பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை, அமாவாசை நாளன்று ராமேஸ்வரம் என்று எப்போதும் தான் வீசும் விசிறியைப் போலவே சுறுசுறுப்பாகச் சுற்றிக் கைங்கர்யம் செய்துகொண்டிருக்கிறார் நடராஜன்.
மதுரை
50 ஆண்டுகள் சங்கரன்கோயில் ஆடித் தபசுக்கும்,
56 ஆண்டுகள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப் பூரத்துக்கும் சென்றிருக்கிறார்.
ராமேஸ்வரம், சமயபுரம் கோயில்களில் நடைபெற்ற, 5 கும்பாபிஷேகங்களைத் தரிசித்துள்ளார்.
பழநியில் 7 முறை நடந்துள்ள கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டுள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் கோயில் கும்பாபிஷேகத்திலும் பெரும்பாலானவற்றில் சென்று கலந்துகொண்டுள்ளதாகப் பூரிக்கிறார்.
இதற்கிடையில், ஒவ்வொரு வாரமும் திருப்பதிக்கும் சென்று விடுவாராம்.
வாழ்வில் தான் சந்தித்த மகான்கள், முக்கியஸ்தர்கள் குறித்துக் கேட்டோம்.
"காந்தி, பாரதி, திருப்பூர் குமரன்லாம் பார்த்திருக்கேன். அவங்களோட 'வந்தே மாதரம்'ன்னு கோஷம் போட்டுருக்கேன்.
ஒரு தடவை காமராசர், என்னை மேடையில ஏத்தி அழகு பார்த்தார்.
சீர்காழி கோவிந்தராஜன், எப்போ மதுரை வந்தாலும் என்கிட்டே வந்து நின்னு பாடுவார். கேட்டு மெய்மறந்திருவேன்.
அவர் பையன், சிவசிதம்பரமும் அப்படித்தான், ரொம்பப் பாசம்.
ராஜன் செல்லப்பா எனக்கு மகன் மாதிரி அன்போடு இருப்பாரு. மதுரை சோமு, இளம்பிறை மணிமாறன்னு என்மேல் பாசம்வைச்சங்களோட பெரிய லிஸ்டே இருக்கு.
எல்லோருடைய அன்புக்கும் பாத்தியப்பட்டவன்.
ஒருமுறை ஜெயலலிதாம்மா கலந்துகிட்ட விழாவில காஞ்சிப்பெரியவர், எனக்கு இந்த மாலையைப் போட்டார்.
"இந்த மாலை, வாரியார் சாமி போட்டது” என்று அணிந்திருந்த மாலைகளை ஒவ்வொன்றாகப் பெருமைபொங்க எடுத்துக் காட்டினார் .
திருவிழா
சித்திரைத் திருவிழாவில் இந்தத் தாத்தாவின் ஆட்டத்தைக் காண்பதற்கே தனி ரசிகப் பட்டாளம் உண்டு.
அதுவும், அழகர் பவனியில் 'ஏழுமல வாசா நீ எங்க குல நேசா' பாடலின் லயத்துக்கு அவர் ஆடுவது அத்தனை நேர்த்தியான அழகு!
“அதென்னய்யா, அந்தப் பாட்டக் கேட்டாலே அந்த ஆட்டம் போடுறீங்க!’ என்றால், ‘நானா ஆடுறேன்? அம்மையும் அப்பனும் பெருமாளும் என்னை ஆடவைக்கிறாங்க’ என்கிறார்.
எப்போதும் ஓயாமல் நடந்துகொண்டிருக்கும் கால்களில் சிறு கட்டு போட்டிருக்கிறார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பதி சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிள் இடித்து எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது.
தற்போது ஓரளவு குணமாகியிருக்கவே மீண்டும் ஆசையோடு கோயிலைத் தேடிவந்துவிட்டார்.
திருவிழா
"பக்தர்கள் என்னைப் பார்த்ததுமே சந்தோஷப்படுவாங்க.
யாருக்கிட்டயும் காசு கேட்க மாட்டேன்.
ஒரு சிலர், இவரு என்ன காசு கொடுத்தாத்தான் வீசுவாரா?ன்னு கூடக் கேட்பாங்க.
அந்த இறைவன்தானே அவர்கள் மூலம் கொடுக்கிறான்! என் பணி விசுறுறது,
எனக்குக் கை வலிக்கிற வரைக்கும், கை இருக்கிறவரைக்கும் என்னால விசிறிவிட முடியும்."
பேசிக்கொண்டிருந்தபோது ஒருவர் வந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு காசு கொடுத்தார்.
"இந்தாப் பாரு, இப்பக்கூட மீனாட்சி காசு கொடுக்கிறா" என்று சொல்லி,
அவருக்கு ஒரு அரைவட்ட விசிறு வீசி விடுகிறார்.
பேரன், பேத்திகளையெல்லாம் கண்டுவிட்ட நடராஜன் தாத்தா இப்போதும் ஆரோக்கியத்தோடும் உற்சாகத்தோடும் இந்த ஆண்டும் அழகருக்கு முன்பாக ஆற்றில் இறங்கி சேவை செய்தார்.
புராணங்களில் நிறைய கைங்கர்யங்கள், இறைப்பணிகள் செய்தவர்களைப் பற்றிப் படிக்கிறோம்.
நம் காலத்தில், நம்மோடு வாழும் இந்தப் புண்ணிய புருஷர் #விசிறி_தாத்தா நடராஜர் ஐயா.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
4.கௌஸல்யை கர்ப்பத்தில் தோன்றியவர்
யாக சாலையில் உதித்தவள்
தாமரைபோல் பரந்த கண் படைத்தவர்
மலர்ந்த கறுநெய்தல் போன்ற கண் படைத்தவள்
5.சந்திர காந்தக்கல் போல் குளிர்ந்த முகத்தையுடையவர்
சந்திர பிம்பம் போன்ற முகம் படைத்தவள்
மதம் கொண்ட யானை போன்ற நடையுடையவர்
மதம்கொண்ட ஹம்ஸத்தின் நடையை யொத்தவள்
2. என்னதான் சேமிப்பு.. காப்பீடு என்று இருந்தாலும்.. ஃபிப்ரவரி.. மார்ச்ல் அந்த வருமான வரிக்காக கமிட்மெண்ட்களை சரிகட்ட செய்ய வேண்டிய செலவுகள்.. திடீர் மருத்துவ செலவுகள்.. ஏப்ரல் மே இல் பிள்ளைகளின் ஸ்கூல் முதல் டெர்ம் ஃபீஸ்...