யாரை போய் கலைஞர்
என்றழைப்போம்
யார் வருவார் உடன் பிறப்பே
என்றழைப்பதற்கு
காலத்தை வென்றவனே
காவியமாய் நின்றவனே
உன் கல்லறையில்
சிந்துகின்றோம்
கண்ணீரின் வெள்ளமே
தமிழ் தாயின் தலைமகனே
நூற்றாண்டு விழா .... காணும் நாயகன் ..,..எம் தமிழின் காவலன் .....
கோயில் கூடாதென்று சொல்லாதீர் .அது கொடியவரின் கூடாரமாக கூடாது என்றவன் . தமிழை பராசக்தி மூலமாக பட்டி தொட்டி எங்கும் விதைத்தவன் .வண்ண தொலைகாட்சி தந்த பகலவன் பெரியாரின் சீடன் ஆனவன் அண்ணாவின் தம்பி ஆனவன்.மண்டல் கமிசனுக்கு ஆதரவு தந்தவன் .. அதன் மூலம் ஏழை எளியோருக்கு எல்லாம் தாயுமானவன்
பெண்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவன் ..உழவுக்கு நன்பனானவன் இலவச மின்சாரம் தந்து உழவனை உயர்தி வாழ்வை பசுமையாக்கியவன் . மஞ்சள் துண்டுகாரன் மக்களுக்கு சொந்தக்காரன் .நெருக்கடிகளை கண்டவன் நெருக்கடிக்கே தமிழால் நெருக்கடி கொடுத்தவன் .கடலில் போட்டால் கட்டுமரமாவேன் என்றவன்