சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் அதிருத்ர ஜப பாராயணம்,
மஹாருத்ர ஹோமம்,
ஸ்ரீ நடராஜர் மஹாபிஷேகம்
அதிருத்ர ஜப பாராயணம் :
01.05.2023 முதல் 10.05.2023 வரை, காலை 07.30 மணி முதல்.
121 தீக்ஷிதர்கள் 11 முறை ஸ்ரீ ருத்ர மந்திர ஜப பாராயணம்.
மேற்கண்ட பத்து தினங்களில் 14,641 முறை ஸ்ரீ ருத்ர மந்திரங்கள் பாராயணம் செய்யப்படும்.
இடம் : கிழக்கு கோபுர வாயில் வழியாக வந்து இருபத்தியொரு படி வாசல் கடந்தால் வரும் பிரகாரத்தின் வலது கடைக்கோடியில் இருக்கும் கொலு மண்டபம்.
மஹா ருத்ர ஹோமம் :
11.05.2023, காலை 09.00 மணி முதல் – விசேஷ பூஜைகள், தொடர்ந்து மதியம் மஹா ருத்ர ஹோமம், கோ (பசு மாடு) பூஜை, அஸ்வ (குதிரை) பூஜை, கஜ (யானை) பூஜை, கன்யா பூஜை, ஸுவாஸினி பூஜை, தம்பதி பூஜைகள் நடைபெறும்.
இடம் : கிழக்கு கோபுரத்திற்கு அடுத்திருக்கும் நடனபந்தல் மண்டபம்.
ஸ்ரீ நடராஜர் மஹாபிஷேகம் :
11.05.2023, மாலை 06.00 மணி முதல் ஸ்ரீ சிவகாம ஸுந்தரி ஸமேத ஸ்ரீமன் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு ஸகல திரவிய மஹாபிஷேகம்.
இடம் : சித்ஸபை எனும் பொன்னம்பலத்திற்கு அடுத்திருக்கும் கனகசபை
கோயில் என்றாலே பொருள்படுவது சிதம்பரம் திருத்தலம்.
பல கலைகளின் அதி மேன்மையான அம்சங்களைத் தன்னகத்தே கொண்டதும்,
மூர்த்தி – தலம் - தீர்த்தம் என மூன்றினாலும் பெருமையும் பெற்ற அருட்தலம்.
பற்பல தெய்வ உருவ நிலைகளை உள்ளடக்கிய தெய்வத்தலம்.
தில்லை மூவாயிரவர் எனப் போற்றப்படும் தீக்ஷிதர்களால்,
காலம் காலமாக பூரணமான வைதீக நெறிமுறைப்படி வழிபாடு ஆற்றப்பட்டும் வைதீகத்தலம்.
இங்கு, ஆடல்வல்லப் பெருமானாகிய ஸ்ரீ நடராஜ ராஜ மூர்த்தி அனுதினமும் ஆடல்காட்சியை நல்கி ஆனந்தத்தை அளித்திடுகிறார்.
இக்கோயிலில் நடைபெறும் விழாக்கள் மிக பிரம்மாண்டமானதாக அமையும்.
மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளும் சிதம்பரம் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் எனும் ஸ்ரீ நடராஜர் கோயில் பொது தீக்ஷிதர்களால், மிகச் சிறப்பு வாய்ந்த முறையில் நடத்தப்படவுள்ளது.
அபிஷேக பிரியர் என்பது நடராஜருக்கு உரிய சிறப்பு பெயர்.
ஸ்ரீ நடராஜர் அபிஷேகத்தைக் காண்பது மனதைக் கொள்ளை கொள்வதாக அமையும்.
அதிலும், சிதம்பரத்தில் நடைபெறும் அபிஷேகம்,
வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் பெரும் நிகழ்வாக,
அபிஷேகப் பொருட்கள் பெருமளவு கொண்டதாக அமையும்.
அதிருத்ர ஜபம் :
121 தீக்ஷிதர்கள்,
மேற்கண்ட 10 நாட்களில்,
காலை வேளையில்,
14641 முறை ஸ்ரீ ருத்ரம் எனும் சிறப்பு வாய்ந்த மந்திரத்தை பாராயணம் செய்வார்கள்.
ஸ்ரீ ருத்ர மந்திர சிறப்பு :
நமது இந்து சனாதன மதத்திற்கு ஆதாரமாக விளங்குவது ரிக், யஜுர், ஸாமம் மற்றும் அதர்வணம் எனும் நான்கு வேதங்கள்.
யஜுர் வேதத்தின் மையப்பகுதியாகவும்,
வேதத்தின் சாரமாகவும், சைவத்தின் மிக உயர் நிலை தெய்வமாக விளங்கும் சிவபெருமானையே
முழுவதும் போற்றுவதும் ஆகத் திகழ்வது ஸ்ரீ ருத்ரம் ஆகும்.
ஸ்ரீ ருத்ரம் - யஜுர் வேத தைத்திரீய சம்ஹிதையின் நடுநாயகமாக அமைந்துள்ளது.
சிவநேயர்களின் இறைகோஷமாக எப்பொழுதும் சொல்லப்படுதும்,
சைவத் திருமறைகள் அற்புதமாக போற்றுவதும் (நமசிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க) ஆகிய 'நமசிவாய' எனும் ஐந்தெழுத்தை தன்னுள் கொண்டது ஸ்ரீ ருத்ரம். (நமசிவாயச)
11.05.2023 அன்று காலை ஸ்ரீ ருத்ர ஜப பாராயணங்களை நிறைவு செய்து,
மஹாருத்ர மஹா யாகம் நடைபெற்று,
மாலை ஸ்ரீ சிவகாம ஸுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜ ராஜ மூர்த்திக்கு ஸகல திரவிய மஹா மஹாபிஷேகம் நடைபெறும்.
பலன்கள் :
விரும்பிய வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும்.
நினைத்த காரியங்கள் ஈடேறும்.
ஸ்ரீ ருத்ர ஜபத்தால் எல்லா தெய்வங்களும் திருப்தி அடைகின்றனர் என்று ஸூத ஸம்ஹிதை கூறுகிறது.
மேற்கண்ட நிகழ்வுகளின் இடையே, தமிழ்த் திருமுறை பாராயணங்களும், நாதஸ்வர நல்லிசை போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெறும்.
மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளையும் தரிசித்து,
ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் பரிபூரணமான அருளைப் பெறவேண்டுமாய்க் கோருகிறோம்.
*(04 - 05 - 2023 - சித்திரை 21 முதல் 29 - 05 - 2023 வைகாசி 15 வரை)*
*அக்னி நட்சத்திர காலத்தில் செய்யக் கூடியவை / செய்யக் கூடாதவை*
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும்
04 - 05 - 2023 முதல் தொடங்க உள்ளது.
வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில் மே மாதம் 29 ஆம் தேதி வரை நீடிக்கிறது.
அக்னி நட்சத்திரம் பிறந்து விட்டால் சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் காலம் காலமாக இருந்து வருகிறது.
முன்னொரு காலத்தில், அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததாலும், அப்போது குளிர்சாதனம், மின்விசிறி போன்ற வசதிகள் இல்லாததாலும், அந்த நேரத்தில் சுபகாரியங்களை நடத்தினால்,