செங்கோல் நேருவுக்கு வழக்கப்பட்டது குறித்து Time பத்திரிகையின் 1947 ஆகஸ்ட் 25ஆம் தேதியிட்ட இதழ்:
"கடவுள் நம்பிக்கை குறித்து உறுதியான நிலைப்பாடில்லாத ஜவாஹர்லால் நேரு, இந்தியாவின் பிரதமராவதற்கு முந்தைய நாள் மாலையில், ஆன்மிக உணர்வில் வீழ்ந்தார்.
தென்னிந்தியாவின் தஞ்சாவூரிலிருந்த ஒரு மடத்தின் தலைவரான ஸ்ரீ அம்பலவான தேசிகரின் இரண்டு தூதர்கள் வந்து இந்தியர்களின் உண்மையான அரசின் முதல் தலைவரான ஜவாஹர்லால் நேரு, பழங்கால இந்திய அரசர்களைப் போல இந்து புனிதத் துறவிகளிடமிருந்து அதிகாரத்தின் சின்னத்தைப் பெற வேண்டுமென கூறினர்
அந்தத் தூதர்களுடன் நாதஸ்வர வித்வான் ஒருவரும் வந்திருந்தார். ஒரு பழைய ஃபோர்டு காரில் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை நேருவின் வீட்டை நோக்கி அவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டனர். அப்படிச் செல்லும்போது ஒவ்வொரு நூறடிக்கும் இடையில் நின்று சுமார் 15 நிமிடங்கள் நாதஸ்வரத்தை வாசித்தார். மற்றொருவர்
ஒரு பெரிய வெள்ளித்தட்டைத் தாங்கி வந்தார். அந்த வெள்ளித்தட்டில் ஜரிகையுடன்கூடிய பீதாம்பரம் இருந்தது.
நேருவின் வீட்டை இறுதியில் அடைந்தவுடன் நாதஸ்வர வித்வான் தனது நாதஸ்வரத்தை வாசிக்க ஆரம்பித்தார். மற்றவர்கள் நேருவின் அழைப்பிற்காகக் காத்திருந்தார்கள்.
பிறகு அவர்கள் அந்த வீட்டினுள்
நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்கு மானின் ரோமத்தால் செய்யப்பட்ட விசிறியைக் கொண்டு இருவர் விசிறினார்கள்.
ஒரு சன்னியாசியிடம் ஐந்தடி உயரமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட 2 அங்குலம் கனமான செங்கோல் இருந்தது. தஞ்சாவூரிலிருந்து எடுத்து வந்த புனித நீரை நேருவின் தலையில் ஒருவர் தெளித்தார்.
நேருவின் நேற்றியில் விபூதி பூசப்பட்டது. நேருவுக்கு பீதாம்பரத்தைப் போர்த்தி, செங்கோலை அவர்கள் வழங்கினார்கள். அன்று காலையில் நடராஜருக்குப் படைக்கப்பட்டு, விமானத்தில் கொண்டுவரப்பட்ட பிரசாதமும் அவருக்கு வழங்கப்பட்டது," என விவரிக்கிறது Time இதழ்.
Time இதழின் விவரிப்பின்படி, அதிகாரம்
கை மாறியதன் அடையாளமாக துறவிகளிடமிருந்து செங்கோலை நேரு பெற்றுக்கொள்ள வேண்டுமென ஸ்ரீ அம்பலவான தேசிகர்தான் கருதியிருக்கிறார். அதேபோல, நேரடியாக அம்பலவான தேசிகரிடமிருந்து செங்கோல் நேருவிடம்தான் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தியா சுதந்திரம் பெற்ற தருணத்தை மிக நுணுக்கமாக விவரிக்கும் நூல்
டொமினிக் லாப்பியரும் லாரி காலின்சும் சேர்ந்து எழுதிய The Freedom at Midnight.
இந்தப் புத்தகத்திலும் நேருவுக்கு செங்கோல் வழங்கப்பட்ட தகவல் இடம்பெற்றுள்ளது. "14 ஆகஸ்ட் 1947" என்ற தலைப்பிலான அத்தியாயத்தில், Time இதழில் கூறப்பட்டது போன்றே இந்தச் சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதிலும் ராஜாஜியின் ஆலோசனை குறித்தோ, மவுன்ட்பேட்டனிடம் செங்கோலை அளித்து, திரும்பவும் நேருவிடம் கொடுத்ததாகவோ தகவல் இல்லை.
ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான The Hindu நாளிதழ், ஆகஸ்ட் 14ஆம் தேதி என்னவெல்லாம் நடந்தது என்பதை வெளியிட்டிருந்தது. அதன்படி, ஆகஸ்ட் 14ஆம் தேதி, வியாழக்கிழமை
நள்ளிரவு இந்திய அரசமைப்பு அவையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டம் கூடியது.
அதில் அரசமைப்பு அவையின் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத் உரையாற்றினார். இதற்குப் பிறகு, அவையின் உறுப்பினர்கள் தங்களது சேவையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் தீர்மானத்தைக் கொண்டுவந்து உரையாற்றினார்.
அந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகு இந்திய பெண்களின் சார்பாக திருமதி ஹன்சா மேத்தா, தேசியக் கொடியைக் கையளித்தார்.
இதையடுத்து அவை, வெள்ளிக்கிழமை காலைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதில் மவுன்ட்பேட்டனிடமிருந்து நேரு செங்கோல் பெற்ற நிகழ்வு ஏதும் இடம்பெறவில்லை.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய சில தினங்களில், இந்தியாவின் முக்கியத் தலைவர்களின் மனதில் பிரிவினையால் ஏற்படும் கலவரம் குறித்த கவலைகளே பெரும்பாலும் இருந்தன.
தேசப் பிரிவினையை எப்படி எதிர்கொள்வது,அதனால் புலம்பெயர்ந்து வரும் மக்களுக்கு என்ன வசதிகளைச் செய்வது, இந்துக்களுக்கும்
இஸ்லாமியர்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கவலைகளே மவுன்ட்பேட்டன், நேரு, வல்லபாய் படேல், ராஜாஜி ஆகியோருக்கு இருந்தது.
ராஜாஜியின் சரிதையை ராஜ்மோகன் காந்தி எழுதியிருக்கிறார். அதில் சுதந்திரத்திற்கு முந்தைய சில தினங்களைப் பற்றிப் பின்வருமாறு சொல்லப்படுகிறது:
சுந்திரத்திற்குச் சில நாட்கள் முன்பாக வங்கம் பெரும் கொந்தளிப்பாக இருந்தது. அப்போதைய ஆளுநரான பரோஸ் இங்கிலாந்து திரும்ப முடிவுசெய்து விட்டார்.
புதிய ஆளுநராக யாரை நியமிப்பது என்ற விவாதம் தீவிரமாக இருந்தது. ராஜாஜி கோபாலசாமி ஐய்யங்கார் பெயரைச் சொன்னார்.
ஆனால், அவர் சொந்தப்
பிரச்னைகள் காரணமாக அந்தப் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து வல்லபபாய் படேல், ராஜாஜிதான் வங்கத்தின் புதிய ஆளுநராக இருக்க வேண்டும் என்றார். இதற்கு நேருவும் மகாத்மாவும் ஒப்புக்கொண்டனர்.
ஆனால், அதிகாரமற்ற பதவி என்பதால் இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியுமென யோசித்தார் ராஜாஜி.
இதற்கிடையில் மறுபடியும் வங்கத்தில் வெடித்த கலவரத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
நேருவை அணுகிய ராஜாஜி, நிர்வாக அதிகாரமின்றி கலவரங்களை தன்னால் எப்படி கட்டுப்படுத்த முடியும் என மீண்டும் கேட்டார். "இந்த நாட்டில் எந்தக் காரியமானாலும் ஏற்று வெற்றிபெறக் கூடியவர் நீங்கள்" என பதிலளித்தார்
இதையடுத்து வங்கத்தின் ஆளுநராகப் பதவியேற்க ஆகஸ்ட் 14ஆம் தேதியே புறப்பட்டுச் சென்றுவிட்டார் ராஜாஜி.
சுதந்திர தினத்தன்று அவர் கல்கத்தாவில் இருந்த ஆளுநர் மாளிகையில்தான் இருந்தார். இதில் எங்கேயுமே, அதிகாரத்தை எப்படி கைமாற்றுவது என்பது குறித்த விவாதங்கள் நடந்ததாகக் குறிப்பிடவில்லை.
