நேரு, இளவரசனாகப் பிறந்தவர். அரசனாக வளர்ந்தவர். ஆனால், ஆண்டியாக வாழ்ந்த வர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இணைந்து கொண்ட பிறகு, அவர் பெரும் பாலும் பணக்கஷ்டத்தில்தான் வாழ்ந்தார்.
அவரது புத்தகங்களின் பதிப்புரிமைத் தொகை மட்டும்தான், அவருக்கு ஒரே வருமா னமாக இருந்தது" என்று எழுதுகிறார், அவரிடம் உதவியாளராக இருந்த மத்தாய்.
ஆனந்தபவன் அரண்மனையும், அலகாபாத் சிறைச்சாலையும் அவருக்கு ஒன்றாகவே தெரிந்திருக்கிறது.
வீட்டின் வேலையாள் களுக்கும் சேர்த்து சொத்தைப் பங்கிட்டுக் கொடுத்த தயாளன், அந்தக் காலத்தில் அவர் மட்டுமே’ என்று மனம் நெகிழ்கிறார் மத்தாய்.
நேரு எனும் ஆளுமை, சிறையன்னையால் சீராட்டி வளர்க்கப்பட்டவர்.
ஒரு குடும்பத்திற்காக ஒரு நாடே இன்னலில் தவிப்பதா? -- மோடி
ஒரு நாட்டிற்காக ஒரு குடும்பமே உயிர் துறந்ததாக வரலாறு பேசிடுமென்றால், அந்த வரலாற்றை 37 அறைகளை கொண்ட அந்த ஆனந்தபவனத்தின் வாயிலிலிருந்து துவங்க வேண்டும்.
மோட்டார் கார் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் முதன்முதலாக இந்தியாவிற்கு அதை இறக்குமதி செய்த மகா கோடீஸ்வரரான மோதிலால் நேரு அவர்களின் மகனான ஜவஹர்லால் நேரு அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் கடுமையான சிறைவாசம் அனுபவித்தாரென்றால்,
அது அவர் தன் வீட்டில் குடிக்க கூழ் இல்லை என்பதற்காக அல்ல. மாறாக இந்நாட்டின் மக்கள் குடிக்கும் ஒருவேளை கூழாயினும் அதை அவர்கள் சுதந்திரமாக அருந்த வேண்டுமென்பதற்காக!.
சொத்து சுகங்கள் குவிந்திருக்க ஆடிப்பாடி அனுபவித்து மகிழும் வயதிலே
காங்கிரசை டிரால் செய்வதற்கு முன்பு நாம் நினைவில் வைக்க வேண்டியவை,
பெரிய மீடியாக்கள் பாஜக வசம் இருக்கிறது. ஆகவே காங்கிரஸ் என்னவெல்லாம் செய்கிறது என்பது பற்றி நமக்கு தெரிய வாய்ப்பு குறைவு.
அடுத்து, இது ராகுல் காந்தியின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை. பாஜகவின் சர்வாதிகாரம் அடுத்த கட்டத்தை அடைந்து விட்டது. ஒரு பாசாங்கான ஜனநாயகம்கூட தேவைப்படவில்லை அவர்களுக்கு.
எதிரியின் எந்த தாக்குதலும் கூட்டத்தின் முதல் வரிசையைத்தான் முதலில் அடிக்கும்.
அதை வைத்து அது முதல் வரிசைக்காரனின் பிரச்சினை என்று நாம் கருத முடியாது இல்லையா?
இதன் உறுதியான பலி நாம்தான். காங்கிரஸ் திண்ணையில் படுத்து தூங்கினால்கூட காமெடி செய்து கடந்துபோகும் சொகுசான வாழ்க்கை வாய்க்கவில்லை நமக்கு.