#கலைஞர் இலங்கை இறுதிப்போரில் பிரபாகரனையும் புலிகளையும் காப்பாற்றியிருக்க முடியுமா? - என். ராம் பேட்டி
கேள்வி : இலங்கை தமிழர்கள் - விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு குறித்த உங்களின் பார்வை என்ன?
என். ராம் : விடுதலை புலிகள் எப்போதுமே கலைஞரை விட எம்.ஜி.ஆரை
விரும்பியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொலை செய்யப்பட்டதிலிருந்து கலைஞருக்கு விடுதலை புலிகள் மீதிருந்த மரியாதை தகர்ந்தது .
ராஜிவ் காந்தியை விடுதலை புலிகள் கொன்றது மன்னிக்க முடியாதது என ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார் கலைஞர்.
அவர் முதல்வராக இருந்தபோது ஆக்கப்பூர்வமாகவே செயல்பட்டார்.
இலங்கை இறுதிக்கட்ட போரின்போது கூட அவரால் முடிந்த அளவு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தார். அப்போது கூட அவர் விடுதலை புலிகளை நேரடியாக ஆதரிக்கவில்லை. இறுதிக்கட்ட போருக்கு பிறகு கலைஞர் மீதே வசவுகள் விழுந்தன''.
அவருடைய நிலை என்னவெனில், இலங்கைக்குள் தமிழர்கள் தங்களது அரசியல் உரிமைகளைப் பெற வேண்டும். தங்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் நிலை உருவாக வேண்டும்.
சிலர் பிடிவாதவே தமிழ் ஈழம் மட்டுமே வேண்டும் எனச் சொல்வது போன்றதோர் நிலை எடுப்பவராக அவர் இருந்ததில்லை.''
"இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி மேற்கொள்ளும் வாய்ப்பு அமைய வேண்டும் என்பதே அவரது உண்மையான கோரிக்கையாக இருந்தது.
ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என தெரியும்போது தமிழீழம் தான் ஒரே தீர்வு என்ற வெளிப்படையான நிலையை எடுக்கும்போது அவர் பிடிவாதமாகவோ திடமாகவோ அம்முடிவை எடுக்கவில்லை
என்பதை நான் நன்றாகவே அறிவேன். அவர் விடுதலை புலிகளின் அட்டூழியங்களை ஆதரிக்கவில்லை".
'ஒருமுறை நான் அவரிடம் பேசும்போது, 'ஒரு முட்டாள்தனமான தவறு, குற்றத்தை விட மோசமானது' என ஒருவரின் மேற்கோளை காட்டி ராஜிவ் காந்தி கொலை குறித்து சொல்லிக்கொண்டிருந்தேன்.
விடுதலை புலிகளின் முட்டாள்தனமான தவறுகள் குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.
ஒன்று, இந்திய அமைதி படையுடன் விடுதலை புலிகள் வெறித்தனமாக போர் நடத்தியது.
இரண்டு, ராஜீவ் காந்தி படுகொலையை பிரபாகரனே திட்டமிட்டது. அது ஒரு மிகப்பெரிய குற்றம். மேலும் முட்டாள்தனமான தவறு" என்றேன்.
மூன்றாவதாக, ராஜபக்சவைத் தேர்ந்தெடுத்தது என்றேன்''. எப்படி? என கேட்டார்.
''ரணில் விக்ரமசிங்க Vs ராஜபக்சே மோதிய அந்த அதிபர் தேர்தல் கடும் போட்டி நிறைந்ததாக இருந்திருக்கும். ஆனால் தேர்தலை புறக்கணிக்கச் சொல்லி தமிழர்களிடம் கூறியது விடுதலை புலிகள்.
இதனால் கணிசமாக ரணிலுக்கு கிடைக்க வேண்டிய ஆதரவு வீணாய்ப்போனது என்றேன்.''
''அவர்கள் இன்னொரு தவறு செய்தார்கள் அது என்ன தெரியுமா?'' என்று கருணாநிதி என்னிடம் கேட்டார்.
'சிறீ சபாரத்தினத்தை கொல்லப்போகிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். அதைச் செய்யக்கூடாது என நான் சொல்வதாய் பிரபாகரனிடம்
சொல்லுங்கள் என பேபி சுப்ரமணியத்திடம் பேசினேன். ஆனால் சபாரத்தினத்தை சித்திரவதை செய்து படுகொலை செய்தனர். இதனால் விடுதலைபுலிகள் மீது பெரும் ஏமாற்றம் உண்டானது.'' என்று சொல்லி கருணாநிதி என்னிடம் கவலைப்பட்டார்.
