M.SivaRajan Profile picture
May 25 13 tweets 3 min read Twitter logo Read on Twitter
#ஆதிசங்கரர்_உபதேசம்

ஆதிசங்கரரின் கடைசி உபதேசம் :

ஆதிசங்கரர் கடைசியாக செய்த உபதேசம் ஸோபான பஞ்சகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

ஸோபானம் என்றால் படிகளின் வரிசை என்று பொருள்.

பங்சகம் என்றால் ஐந்து என்று அர்த்தம்.

ஸோபான பஞ்சகம் என்பது ஐந்து சுலோகங்கள் கொண்ட சிறிய நூலாகும். Image
இதனை உபதேச பஞ்சகம் அல்லது ஸாதனா பஞ்சகம் எனவும் கூறுவர்.

இதில் சங்கரர் மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய நாற்பது படிகளைக் கடக்க வேண்டும் என்று விளக்குகிறார்.
1. தினந்தோறும் தவறாமல் வேதம் ஓது.

அதில் விதித்துள்ள கர்மாக்களை முறைப்படி செய்.

பகவானை திருப்தி செய்ய பூஜைகள் செய்.

இவ்வாறு நீ செய்யும் கர்மாக்களின் பலனை எதிர்நோக்காமல் இது பகவானுக்கு என அர்ப்பணம் செய்து விடு.
வாழ்க்கை நெறி முறைகளை மீறி நடந்ததினால் குவிந்துள்ள உன் பாவ மூட்டையைச் சிறிது சிறிதாகக் கரைத்து விட்டு விடு.

இதனால் சித்த சுத்தி ஏற்படும்.

இந்நிலையில் சம்சார தோஷங்களை துருவி அலசிப்பார்த்தால் ஞான மார்க்கத்தில் அது கொண்டு விடும்.
இப்போது உனக்கு நித்யா நித்ய வஸ்துக்களின் அறிவு ஏற்படும்.

அநித்ய வஸ்துக்களில் வைராக்கியம் ஏற்படும் போது இடையில் தடை ஏற்படுமாகின் வீட்டை விட்டு (அடுத்த ஆசிரமத்தில் நுழைந்து விடு) வெளிச் சென்று விடு.
2. நீ சத்ஸங்கத்திலேயே நிலைத்திரு.

பகவத் பக்தியை திடமாக்கிக் கொள்.

சமாதி சட்க ஸம்பத்திகளுடன் நீ மோட்ச வேட்கையோடு ஆத்ம விசாரம் செய்.

பின்னர் கர்மாக்கள் பிறவிச்சுழலில் தள்ளிவிடும் என உணர்ந்து கர்மாக்களை விட்டு விடு.
பிறகு ஆத்ம ஞானி ஒருவரை சரணடைந்தால் அவர் கருணை கூர்ந்து ஆத்ம ஞானத்தை உபதேசிப்பார்.

உபநிஷத்துக்களில் கூறும் தத் த்வம் அஸி (நீயே அதுவாக இருக்கிறாய் என்று பொருள்) போன்ற மகா வாக்கியங்களின் உட்பொருளை உணர்ந்து கொள்வாயாக.
3. மகா வாக்யார்த்தங்களை விசாரணை செய்.

ச்ருதியை பிரமாணமாகக் கொள்.

வேதங்கட்கு மாறாக வாதாடுவோரிடமிருந்து விலகி இரு.

வேதங்களின் உட்கொருளை உணர தர்க்கம் என்ற புத்திக் கூர்மையை ஆயிதமாகக் கொண்டு அக்ஞானம் என்ற அசுரனை வெட்டிவிடு.
நான் உடலல்ல பிரம்மமே என்பதை உணர்ந்து கொள்.

இவ்வறிவு பெற்ற பின் அகந்தையை அணுக விடாதே. அறிவாளிகளிடம் வாதம் செய்யாதே.
4. பசி என்ற நோயைத் தீர்க்க மருந்தெனக் கருதி கிடைத்த உணவை மிதமாக உட்கொள்.

நாவிற்கு ருசியான உணவில் ஆசையைத் துறந்து பிச்சை எடு.

சுகத்தையும் துக்கத்தையும் சமமாகக் கருதிக் செயல்படு.

பொன் போன்ற நேரத்தை வெட்டிப் பேச்சில் ஈடுபடுத்தாதே.
பதவியில் உள்ளவர்களையும் தனவான்களையும் புகழ்ந்து தன் காரியததைச் சாதித்துக் கொள்ள விரும்பாதே.
5. ஏகாந்தமான இடத்தில் ஆசனத்தில் அமர்ந்து பர பிரம்மத்தைப் பற்றியே சிந்தித்திரு.

நீ செய்த கர்மாக்களின் பலனை ஞானத்தால் எரித்து விடு.

பலன் தரத் தொடங்கிவிட்ட கர்மாக்களின் பலனைப் புரதத்தே தீர்த்து விடு.
பிரம்மத்திலேயே நிலைத்திருப்பதில் தயக்கம் காட்டாதே.

என் அருமை சிஷ்யர்களே உங்களுக்கு இதுவே என் இறுதியான உபதேசம் என ஆதிசங்கரர் அருளினார்.

#உபதேச_பஞ்சகம்

#ஸாதனா_பஞ்சகம்

#மோட்ச_பஞ்சகம்

#ஆதிசங்கரர்_உபதேசம்

#ஜகத்குரு_உபதேசம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

May 26
#பலராமர்

நன்றிக் கடனாக உருவான அவதாரம் ..!!

திருமாலின் மற்ற அவதாரங்கள்,

வெவ்வேறு காலகட்டங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி எடுக்கப்பட்டவை.

ஆனால் பலராம அவதாரம் அவரது கிருஷ்ண அவதாரத்துடன் தொடர்புடையது. Image
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரம் பலராம அவதாரம்.

இது மற்ற அவதாரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. .

வேதத்தைத் திருடிச் சென்ற சோமுன் என்ற அசுரனை அழித்து,

வேதத்தை மீட்பதற்காக எடுக்கப்பட்டது மச்ச அவதாரம்.
தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்க வேண்டி மேரு மலையை தாங்க எடுக்கப்பட்டது கூர்ம அவதாரம்.

இரண்யாட்சனை அழித்து கடலுக்கு அடியில் இருந்து பூமியை மீட்க எடுக்கப்பட்டது வராக அவதாரம்.

தன் பக்தனான பிரகலாதனை காப்பாற்ற எடுக்கப்பட்டது நரசிம்ம அவதாரம்.
Read 23 tweets
May 26
#இலுப்பை_எண்ணெய்

ஐஸ்வர்யம் தரும் இலுப்பை எண்ணெய் :

திருஇரும்பை மாகாளம், திருப்பழமணிப் படிக்கரை, திருக்கொடி மாடச் செங்குன்னூர், திருவனந்தபுரம் முதலிய திருக்கோயில்களில் இலுப்பை மரம் தல விருட்சமாக இருக்கிறது. Image
இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்யெண்ணை எனப்படுகிறது. 

இலுப்பை எண்ணெய் சகல தேவர்களுக்கும், சகல தெய்வங்களுக்கும், சிவனுக்கும் பிரியமானது.

ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது.
இந்த எண்ணெயை  விளக்கில் ஊற்றி இறைவனை வழிபட காரியங்கள் வெற்றி பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

பிரம்ம முகூர்த்த வேளையான அதிகாலை 04 - 30 மணி முதல் 06 மணி வரை நேரம் குறிப்பிடப் படுகிறது.

அந்நேரம் இறைவன், இறைவி  நம் வீட்டிற்கு வரும் அற்புதமான நேரமாகும்.
Read 7 tweets
May 25
#சோமாசி_மாற_நாயனார்

சோழநாட்டில் திருவம்பர் என்னும் ஊரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் மாறநாயனார்.

சிவபக்தியும் சிவனடியார்களுக்கு திருவமுதமும் அளித்தவர் இவர்.

அகிலத்தை எல்லாம் கட்டிகாக்கும் பரமனே முதல்வன் என்று வேள்விகள் பலய்து உலகம் முழுவதும் அறியும்படி செய்தவர் இவர். Image
வேள்விகளில் சிறந்த சோம வேள்வியால் எம்பெருமானை வழிபட்டதால் இவர் சோமாசிமாற நாயனார் என்று அழைக்கப்பட்டார்.

தான் செய்யும் வேள்வியின் அவிர்பாகத்தை சிவபெருமான் நேரடியாக வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது.
அப்படியென்றால் சிவபெருமானிடம் தூது செல்ல அவரது அன்புக்கு பாத்திரமான சுந்தரராரிடம் நட்பு கொள்ள வேண்டும் என்றும் நினைத்தார்.

எம்பெருமானுக்கும், சுந்ராருக்கும் இருக்கும் அன்பு பிணைப்பை முன்னமே அறிநதிருந்தார் சோமாசி மாற நாயனார்.

