#பவளமல்லி அல்லது #பாரிஜாதம் பவழமல்லியின் அறிவியல் பெயர் Nyctanthes arbor-tristis ஆகும். இதன் மலர் தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலராக சிறப்பிடம் பெறுகின்றது். பவழ (பவள) நிறக் காம்பும் வெண்ணிறமான இதழ்களும் உடைய பூக்களைக் கொண்டது.
இதற்குத் தனிச் சிறப்பான நறுமணம் உண்டு. குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும். இம்மரம் இருக்கும் இடமே நறுமணம் வீசும். இந்த மலரைச் சேடல் என்றும் குறிப்பிடுவர்.
சேடல் என்னும் மலர் மகளிர் தொகுத்து விளையாடிய மலர்களில் ஒன்று.
வைகையாற்றுப் படுகையில் இது பூத்துக் கிடந்தது என்றும்,, மதுரையைக் காவல் புரிந்துவந்த நாற்பெரும் பூதங்களில் ஒன்று சேடல் மலரை அணிந்திருந்தது என்றும் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.இதற்குப் பாரிஜாத மலர் என்ற பெயர் உண்டு
சேடல் மலரை அறிஞர்கள் இக்காலப் பவள-மல்லி எனக் குறிப்பிடுகின்றனர். சேடல் என்னும் சொல்லில் செந்நிறத்தைக் குறிக்கும் வேர்ச்சொல் உள்ளது.
பவள நிறம் என்பது செந்நிறம்.
பவளமல்லிப் பூவின் புறவிதழில் ஒட்டிக்கொண்டிருக்கும் பூவின் காம்பு சிவப்பாக இருக்கும். எனவே இதனைச் சேடல் எனல் பொருத்தமானதே.
இயல்புகள்
இம்மரம் 3 - 4 மீட்டர் உயரத்திற்கு மிக விரைவாக வளரும். நேரடியாக வெயிலிலேயே அல்லாது கொஞ்சம் நிழலிலும் வளர்க்கப்பட வேண்டும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் கூரான முனைகளுடையவையாகக் காணப்படும்.
கிளை நுனிகளில் பூக்கும் இதன் பூக்கள் வெண்ணிறமாயும் பவள நிறத்திற் காம்பைக் கொண்டவையாயும் உள்ளன. இப்பூகள் 5-7 இதழ்களைக் கொண்டவை. இப்பூக்கள் இரவிற் பூத்து காலையில் உதிர்ந்து விடும். இதன் பழங்கள் தட்டையாக, வட்ட வடிவில் காணப்படும்.
இரு விதைகளைக் கொண்டிருக்கும். இம்மரத்தின் பூவின் வாசம் 100 அடி சுற்றளவுக்கு வீசும் தன்மை கொண்டது. இதன் பூ முன்னிரவில், அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் பூப்பதால் வடமொழியில் பிரம்மதர்ஷன் புஷ்பம் என்று அழைக்கப்படுகிறது.
இதன் இலைகள் கோடைகாலத்தில் உதிர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாட்டை வடிகட்டும் தன்மை கொண்டது.
நீர்த் தேக்கம் அதிகமில்லாத இடங்களில் நன்கு வளரும். வட அத்த கோளத்தில் இம்மரம் செப்டெம்பர்-டிசம்பர்
வரை பூக்கும்.
இதனைப்போலவே இரவில் பூக்கும் இன்னொரு தாவரம் மரமல்லிகை ஆகும். அதன் அறிவியற் பெயர்: Millingtonia hortensis
பயன்
இலைகள் தளவாடங்களை மெருகேற்றத் தேய்ப்பதற்காகப் பயன்படும்.
பூவின் காம்பிலிருந்து பெறப்படும் பவளநிறச் சாயம் டுசார்(Tussar/Tussore Silk) பட்டு எனப்படும் பட்டுத்துணிகளுக்கு நிறமேற்றப் பயன்படும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் பவளமல்லி விதைகளும் இலைகளும் பூக்களும் வயிற்றுத் தொந்தரவு, மூட்டு/என்பு வலி, காய்ச்சல், தலைவலி என்பவற்றிற்கும் இன்னும் பல விதங்களிலும் மருந்தாகப் பயன்படுகின்றன.
