கொத்தவரை அல்லது சீனி அவரை (தாவர வகைப்பாடு : Cyamopsis tetragonoloba ; ஆங்கிலம்:Guar / cluster bean) என்பது உணவாகப் பயன்படும் காய்களைக் கொண்ட தாவரம் ஆகும்.
உயிரியல்
கொத்தவரை செடி வகையைச் சேர்ந்தது. 3 முதல் 4 அடி உயரம் வளரக்கூடியது. கொத்தவரை மண்ணில் நைட்ரசன் சத்தை அதிகரிக்க செய்து மண்ணின் வளத்தை பெருக்குகிறது.
தேவையான காலநிலை
மிதமான சூரிய ஒளியும், அதே நேரத்தில் மண்ணில் ஈரப்பதமான காலநிலையும் தேவை.
தேவையான மண்வளம்
கொத்தவரை பல்வேறு வகையான மண் வகைகளில் வளரும் தன்மையுடையது.
இது வடமேற்கு இந்தியாவிலும்
பாக்கித்தானிலும் கூடுதலாகப் பயிரிடப்படுகிறது.
பயன்கள்
இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.
கொத்தவரங்காயில் புரதம் நிறைந்துள்ளது.
நீரில் கரையும், சீரணத்திற்கு உதவும் நார்ச்சத்தும், உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்கு உதவும் நீரில் கரையாத நார்ச்சத்தும் இதில் உள்ளது.
கொத்தவரங்காயில் போலிக் அமிலம் உள்ளதால் இதை கர்ப்பிணிப் பெண்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
இதிலிருக்கும் கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
இரும்புச் சத்து ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது.
கொத்தவரங்காய் விதை மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தது.இதை பொடி செய்து உட்கொண்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
உடல் எடையையும் உடல் கொழுப்பையும் குறைக்கும்.
மலச்சிக்கலையும் போக்கும்.
🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆந்திர மாநிலத்தில் உள்ள இரண்டு திவ்ய தேசங்களுள் ஒன்று இந்த அஹோபிலம். மற்றொன்று கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் திருமலையாய் எழுந்தருளி சேவை சாதிக்கும் திருப்பதி .
1
அஹோபிலம் என்ற இந்த திவ்ய தேசம் ஆந்திரா மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. "அஹோ' என்றால் "சிங்கம்'. "பிலம்' என்றால் "குகை'.
2
கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பு மலையிலுள்ள அஹோபிலத்தில் ஒன்பது நவ கிரகங்களின் அம்சமாக ஒன்பது நரசிம்ம மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார் பெருமாள்.
சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தன் எனப் படும் சித்ரபுத்திரன் போற்றப்படுகிறார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் இவருக்குத் தனிக் கோயில் இருக்கிறது. இங்கு சித்ரா பௌர்ணமியன்று இவருக்கும் இவர் மனைவி கர்ணிகாவுக்கும் அபிஷேக- ஆராதனைகளுடன் திருமண விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.
சித்ரகுப்தருக்கு தனிக் கோயில்!
தேனி மாவட்டம், தேனி- போடிநாயக்கனூர் சாலையில் தேனியிலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் ‘தீர்த்தத் தொட்டி’ எனும் இடத்திலும் சித்ரகுப்தனுக்கு ஒரு கோயில் உள்ளது.
இதன் முன் மண்டபத்தில் விநாயகப் பெருமான் அருள் புரிகிறார். வலப் புறம் உள்ள கருவறையில் சித்ரகுப்தனும் இடப் புறக் கருவறையில் சீலக்காரியம்மனும் அருள் புரிகின்றனர். இந்த இரு கருவறைகளுக்கும் தனித் தனி விமானங்கள் உள்ளன.
#பாகற்காய் (Momordica charantia) என்பது உணவாகப் பயன்படும் பாகற்காய் என்னும் காயைத் தரும், பாகற்கொடியைக்
குறிக்கிறது.
இக்கொடி வெள்ளரிக்காய்,
பூசணிக்காய், தர்ப்பூசணி
முதலான நிலைத்திணை (தாவர) வகைகளை உள்ளடக்கிய
குக்குர்பிட்டேசியே (Cucurbitaceae) என்னும் பண்படுத்தாத
(rouch) செடி, கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். பாகற்காய் கைப்புச் (கசப்பு, கயப்பு) சுவைமிக்கது.
இது உடல் நலத்துக்கு உகந்த உணவாகக் கருதப்படுகிறது. இதற்கு மருத்துவப் பயன்களும் உண்டு. சம்பலாகவோ, கறியாக்கியோ, வறுத்தோ, பொரித்தோ உண்பர். பாகற்காயின் இரத்த-
சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் (hypoglycaemic activity) அறிவியலறிஞர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு உண்மையாகும்.
ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர். ஒருவன் வருத்தத்தோடு கேட்டான்.
நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அதையே நினைத்து துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா ?
அடுத்தவன் ஞானியிடம் சொன்னான் "நான் இவ்வளவு பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை. சின்னச் சின்னப் பொய்கள், சிறு ஏமாற்றுகள் இப்படி நிறைய செய்துள்ளேன். தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன?"
நிலக்கடலை (peanut) (வட்டார வழக்குகளில், வேர்க்கடலை, கச்சான், மலாட்டை மற்றும் கலக்கா ஆகிய பெயராலும் அழைக்கப்படுகிறது) என்பது பலரால் விரும்பி உண்ணப்படும்
கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரம் ஆகும்.
இதை சுருக்கமாக கடலை என்று அழைக்கப்படுகிறது. இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன.
இதன் தரப்படுதப் பட்ட பெயர்களாக வேர்க்கடலை, நிலக்கடலை ,மணிலாக்கடலை, கடலைக்காய் (கலக்கா), மணிலாக்கொட்டை (மலாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. இதற்க்கு கச்சான் என்ற பெயர் இலங்கை,தமிழரிடம் பரவலாக காணப்படுகிறது.