தஞ்சையின் சிங்கமாக வலம் வந்தவர் கோ.சி.மணி அவரை ‘சின்னக் கலைஞர்’ என்றும் சொல்வார்கள். கலைஞரை விட 5வயதுதான் குறைவு. திமுக ஆரம்பித்த நாள் முதல் கட்சியின் உறுப்பினராக இருப்பவர். கலைஞரும் தஞ்சை மாவட்டத்துக்காரர் என்பதால்,
அவரைப்போலவே தன்னை வார்த்துக்கொண்டவர் கோ.சி.மணி தலைவரைப்போலவே தலையை நேர் வகுடு எடுத்து,அவரது நாடகங்களில் நடித்து, இரவு பகல் பாராமல் கட்சிக்காக உழைத்து.. இன்று வயதானாலும் அவரது பழைய பெருமைகளை பேசும் பெரும் கூட்டத்தை வைத்திருப்பவர். ♥️🖤
அதனால்தான்,’பழக தெரிந்த நாள் முதலாக என்னுடன் இரண்டறக் கலந்துவிட்ட, என் உயிரனைய, உயிருக்கு உயிரான, உயிரினும் உயர்வான உடன்பிறப்பு’ என்று கலைஞரால் உச்சி முகர்ந்து பாராட்டப்பட்டார்.#கலைஞர்100
ஒரு நாள் சட்ட மேலவையில் முதல்வர் எம்.ஜி.ஆர்., தம்பி கோ.சி.மணி அவர்கள் என்றும் சொன்னதும், என்னை முதல்வர் அவர்கள் தம்பி என்று சொல்லக்கூடாது. அவர் எனக்கு அண்ணன் அல்ல. நான் கலைஞர் மட்டும்தான் தம்பி என்று சொன்னதும் எம்.ஜி.ஆர். முகம் இருண்டதாம்.
கோ.சி. மணி இல்லாத தஞ்சை மண்ணை குண்டுமணியளவு கற்பனை செய்தாலும் குலை நடுங்குகிறதே: என்று கலைஞர் இரங்கல் தெரிவித்துள்ளார்.#தமிழினத்தலைவர்_கலைஞர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh