யாரை போய் கலைஞர்
என்றழைப்போம்
யார் வருவார் உடன் பிறப்பே
என்றழைப்பதற்கு
காலத்தை வென்றவனே
காவியமாய் நின்றவனே
உன் கல்லறையில்
சிந்துகின்றோம்
கண்ணீரின் வெள்ளமே
தமிழ் தாயின் தலைமகனே
நூற்றாண்டு விழா .... காணும் நாயகன் ..,..எம் தமிழின் காவலன் .....
கோயில் கூடாதென்று சொல்லாதீர் .அது கொடியவரின் கூடாரமாக கூடாது என்றவன் . தமிழை பராசக்தி மூலமாக பட்டி தொட்டி எங்கும் விதைத்தவன் .வண்ண தொலைகாட்சி தந்த பகலவன் பெரியாரின் சீடன் ஆனவன் அண்ணாவின் தம்பி ஆனவன்.மண்டல் கமிசனுக்கு ஆதரவு தந்தவன் .. அதன் மூலம் ஏழை எளியோருக்கு எல்லாம் தாயுமானவன்
பெண்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவன் ..உழவுக்கு நன்பனானவன் இலவச மின்சாரம் தந்து உழவனை உயர்தி வாழ்வை பசுமையாக்கியவன் . மஞ்சள் துண்டுகாரன் மக்களுக்கு சொந்தக்காரன் .நெருக்கடிகளை கண்டவன் நெருக்கடிக்கே தமிழால் நெருக்கடி கொடுத்தவன் .கடலில் போட்டால் கட்டுமரமாவேன் என்றவன்
பூங்காற்றை தழுவிய வன்புயல் காற்றால் புறமுதுகு காட்டி ஓடாத வன். சழன்றடிக்கும் சுனாமியை சுழன்று நின்று எதிர்த்தவன் ..தி .மு .க என்ற மூன்றெழுத்தை திசை எங்கும் விதைத்தவன் .முரசொலியை சுமந்தவன் .திராவிட கொள்கையை எட்டு திக்கும் முரசொலித்தவன் .
கழகம் எனும் ஆலமரத்தை எளியோருக்கு நிழல் கொடுக்க வளர்ந்தவன் ..,.....கல்யாணமா போராட்டமா என்றபோது போராட்டம் கண்டவன் .வள்ளுவருக்கு சிலை கண்டவன் ..,..தமிழன்னைக்கு தமிழால் முடிசூட்டியவன் .முடிவில்லா புகழுக்கு சொந்தமானவன் .100 ஆண்டு அல்ல 1000 ஆண்டுகள் கடந்தாலும்
உன் புகழ் என்றும் மறையாது ஓய்வில்லா சூரியனே ஓங்குக உன் புகழ் ❤❤🙏🙏