#கரிசலாங்கண்ணி,
வெண்கரிசலை அல்லது
கையாந்தகரை (Eclipta prostrata) ஒரு மருத்துவ மூலிகைச்
செடியாகும். இதில் இருவகை உண்டு.
மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.
வெள்ளைக் கரிசலாங்கண்ணியை,
அதன் வெள்ளைநிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது ஓராண்டுத் தாவரமாகும்.
இதற்கு கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் (மஞ்சள் கரிசாலை) ஆகிய வேறு பெயர்களை உண்டு.
கரிசல்+ ஆம்+காண்+நீ (கரிசலாங் கண்ணி); இதன் இலைச் சாறு கரிசல் நிலம் போல, கருமையான சாயத்தைக் கொடுப்பதால் இப்பெயர் பெற்றது.
கரிசலாங்கண்ணி ஞான மூலிகை எனப் போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேசசுத்தி மூலிகை எனப் பாராட்டப் படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.
கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:
நீர்=85%
மாவுப்பொருள்=9.2%
புரதம்=4.4%
கொழுப்பு=0.8%
கால்சியம்=62 யூனிட்
இரும்புத் தாது=8.9 யூனிட்
பாஸ்பரஸ்=4.62%
இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.
🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#கீழாநெல்லி (Phyllanthus niruri) ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும். இது ஏறத்தாழ அரை மீட்டர் வளரும் ஓராண்டுத் தாவரமாகும். செடி முழுதும் மருத்துவப் பயன்பாடுடையதாகும்.
இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மைஉடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என பெயரிட்டு அழைத்தனர்.
பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.
தமிழகத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த வெங்கடாசலபதி ஆலயங்கள்...
வெங்கடாசலபதி என்றாலே நம் நினைவுக்கு வருவது, திருப்பதி ஏழுமலையான் கோவில்தான்.
1
ஆனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெங்கடாசலபதிக்கு,பல்வேறு பெயர்களில் திருக்கோவில்கள் அமைந்துள்ளன.அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
2
தலைமலை
நாமக்கல் மாவட்டத்தில் முசிறியில் இருந்து நாமக்கல் செல்லும் வழித்தடத்தில் மணல்மேடு என்ற ஊர் உள்ளது.இங்கிருந்து வடக்கு திசையில் நீலயாம்பட்டி அடுத்துள்ளது செவிந்தப்பட்டி.இங்கு தான் தலைமலை வெங்கடாசலபதி கோவில் இருக்கிறது.
கருப்பையில் இருக்கும் குழந்தை "ஓம்" வடிவில்தான் உள்ளது என்பதே "ஓம்" மந்திர சொல்லுக்கும், மனித வாழ்விற்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை உணர்த்தும்.. ..
மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது.
மனித வடிவமும் அருள் வடிவம்தான்....
தொப்புளில் பிராணன் எனப்படும் மூச்சுக் காற்று ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ்வான் என்பதற்கு ஏற்ப, அந்தந்த வயதுக்குத் தக்கபடி எவ்வளவு மூச்சுகள் இருக்க வேண்டுமோ அவ்வளவு மூச்சும் அநேக சுற்றுகளாய் சுற்றிப்படுத்துக் கொண்டு,
#வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும்.
வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், தேனி மாவட்டத்தில் சின்னமனூர்,கூடலூர் காவேரிக்கரையில் நாமக்கல் மாவட்டத்தில் பாண்டமங்கலம்
வேலுர் மற்றும் பொத்தனுர் பகுதியிலும், கருர் மாவட்டம் புகழுர் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதியிலும் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது. மதுரை அருகே சோழவந்தானில் பயிரிடப்படும் வெற்றிலைகளுக்கு நல்ல வரவேற்பு உண்டு.
இப்பகுதிகளிலிருந்து வடமாநிலங்களுக்கு வியாபாரத்திற்காக பொதி ஊர்திகளிலும், தொடர் வண்டிகளிலும் அனுப்பி வைக்கப்படுகிறது.
பொதுவாக வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து மெல்வது ஒரு வழக்கம்.
#கடம்பு என்பது (Neolamarckia cadamba மற்றும் Anthocephalus indicus, Anthocephalus Cadamba) தென் ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு மாறாப் பசுமையான, வெப்பமண்டலத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.
இது அடர்த்தியான கோள வடிவ கொத்துகளான, நறுமணமுள்ள, செம்மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்டுள்ளது. பூக்கள் வாசனைத் திரவியங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மரம் ஒரு அலங்கார செடியாகவும், கட்டடத் தேவைகளுக்கான மரம் மற்றும் காகித தயாரிப்பிற்காகவும் வளர்க்கப்படுகிறது.
இந்திய மதங்கள் மற்றும்
புராணங்களில் கடம்பு பற்றிய விபரங்கள் காணப்படுகின்றன.
கடம்ப மரம் முருகனுக்கும்,
திருமாலுக்கும் உரியது எனச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. கொத்தாக உருண்டு பூக்கும் இதன் மலரின் நிறம் வெள்ளை. நன்னன் என்னும் அரசனின் காவல்மரம் கடம்பு.
#பவளமல்லி அல்லது #பாரிஜாதம் பவழமல்லியின் அறிவியல் பெயர் Nyctanthes arbor-tristis ஆகும். இதன் மலர் தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலராக சிறப்பிடம் பெறுகின்றது். பவழ (பவள) நிறக் காம்பும் வெண்ணிறமான இதழ்களும் உடைய பூக்களைக் கொண்டது.
இதற்குத் தனிச் சிறப்பான நறுமணம் உண்டு. குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும். இம்மரம் இருக்கும் இடமே நறுமணம் வீசும். இந்த மலரைச் சேடல் என்றும் குறிப்பிடுவர்.
சேடல் என்னும் மலர் மகளிர் தொகுத்து விளையாடிய மலர்களில் ஒன்று.
வைகையாற்றுப் படுகையில் இது பூத்துக் கிடந்தது என்றும்,, மதுரையைக் காவல் புரிந்துவந்த நாற்பெரும் பூதங்களில் ஒன்று சேடல் மலரை அணிந்திருந்தது என்றும் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.இதற்குப் பாரிஜாத மலர் என்ற பெயர் உண்டு