அவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கிச் சுட்டெரித்த சாலைகளில் பேரணியாகச் சென்றனர்.
அதன் பின் பரபரப்பான பூந்தமல்லி நெடுஞ்சாலையில்
போக்குவரத்தை மறித்து தர்ணா செய்தனர்.
அவர்களது கோரிக்கையைக் கேட்டு சென்னை நகரமே திரும்பி அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தது.
ஏன் என்றால், ஆண் மாணவர்களையும் அவர்கள் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.
உலகில் எங்கும் கேள்விப்படாத நிகழ்வு இது.
அது நடந்தது மெட்ராஸில்தான்; ஆனால் கதை தொலைதூர டெல்லியில் தொடங்கியது.
1911, இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து புது தில்லிக்கு மாற்றப்பட்டது.
இந்திய மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட ஆங்கிலேயர்களும் இருந்தனர்.
அவர்களில் ஒருவர் கவர்னர் ஜெனரலின் மனைவி
இந்தியாவின் கவர்னர் ஜெனரல் பிரபு சார்லஸ் ஹார்டிங்கின் மனைவி லேடி ஹார்டிங்,
பெண்களுக்கான மருத்துவக் கல்லூரியை நிறுவ முடிவு செய்தார்.
அப்போதைய பெரும்பாலான இந்தியப் பெண்கள் தங்கள் உடல்நிலையை ஆண் மருத்துவரிடம் காட்டுவதை விட இறப்பதையே விரும்புவார்கள்
என்பதைப் புரிந்துவைத்திருந்த லேடி ஹார்டிங் இதைக் கண்டு மனம் வருந்தினார்.
இதற்கான தீர்வாக அந்த நேரத்தில் இந்தியாவுக்கு அதிகமான பெண் மருத்துவர்கள் தேவை என்று தீர்மானித்தார்.
சக்கரவர்த்தினியின் பெயரான மேரி என்று பெயர் சூட்டி மருத்துவக்கல்லூரியைத் தொடங்க விரும்பினார்.
மருத்துவக் கல்லூரிகளில் பெண்களைச் சேர்க்கும் செயல் ஐரோப்பியக் கல்லூரிகளில் கூடக் கலவரத்தை ஏற்படுத்திய காலம் அது. பெண்கள் மருத்துவம் படிக்க அனுமதித்த முதல் நகரங்களில் மெட்ராஸ் ஒன்றாகும். 1875 ஆம் ஆண்டில் அந்தப் புரட்சி நடந்தது. மற்ற இந்திய நகரங்கள் இதைப் பின்பற்றின.
எனினும் 1900களின் தொடக்கத்தில் இந்தியாவில் பெண் மருத்துவர்கள் குறைவாகவே இருந்தனர். பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டிய கோஷா அமைப்பு ஆண் மருத்துவர்களை அவர்கள் அணுகுவதைத் தடுத்தது. இந்த இரண்டு காரணிகளும் சேர்ந்து இந்தியாவில் அசாதாரணமான பெண் இறப்பு விகிதத்தை
ஏற்படுத்தியது. அதனால் சீக்கிரத்தில் பிரத்தியேகமான மகளிர் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைகள் இருந்தன.
இந்தியாவின் புதிய தலைநகரான புது தில்லியில் பெண்கள் மருத்துவக் கல்லூரியைத் தொடங்க இந்திய சமஸ்தானங்கள் மற்றும் பணக்காரர்களிடமிருந்து லேடி ஹார்டிங் நிதி சேகரித்தார்
ஆனால் துரதிர்ஷ்டவசமாக கல்லூரி திறக்கப்படுவதை அவரால் பார்க்க முடியவில்லை. கல்லூரி திறக்கப்படுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். கல்லூரிக்கு ‘சீமாட்டி ஹார்டிங்’ என்று பெயரிடுமாறு சக்கரவர்த்தினியே அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். சீமாட்டி ஹார்டிங் விருப்பப்படி
இன்று வரை பெண்கள் மட்டும் தான் இந்தக் கல்லூரியில் படிக்கலாம்.
இங்கு படித்த சுசீலா நய்யார், காந்தியின் தனிப்பட்ட மருத்துவராகச் செயல்பட்டு, அவரது நெருங்கிய வட்டாரத்தில் முக்கிய உறுப்பினரானார். காந்தியை மரணத்தின் விளிம்பிலிருந்து அவர் பலமுறை காப்பாற்றினார்.
சீமாட்டி ஹார்டிங் கல்லூரி தொடங்கி 50 ஆண்டுகளுக்குப் பிறகு அதே வடிவத்தைப் பயன்படுத்திப் பெண் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பெண்கள் மட்டுமே படிக்கும் மருத்துவக் கல்லூரியைத் தொடங்க மெட்ராஸ் அரசு முடிவு செய்தது.
