மற்போர் பெண்களை சீண்டியவனை நெருங்க முடியாத சட்டங்கள், மனதில் பட்டதை தெரிவிப்பவர்களை, மத வேறுபாடு இன்றி மிரட்டும்.
சமீபத்திய நிகழ்வு, புனேயில்
காலம் கடந்தது என கூறி பாடிக் கொண்டிருந்த ஏ ஆர் ரகுமானை
நிறுத்த சொன்ன காவல் துறை.
சமீப காலங்களில், ஏ ஆர் ரகுமான் சர்ச்சைக்குரியவராக பொதுவெளியில் சித்தரிப்பது தொடர்கிறது.
அவர் அடையாளத்திற்காக என்பதை விட, ஒரு இந்திய குடி மகனாக தனது மனதின் குரலை வெளியிடுவதற்காக கூட இருக்கலாம்.
இதன் தொடர்ச்சியே கச்சேரி மேடையில் காவல் துறை தரிசனம்
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் காவல்துறை, தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றிடம் இருந்து முறையான அனுமதி பெற்றனர்
ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 10 மணிவரை நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
கடைசி பாடலாக 'வந்தே மாதரம்' இடம்பெறும் என திட்டமிட்டனர்
நிகழ்ச்சி நேரத்தை இழுத்ததால்
கடைசி பாடலாக சையா, சையா உடன் 10 மணிக்கு நிறுத்த முடிவெடுத்தனர்.
இந்நிலையில் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மேடையில் ஏறி 10 மணி ஆகிவிட்டது கச்சேரியை நிறுத்துங்கள் என்றது.
ரகுமானும் உடன் பட்டு அப்போதே நிறுத்தி விட்டார்
இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்,
"காலம் கடந்ததை, மேடையின் பின்புறம் வந்து சொல்லி இருக்கலாம்" என்று கூறி முடித்துக் கொண்டனர்.
ஜக்கி வாசுதேவ் குத்தாட்ட நிகழ்ச்சியாக இருந்தால் இதே போல மேடை ஏற காவல் துறை துணியுமா?
இது ரஹ்மானின் அடையாளத்தின் மீதான தாக்குதல் என்று கூறி கடக்கலாம் என்றால்,
இரண்டாண்டு தண்டனையை நிறுத்த ராகுல் தாக்கல் செய்த சீராய்வு மனுவில் இடைக்கால நிவாரணம் இன்றி தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது
இதை விட கொடுங் குற்றவாளிகளை விடுதலை செய்த குஜராத் நீதிமன்றம்
மற்றொரு புறம், மற்போர் பெண்கள் போராடித் தான் பாலியல் குற்றவாளியான WFI தலைவர் பிறிஜ் பூஷன் மீது FIR பதிவு செய்ய முடிந்திருக்கு
குற்றம் சாட்டப் பட்ட நபரோ, இன்னும் சுதந்திரமாக பொது வெளியில் சுற்றுவதுடன்
பாதிக்கப் பட்டவர்களை மிரட்டி வருகிறார்
ரஹ்மானின் அடையாளத்தில் துவங்கி, மற்போர் பெண்களின் ஜாதிகள் ஊடே, எதிர்ப்போரை எதோ ஒரு முத்திரை குத்தி பயணிக்கிறது பாசிசம்
ஹிட்லரின் வதை முகாம்களில் உயிரை விட்ட யூதர்களின் எண்ணிக்கைக்கு சமமாக சுத்த ஆரிய ரத்த ஜெர்மன் மக்களும் திறந்தவெளி சிறையில் வதைக்கப் பட்டனர் என்பது வரலாறு
ஆஸ்கார் நாயகன் என்றாலும், அற்புத வீரர் என்றாலும், ஆள்பவர் விருப்பத்திற்கு எதிராக நடக்க முயன்றால் Propaganda கும்பல் உன்னை தேச துரோகி ஆக்கி விடும்.
சமீபத்திய பலி விராட் கோலி.
பல நிறுவனங்கள் அரசியல் மயமான நிலையில், ஜாதி மயமான கிரிக்கெட்டை விட்டு வைப்பார்களா?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் Article 25 படி ஒருவர் தான் விரும்பிய மதத்தை பின்பற்றவும் பிரச்சாரம் செய்யவும் உரிமை உள்ளது.
தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை"
சிறுமி லாவண்யா வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் பதில் இது
சந்தேகத்திற்கு இடமான லாவண்யா தற்கொலையை மதமாற்றும் முயற்சி என,
இந்தியா முழுவதும் பரப்பின சங்கீ வார் ரூம் அடியாட்கள் பரப்பிய போது திணறித்தான் போனது தமிழ்நாடு.
ஆனால் விரைவில் உண்மைகளை வெளியில் கொண்டு வந்தது.
