சந்திராஷ்டமம் நாளில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது என்று சொல்வார்கள்.
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடக்கூடாது என்றும் சொல்வார்கள்.
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டே கால் நாட்களைத் தான் சந்திராஷ்டம காலம் என்கிறோம்.
அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17 வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம் தான் சந்திராஷ்டம நாளாகும்.
ஒருவருடைய மனதுக்கு அதிபதி சந்திரன்.
அவர் ஒரு ராசிக்கு எட்டாவது வீட்டில் மறைவு பெற்றிருக்கும் போது,
மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படக் கூடும்.
மனம் அமைதியின்றி தவிக்கவும் நேரிடும்.
தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் போகும்.
எனவே தான் பெரும்பாலானோர் சந்திராஷ்டம தினங்களில் எந்த ஒரு புது முயற்சியிலும் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்று சொல்லப்படுகிறது
சந்திராஷ்டமம் எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் தொல்லை தராது.
மேலும் ரிஷபம் மற்றும் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் நல்லது மட்டுமே செய்யும் என்பது சில ஜோதிடர்களின் கருத்தாகும்.
ரோகிணி - அஸ்தம் - திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.
வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் ஒரு சில நன்மைகள் நடக்கும்.
அதனால் சந்திராஷ்டமம் என்றால் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று சொல்லக் கூடாது.
சந்திராஷ்டம நாளில் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்வது நல்லது.
அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம்.
சந்திராஷ்டம நாளில் எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன்
குலதெய்வத்தையும்,
முன்னோர்களையும்,
இஷ்ட தெய்வத்தையும்
வணங்கி விட்டு ஆரம்பிப்பது நன்மை தரும்.
இப்படிச் செய்தால் காரியத்துக்கு எந்தத் தடையும் வராது.
சந்திராஷ்டமம் நாளில் காலை எழுந்தவுடன் குளித்து முடித்து விட்டு சந்திரனை நினைத்து '#ஓம்_ஸ்ரீ_சந்திராய_நமஹா' என்ற மந்திரத்தை ஒரு 11 முறை உச்சரித்து விட்டு,
அதன் பின்பு அன்றாட வேலைகளை தொடங்கினால் சந்திராஷ்டமத்தால் உங்களுக்கு பெரிய பிரச்சினைகள் எதுவும் வராது.