காலச்சக்கரம் 😌 #இன்றிலிருந்து_35_வருடங்களுக்கு#முந்தைய_காலம்
பஸ்களுக்கும் லாரிகளுக்கும் மூக்கு இருந்த காலம்.
அது ஒரு சிறிய ஊர். ஊருக்கு வெளியே ஒரு டூரிங்க் டாக்கீஸ். ஓலை வேய்ந்த கொட்டாய். விவசாய நிலத்தில் இருக்கும் மோட்டார் ரூம் மாதிரி முன்னால் ஒரு தகர ஷெட். அதுதான்
N/2👇
ப்ரொஜொக்டர் ரூம். மூனாங் க்ளாஸ் படித்த முனுசாமி தான் ஆப்பரேட்டர்.
காலையில் தெருவில் டம் டம் என்று அடித்துக் கொண்டு ஒரு மாட்டு வண்டி போகும். மாடு மகாதேவியை இழுத்துக் கொண்டு போகும். இரண்டு பக்கமும் படத்தின் பெயர் போட்டு தட்டி கட்டியிருக்கும்.
பஞ்சு மிட்டாய் கலரில் நோட்டீஸ்
N/3👇
கொடுத்துக் கொண்டே போவார்கள். நோட்டீஸ் வாங்க பிஞ்சுகள் பின்னாலேயே ஓடும்.
நாராயண செட்டியார் கடையில் விளம்பர தட்டி வைத்திருப்பார்கள். அதற்காக தட்டி பாஸ் கொடுப்பார்கள். இரண்டு டிக்கெட். கடைசி நாள் போகலாம். இதற்காகவே செட்டியாரின் பையன் ஸ்ரீராமுலுவுடன் நிறைய பேர் சிநேகம்
N/4👇
வைத்திருப்பார்கள்.
ஆனால் கடைசி வரை செட்டியார் அந்த தட்டி பாஸ்களை மற்றவர்களுக்கு ட்ரான்ஸ்பர் செய்ததே இல்லை.
என் அப்பா கடை வைக்காமல் ஏன் வேலைக்கு போகிறார் என்று எனக்கு கோபம் கோபமாக வரும்.
திடீரென்று ஒரு நாள் போஸ்டரின் மேல் 'இன்றே இப்படம் கடைசி' என்று ஒரு ஸ்டிக்கர்
N/5👇
ஒட்டுவார்கள்.
இன்றைய கால கட்ட படங்களுக்கு ரிலீஸ் ஆன தேதியிலேயே இந்த ஸ்டிக்கர் ஒட்டி விடுகிறார்கள்.
மாலை ஆறு மணிக்கு தியேட்டரில் கூம்பு ஒலி பெருக்கியில் பாட்டு போடுவார்கள். அது ஊர் முழுக்க கேட்கும்.
சினிமா போக வேண்டியவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்வார்கள். பெண்கள் ரெமி
N/6👇
பவுடர் எடுத்து அப்பிக் கொள்வார்கள். வீபூதிக் காப்பு செய்த முருகர் மாதிரி முகம் மாறிப் போயிருந்திருக்கும்.
தியேட்டரில் மொத்தம் பதினைந்து ரிகார்ட் தான் இருக்கும். அதே பாட்டை தான் தினமும் போடுவார்கள். வரிசை கூட மாறாது. ஆப்பரேட்டரின் play list ல் shuffle option கூட இருக்காது.
N/7👇
அரை மணி நேரத்தில் பாட்டு தியேட்டருக்கு உள்ளே ஒலிக்க ஆரம்பிக்கும். விரைவில் படம் போடப் போகின்றார்கள் என்பதற்கான சிக்னல் அது.
"பாட்டு உள்ளே போடறாங்க..." என்று தியேட்டருக்கு ஓடுவார்கள். குழந்தையை தர தரவென இழுத்துக் கொண்டு ஓடுவார்கள்
தியேட்டர் வரை குழந்தை சைரன் ஒலித்துக் கொண்டே
N/8👇
வரும்.
தியேட்டர் வரைக்கும் தான் கணவன் மனைவி ஜோடி செல்லும். தியேட்டருக்குள் அவர்கள் ஆண் - பெண் என்று redefine செய்யப் படுவார்கள். ஆண்களுக்கு தனி இடம். பெண்களுக்கு தனி இடம். மூன்று மணி நேர legal separation.
தரை டிக்கெட் நாலணா. கீழே மணல் பரப்பியிருக்கும். அந்த மணலைக் குவித்து
N/9👇
அதை high chair ஆக்குவார்கள்.
ஸ்க்ரீன் என்பது ஒரு பெரிய வெள்ளைத் துணி. அதற்கு திரை எல்லாம் கிடையாது.கவர் போடாத செல்போன் மாதிரி. நிறைய அடி வாங்கியிருக்கும். மட்டை உரிக்காத தேங்காய் சைஸுக்கு மஞ்சளாக ஒரு கறை இருக்கும்.
ஸ்க்ரீனில் அவ்வப்போது ஒரு பெரிய பல்லி ரவுண்டு அடித்துக்
N/10👇
கொண்டிருக்கும்.
ஏகப்பட்ட வேட்டிகளை பக்கம் பக்கமாக நிற்க வைத்து மேலிருந்து கீழாக தைத்திருப்பார்கள். அது தான் ஸ்க்ரீன்.
ஊரிலிருக்கும் எல்லா வேட்டியும் ஸ்க்ரீனுக்கே போய் விட்டதால் ஆடியன்ஸில் நிறைய பேர் வேட்டி இல்லாமல் இருப்பார்கள்.
'ட்ட்ட்ட்ட்ரிங்' என்று மணி அடிக்கும்.
N/11👇
நள்வரவு என்று ஸ்லைட் போடுவார்கள். மூனாங் க்ளாஸ் முனுசாமி இவ்வளவு எழுதியதே பெரிய விஷயம்.
அடுத்து நியூஸ் ரீல் ஓடும். நேரு எகிப்துக்கு நல்லெண்ண விஜயம் போய் நாசருடன் கை குலுக்குவார். பீகாரில் வெள்ளம் வரும். ஏதோ ஒரு விவசாயி நாலு நிமிடம் ஹிந்தியில் பேசுவார். கேமரா தப்பித் தவறி
N/12👇
கூட விந்திய மலைக்கு கீழே வந்து விடாது.
படம் போட ஆரம்பிப்பார்கள்.
முதலில் சென்சார் போர்ட் சர்டிபிகேட். 22 ரீல் என்று போட்டிருக்கும். அனைவருக்கும் சந்தோஷம். கொடுத்த நாலணாவுக்கு நான்கு மணி நேரம் படம் பார்க்கலாம்
அப்போதெல்லாம் பெரும்பாலும் சரித்திரக் கதைகள் தான்
முதல் சீனிலேயே
N/13👇
மகாராணிக்கு ஆண் குழந்தை பிறக்கும். பிறக்கும் போதே பப்பாளி சைஸில் கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைத்துக் கொண்டு பிறக்கும்.
டெலிவரிக்காக எம்.என்.நம்பியார் தயாராகக் காத்திருப்பார். நம்பியாரும், பி.எஸ். வீரப்பாவும் மாறி மாறி வில்லன்களாக வருவார்கள்.
நம்பியார் ஒரு படத்தில்
N/14👇
நாகேந்திரனாக வந்தால் அடுத்த படத்தில் பி.எஸ். வீரப்பா பிலேந்திரனாக வருவார்.
இப்படியாக இருவரும் பிற்போக்கு கூட்டணி அமைத்து
கெட்ட செயல்கள் செய்து வருவார்கள்.
அந்த நேரம் பார்த்து பல்லி ஸ்க்ரீனில் ஓடும். கதாநாயகன் உடலெங்கும் படர்ந்து நுழையக் கூடாத இடத்தில் எல்லாம் நுழையும்.
N/15👇
கதாநாயகன் பாட்டுக்கு பாடிக் கொண்டிருப்பான்.
பாட்டு முடிந்தவுடன் பல்லி வட கிழக்கு திசையில் ஓடி மறைந்து விடும்.
படத்தில் மொத்தம் நான்கு இண்டர்வெல்.
டைரக்டர் தயவில் இரண்டு. ரீல் மாற்றுவதற்காக இரண்டு இண்டர்வெல்.
இண்டர்வெல் விட்டதும் " சோடாலேர்...வேகலே..." என்று பையன்கள்
N/16👇
கத்திக் கொண்டு போவார்கள்.
சோடா கலர், வேர்க்கடலை என்பதின் திரிபுகள் அவை.
கோலி சோடாவை குடிப்பது தனி டெக்னிக். எல்லோராலும் குடித்து விட முடியாது. கவிழ்த்தால் கோலி வந்து மூடிக் கொள்ளும். அப்படியே குடித்தாலும் மீத்தேன் கேஸ் மூக்கு வழியாக ரெகுலேட்டர் இல்லாமல் வந்து கொண்டே
N/17👇
இருக்கும்.
இண்டர்வெல் முடிந்ததும் ஸ்லைட் போடுவார்கள்.
சாந்தி சில்க் ஹவுஸ்
முத்து ஹேர் கட்டிங் சலூன்
ராஜா டெய்லரிங்
காமதேனு காபி ஒர்க்ஸ்
என்று வரிசையாக வரும்.
காமதேனு காபி பொடி விளம்பரத்தில் கவுன் போட்டுக் கொண்டு ஒரு லேடி வருவார்.
படம் ஆரம்பிக்கும்.கிர்ர்ர் என்ற
N/18👇
சத்தத்துடன்
படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே,
திடீரென ஃபிலிம் கட் ஆகும்.
வெள்ளைத் திரை தெரியும். விசில் சத்தம் கேட்கும். ஸ்க்ரீன் மீது டார்ச் அடித்து ஹீரோயினை தேடுவார்கள்.
ஃபிலிம் ஒட்டியதும் படம் ஓடும்.
படம் முடியும் போது பதினோரு மணி ஆகியிருக்கும்.
பெண்கள் முகம் எல்லாம்
N/19👇
அழுது அழுது உப்பி போயிருக்கும். அழுமூஞ்சி மனைவியை அரை இருட்டில் தேடிக் கொண்டிருப்பார்கள் கணவர்கள்.
படம் முடிந்து போகும் போது கும்பலாக போக வேண்டும். சாலையில் விளக்கு இருக்காது. கும்மிருட்டு.
இரு பக்கமும் புளிய மரங்கள். பாராசூட்டில் பேய்கள் எந்த நேரமும் வந்து இறங்கலாம்.
N/20👇
கண்களைத் திருப்பாமல் வேகமாக நடப்பார்கள்.
பெண்கள் திரும்பிப் பார்க்கவே மாட்டார்கள். பி.எஸ்.வீரப்பா பின்னால் வருவது போலவே ஒரு உள்ளுணர்வு இருக்கும்.
வீடு பக்கத்தில் வந்து விளக்கு வெளிச்சம் பார்த்தவுடன் தான் உயிர் வரும்.
அடுத்த நாள். பத்து பெண்களை சுற்றிலும் வைத்துக் கொண்டு
N/21👇
படத்தின் கதையை சொல்லிக் கொண்டிருப்பாள் மனைவி.
இனி அடுத்த படம் இரண்டு மாதம் கழித்தோ மூன்று மாதம் கழித்தோ தான்.
இதோ..இப்போது என் முன்னால் டி.வி ஓடிக் கொண்டிருக்கிறது. ரிமோட் ஒவ்வொரு சேனலாக நீந்துகிறது.
பதின்மூன்று படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. எதையும் பார்க்காமல்
N/22👇
அணைக்கிறேன்.
வாட்ஸ் அப் போகிறேன். அந்த மகானுபாவன் தன் தலைவரின் ஆங்கிலப் பேச்சை தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார். பார்க்கிறேன்.
என் சேனலில் சினிமா பாருங்கள் என்று டி.வியில் கூவுகிறார்கள். கெஞ்சுகிறார்கள். பிடிக்கவில்லை.
அந்தக்கால நினைவுகளே மறக்க முடியாதவை தான்
N/n 🙏
இந்திய ராணுவம் சில தினங்களுக்கு முன் செய்த மிகதுணிச்சலான நடவடிக்கை மூலம் சர்வதேச புகழை பெற்றுவிட்டது, கிட்டதட்ட முன்பு இஸ்ரேல் உகாண்டாவில் செய்த மாபெரும் சாதனைக்கு இது ஈடானது
இந்திய விமானபடையின் இந்த அதிரடியால் உலகமே திகைத்து வியந்து இந்தியாவின் எழுச்சியினை
N/2👇
பாராட்டுகின்றது இந்திய யுகம் தொடங்கிவிட்டதாக சொல்ல தொடங்கிவிட்டன
நடந்த சம்பவம அவ்வளவு திகைப்பானது, சிலிர்ப்பானது
விஷயம் நடந்திருப்பது சூடானின்
இந்திய ராணுவபடை விமானங்கள் உக்ரைனிலும் காபூலிலும் இருந்து இந்தியர்களை மீட்டது பெரிய விஷயம் அல்ல, காரணம் முறையான விமான நிலையங்களில்
N/3👇
வழக்கமான சம்பிரதாயத்துடன் பகலில் எந்த ஆபத்துமில்லாமல் அவை நடந்தன
சூடானில் அப்படி அல்ல, சூடானின் வான்பகுதி மூடபட்டு விமானம் பறக்க தடை செய்யபட்டிருக்கின்றது , அமெரிக்கா மட்டும் துணிச்சலாக தன் ஹெலிகாப்டர்களை ராணுவ சகிதம் அனுப்பி தன் தூதர்களை மீட்டது
வேறு எல்லா நாடுகளும்
N/4👇
😜😜😜பையன் அப்பாவிடம் சொன்னான் '😜😜 அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் '
😨' எதுக்குடா என்னை வரச் சொல்றாங்க ?"😳
🤣"கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க..
9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு 63 ன்னு
N/2👇
சொன்னேன் ..
சரி அப்புறம்...
7 அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க ..
🤦♀அதே எழவு தானே🤦♀. வரும்... சரி நீ என்ன சொன்ன..
அதே 🤦♀எழவு தானே🤦♀ வரும்னு சொன்னேன் ..உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க "
" சரி ,சரி நாளைக்கு வரேன் "
😜அடுத்த நாள் பையன் அப்பாவிடம்
N/3👇
கேட்டான்😜
"🤣 அப்பா, ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா ?"🤣
"😨 இல்லடா நாளைக்கு வரேன்😳 "
😜" சரி நாளைக்கு கணக்கு டீச்சர பார்த்துட்டு அப்படியே பி.டி. டீச்சரையும் பார்த்துடு "😜
"😳 எதுக்குடா ?😨
😜" drill இருந்தது ..முதல்ல வலது கையத் தூக்கச் சொன்னாரு செஞ்சேன் ..
N/4👇
அத்தை*****😌
💐💐💐💐💐💐💐 *********
பாசமலர் படத்துக்குப் போகும்போதே அழுதழுது
தலைவலிக்கும் என்பதால்
அனாசின் மாத்திரை வாங்கி
முந்தானையில் முடிஞ்சிட்டு தியேட்டருக்கு
கொண்டு போன அத்தைகளிருந்தார்கள்.
எம்மகள கட்டிக்கடா மருமகனே
என்றபடியே அண்ணன் மகன்களை கொஞ்சி
முத்தமிட்ட
N/2👇
அத்தைகளிருந்தார்கள்.
