கடன்கள் தீர்ந்து செல்வ வளம் பெற பைரவருக்கு செய்ய வேண்டிய மிளகு வழிபாடு :
பைரவருக்கு மிளகு மூட்டை கட்டி நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.
இந்த பரிகாரத்தை செய்தால் தீராத கடன்கள் தீருவதாக நம்பிக்கை உண்டு.
இதை தேய்பிறை அஷ்டமி திதியில் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது ஆனால் நம் வீட்டிலேயே எளிமையாக செய்யக் கூடிய பரிகாரம் தான் இது!
பைரவர் படத்திற்கு முன்பு சனிக்கிழமைகளில் ஒரு பித்தளை தாம்பாளத்தில் பச்சரிசியை பரப்பி அதன் மீது அகல் விளக்கு ஒன்றை புதிதாக வாங்கி வையுங்கள்.
அகல் விளக்கில் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றுங்கள்.
பின் சிகப்பு நிறத்தில் திரி போட்டு, சிகப்பு நிற மலர்களை பைரவருக்கு சாற்றி வைக்க வேண்டும்.
சிகப்பு பைரவருக்கு உகந்த நிறம் என்பதால் செவ்வரளி பூக்களை பெரும்பாலும் பைரவருக்கு அணிவிப்பார்கள்.
சிகப்பு நிறத்தில் எந்த பூக்கள் கிடைத்தாலும் அதை பைரவருக்கு நீங்கள் சூட்டலாம்.
விளக்கு ஏற்றிய பின்பு விளக்கில் ஏழு மிளகுகளை போடுங்கள்.
பின்னர் மனதார பைரவ பகவானை வழிபடுங்கள்.
இருக்கின்ற பிரச்சினைகள் யாவும் தீர வேண்டும், மனோபயம் நீங்க வேண்டும், கடன் தீர்ந்து செல்வ செழிப்பு உயர வேண்டும் என்று உங்களுடைய மனதில் இருப்பவற்றை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
மிளகு போட்டு தீபம் இப்படி ஏற்றும் பொழுது பைரவருடைய அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருவாரூர் & தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லைப்புற கிராமம், எங்கும் பச்சை பட்டாடை உயர்த்திய நெல்வயல்கள், ஊர் எல்லையில் 364 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக வரவேற்கும் பெரிய ஏரி போன்ற சிறப்புகளுடன் உள்ளது வடுவூர்.
மற்ற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை விட இந்த ராமர் சிலைக்கு அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா ?
பார்ப்பவர் பரவசம் கொள்ளும் வகையில், மந்தகாச புன்னகை காட்சி தருகிறார்.
வேறு எங்கும் இது போல் சிலைகளைப் பார்க்க முடியாது என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள்.
இதற்கு சாட்சியாக வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு முறை வந்து வந்து விட்டு,
ஸ்ரீ ராமரின் மந்தகாச புன்னகையில் மயங்கி, அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் ஏராளம்.
சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தன் எனப் படும் சித்ரபுத்திரன் போற்றப்படுகிறார்.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் இவருக்குத் தனிக் கோயில் இருக்கிறது.
இங்கு சித்ரா பௌர்ணமியன்று இவருக்கும் இவர் மனைவி கர்ணிகாவுக்கும் அபிஷேக - ஆராதனைகளுடன் திருமண விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.
சித்ரகுப்தருக்கு தனிக் கோயில்!
தேனி மாவட்டம், தேனி - போடிநாயக்கனூர் சாலையில் தேனியிலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் ‘தீர்த்தத் தொட்டி’ எனும் இடத்திலும் சித்ரகுப்தனுக்கு ஒரு கோயில் உள்ளது.