தி.மு.க.காரனுக்கு ஜூன் மாதம் கலைஞர் மாதம் .
மே கடைசி வாரம் முதலே இருப்பு கொள்ளாது .
பொதுவாக, ஒரு மனிதரை வெறுக்க ஒரு காரணம் போதும்.
உதாரணத்துக்கு நான் சொன்னதுக்கெல்லாம் ஆமா சாமி போடல அப்டீன்ற ஒண்ணு கூட போதும். ஆனா, உள்ளார்ந்து நேசிக்க, கொண்டாட எத்தனை காரணங்கள் வேண்டும்...
அத்தனையும் தாண்டி நிற்பவர் கலைஞர்
திமுகவினர் கலைஞரின் சாதனைகளையும்,
அவர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு அடைந்த நன்மைகளயும் பட்டியலிட்டு,
வரலாறு சொல்லி, தரவுகள் தந்து பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர் கடந்த சில நாட்களாகவே.
ஆனால் ஜூன் 3 அன்னிக்கு
கலைஞருக்கு கல்யாணம் பண்ணி வெச்சவங்க,
ஆடிட்டிங் பார்த்தவங்க, அரசியல் ஆலோசனை சொன்னவங்க, எல்லாம் வருவாங்க பாருங்க...
அப்ப தான் களம் களை கட்டும்.
கலைஞர் போலவே நாங்களும் வசவாளர்களை வாழ்த்த தயாராக இருக்கிறோம்.
வாடாத பாசத்துடன், உருக வைக்கும் குரல் வளத்துடன், ஒவ்வொரு பாட்டையுமே தனது உயிர் பாட்டாக நினைத்து பாடியவர் சீர்காழி..!
"கந்தன் கருணை" படத்தில் வரும், "அறுபடை வீடு கொண்ட திருமுருகா" என்ற பாட்டு மொத்தம் ஏழரை நிமிஷம்..!
மிக்சிங், டிராக் இப்படி எதுவுமே இல்லாத அந்த காலத்தில், எல்லா ஆர்க்கெஸ்ட்ராவும் ஒரே நேரத்தில் வாசிக்க, ஒரே டேக்கில் பாடி முடித்தார் என்றால் அதற்கு காரணம் இசை மீதான இவரது நாட்டமும், இறைவன் மீதான ஈர்ப்பும் தான்..!
தமிழை அளவுக்கு அதிகமாக நேசித்து, தமிழ் பாடல்களையே அதிகம் பாடியதால்,
சங்கீத சபாக்கள் இவரை நிராகரித்தன.. ஆனாலும் திராவிடர் கழக மேடைகள் சீர்காழியை வாரி அணைத்து கொண்டன..!
தமிழில் பாடுகின்றார் என்ற காரணத்துக்காகவே, சபாக்களில் இசை நிகழ்ச்சி நடத்த தடைவிதித்தது "மேல்தட்டுவர்க்கம்" தெலுங்கு கீர்த்தனைகளை பாடினால் மட்டுமே சபாக்களில் பாட அனுமதி இருந்தது..
*பெரியாரின் தனிச்சிறப்பு எது என்று பார்த்தால் அவர் பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கையை எதிர்த்தே.. அதே மக்களிடம் வெற்றியும் பெற்றது தான்.*
ஒரு உதாரணத்திற்கு எடுத்துப்போம்.
நான் இப்ப எங்க ஏரியால இருக்க பசங்கள ஒண்ணா திரட்டனும் னு முடிவு பண்ணிருக்கேன் வச்சிப்போம்.
அதற்கு எனக்கு இருக்கும் எளிமையான வழி ஆன்மிகம்.
ஒரு சாய்பாபா கோயில் கட்டறேன்னு ஆரம்பிக்கலாம், இல்ல 'நம்ம தெரு பசங்களாம் சேர்ந்து பிள்ளையார் சிலை வைக்கலாம் ஜி " என்றால் போதும் எளிதாக வருவார்கள் . வீட்டு பெரியவங்க கூட சந்தோஷமா அனுப்பிவைப்பாங்க .
அதுவே நான், "தோழர், மதவாதத்திற்கு எதிரா இளைஞர்களான நாம அணி சேரவேண்டும் " என்றால் ஒருத்தனும் வரமாட்டான் . பையன் ரெடியா இருந்தா கூட வீட்டு பெரியவங்க அனுமதிக்கமாட்டாங்க .
இல்லையா?
இது யதார்த்தம். அதேபோல ஒருத்தரை கவர வேண்டும் என்றால் கூட அதற்கும் ஆன்மிகம் எளிய வழி.
#கலைஞர் இலங்கை இறுதிப்போரில் பிரபாகரனையும் புலிகளையும் காப்பாற்றியிருக்க முடியுமா? - என். ராம் பேட்டி
கேள்வி : இலங்கை தமிழர்கள் - விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு குறித்த உங்களின் பார்வை என்ன?