சின்ன பாத்திரத்தில் கறித்துண்டுகள்
நீந்தும் கோழிக்குழம்பை இடது கையால் பிடித்து முந்தானைச்சேலையால் மூடிக் கொண்டு வந்து பையனுக்கு கொடுங்க அண்ணி என்று கொடுத்து விட்டு போன
அத்தைகளிருந்தார்கள்.
மருமகன்களின் பிறந்த நாட்களில் அத்தை தரும் சில்லறைக் காசுகளை
N/3👇
மறுதலித்தால் கண்கள் நிறைந்த அழுகையாய் மூக்குறிஞ்சியபடி
காசை வாங்கிக்கடா என்று கெஞ்சிய
அத்தைகளிருந்தார்கள்.
குளிக்க மறுத்து ஓடிப்போகும் அண்ணனின் சிறு மகன்களைத் துரத்திப்போய் பிடித்து வந்து
நிறுத்தி எண்ணை தேய்த்துக் குளிக்க வைத்த
அத்தைகளிருந்தார்கள்.
இடுப்பில் தூக்கி
N/4👇
தினமும் நீங்கள் இதை கடந்திருப்பீர்கள். எங்காவது ஒரு மூலையில் மெல்லிய சப்தத்தில் ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் அதைக் கேட்டவுடன் நீங்களும் அந்தப் பாடலைப் பாடத் தொடங்குகிறீர்கள்.
சிறிது நேரத்தில் எங்கோ
N/2👇
ஒலித்துக்கொண்டிருந்த பாடல் நின்றுவிடும் அது உங்களுக்குக் கேட்காது ஆனாலும் நீங்கள் தொடர்ந்து பாடிக் கொண்டே தான் இருப்பீர்கள். சிலநேரம் அந்த நாள் முழுவதும் அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் பாடுவீர்கள்.
ஏன் பாடல் நின்ற பின்னும் நீங்கள் பாடுகிறீர்கள்? இதுவரை அதை ஏன் என்று
N/3👇
சிந்தித்து உள்ளீர்களா?
உங்கள் மூளையில் நீங்கள் கேட்ட பாடல் ஏற்கனவே பதிந்திருக்கும் அந்தப் பாடலை பலமுறை இரசித்துப் பாடியிருப்பீர்கள். (நீங்கள் அதற்கு முன் கேட்காத பாடலை அப்படி பாட மாட்டீர்கள் சரிதானே) இந்த முறை அதைக் கேட்டதும் உங்கள் மூளையில் பதிந்துள்ள அந்தப் பாடல்
N/4👇
😌😒😟 #இருபத்தைஞ்சு வருஷத்துக்கு முன்னால ஒரு #கல்யாணவீட்டுக்கு போனோம்னா... #ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்டிருக்கும். பெண்கள் அமர கலர் கலரா பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும். #சின்ன சின்ன பசங்க எல்லாம்🏃
N/2👇
ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள். #பெரியவர்கள் தாம்பூலம் நிறைந்த வாயோடு அரசியல் முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள்.😊
#மண்டத்துல ஒரு ஓரமா பச்ச பெல்ட் கட்டுன பெருசுங்க எல்லாம் சட்டைய கழட்டி போட்டுட்டு ரம்மி விளையாடிக்கொண்டு இருப்பார்கள். #சட்டைப்பையில்
N/3👇
டெஸ்ட்டரோடு அங்கேயும் இங்கேயும் திரியும் மைக்செட் காரரை ஏதோ விஞ்ஞானி மாதிரி பார்ப்பார்கள். #விஷேஷத்துக்கு வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களை பைலட் ரேஞ்சுக்கு மதித்து அவர்களை உபசரிப்பார்கள்.
வழ வழப்பான #சில்க்துணியில் பெரிய காலரோடு சட்டை அணிந்து ,தலை முடியை வித்தியாசமாக
N/4👇