திருஇரும்பை மாகாளம், திருப்பழமணிப் படிக்கரை, திருக்கொடி மாடச் செங்குன்னூர், திருவனந்தபுரம் முதலிய திருக்கோயில்களில் இலுப்பை மரம் தல விருட்சமாக இருக்கிறது.
இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்யெண்ணை எனப்படுகிறது.
இலுப்பை எண்ணெய் சகல தேவர்களுக்கும், சகல தெய்வங்களுக்கும், சிவனுக்கும் பிரியமானது.
ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது.
இந்த எண்ணெயை விளக்கில் ஊற்றி இறைவனை வழிபட காரியங்கள் வெற்றி பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
பிரம்ம முகூர்த்த வேளையான அதிகாலை 04 - 30 மணி முதல் 06 மணி வரை நேரம் குறிப்பிடப் படுகிறது.
அந்நேரம் இறைவன், இறைவி நம் வீட்டிற்கு வரும் அற்புதமான நேரமாகும்.
அவ்வேளைகளில் பஞ்சமுக குத்து விளக்கு ஏற்றி இலுப்பையெண்ணை ஊற்றி வெள்ளை திரியிட்டு வணங்கலாம்.
இருலவேளையும் ஏற்றினால் நல்லது.
இந்த காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்வதால் அவரவருக்கு (காலை அல்லது மாலை ) எந்த வேளை முடியுமோ அந்த வேளலயில் ஏற்றுவது நல்லது.