக்கு முன்பே பாலின சமத்துவத்தைப் பேசிய புத்தகம் இது. உலகிலேயே முதல்முறையாக பெண் விடுதலை பற்றிப் பேசியது #பெரியார் தான்.(1/2)
இந்தப் புத்தகத்திற்கு பின்பு 20 ஆண்டுகள் கழித்துதான் 'The Second Sex' என்ற புத்தகம் வருகிறது. இந்தப் புத்தகத்தை பதின்பருவத்தில் உள்ள மாணவர் ஒருவர் தன் தாய்க்குப் பரிசாக அளித்துள்ளார். கணவனை இழந்த அவரது தாயார், "இந்தப் புத்தகத்தை காலம் கடந்து படித்திருக்கிறேன்.(1/2)
முன்பே படித்திருக்க வேண்டும்" என்றார். "அவர் முன்பே படித்திருந்தால், ஒருவேளை அவர் மறுமணம் செய்திருக்கக்கூடும்" என்கிறார் தம்பி. கணவனை இழந்த பெண்கள், மறுமணம் செய்யக்கூடாது என்று சொல்வது, உடன்கட்டை ஏறுதலைவிட கொடுமையானது என, நூற்றாண்டுக்கு முன்பே சொல்லிய பெரியார்,(1/3)
பெண் ஏன் அடிமையானாள்?' நூலுக்கு அரசுப் பள்ளி மாணவர்களின் விமர்சனம்!
திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை உண்டு உறைவிடப் பள்ளியில் பெண் ஏன் அடிமையானாள் நூல் 200 பிரதிகள், சிலரின் நன்கொடையில் வாங்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து, அப்பள்ளியின் ஆசிரியை மகாலட்சுமியின் கருத்தைக் கேட்டபோது, (1/1)
என்னை விட, இந்தப் புத்தகத்தைப் படித்த மாணவர்கள் சிலர் பேசுவதைக் கேளுங்க" என்றார். ஆர்வத்துடன் பேசிய மாணவர்களிலிருந்து ஒரு சிலரின் கருத்துகள்:
(1/2)
7ம் வகுப்புப் படிக்கும் சிநேகா: ``பெரியார் எழுதின பெண் ஏன் அடிமையானாள்னு ஒரு புத்தகம் இருக்கு. அதை நீங்கல்லாம் படிக்கணும்னு டீச்சர் சொல்லிட்டே இருப்பாங்க. இப்போ, கரிகாலன் மற்றும் சிவகுருநாதன் ஆகியோரின் உதவியால் எங்களுக்கு இந்தப் புத்தகம் கிடைச்சுது. அதுக்காக, 2 பேருக்கும் நன்றி.
1921 ஆம் ஆண்டு கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர், தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார். இப்போராட்டத்தில், கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனையும் பெற்றார். 1921-1922-ல் (1/1)
ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபட்ட அவர், மீண்டும் கைது செய்யப்பட்டார்.
1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். துவக்கத்தில் இருந்தே வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை ஆதரித்து வந்த தந்தை பெரியார் அவர்கள்
காங்கிரஸின் பல்வேறு மாநாடுகளில் கட்சிக்குள் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக பல்வேறு மாநாடுகளில் “வகுப்பு வாரித் தீர்மானம்” கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சித்தார். இறுதி கட்ட முயற்சியாக 1925 காஞ்சிபுரம் மாநில மாநாட்டிலும்(1/3)