என். ராம் : விடுதலை புலிகள் எப்போதுமே கலைஞரை விட எம்.ஜி.ஆரை
விரும்பியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொலை செய்யப்பட்டதிலிருந்து கலைஞருக்கு விடுதலை புலிகள் மீதிருந்த மரியாதை தகர்ந்தது .
ராஜிவ் காந்தியை விடுதலை புலிகள் கொன்றது மன்னிக்க முடியாதது என ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார் கலைஞர்.
அவர் முதல்வராக இருந்தபோது ஆக்கப்பூர்வமாகவே செயல்பட்டார்.
இலங்கை இறுதிக்கட்ட போரின்போது கூட அவரால் முடிந்த அளவு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தார். அப்போது கூட அவர் விடுதலை புலிகளை நேரடியாக ஆதரிக்கவில்லை. இறுதிக்கட்ட போருக்கு பிறகு கலைஞர் மீதே வசவுகள் விழுந்தன''.
காஞ்சியில், பெரியார் கொடியேற்றிவைத்து, கடவுள் மறுப்பு வாசகமான,
...கடவுள் இல்லை... கடவுள் இல்லை...
...கடவுள் இல்லவே இல்லை...
...கடவுளைக் கற்பித்தவன், முட்டாள்...
...கடவுளை, பரப்பினவன் அயோக்கியன்...
...கடவுளை வாங்குகிறவன் காட்டு மிராண்டி...
என்கிற கல்வெட்டையும் திறந்து வைத்தார்...
...இதற்கு பதிலடியாக எதிர் கோஷ்டியினர் ,
...கடவுள் உண்டு... கடவுள் உண்டு...
...கடவுள் உண்டவே உண்டு...
...கடவுளைக் கற்பித்தவன் பண்பாளன்...
...கடவுளை பரப்பினவன் யோக்கியன்...
...கடவுளை வணங்குகிறவன், வணக்கத்திற்குரியவன்...
என்கிற கல்வெட்டைத் திறந்து வைத்தனர்...
அந்தக் கல்வெட்டை அகற்றச் சென்ற பெரியார் தொண்டர்கள், பெரியாரிடம் அனுமதி கேட்டனர்... கல்வெட்டில் இருக்கும் செய்தியை கேட்டறிந்த பெரியார்,
அந்தக் கல்வெட்டை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள், அகற்ற வேண்டாம் என்று கூறினார்...
நாம், கடவுளைக் கற்பித்தவன், முட்டாள் என்கிறோம்...
இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஊழல் செய்கிறார்கள்? அவர்களின் அணுகுமுறையில் என்ன தவறு?....
நியூசிலாந்து பத்திரிகைஒரு ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களாவன.
ஊழல் குறித்து இந்தியர்கள் குறிப்பாக மோசமாக எதுவும் நினைக்கவில்லை. ஏனெனில் ஊழல் இயற்கையாகவே நிலவுகிறது.
ஊழலை சரிசெய்வதை விட இந்தியர்கள் சகித்துக்கொள்கிறார்கள்.
இந்தியர்கள் ஏன் ஊழல்வாதிகள் என்பதை அறிய, அவர்களின் வழிகள் மற்றும் செயல்களைப் பாருங்கள்.
முதலில் மதம் என்பது இந்தியாவில் ஒரு வணிகமாகும். ஒரு பரிவர்த்தனை, அதில் கடவுளுக்குப் பணம் செலுத்தி, அதற்குப் பதிலாக ஒரு வெகுமதியை எதிர்பார்க்கும் ஒரு முறை. தகுதி இல்லாதவர்கள் கூட கடவுளிடம் பணம் கொடுத்து வெகுமதியை கேட்கிறார்கள்.
*கடவுள் நம்பிக்கை கொண்ட ராஜாஜியும், கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரும் 94 வயது வரை வாழ்ந்தார்கள்.*
*இருவருமே சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்.*
*பெரியார் மறைந்து 48 ஆண்டுகள் ஆன பிறகும் இன்றும் கொண்டாடப்படுகிறார்.*
*ஆனால் ராஜாஜியின் ஆதரவாளர்கள் ஏன் அவரை கொண்டாட மறந்து போனார்கள்..?*
*காரணம் ராஜாஜியின் செயல்பாடுகள் என்பது அவரது சமுதாயத்தினருக்கு உகந்ததாக மட்டுமே இருந்தது.*
*ஆனால் பெரியாரின் சிந்தனை, பேச்சு, செயல் என அனைத்தும் ஒட்டுமொத்த சமுதாயத்தினருக்கும், அவர்களின் சந்ததிகளுக்கான முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே இருந்தது.*
*ராஜாஜி அரசியல்வாதி. தனக்கும் தனது சமுதாயத்திற்கும் எது பலன் தரும் என்று மட்டுமே சிந்தித்தார்.*
*ஆனால் பெரியார் சமூக சீர்திருத்தவாதி. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் எது பலன் தரும் என்று சிந்தித்து அதன்படி செயல்பட்டார்.*
*ராஜாஜி தன் சமகாலத்தினராலேயே மறக்கப்பட்டப்தற்கும்,