இராணுவத்திலிருந்து சில தமிழக ஜவான்கள் கலைஞருக்கு ஒரு கடிதம் 1969ல் எழுதுகிறார்கள். உங்கள் ஆட்சி சீரும் சிறப்புமாக நடைபெறும் இந்த நாளில் ‘மதாரஸ் வானொலி நிலையம்’ என்று அறிப்பதை, நீங்கள் தமிழில் மாற்றக்கூடாதா என்று Inland கடிதம் மூலம் கேட்கிறார்கள். ♥️🖤
உடனே தலைவர் ஆணையிடுகிறார் நாளை முதல் ‘சென்னை வானொலி நிலையம்’ என்று அழைக்கப்பட வேண்டும் என்று. கலைஞர் தலைவர்களின் தலைவர் மட்டும் இல்லை; அவர் சாதரண மக்களின் மனுக்களுக்கு தீர்வளிக்கும் தலைவரும் ஆவார்.#கலைஞர்100
உலகில் கலைஞருக்கு முன்பு எத்தனையோ தலைவர்கள் இருதிருக்கலாம். ஆனா சாதரண மனு என்று விட்டுவிடாமல் அதனையும் மதித்து சட்டத்திலும் அரசானையிலும் எளிய மக்களின் குரலை இடம்பெற செய்த தன்னிகற்ற தலைவர் என்ற வரலாற்று பெருமை தலைவர் கலைஞருக்கே உரியதாகும். ♥️🖤
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தஞ்சையின் சிங்கமாக வலம் வந்தவர் கோ.சி.மணி அவரை ‘சின்னக் கலைஞர்’ என்றும் சொல்வார்கள். கலைஞரை விட 5வயதுதான் குறைவு. திமுக ஆரம்பித்த நாள் முதல் கட்சியின் உறுப்பினராக இருப்பவர். கலைஞரும் தஞ்சை மாவட்டத்துக்காரர் என்பதால்,
அவரைப்போலவே தன்னை வார்த்துக்கொண்டவர் கோ.சி.மணி தலைவரைப்போலவே தலையை நேர் வகுடு எடுத்து,அவரது நாடகங்களில் நடித்து, இரவு பகல் பாராமல் கட்சிக்காக உழைத்து.. இன்று வயதானாலும் அவரது பழைய பெருமைகளை பேசும் பெரும் கூட்டத்தை வைத்திருப்பவர். ♥️🖤
அதனால்தான்,’பழக தெரிந்த நாள் முதலாக என்னுடன் இரண்டறக் கலந்துவிட்ட, என் உயிரனைய, உயிருக்கு உயிரான, உயிரினும் உயர்வான உடன்பிறப்பு’ என்று கலைஞரால் உச்சி முகர்ந்து பாராட்டப்பட்டார்.#கலைஞர்100