சுந்தரராரின் நட்பை பெறுவது எப்படி என்று எண்ணினார்.
Read 12 tweets
May 20
#சூர்ப்பனகை

சூர்ப்பனகை மிகவும் நல்லவள் :

சூர்ப்பனகை மிகவும் கெட்டவள் என்று நினைத்து இருப்பவருக்கு இந்த பதிவு படியுங்கள் உண்மை தெரியும்

சூர்ப்பனகை தன் கணவனான வித்யுத்ஜிகவனின் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தாள்
இருவரும் மிக அன்பாக சந்தோஷமாக இல்லறம் நடத்தி வந்தனர். Image
சூர்ப்பனகை காலகேயர்கள் என்ற பலம் வாய்ந்த அரக்கர்கள் கூட்டத்தில் ஒருவனான வித்யுக்ஜிகவன் என்பவனை திருமணம் செய்திருந்தாள்

ஒருமுறை இராவணன் தன் தவ வலிமையை அதன் பெருமையை மூவுலகுக்கும் காட்ட மூவுலகுக்கும் திக்விஜயம் செய்தான்
திக்விஜயம் செய்த இராவணன்,
மேலுலக தேவர்களையும் கந்தவர்களையும் வென்றான்

இறுதியாகக் அரக்கர்களில் பலம்வாய்ந்த காலகேயர்கள் என்பவர்களை எதிர்க்க துணிந்தான்

காலகேயர்கள் என்பவர்கள் அரக்கர்களில் ஒரு விசேச பிரிவினர்.

அவர்கள் பொன்னை போன்ற தங்கமயமான நிறத்தை உடையவர்கள்.
Read 17 tweets
May 20
#ஸ்ரீ_ரங்கநாதர்

ஸ்ரீ ரங்கநாதனை பார்க்காத இந்த கண்கள் எதற்கு?

108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், மிகச்சிறப்பு வாய்ந்ததுமானது ஸ்ரீ ரங்கம்.

திருவரங்கம், பெரியகோயில், பூலோக வைகுண்டம் என்று பலபெயர் கொண்டு போற்றப்படும் இத்திருக்கோயிலில் சயனித்திருப்பவர் ஸ்ரீ ரங்கநாதர். Image
த்வைத, அத்வைத மற்றும் விசிஷ்டாத்வைதத்தை சேர்ந்த மகான்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாதனைக் குறித்து பாடியுள்ளனர்.

அதே போல், த்வைத சம்பிரதாயத்தை சேர்ந்த ஹரி - தாஸர்கள் பலரும் ஸ்ரீரங்கநாதனை பாடியுள்ளனர்.

அவற்றில் ஒரு பாட்டு தான் இன்றைய பதிவில் பார்க்கப் போவது.
புரந்தர தாஸர், விஜயதாஸர் இவர்களுக்கெல்லாம் முதல்மையானவர் - தாஸர்களுக்கெல்லாம் பிதாமகர் - என்று அழைக்கப்படுபவர் - ஸ்ரீ பாதராயர் ஆவார்.

வாழ்ந்த ஆண்டு 1420 - 1486.

ஏகப்பட்ட கன்னட பக்தி பாடல்களை
இயற்றியுள்ள ஸ்ரீ பாதராயர், துருவரின் அவதாரமாக கருதப்படுபவர்.
Read 11 tweets
May 20
#ஸ்ரீ_நெல்லிகேஸ்வர_ஸ்வாமி

கோபம் நீங்கிட நாம் வணங்க வேண்டிய திருத்தலம் :

"திருநெல்லிக்காவல்". இத்திருத்தலம் திருவாரூரில் உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம் திருநெல்லிகேஸ்வரர்.

பஞ்சகூடபுரம்' என்று சொல்லப்படும் ஐந்து தலங்களுள் ஒன்று. Image
இத்தலம் சூரியன், பிரம்மன், திருமால், சந்திரன், சனிபகவான், கந்தர்வர், துர்வாசர்,ஆகியோர் வழிபட்ட ஸ்தலம்.

கோபத்திற்கு பெயர் பெற்றவர் துர்வாசர், இவரின் கோபம் இத்தலத்திற்கு வந்து குறைந்த காரணத்தால், இங்கு சென்று வணங்குபவர்களின் கோபமும் குறையும்.
ஒரு மனிதனுக்கு கட்டுப்பட்ட நியாயமான கோபங்கள் வரலாம், ஆனால் அளவிற்கு மீறிய கோபத்தால் ஒரு மனிதன் தானும் அழிந்து பிறரையும் அழித்து விடுவான்.

மேலும் இத்தல சிவனை வழிபட குஷ்டம் போன்ற கொடிய தோல் வியாதிகள் நீங்கும்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(