கரிசலாங்கண்ணி,
வெண்கரிசலை அல்லது
கையாந்தகரை (Eclipta prostrata) ஒரு மருத்துவ மூலிகைச்
செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.
வெள்ளைக் கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது ஓராண்டுத் தாவரமாகும்.
இதற்கு கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் (மஞ்சள் கரிசாலை) ஆகிய வேறு பெயர்களை உண்டு.
கரிசல்+ ஆம்+காண்+நீ (கரிசலாங் கண்ணி); இதன் இலைச் சாறு கரிசல் நிலம் போல, கருமையான சாயத்தைக் கொடுப்பதால் இப்பெயர் பெற்றது.
கரிசலாங்கண்ணி ஞான மூலிகை எனப் போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேசசுத்தி மூலிகை எனப் பாராட்டப் படுகிறது.
கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.
கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:
நீர்=85%
மாவுப்பொருள்=9.2%
புரதம்=4.4%
கொழுப்பு=0.8%
கால்சியம்=62 யூனிட்
இரும்புத் தாது=8.9 யூனிட்
பாஸ்பரஸ்=4.62%
இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.
🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆவணியாபுரம்
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்.....
லட்சுமி நரசிம்மர் திருமண தடை நீக்கும் நவ நரசிம்மர்....
1
ஆரணியிலிருந்து 15 கி.மீ, வந்தவாசியிலிருந்து 30 கி.மீ , சேத்துப்பட்டிலிருந்து 15 கி.மீ, செய்யாறிலிருந்து 25 கி.மீ தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது. செய்யாற்றின் கரையோரம் அமைந்துள்ளது.
2
தட்சிண சிம்மாசலம் என்றும் தட்சிண அகோபிலம் என்றும் சொல்லப்படும் இந்த நவநரசிம்ம ஸ்தலம் சிறிய மலைமேல் உள்ளது. சிங்க முகத்துடன் நாராயணன் அருள்பாலிப்பதால் ஆவணி நாராயணபுரம் என்றும் பின்னர் மருவி ஆவணியாபுரம் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
நூறு ஆண்டுகளுக்குப்பின் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் கள்ளழகர்!
சித்திரைத் திருவிழா மதுரையில் களைகட்டியுள்ளது. வைகையில் இறங்க மதுரைக்கு வரும் கள்ளழகர் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.
மே 5ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்க உள்ளதை முன்னிட்டு ஆயிரம் பொன் சப்பரம் அற்புதமாகத் தயாராகி உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று, அகிலம் புரக்கும் அங்கயற்கண்ணியாம் மீனாட்சி அம்மைக்குப் பட்டாபிஷேக வைபவம் வெகுசிறப்பாக நடைபெற்றது. மே 2 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. மே 3 ஆம் தேதி இன்று திருத்தேரோட்டம் .
தண்டுக்கீரை (Amaranthus tricolor) கீரைக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். செழிப்பான பகுதிகளில் ஓர் ஆள் உயரம் வரை வளரக் கூடியது. தண்டுக்கீரை ஆறு மாதங்கள் வரை வளரக் கூடியது.
ஆனால், 100 முதல் 120 நாட்களுக்குள் இந்தக் கீரையை அறுவடை செய்து சமைக்கும் போதுதான் தண்டுகள் நார் இல்லாமல் இளசாகவும், உண்ணுவதற்குச் சுவையாகவும் இருக்கும். முதிர்ந்த கீரையில் மிக அதிக அளவிலான எாிபொருள் கிடைக்கிறது.
தண்டுக்கீரையைப் பருப்பு வகைகளோடு அவியல், மசியல், பொறியல் போன்ற பல விதங்களாக தயார் செய்தும் உண்ணலாம்.
நமக்கு எதுவெல்லாம் இந்த உலகில் தேவைப்படுகிறதோ அதை நம் மனதில் கற்பனையில் கொண்டு வருவதே ஆசை.
ஆசைகளை பற்றி இன்னும்_
விளக்கமாக கூற வேண்டுமானால் ஆசைகளும் உணர்ச்சிகளும் ஒரு கயிற்றின் இரண்டு பிரிகளைப் போல, அவை ஒன்றோடோறொன்று பின்னிக்கொண்டு இதயத்தைச் சுற்றி இறுக்கமாகப் பிணைந்துகொள்கின்றன
நாம் அவைகளை நிதானமாகப் பயன்படுத்திக்கொண்டால் நன்மை விளையும், அளவுக்கு அதிகமானால் அழிவு நிச்சயமாகிவிடும்..
முருங்கை மரத்தில் (Moringa oleifera) இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கைப் பூ உண்ணப்படும் ஒரு உணவு ஆகும்.
முரி எனும் சொல் ஒடிதல், கெடுதல் எனப் பொருள்படும். முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் ஆகும்.
முருங்கை மரவகையைச் சேர்ந்தது. இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஆரம்பம் இமயமலை அடிவாரம்.
முருங்கை அனைத்து வகை மண்ணிலும் வளரக் கூடியது எனினும், மணல் சார்ந்த அங்ககத் தன்மை அதிகமுள்ள நிலங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது. இது வறண்ட, பாசன வசதி குறைந்த, வெப்பம் அதிகமுள்ள பகுதியிலும் நன்கு வளரக்கூடியது.
பிரம்மாவின் மகன் சனத்குமார், பெருமாளை மனித ரூபத்தில் காண ஆசைப்பட்டு, பெருமாளை வேண்டி தவமிருந்தார். இவரது பக்தியை மெச்சி பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தந்தார்.
2
சனத்குமார், தேவலோகச் சிற்பி விஸ்வகர்மாவிடம் தான் கண்ட காட்சியை வடிவமைக்கச்
சொன்னார். அவ்வாறு வடிவமைத்த சிற்பத்தை அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டை செய்தார். அவரே கூடலழகர்.