#கீழாநெல்லி (Phyllanthus niruri) ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும். இது ஏறத்தாழ அரை மீட்டர் வளரும் ஓராண்டுத் தாவரமாகும். செடி முழுதும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். Image
இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மைஉடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என பெயரிட்டு அழைத்தனர்.
பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.
தொன்றுதொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள்காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச் சொல்லிலும், பயன்படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுகூடங்களில் இம்மூலிகை பல்வேறு விதங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ குணங்கள்

மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற
நோய்களுக்கான மூலிகை மருத்துவத்தில் கீழாநெல்லி பயன்படுகின்றது.கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி, பூமியாமலக், பூளியாபாலி என்று பல்வேறு பெயர்களால் மருத்துவர்களால் அழைக்கப்படும் கீழாநெல்லி தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தானாகவே முளைத்து செழித்து வளர்ந்திருக்கும் கற்ப மூலிகை ஆகும்.
உட்கொள்ளும் முறை:

முழுக் கீழாநெல்லிச் செடியைத் தூயநீரில் கழுவி அரைத்துக் கொள்ளல் வேண்டும்.ஐம்பது கிராம் அளவுள்ள விழுதை 200 மி.லி.எருமைத் தயிருடன் கலந்து, காலை 6 மணியளவில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மூன்று நாட்கள் தவிராமல் உட்கொண்டால் மஞ்சட்காமாலை நோய் குணமடையும்.மருந்துண்ணும் நாட்களில் மோரும்,
மோர்ச்சோறும் உட்கொள்வது நல்லது.
கீழாநெல்லி இலைகளக் கற்கண்டுடன் சேர்த்து அரைத்து மூன்று கிராம் அளவு காலை மாலை இருவேளையும் நான்கு நாள் தொடர்ந்து உட்கொள்ள சிறுநீர்த் தொடர்பான நோய்கள் தீரும்.

🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

May 13
*கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை.*

ஒரு நாள் நான் முடிவு செய்தேன்

இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…

ஆம்,

எனது வேலை,
எனது உறவுகள்,
என் இறையாண்மை
அனைத்தையும் விட்டுவிடுவது
என்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். Image
அப்போது…

கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.

“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”
கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…

“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”

“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.
Read 15 tweets
May 13
#பிரண்டை அல்லது 
#வச்சிரவல்லி (Cissus quadrangularis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. Image
முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை எனப் பல வகைகள் உண்டு.
பிரண்டையானது எலும்புகளை பலப்படுத்தும் மருந்தாகவும், ரத்த மூலத்துக்கான மருந்தாகவும், வாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்தாகவும் பயன்படுகிறது.
Read 8 tweets
May 13
#செம்பருத்தி அல்லது செவ்வரத்தை (Hibiscus rosa-sinensis) என்பது இந்தியா,இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனம் ஆகும். இது செடி இனத்தை சார்ந்தது. இதன் பூ மருத்துவ குணங்களை கொண்டதாகும். Image
இது கிழக்கு ஆசியாவில் 
தோன்றிய ஒரு தாவரமாகும்.
இது சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது . இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது
மருத்துவக் குணங்கள்

செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.
Read 8 tweets
May 13
#திப்பிலி (Piper Longum), எனும் பல பருவத்தாவரம், Long Pepper (அ) Indian Long Pepper என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும். Piperaceae குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் ஒரு பூக்கும் கொடி ஆகும். Image
ஒரு மூலிகைத் தாவரமான இது அதன் பழத்திற்காகவே பயிரிடப்படுகிறது, பொதுவாக அப்பழத்தை உலர்த்தி, மசாலா மற்றும் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படும்.
கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை மிளகு பெறப்படும், தனது நெருங்கிய இனமான 
கரும்மிளகை (piper nigrum) ஒத்த சுவையோடும், அதைக் காட்டிலும் மேலும் காரமாவும் இருக்கும்.
Read 6 tweets
May 13
#சித்தரகம் (ஆங்கிலம்: White Leadwort (தாவரவியல் பெயர்: Plumbago zeylanica) 
என்றழைக்கப்படும் இது, தென்னிந்திய 
பிராந்தியத்தை பூர்வீகமாகக் கொண்டது. Image
இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களான பீகார், 
மேற்கு வங்காளம், மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் வளர்க்கப்படும் மருத்துவத் தாவரமாகும்.
சித்தரகத்தின் இலைகள், இலைக்காம்புள்ளமை அல்லது ஒட்டிவாழ் தன்மையும், மற்றும் முட்டை வடிவம் கொண்ட, மற்றும் நீளம் 5-9 × 2.5-4 செ.மீ. அளவில் கத்திகள் தலைகீழ் ஈட்டி வடிவானது. தொற்றிப் படரும் புதர் வகை பல பருவத் தாவரமான இது 5 மீ உயரம் வரை வளரக்கூடியது.
Read 6 tweets
May 13
தமிழகத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த வெங்கடாசலபதி ஆலயங்கள்...

வெங்கடாசலபதி என்றாலே நம் நினைவுக்கு வருவது, திருப்பதி ஏழுமலையான் கோவில்தான்.

1 Image
ஆனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெங்கடாசலபதிக்கு,பல்வேறு பெயர்களில் திருக்கோவில்கள் அமைந்துள்ளன.அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

2
தலைமலை

நாமக்கல் மாவட்டத்தில் முசிறியில் இருந்து நாமக்கல் செல்லும் வழித்தடத்தில் மணல்மேடு என்ற ஊர் உள்ளது.இங்கிருந்து வடக்கு திசையில் நீலயாம்பட்டி அடுத்துள்ளது செவிந்தப்பட்டி.இங்கு தான் தலைமலை வெங்கடாசலபதி கோவில் இருக்கிறது.

3
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(