புராணக் கதைகளில்
பாரிஜாதம் என்றும் அறியப்படுகிற பவளமல்லியை தேவலோகத்திலிருந்து இருந்து பூமிக்கு கிருஷ்ணன் கொண்டு வந்ததாக இந்திய புராணக் கதையொன்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணனின் மனைவியரான சத்தியபாமாக்கும் ருக்மிணிக்கும் இம்மரத்தைக் குறித்துச் சண்டை எழுந்தததாயும்,
அதைத் தீர்க்கும் முகமாக மரம் பூக்கும் காலங்களில், பவளமல்லிப் பூக்கள் ருக்மிணியின் தோட்டத்தில் உதிரும் வகையில் மரத்தைச் சத்தியபாமையின் தோட்டத்தில் கிருஷ்ணர் நட்டு பிணக்கைத் தீர்த்ததாயும் மேலும் அக்கதையில் கூறப்படுகிறது.
இன்னுமொரு புராணக்கதையும் பவளமல்லி தொடர்பாகச் சொல்லப்படுகிறது. பாரிஜாதகா எனும் இளவரசி சூரியன் மேல் விருப்புற்றதாயும் சூரியன் அவளைக் கைவிட்டபோது தன்னை அழித்துக் கொண்டாள் எனவும் சொல்லப்படுகிறது.
அவள் எரிந்த சாம்பலில் இருந்து தோன்றிய மரமே பவளமல்லி மரமெனவும், தன்னைக் கைவிட்ட சூரியனைப் பார்ப்பதைத் தாங்க முடியாமல் இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து, கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் எனவும் கருதப்படுகிறது.
🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#பிரண்டை அல்லது #வச்சிரவல்லி (Cissus quadrangularis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது.
முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை எனப் பல வகைகள் உண்டு.
பிரண்டையானது எலும்புகளை பலப்படுத்தும் மருந்தாகவும், ரத்த மூலத்துக்கான மருந்தாகவும், வாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்தாகவும் பயன்படுகிறது.
#செம்பருத்தி அல்லது செவ்வரத்தை (Hibiscus rosa-sinensis) என்பது இந்தியா,இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனம் ஆகும். இது செடி இனத்தை சார்ந்தது. இதன் பூ மருத்துவ குணங்களை கொண்டதாகும்.
இது கிழக்கு ஆசியாவில்
தோன்றிய ஒரு தாவரமாகும்.
இது சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது . இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது
மருத்துவக் குணங்கள்
செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.
#திப்பிலி (Piper Longum), எனும் பல பருவத்தாவரம், Long Pepper (அ) Indian Long Pepper என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும். Piperaceae குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் ஒரு பூக்கும் கொடி ஆகும்.
ஒரு மூலிகைத் தாவரமான இது அதன் பழத்திற்காகவே பயிரிடப்படுகிறது, பொதுவாக அப்பழத்தை உலர்த்தி, மசாலா மற்றும் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படும்.
கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை மிளகு பெறப்படும், தனது நெருங்கிய இனமான
கரும்மிளகை (piper nigrum) ஒத்த சுவையோடும், அதைக் காட்டிலும் மேலும் காரமாவும் இருக்கும்.
#சித்தரகம் (ஆங்கிலம்: White Leadwort (தாவரவியல் பெயர்: Plumbago zeylanica)
என்றழைக்கப்படும் இது, தென்னிந்திய
பிராந்தியத்தை பூர்வீகமாகக் கொண்டது.
இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களான பீகார்,
மேற்கு வங்காளம், மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் வளர்க்கப்படும் மருத்துவத் தாவரமாகும்.
சித்தரகத்தின் இலைகள், இலைக்காம்புள்ளமை அல்லது ஒட்டிவாழ் தன்மையும், மற்றும் முட்டை வடிவம் கொண்ட, மற்றும் நீளம் 5-9 × 2.5-4 செ.மீ. அளவில் கத்திகள் தலைகீழ் ஈட்டி வடிவானது. தொற்றிப் படரும் புதர் வகை பல பருவத் தாவரமான இது 5 மீ உயரம் வரை வளரக்கூடியது.
#கீழாநெல்லி (Phyllanthus niruri) ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும். இது ஏறத்தாழ அரை மீட்டர் வளரும் ஓராண்டுத் தாவரமாகும். செடி முழுதும் மருத்துவப் பயன்பாடுடையதாகும்.
இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மைஉடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என பெயரிட்டு அழைத்தனர்.
பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.