தொடர்ந்து பல "மதமாற்ற" கதைகள் பரப்பப்பட்டன
தமிழ்நாடை விட அதிகம் குறி வைக்கப் படுவது கேரளா.
நாட்டின் பிரதமரே, இந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் வயநாடு சென்று இருக்கிறார் ராகுல் என்று பரப்பப்பட்டது.
இரண்டு மாநிலங்களிலும் எவ்வளவோ முயற்சி செய்தும் கலவரத்தை உண்டாக்க முடியவில்லை.
மக்களின் தெளிவு அப்படி
ஷாந்தி ஹோமம், திசை ஹோமம், மூர்த்தி ஹோமம், வாஸ்து ஷாந்தி, ஷப்த ஷாந்தி, சகஸ்ர கலச ஸ்தாபனம் எல்லாம் பண்ணி மஹா ஸம்ப்ரோக்ஷணம் பண்ணனும். அப்போதான் இது கழியும்.
அப்டித்தான் நம்ம ஸாஸ்த்ரங்கள் சொல்றது.
ஜாதின்றது சமூகம் சம்பந்தப்பட்டது இல்லை.
அது மதக் கோட்பாடு
பகவான் மனுசாளை சரிசமமா பார்க்கவும் இல்லை;
அப்படி படைக்கவும் இல்லை. மிருகங்களில் பலவகைன்ற மாதிரி மனுசாளையும் நாலு வர்ணமா, அதுல நாலாயிரம் ஜாதியா பிரிச்சு உருவாக்கியிருக்கார் அவர்.
நாம அத மீறது மஹா பாவம்
இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டே போன அந்த மிக பிரபலமான 50வது சாட்சி,
நம் அனைவரின் பெருமைமிக்க கலாசார பண்பாட்டுப் புனிதமான, சனாதன தர்ம ஹிந்து மத நூல்களில் இருந்து மேற்கோள்களைக் காட்டி பேசப் பேச, அது வரையில் தயக்கத்தில் இருந்த மதுரை நீதிமன்ற நீதிபதி வரத ராவிற்கு தெளிவும், துணிவும் பிறந்தது.
அவர்கள் நுழைந்ததற்குத் தீட்டு கழிப்பதற்கு ஆகும் செலவு என
ராகுலை தகுதிநீக்க சீராய்வு மனு இன்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ராகுல் சார்பாக அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி,
"பின்விளைவுகள் மாற்ற முடியாதவை, தண்டனை நிறுத்தப் படாவிட்டால் ராகுலின் 8 வருட அரசியல் வாழ்க்கையை இழக்க நேரிடும்' என வாதிட்டார்
"சாட்டப்பட்ட குற்றத்தில் தார்மீக கொந்தளிப்பு இல்லை,
அடையாளம் காணக்கூடிய ஜாமீன் பெறக்கூடிய குற்றம் தான். மிகக் கடுமையான குற்றங்களின் கூட நீதிமன்றங்கள் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது " என நீதிபதி ஹேமந்த் அடங்கிய பெஞ்ச் முன் வாதிட்டார்
காந்தியின் தகுதி நீக்கம் மற்றும் அவதூறு வழக்கில் தடை விதிக்கப்படாமல் இருப்பது அவரது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வாய்ப்புகளை மட்டுமல்ல அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதி மக்களின் நலன்களையும் மோசமாக பாதிக்கும் என வாதிட்டார்
2014 க்குப் பிறகு மற்றொரு மதம், மொழியினர் மீதான வெறுப்பு பேச்சுகளின் எண்ணிக்கை 500% அதிகரித்ததாக புள்ளி விவரம் கூறுகிறது.
இதற்கு முடிவு கட்ட,
உச்ச நீதிமன்றம் அதி முக்கிய உத்தரவு பிறப்பித்திருக்கிறது
உண்மையில் மாஸ்டர் ஸ்ட்ரோக் தான்
ஏற்கனவே டெல்லி, உத்திர பிரதேஷ், உத்தரகாண்ட் மாநிலங்களில் அமுலில் உள்ள வெறுப்பு பேச்சுக்கு எதிராக காவல்துறை தாமாகவே வழக்குப் பதிய வேண்டும் என்ற 2022 உத்தரவை அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் நீட்டித்திருக்கிறது
ஐபிசியின் பிரிவு 153A, 153B, 295A மற்றும் 506 போன்ற குற்றங்களை ஈர்க்கும் எந்தவொரு பேச்சு அல்லது எந்த நடவடிக்கையும் உடனடியாக, எந்த புகாரும் பதிவு செய்யப்படாமல், தானாக முன்வந்து வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதை தொடர்புடைய மாநிலங்கள் உறுதிசெய்ய வேண்டும்