வி.பி. மேனனின் The Transfer Of Power In India நூல். அந்தப் புத்தகத்தைப் பொறுத்தவரை, தேசப் பிரிவினையின் சிக்கலான தருணங்களையும் இடைக்கால அரசையும் பற்றி மட்டுமே பேசுகிறது. அதில் எந்த இடத்திலும் அதிகாரத்தைக் கைமாற்ற செங்கோல் தருவது குறித்த குறிப்புகள் இல்லை.
ஆதீனத்தைச் சேர்ந்தவர்கள் விமானத்தில் சென்று, செங்கோலை நேருவிடம் அளித்ததாகத் தெரிய வருகிறது. கோவில் பிரசாதத்தையும் அவர்கள் நேருவுக்கு அளித்துள்ளனர். ஆகவே, அவர்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதிதான் விமானத்தில் தில்லி வந்திருக்க வேண்டும்.
அன்றைய தினம், இந்தியாவின் வைசிராயின் நிகழ்ச்சி
நிரலின்படி அவர் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்தார். அன்று பாகிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டதால், அவர் அந்த விழாவில் பங்கேற்கச் சென்றிருந்தார்.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சுதந்திரம் வழங்கப்படவுள்ள ஆகஸ்ட் 14, 15 தேதிகளில் வைசிராயின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது ஜூலை
10ஆம் தேதியே முடிவு செய்யப்பட்டது.
சதாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள இது தொடர்பான மவுன்ட்பேட்டன் பிரபு ஆவணங்களின்படி, காலை எட்டு மணிக்குப் புறப்பட்டு, 11.30 மணிக்கு கராச்சியை வந்தடைந்தார் வைசிராய்.
சுதந்திர தின நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, மூன்றரை மணிக்கு கராச்சி
விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை ஏழு மணிக்குத்தான் தில்லி வந்தடைந்தார் மவுன்ட்பேட்டன்.
அதிகாரம் கைமாறும் நிகழ்வுகளைப் பொறுத்தவரை, யூனியன் ஜாக் கொடியை இறக்குவது, இந்தியாவின் புதிய தேசியக் கொடியை ஏற்றுவது குறித்தே பல ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
அதன்படியே, சுதந்திரம் பெற்று, டொமினியன் அந்தஸ்து நாடாக மாறியதைக் குறிக்க யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
புகைப்பட ஆதாரங்களைப் பார்த்தாலும், நேருவிடம் செங்கோல் அளிப்பவை உள்ளனவே தவிர, மவுன்ட்பேட்டனிடம் செங்கோலை அளித்து, திரும்பப் பெறுவது போன்றவை இல்லை.
இந்திய வரலாற்றின் மிகப்பெரிய மோசடி கதை மவுண்ட் பாட்டன் நேருவுக்கு செங்கோல் வழங்கினார் என்பது.
அது எப்படி எல்லாம் இட்டுக்கட்டப்பட்டு நாளை நடைபெறும் விழாவில் வைக்கப்படுகிறது என்பதை குறித்த தொடர்ச்சி @magorarasigan பதிவில்
போஸ் பாண்டி ஜப்பானில் G7 மாநாட்டில், teleprompter வசதி இல்லாததால் ஹிந்தியில் எழுதி ஆங்கிலத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் போது
இத்தாலியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் G7 கூட்டத்தில் இருந்து
இத்தாலி பிரதமர் உடனே திரும்பி சென்று விட்டார்.
இந்நிலையில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய QUAD countries குவாட் அமைப்பின் மாநாடு இந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடப்பதாக இருந்தது.
அதனால் நான்கு நாட்டு தலைவர்களும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய இருந்தனர்.
கடன் பிரச்சனை தொடர்பான
மிக முக்கிய கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால் குவாட் மாநாடு பயணத்தை ஜோ பிடன் ரத்து செய்துவிட்டார்.
அமெரிக்க அதிபர் வராததால் ஜப்பான் பிரதமரும் பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
முக்கிய தலைவர்கள் இரண்டு பேர் வராததால் ஆஸ்திரேலியா இந்த குவாட் மாநாட்டையே கேன்சல் செய்துவிட்டது.