மெட்ராஸில் ஏற்கெனவே இரண்டு மருத்துவக் கல்லூரிகளும் மாநிலம்
முழுவதும் பலவும் இருந்தன. ஆனால் இன்னும் போதுமான பெண் மருத்துவர்கள் உருவாக்கப்படவில்லை என்று அரசாங்கம் கருதியது.
அங்கு தான், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட அடிப்படைக் காரணத்தையே கண்டித்து, அதை இரு பாலர் படிக்கும் கல்லூரியாக மாற்றக் கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபட்டனர் மாணவிகள்.
மகளிர் மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வு செய்யப்பட்ட இடம் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்டுள்ளது. வடக்கில் ஒரு நீரோடை மற்றும் தெற்கில் ஏரிகள் ஆகியவற்றால் சூழப்பட்ட கீல்பாக், நெரிசலான கோட்டையுடன் ஒப்பிடும்போது ஆங்கிலேயர்கள் வாழ ஓர் இனிமையான மாற்று இடமாக
இருந்திருக்க வேண்டும். அவர்கள் மட்டுமல்ல, வசதி படைத்த இந்தியர்களும் கீழ்ப்பாக்கின் பெரிய தோட்ட வீடுகளையே விரும்பினர்.
செட்பேட் ஏரிக்கு அடுத்ததாக ஹைட் பார்க் என்ற பெரிய வீடு இருந்தது. அது காளஹஸ்தி ஜமீன்தாரான பனகல் ராஜா சர் பனகண்டி ராமராயனிங்கருக்குச் சொந்தமானது.
நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான ராஜா அதன் தலைவராகவும் பணியாற்றினார். அவர் மெட்ராஸ் பிரசிடென்சியின் முதலமைச்சராக இருந்தபோது, தனது பதவிக்காலத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் சென்னை தியாகராய நகர் உருவாக்கப்பட்டது.
இந்திய மருத்துவ முறைகளில் நிபுணராக இருந்த முன்னாள் ராணுவ வீரர், டாக்டர் ஸ்ரீனிவாசமூர்த்தி, பனகல் ராஜாவின் தனிப்பட்ட மருத்துவராக இருந்தார். டாக்டர் ஸ்ரீநிவாசமூர்த்தி, உள்நாட்டு மருத்துவ முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஈடுபட்டிருந்தார்.
மேலும் இரண்டு மெட்ராஸ்
மருத்துவக் கல்லூரிகள் ஐரோப்பிய மருத்துவ முறையுடன் செயல்படும் போது, இந்திய முறைகளிலும் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய அவசியம் என்பதால் டாக்டர் ஸ்ரீநிவாசமூர்த்தி இந்திய மருத்துவப் பள்ளியை நிறுவுமாறு மகாராஜாவிடம் கோரிக்கை விடுத்தார்.
ராஜா ஒப்புக்கொண்டு, தனது ஏரிக்கரைத்
தோட்ட பங்களாவை, நன்கொடையாக வழங்கினார். ராஜாவின் குதிரை லாயம், இப்போது அனாடொமி (anatomy) துறையாகச் செயல்படுகிறது.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி
1925 ஆம் ஆண்டு இந்திய மருத்துவப் பள்ளி (GSIM) இங்குத் தொடங்கப்பட்டது. ஸ்ரீனிவாசமூர்த்திக்கு ‘வைத்திய ரத்தினம்’ என்ற பட்டம் வழங்கிக்
கௌரவிக்கப்பட்டது. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இக்கல்லூரி, ஆயுர்வேதம் மற்றும் யுனானி உட்பட அனைத்து வகையான இந்திய மருத்துவத்தையும் கற்பித்தது. காலப்போக்கில் மாணவர்களுக்கு மேற்கத்திய மருத்துவமும் கற்பிக்கப்பட்டதால்,
இறுதியாக ஒருங்கிணைந்த மருத்துவக் கல்வி முறைக்கு வழிவிட்டது
பின்னர் அரசு இதனை முற்றிலும் மேற்கத்திய மருத்துவக் கல்லூரியாக மாற்ற முடிவு செய்து, இந்திய மருத்துவக் கல்லூரியை அண்ணாநகருக்கு மாற்றியது. கீழ்பாக்கம் கல்லூரியில் ஒரு வகுப்பிற்கு 75 பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு கல்லூரியில் பல பெண்களைச் சேர்த்தது ஆரம்பத்தில் நன்றாக இருந்தது. அவர்களின் விருப்பம் நிறைவேறப் போவதில் அரசாங்கம் திருப்தி அடைந்தது.
ஆனால் ஒரு வித்தியாசமான பிரச்னை எழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பெண் மாணவர்கள் ஆண் நோயாளிகளைக் கையாளும்போது கூச்சப்பட்டார்கள்.
ஒவ்வொரு நோயாளிக்கும் உதவுவதற்காக அவர்கள் அவசரமாக ஓர் ஆயம்மாவை அழைத்து வர வேண்டியிருந்தது.
