இடையாற்று மங்கலம் என்ற சிற்றூரில் உள்ளது ஸ்ரீ மாங்களீஸ்வரர் ஆலயம்.
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் மாங்களீஸ்வரர்.
இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.
இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரமும், மகாமண்டபமும் காணப்படுகின்றன.
மகாமண்டபத்தினுள் தெற்கு முகப்பு வழியே உள்ளே நுழைந்ததும் எதிரே அன்னை மங்களாம்பிகையின் சன்னிதி உள்ளது.
இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள்.
அன்னை தனது மேல் இரு கரங்களில் தாமரை மலரை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் இளநகை தவழும் இன்முகத்துடன் நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.
மக்களால் கட்டப் பெற்ற,
படம் வரையப் பெற்ற கொடிச்சீலையை உடைய திருக்கோயிலில் இயங்காமல் எழுந்து அருளியிருக்கும் சிவனுக்கு ஒரு பொருளை அன்பினால் படைத்தால் அது எங்கும் இயங்குகின்ற உயிர்களின் உடம்பாகி கோயிலினுள் எழுந்து அருளியிருக்கின்ற இறைவனுக்குப் போய்ச் சேறாது என்கின்றார் திருமூலர்.
ஆனால் எழுந்து இயங்கும் உயிர்களின் உடம்பாகிய கோயிலினுள் எழுந்து அருளியிருக்கும் இறைவனுக்கு ஒரு பொருளைக் கொடுத்தால் அச்சிவனுக்கு படைத்தல் ஆவதுடன், கொடிச்சீலை ஆடுகின்ற இயங்காக் கோயிலினுள் எழுந்தருளியிருக்கின்ற இறைவனுக்குப் போய்ச்சேரும் என்பதனை,
திருஇரும்பை மாகாளம், திருப்பழமணிப் படிக்கரை, திருக்கொடி மாடச் செங்குன்னூர், திருவனந்தபுரம் முதலிய திருக்கோயில்களில் இலுப்பை மரம் தல விருட்சமாக இருக்கிறது.
இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்யெண்ணை எனப்படுகிறது.
இலுப்பை எண்ணெய் சகல தேவர்களுக்கும், சகல தெய்வங்களுக்கும், சிவனுக்கும் பிரியமானது.
ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது.
இந்த எண்ணெயை விளக்கில் ஊற்றி இறைவனை வழிபட காரியங்கள் வெற்றி பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
பிரம்ம முகூர்த்த வேளையான அதிகாலை 04 - 30 மணி முதல் 06 மணி வரை நேரம் குறிப்பிடப் படுகிறது.
அந்நேரம் இறைவன், இறைவி நம் வீட்டிற்கு வரும் அற்புதமான நேரமாகும்.