ஆகவே கருணாநிதிக்கு கண்மூடித்தனமான விடுதலை புலிகள் ஆதரவு நிலை இருந்ததில்லை.
அதே நேரத்தில் விடுதலை புலிகள் மற்றும் ஈழத் தமிழர்கள் குறித்து அவர் குழப்பிக்கொள்ளவில்லை.''
''ஈழத்தமிழர் நலன், உரிமைகள் மற்றும் அவர்களது அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் ஆகியவற்றை காப்பதுதான் கருணாநிதியின் நோக்கம்''.
''ஈழத்தமிழர்கள் குறித்து நாங்கள்தான் ஒரே பிரதிநிதிகள் என
விடுதலை புலிகள் எடுத்த நிலையை அவர் ஒப்புக்கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.''
'இலங்கையில் இறுதிக் கட்ட போரில் யாரும் விடுதலை புலிகளையும் பிரபாகரனையும் காப்பாற்ற முடியாது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், பிரபாகரன் அசட்டையாக ஓர் நிலையை எடுத்துவிட்டார்.''
அந்த நேரத்தில் பிரபாகரனையும் புலிகளையும் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது என்பது உண்மை. அந்நேரத்தில் இந்தியா தலையிடும் என பிரபாகரனுக்கு யாரோ நம்பிக்கை அளித்ததாக கேள்விப்பட்டோம். ஆனால் ஆதாரமில்லை. இந்த நிலையில் திமுகவால் மட்டும் காப்பாற்றியிருக்க முடியுமா என்ற கேள்வியே தேவையற்றது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காஞ்சியில், பெரியார் கொடியேற்றிவைத்து, கடவுள் மறுப்பு வாசகமான,
...கடவுள் இல்லை... கடவுள் இல்லை...
...கடவுள் இல்லவே இல்லை...
...கடவுளைக் கற்பித்தவன், முட்டாள்...
...கடவுளை, பரப்பினவன் அயோக்கியன்...
...கடவுளை வாங்குகிறவன் காட்டு மிராண்டி...
என்கிற கல்வெட்டையும் திறந்து வைத்தார்...
...இதற்கு பதிலடியாக எதிர் கோஷ்டியினர் ,
...கடவுள் உண்டு... கடவுள் உண்டு...
...கடவுள் உண்டவே உண்டு...
...கடவுளைக் கற்பித்தவன் பண்பாளன்...
...கடவுளை பரப்பினவன் யோக்கியன்...
...கடவுளை வணங்குகிறவன், வணக்கத்திற்குரியவன்...
என்கிற கல்வெட்டைத் திறந்து வைத்தனர்...
அந்தக் கல்வெட்டை அகற்றச் சென்ற பெரியார் தொண்டர்கள், பெரியாரிடம் அனுமதி கேட்டனர்... கல்வெட்டில் இருக்கும் செய்தியை கேட்டறிந்த பெரியார்,
அந்தக் கல்வெட்டை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள், அகற்ற வேண்டாம் என்று கூறினார்...
நாம், கடவுளைக் கற்பித்தவன், முட்டாள் என்கிறோம்...
இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஊழல் செய்கிறார்கள்? அவர்களின் அணுகுமுறையில் என்ன தவறு?....
நியூசிலாந்து பத்திரிகைஒரு ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களாவன.
ஊழல் குறித்து இந்தியர்கள் குறிப்பாக மோசமாக எதுவும் நினைக்கவில்லை. ஏனெனில் ஊழல் இயற்கையாகவே நிலவுகிறது.
ஊழலை சரிசெய்வதை விட இந்தியர்கள் சகித்துக்கொள்கிறார்கள்.
இந்தியர்கள் ஏன் ஊழல்வாதிகள் என்பதை அறிய, அவர்களின் வழிகள் மற்றும் செயல்களைப் பாருங்கள்.
முதலில் மதம் என்பது இந்தியாவில் ஒரு வணிகமாகும். ஒரு பரிவர்த்தனை, அதில் கடவுளுக்குப் பணம் செலுத்தி, அதற்குப் பதிலாக ஒரு வெகுமதியை எதிர்பார்க்கும் ஒரு முறை. தகுதி இல்லாதவர்கள் கூட கடவுளிடம் பணம் கொடுத்து வெகுமதியை கேட்கிறார்கள்.
*கடவுள் நம்பிக்கை கொண்ட ராஜாஜியும், கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரும் 94 வயது வரை வாழ்ந்தார்கள்.*
*இருவருமே சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்.*
*பெரியார் மறைந்து 48 ஆண்டுகள் ஆன பிறகும் இன்றும் கொண்டாடப்படுகிறார்.*
*ஆனால் ராஜாஜியின் ஆதரவாளர்கள் ஏன் அவரை கொண்டாட மறந்து போனார்கள்..?*
*காரணம் ராஜாஜியின் செயல்பாடுகள் என்பது அவரது சமுதாயத்தினருக்கு உகந்ததாக மட்டுமே இருந்தது.*
*ஆனால் பெரியாரின் சிந்தனை, பேச்சு, செயல் என அனைத்தும் ஒட்டுமொத்த சமுதாயத்தினருக்கும், அவர்களின் சந்ததிகளுக்கான முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே இருந்தது.*
*ராஜாஜி அரசியல்வாதி. தனக்கும் தனது சமுதாயத்திற்கும் எது பலன் தரும் என்று மட்டுமே சிந்தித்தார்.*
*ஆனால் பெரியார் சமூக சீர்திருத்தவாதி. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் எது பலன் தரும் என்று சிந்தித்து அதன்படி செயல்பட்டார்.*
*ராஜாஜி தன் சமகாலத்தினராலேயே மறக்கப்பட்டப்தற்கும்,
1960 ல் உலகத் தலைவர்கள் மாநாடு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டுத் தலைவர்கள் சபை இருக்கும்
அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வந்து குவிந்தனர். தலைவர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டல்களை ஐ.நா ஏற்பாடு செய்திருந்தது. அப்போது க்யூப அதிபரான 34 வயது ஃபிடல் காஸ்ட்ரோ ஐ.நா நிகழ்வுக்காக நியூயார்க் வருகிறார். அமெரிக்க அதிபர் #DwightEisenhower க்கு பயந்து கொண்டு காஸ்ட்ரோவுக்கு
நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கு இடம் அளிக்க முடியாது என்று ஹோட்டல் நிர்வாகங்கள் கூட்டு முடிவு எடுத்திருந்தன. ஐ.நா. மூத்த நிர்வாகிகளைச் சந்தித்த காஸ்ட்ரோ எனக்குத் தங்க இடம் அளிக்க மறுக்கிறார்கள், எனவே நான் ஐ.நா. வளாகத்திற்குள் ஒரு டெண்ட் அடித்துத் தங்கப் போகிறேன் என்று
வரலாற்றில் ஒரு பேரரசு எப்படி எழுந்தது, வளர்ந்தது, பரந்தது என்று படிக்கும் அதேவேளையில் அதெப்படி வீழ்ந்தது என்பதும் முக்கியமான பகுதி.
சோழப்பேரரசு, பாண்டியப் பேரரசு, முகலாயப் பேரரசு வீழ்ச்சியைப் பற்றி வாசித்தவேளையில், வீழ்ச்சிக்கான பொதுவான ஒரு காரணம் தெரியுமா ?
ஆள்பவர்களின் மெத்தனம்.
இராஜராஜ சோழனுக்குப் பின்னும், இராஜேந்திர சோழன் ஆட்சியில், சோழப் பேரரசு வலுவாகவே இருந்தது. எப்படி ?
இராஜராஜனைக் காட்டிலும் அதிகளவு போர்களில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தவன் இராஜேந்திர சோழன். இராஜேந்திர சோழனை ஒரு போர்க்கள அடிக்ட் என்றே சொல்ல முடியும்.
அதேபோல, முகலாய அரசர்களில் பாபர், அக்பர், ஷாஜகானும் ஓயாமல் போர் புரிந்துக் கொண்டே இருந்தனர்.
பாபர், அக்பர், ஷாஜகானை விடவும் அதிக நாட்கள் வாழ்ந்தவர் அவுரங்கசீப். போக, தன்னுடைய 90 + வயதிலும், போர்க்களத்திற்கு யானை மீது வந்தார் என வரலாற்றிஞர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.