இறுதியாக, பெண்கள் உட்கார்ந்து, யோசித்தார்கள். வெளி உலகில் பல நோயாளிகள் ஆண்களாக இருப்பார்கள் என்பதால் அவர்கள் துறையில் வெற்றி பெறுவது கடினம் என்றும் புரிந்தது. தங்கள் வகுப்பில் ஆண்கள்
இல்லாததால்தான் அவர்களின் கூச்சம் ஏற்பட்டது என்று அவர்கள் முடிவு செய்தனர்.
அதனால்தான் அவர்களின் கல்லூரியில் ஆண்களையும் சேர்க்க வேண்டும் என்று பெண்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்தனர் – இரண்டு வருடப் போராட்டத்திற்குப் பிறகு பெண்கள் வெற்றி பெற்றனர். மாணவர் எண்ணிக்கை
அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 100 மாணவ, மாணவியர் அனுமதிக்கப்பட்டனர்.
KMC இன்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான முன்னணி நிறுவனமாக உள்ளது.
#ஐஸ்_ஹவுஸ்
மெட்ராஸ் வணிக மையமாகத் தொடங்கப்பட்டபோது ஆரம்பப் பரிவர்த்தனைகள் ஜவுளியில் மட்டுமே நடந்தன. சில ஆண்டுகளில் வணிகம் வரம்பில்லாமல் விஸ்வரூபம் எடுக்கவே, வர்த்தக மதிப்புள்ள எதுவும் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டது. யானைகள் முதல் வைரங்கள் வரை இங்கும் அங்குமாகக் கடல்களைக் கடந்தன.
ஆர்மேனியர்கள், யூதர்கள் மற்றும் போர்த்துக்கீசிய வர்த்தகர்கள் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு பொருள்களைக் கொண்டு வந்து குவியல்களாகக் கடற்கரையில் கொட்டி வைத்தனர். அவற்றில் மிக விசித்திரமான இறக்குமதியானது இன்று நாம் அனைவரும் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயன்படுத்துவதாகும்.
அந்த நாட்களில் அது ஒரு பிரம்மப்பிரயத்தனத்திற்குப் பிறகுதான் சென்னைக்கு இறக்குமதி செய்தனர். 1800களில் அதை அமெரிக்காவிலிருந்து கடல் வழியாக 10,000 மைல் கொண்டு வர, மிகவும் விரிவான திட்டமிடல் மற்றும் கடினமான பயணம் தேவைப்பட்டது.
அந்த இறக்குமதி – தண்ணீர். ஆனால் திட வடிவத்தில் கட்டியாக
பக்தி இலக்கியங்களில் மதுரையை "திருஆலவாய்" அல்லது "கூடல் மாநகர்" என்பர்
ஏனெனில், மதுரை என்பது சமணர்கள் வைத்த பெயர் என்றார்
அது சம்பந்தமா
Google செய்த போது இது வந்தது
#வேறுபெயர்கள்
கூடல் நகர்
மதுரையம்பதி
நான் மாடக்கூடல்
மீனாட்சி பட்டணம்
உயர் மாதர்கூடல்
ஆலவாய்
கடம்பவனம்
அங்கண் மூதூர்
சுந்தரேசபுரி
தென் மதுராபுரி
முக்கூடல் நகரம்
இவை காரணப் பெயர்
நம்ம ஆளுங்க
மல்லிகை நகர், வைகைநகர்
சிறப்பு பெயர் வைத்தனர்
#மலைநகர்
பக்கத்தில் ஆனைமலை திருப்பரங்குன்றம் இருப்பதால் மலை நகர்
அப்பவே பல மாநிலங்கள், தமிழ்நாட்டுக்கு வந்து இதன் நடைமுறை செயல்பாடு பற்றி அறிந்து சென்றன
இதனுடைய முக்கியத்துவம் ஒன்றிய அரசுக்கு உரைக்க 15 வருடம் ஆகியிருக்கிறது
கலைஞர் தன் காலத்தையும் தாண்டி சிந்தித்தவர் என பெருமை கொள்ள இன்னொரு வாய்ப்பு
இந்த உறுப்பு தான திட்டம் என்பது முதன்முதலில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. 2008இல் அவர் இதனைச் செய்தார். முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கூட இந்த அறுவைச் சிகிச்சையை ஒருவர் செய்துகொள்ளலாம் என அவர்தான் அறிவித்தார்.
அன்றைக்கு அவரிடம் இருந்த தொலைநோக்குப் பார்வைதான் இன்றைக்கு லட்சக் கணக்கான பேருக்கு புதிய உயிரையே கொடுத்துள்ளது. இந்திய அளவில் பலரும் பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் என இதை சுருக்கிப் பார்க்க முடியாது. அவர்தான் அதற்கு முழுக் காரணம். அதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.