*(04 - 05 - 2023 - சித்திரை 21 முதல் 29 - 05 - 2023 வைகாசி 15 வரை)*
*அக்னி நட்சத்திர காலத்தில் செய்யக் கூடியவை / செய்யக் கூடாதவை*
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும்
04 - 05 - 2023 முதல் தொடங்க உள்ளது.
வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில் மே மாதம் 29 ஆம் தேதி வரை நீடிக்கிறது.
அக்னி நட்சத்திரம் பிறந்து விட்டால் சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் காலம் காலமாக இருந்து வருகிறது.
முன்னொரு காலத்தில், அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததாலும், அப்போது குளிர்சாதனம், மின்விசிறி போன்ற வசதிகள் இல்லாததாலும், அந்த நேரத்தில் சுபகாரியங்களை நடத்தினால்,
வருவோருக்கு அசௌகரியமாக இருக்கும் என்பதால் சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
தற்காலத்தில், உஷ்ணத்தால் பாதிக்கப்படாமல் இருக்க பல நவீன வசதிகள் வந்து விட்டதால், சுபகாரியங்கள் நடத்து வோருக்கும், கலந்துலகொள்வோருக்கும் அசௌகரியம் எதுவும் ஏற்படுவதில்லை.
எனவே, அக்னி நட்சத்திரத்திலும் சுபகாரியங்களை நடத்துகின்றனர்.
*சூரிய பகவானின் ஒளிதான் நம் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது*.
அதே நேரத்தில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன்படி சூரியனின் அதி உச்ச காலமான
அக்னி நட்சத்திரத்தில் சில சுபகாரியங்களை செய்ய வேண்டாம் என்று நமது ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
*அக்னி நட்சத்திரத்தில் தவிர்க்க வேண்டியவை*:
*வீடு கட்ட ஆரம்பிப்பது மற்றும் அதற்கான கிணறு வெட்டுதல்*
*பூமி பூஜை செய்வது*
*விவசாய விதைப்பு வேலைகள்*
*மரம் வெட்டுதல்*
*குழந்தைகளுக்கு காது குத்தி மொட்டையடித்தல்*
*கிரகப்பிரவேசம்*
*பந்தல்கால் நடுவது*
*தெய்வத் திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்வது போன்றவைகளைத் தவிர்ப்பது நல்லது*.
*அக்னி நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்*:
திருமணம்
நிச்சயதார்த்தம்
சீமந்தம்
பெண் பார்த்தல்
கட்டிய வீட்டில் ஏற்கெனவே கிரகப்பிரவேசம் ஆகியிருந்தால் குடிபுகலாம்.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் அதிருத்ர ஜப பாராயணம்,
மஹாருத்ர ஹோமம்,
ஸ்ரீ நடராஜர் மஹாபிஷேகம்
அதிருத்ர ஜப பாராயணம் :
01.05.2023 முதல் 10.05.2023 வரை, காலை 07.30 மணி முதல்.
121 தீக்ஷிதர்கள் 11 முறை ஸ்ரீ ருத்ர மந்திர ஜப பாராயணம்.
மேற்கண்ட பத்து தினங்களில் 14,641 முறை ஸ்ரீ ருத்ர மந்திரங்கள் பாராயணம் செய்யப்படும்.
இடம் : கிழக்கு கோபுர வாயில் வழியாக வந்து இருபத்தியொரு படி வாசல் கடந்தால் வரும் பிரகாரத்தின் வலது கடைக்கோடியில் இருக்கும் கொலு மண்டபம்.
மஹா ருத்ர ஹோமம் :
11.05.2023, காலை 09.00 மணி முதல் – விசேஷ பூஜைகள், தொடர்ந்து மதியம் மஹா ருத்ர ஹோமம், கோ (பசு மாடு) பூஜை, அஸ்வ (குதிரை) பூஜை, கஜ (யானை) பூஜை, கன்யா பூஜை, ஸுவாஸினி பூஜை, தம்பதி பூஜைகள் நடைபெறும்.
இடம் : கிழக்கு கோபுரத்திற்கு அடுத்திருக்கும் நடனபந்தல் மண்டபம்.