ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற உன்னத தத்துவத்தை உணர்த்த எடுக்கப்பட்டது ராம அவதாரம்.
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும், இருப்பினும் மறுபடியும் தர்மமே வெல்லும் என்பதை உணர்த்த எடுக்கப்பட்டது கிருஷ்ண அவதாரம்.
ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வுக்கு உற்ற துணையாக இருந்தவர்களை, உன்னதமாக நினைக்க வேண்டும், மதிக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரமே, பலராமர் அவதாரம்.
திருமாலின் அவதார வரிசை பற்றிய சந்தேகம் நாரதருக்கு ஏற்பட்டது.
அப்போது திருமால் கிருஷ்ண அவதாரத்தில் இருந்தார்.
நேராக அவரிடம் சென்ற நாரதர், “இறைவா! இந்த கிருஷ்ண அவதாரம் உங்களுடைய எத்தனையாவது அவதாரம்?” என்று கேட்டார்.
அதற்கு கிருஷ்ணர்,
“இது என்னுடைய ஒன்பதாவது அவதாரம்” என்று பதிலளித்தார்.
“அப்படியானால் எட்டாவது அவதாரம் எது?” என்ற நாரதரின் கேள்விக்கு, “இப்பிறவியில் எனக்கு அண்ணனாக பிறந்துள்ள பலராமன் தான், என்னுடைய எட்டாவது அவதாரம்” என்றார்.
குழப்பம் அடைந்த நாரதர், “எப்படி பெருமாளே! தங்களின் படுக்கையாக இருக்கிற ஆதிஷேசன் என்ற நாகம் தானே பலராமனாக பிறந்துள்ளது.
அப்படியிருக்க, பலராமன் எப்படி தங்களது அவதார கணக்கில் வர முடியும்?” என்று கேட்டார்.
“நாரதரே, எனது ராம அவதாரத்தில் எனக்கு தம்பியாக பிறந்து சதா சர்வகாலமும்,
‘அண்ணா.. அண்ணா..’ என்று என் காலையே பிடித்து கொண்டிருந்த லட்சுமணனுக்கு,
நான் இதுவரை எதுவுமே செய்யவில்லையே.
அதனால் எனக்கு ஒரு யோசனை தோன்றியது.
ஆதிசேஷன் மூலமாக எனது அண்ணனாக அவனை படைத்து, தினமும் அவன் காலில் நான் விழுந்து எனது நன்றிக் கடனை தீர்த்துக் கொள்வதோடு, எனது அவதாரத்தில் ஒரு பங்கையும் அவனுக்கு தந்துள்ளேன்” என்றார் பரந்தாமன்.
இப்படி திருமாலே உருகி உருவாக்கிய உன்னத அவதாரமே, பலராமர் அவதாரம்.
கலப்பையை ஆயதமாகக் கொண்ட பலராமர், உறவுமுறையில் கிருஷ்ணரின் சகோதரர்,
கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியின் வயிற்றில் உதித்தவர்.
இவரை ‘பலதேவன்’, ‘பலபுத்திரன்’, ‘கதாயுதன்’ என்று போற்றுவர்.
பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது.
பலராமரின் தங்கை பெயர் சுபத்திரை.
பலராமர் பிறந்தபோது, அவனுக்கு யதுகுல குருவாகிய கர்கர், சடங்குகள் செய்து ராமன் என்று பெயரிட்டார்.
மேலும் அந்தக் குழந்தை மிகவும் பலசாலியாக இருந்ததால், ‘பலராமன்’ என்றும் அழைக்கலாம் என்றார்.
ரோகிணியின் வயிற்றில் உதித்த பலராமனும், தேவகி வயிற்றில் உதித்த கண்ணனும் இணை பிரியா சகோதரர்கள் ஆயினர்.
பிருந்தாவனத்திலும், ஆயர்பாடியிலும் இவர்கள் நடத்திய திருவிளையாடல் கொஞ்ச நஞ்சமல்ல.
கோவர்த்தனகிரியில் இவர்கள் மாடு மேய்க்கும் காலத்தில்,
மனித மாமிசத்தை உண்ணும் வழக்கம் கொண்ட கழுதை வடிவிலான தேனுகன் என்பவனையும்,
வில்வ மரத்தடியின் கீழ் வில்வ பழத்தால் பந்தாடிய காலத்தில் பிரலம்பன் என்பவனையும்,
நரகாசுரனின் வானரத் தலைவனான துவிதனின் சகோதரன் மயிந்தன் என்பவனையும் இருவரும் சேர்ந்தே அழித்தனர்.
திருஇரும்பை மாகாளம், திருப்பழமணிப் படிக்கரை, திருக்கொடி மாடச் செங்குன்னூர், திருவனந்தபுரம் முதலிய திருக்கோயில்களில் இலுப்பை மரம் தல விருட்சமாக இருக்கிறது.
இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்யெண்ணை எனப்படுகிறது.
இலுப்பை எண்ணெய் சகல தேவர்களுக்கும், சகல தெய்வங்களுக்கும், சிவனுக்கும் பிரியமானது.
ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது.
இந்த எண்ணெயை விளக்கில் ஊற்றி இறைவனை வழிபட காரியங்கள் வெற்றி பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
பிரம்ம முகூர்த்த வேளையான அதிகாலை 04 - 30 மணி முதல் 06 மணி வரை நேரம் குறிப்பிடப் படுகிறது.
அந்நேரம் இறைவன், இறைவி நம் வீட்டிற்கு வரும் அற்புதமான நேரமாகும்.