இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையானது பிரண்டை, நல்லெண்ணெய், பஞ்சு திரி, நான்கு அகல் விளக்கு.
இந்த தீபத்தை நாம் வீட்டில் எந்த நாளில் வேண்டுமானாலும் ஏற்ற தொடங்கலாம்.
அதையும் நம் வீட்டு பூஜை அறையிலேயே ஏற்றலாம்.
இதற்கு முதலில் ஒரு விரல் அளவு நீளமுள்ள நான்கு பிரண்டையை நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் ஒவ்வொரு பிரண்டையும் நான்காக நறுக்கி இடையில் பஞ்சு திரி வைத்து நன்றாக கட்டி சிறிது நேரம் ஈரம் தன்மை போகும் வரை வெயிலில் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது நான்கு அகல் விளக்கிலும் நல்லெண்ணெய் ஊற்றி இந்த நான்கு பிரண்டை திரி போட்டு பிறகு தீபம் ஏற்றி வைத்து உங்களுடைய இந்த வங்கிக் கடன் நகை கடன் எல்லாம் முழுவதுமாக அடைய வேண்டும் என்று மனதார உங்கள் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள்.
இந்த தீபத்தை தொடர்ந்து 48 நாட்கள் ஏற்றி வர வேண்டும். 48 நாட்களும் புதிய பிரண்டை தான் பயன்படுத்த வேண்டும்.
பெண்கள் இந்த தீபத்தை ஏற்றும் போது அவர்களுக்கான மாத இடையூறு வரும் நாட்களை தவிர்த்து பின் தொடர்ச்சியாக இந்த தீபத்தை ஏற்றலாம்.
*(04 - 05 - 2023 - சித்திரை 21 முதல் 29 - 05 - 2023 வைகாசி 15 வரை)*
*அக்னி நட்சத்திர காலத்தில் செய்யக் கூடியவை / செய்யக் கூடாதவை*
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும்
04 - 05 - 2023 முதல் தொடங்க உள்ளது.
வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில் மே மாதம் 29 ஆம் தேதி வரை நீடிக்கிறது.
அக்னி நட்சத்திரம் பிறந்து விட்டால் சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் காலம் காலமாக இருந்து வருகிறது.
முன்னொரு காலத்தில், அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததாலும், அப்போது குளிர்சாதனம், மின்விசிறி போன்ற வசதிகள் இல்லாததாலும், அந்த நேரத்தில் சுபகாரியங்களை நடத்தினால்,