அகிலத்தை எல்லாம் கட்டிகாக்கும் பரமனே முதல்வன் என்று வேள்விகள் பலய்து உலகம் முழுவதும் அறியும்படி செய்தவர் இவர்.
வேள்விகளில் சிறந்த சோம வேள்வியால் எம்பெருமானை வழிபட்டதால் இவர் சோமாசிமாற நாயனார் என்று அழைக்கப்பட்டார்.
தான் செய்யும் வேள்வியின் அவிர்பாகத்தை சிவபெருமான் நேரடியாக வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது.
அப்படியென்றால் சிவபெருமானிடம் தூது செல்ல அவரது அன்புக்கு பாத்திரமான சுந்தரராரிடம் நட்பு கொள்ள வேண்டும் என்றும் நினைத்தார்.
எம்பெருமானுக்கும், சுந்ராருக்கும் இருக்கும் அன்பு பிணைப்பை முன்னமே அறிநதிருந்தார் சோமாசி மாற நாயனார்.
சுந்தரராரின் நட்பை பெறுவது எப்படி என்று எண்ணினார்.
அப்போது தான் சுந்தரராருக்கு தூதுவளை கீரை பிடிக்கும் என்பதை அறிந்தார்.
அதனால் தூதுவளைக் கீரையைத் தினமும் பறித்து கொடுத்து அதன் மூலம் நட்பை வளர்க்கலாம் என்று தினமும் ஆற்றில் குளிக்கும் போது அடுத்தக் கரைக்கு நீந்திச் சென்று,
தூதுவளைக் கீரையைப் பறித்துவந்து சுத்தம் செய்து சுந்தரராருக்கு கொடுத்து சென்றார்.
அதனால் சுந்தரராருக்கு இவர் மீதான அன்பு அதிகரித்தது.
ஒரு நாள் சுந்தரராரிடம் தமது விருப்பத்தைத் தெரிவித்தார் சோமாசியார்.
நிச்சயம் உனது விருப்பம் நிறைவேறும் என்று வாக்கு கொடுத்த சுந்தர ரார் இறைவனிடம் தெரிவித்து அவரது சம்மதமும் வாங்கினார்.
ஆனால் இறைவன் பதிலுக்கு ஒரே ஒரு நிபந்தனையையும் விதித்தார்.
வேள்வி நடத்தும் போது எந்த ரூபத்திலும் வருவேன் என்பதை மட்டும் அவரிடம் தெரிவித்து விடு என்றார்.
சுபமுகூர்த்த நாளில் சோமாசியாரின் வேள்வியில் இறைவனும் கலந்து கொள்ள போவதாக மக்களுக்குச் சொல்லவும் அவர்களும் வெள்ளமென திரண்டார்கள்.
வேத விற்பன்னர்கள் சூழ வேள்வி நடத்தும் போது
நான்கு நாய்களை கையில் பிடித்த படி,
மகன்கள் இருவரும், மனைவி ’கள்’ குடத்தை சுமந்தப்படியும் புலையன் ஒருவன் யாகம் நடத்தும் இடத்துக்குள் நுழைந்தான்.
இவனைக் கண்டு வேதியர்கள் ஓடினார்கள்.
ஆனால் சோமாசிமாறனார் முதல் தெய்வமான விநாயகரைத் துதித்து யாகம் தடை படாமல் இருக்க வேண்டினார்.
வந்திருப்பது இறைவனே என்று உணர்த்தினார் விநாயகர்.
சோமாசிமாறநாயனார் புலையனை வரவேற்று அவருக்கு வேண்டிய அவிர் பாகத்தை அளித்தார்
அடுத்த நொடியில் புலையனோடு வந்த நாய்கள் நான்கு வேதங்களாக மாற…
எம்பெருமான் உமையாளோடு இடப வாகனத்தில் காட்சி தந்து அருளினார்.
சிவத்தலம் தோறும் தரிசனம் செய்து எம்பெருமானின் திருவருளைப் பெற்று இறைவன் பாதத்தில் பணிந்தார்.
வைகாசி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் இவருக்கு குருபூஜை கொண்டாடப்படுகிறது.
திருஇரும்பை மாகாளம், திருப்பழமணிப் படிக்கரை, திருக்கொடி மாடச் செங்குன்னூர், திருவனந்தபுரம் முதலிய திருக்கோயில்களில் இலுப்பை மரம் தல விருட்சமாக இருக்கிறது.
இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்யெண்ணை எனப்படுகிறது.
இலுப்பை எண்ணெய் சகல தேவர்களுக்கும், சகல தெய்வங்களுக்கும், சிவனுக்கும் பிரியமானது.
ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது.
இந்த எண்ணெயை விளக்கில் ஊற்றி இறைவனை வழிபட காரியங்கள் வெற்றி பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
பிரம்ம முகூர்த்த வேளையான அதிகாலை 04 - 30 மணி முதல் 06 மணி வரை நேரம் குறிப்பிடப் படுகிறது.
அந்நேரம் இறைவன், இறைவி நம் வீட்டிற்கு வரும் அற்புதமான நேரமாகும்.