வீட்டு வாசலில் இரண்டு அகல்விளக்குகள் கொண்டு விளக்கேற்றுங்கள்.
மீண்டும், குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வங்களுக்கு தீப, தூப ஆராதனைகள் செய்யுங்கள்.
முடிந்தால், குடும்பத்தார் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவது,
பஜனை பாடல்கள் பாடுவது இன்னும் சிறப்பு வாய்ந்தது.
பூஜை செய்த பிறகு, நிறைவாக, பயறு வகைகள் கொண்டு சுண்டல் அல்லது கேசரி அல்லது சர்க்கரைப் பொங்கல் அல்லது அவல் பாயசம் நைவேத்தியம் செய்து, அக்கம் பக்கத்தாருக்கும் வழங்குங்கள்.
பூஜையின் இறுதியில் காயேன வாசா ஸ்லோகத்தை சொல்லி நாராயணனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த பூஜை மட்டுமல்ல எந்த பூஜை செய்தாலும் ஸ்ரீமந் நாராயணனுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
மாலை ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜை செய்து அப்படியே வீட்டு வாசலில் இருந்தபடி, சந்திர தரிசனம் செய்யுங்கள்.
மனதார சந்திர பகவானிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.
இதுவரை உங்கள் வீட்டில் இருந்த குழப்பங்கள் மற்றும் பிரச்சனைகள் அடியோடு விலகிவிடும்.
வீட்டில் அமைதி தவழும்.
ஐஸ்வர்யமும் சுபிட்சமும் லஷ்மி கடாஷம் வீட்டில் குடிகொள்ளும்.
சூர்யன் நாராயணனின் அம்சமும் சந்திரன் மஹா லஷ்மியின் அம்சமும் ஆவர்.
எனவே சித்ரா பௌர்ணமி நாளில் ஸ்ரீலஷ்மி நாராயண வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும்.
திருவாரூர் & தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லைப்புற கிராமம், எங்கும் பச்சை பட்டாடை உயர்த்திய நெல்வயல்கள், ஊர் எல்லையில் 364 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக வரவேற்கும் பெரிய ஏரி போன்ற சிறப்புகளுடன் உள்ளது வடுவூர்.
மற்ற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை விட இந்த ராமர் சிலைக்கு அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா ?
பார்ப்பவர் பரவசம் கொள்ளும் வகையில், மந்தகாச புன்னகை காட்சி தருகிறார்.
வேறு எங்கும் இது போல் சிலைகளைப் பார்க்க முடியாது என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள்.
இதற்கு சாட்சியாக வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு முறை வந்து வந்து விட்டு,
ஸ்ரீ ராமரின் மந்தகாச புன்னகையில் மயங்கி, அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் ஏராளம்.
சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தன் எனப் படும் சித்ரபுத்திரன் போற்றப்படுகிறார்.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் இவருக்குத் தனிக் கோயில் இருக்கிறது.
இங்கு சித்ரா பௌர்ணமியன்று இவருக்கும் இவர் மனைவி கர்ணிகாவுக்கும் அபிஷேக - ஆராதனைகளுடன் திருமண விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.
சித்ரகுப்தருக்கு தனிக் கோயில்!
தேனி மாவட்டம், தேனி - போடிநாயக்கனூர் சாலையில் தேனியிலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் ‘தீர்த்தத் தொட்டி’ எனும் இடத்திலும் சித்ரகுப்தனுக்கு ஒரு கோயில் உள்ளது.