தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், கலைஞரின் அரசியல் பங்களிப்பு, தொலைநோக்குப் பார்வை பற்றி நமது ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார் எழுத்தாளரும் திராவிட இயக்க செயற்பாட்டாளருமான டான் அசோக்.
டான் அசோக் பேசுகையில், "60களில்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் உத்தர பிரதேசமும், தமிழ்நாடும் ஒன்றுதான். எல்லா மாநிலங்களும் ஒன்றுதான். இந்த 60 வருடங்களில் எப்படி மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு வித்தியாசப்படுகிறது? யார் மூலம் இந்த வளர்ச்சி நடந்திருக்கிறது? எதனால் பாஜகவால் மதத்தை அரசியல்
பொருளாக்கி வியாபாரம் செய்து வாக்குகளை பெற முடியவில்லை என்பதையெல்லாம் இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
கலைஞரின் பங்களிப்பு:
இந்தியாவிற்கு கலைஞரின் பங்களிப்பு மிக அதிகம். மண்டல் கமிஷனில் கலைஞரின் பங்களிப்பு எவ்வளவு என்பதை வி.பி.சிங்கே பல மேடைகளில் பேசியுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டை இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் அனுபவிக்கிறது. உ.பியில் இருக்கும் ஒரு பிற்படுத்தப்பட்ட நபரும் கலைஞரால் பயன்பெற்றுள்ளார்.
நரேந்திர மோடியும் கலைஞரால் பயன் பெற்றிருக்கிறார். முதல்வராக இருந்தபோது மோடி தேசியக் கொடி ஏற்றுவதற்கான உரிமையைப்
பெற்றுக்கொடுத்தவர் கலைஞர். கலைஞரின் எல்லா பங்களிப்பையும் மறக்கடிப்பதற்காக அவர் மீது அவதூறுகளை அள்ளி வீசினர். இட ஒதுக்கீட்டால் தாங்கள் பாதிக்கப்படுவதாக கருதும் சொற்ப எண்ணிக்கையிலான பிரிவினர் வன்மம் கொண்டு கலைஞரைத் தூற்றினர்.
அவதூறுகள் :
திருட்டு ரயிலில் மஞ்சப்பையுடன் வந்தார்,
விஞ்ஞான ஊழல் செய்தார், ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பம் என்றெல்லாம் இஷ்டத்திற்கு அடித்து விட்டனர். எல்லாமே பொய்கள். கலைஞர் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வசனகர்த்தாவாக பெரிய சம்பளத்திற்கு வேலை பார்த்தார். அப்புறம் தான் சென்னை வந்தார். சென்னை வரும்போதே பிரபலமான வசனகர்த்தாவாக
இருந்தார். முதல் முறை எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கோபாலபுரத்தில் வீடு வாங்கிவிட்டார்.
ஊடகங்களும் கலைஞரின் பங்களிப்புகளை இருட்டடிப்பு செய்யும் வேலைகளில் ஈடுபட்டது. கலைஞரின் மறைவின்போது தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ஊடகங்களும் பாவமன்னிப்பு கேட்டன. அவரது திட்டங்கள், அரசியல் செயல்பாடுகள்
எடுத்துச் சொல்லப்பட்டன. கலைஞரால் பலன் பெற்றவர்கள், இந்த திட்டங்களை எல்லாம் இவர்தான் செய்தாரா என உணர்ந்து கொண்டனர். இலவசமாக கல்வி கற்றதற்கு, நலத்திட்ட உதவிகளைப் பெற்றதற்கு பின்னால் இருந்த கலைஞரை உணர்ந்து கொண்டனர்.
நாட்டிற்கே முன்னோடி :
கலைஞர் மிகுந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட
தலைவர். ஒரு கையெழுத்து போடுகிறார் என்றால் அந்த திட்டம் 20 - 30 வருடங்களுக்குப் பின்னால் எப்படி பயனளிக்கும் என யோசித்துச் செய்யக்கூடியவர். 1970களில் பாடநூல் கழகத்தை உருவாக்கி, அதன் முதல் தலைவராக இருந்தவர் கலைஞர். அப்போது இந்தியாவிலேயே முதன்முறையாக கம்ப்யூட்டர் பற்றிய புத்தகம்
வந்தது.
1980களில் செமிகண்டக்டர் பற்றிய புத்தகம் வந்தது. இன்று தமிழ்நாடு, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னிற்கிறது என்றால், 1996-2001 காலகட்டத்தில் ஏற்பட்ட ஐ.டி புரட்சி. தகவல் தொழில்நுட்பக் கொள்கையை இந்தியாவிலேயே முதன்முதலாக வகுத்தவர் கலைஞர். இதுபோல, எவ்வளவோ வழிகளில்
முன்மாதிரியாகத் திகழ்பவர் கலைஞர்.
இப்படி ஒரு தலைவர் :
அரசியலில் தோற்றாலும், ஜெயித்தாலும், வெற்றி தோல்வியை சரிசமமாகக் கருதியவர் கலைஞர். எம்ஜிஆர் இருக்கும்போது திமுக ஆட்சிக்கு வரவே முடியவில்லை. ஆனால் அரசியலில் இருந்துகொண்டே இருந்தார். ஜெயித்தால் கோட்டையில் இருந்து ஆட்சி
நடத்துவார், தோற்றால் அறிவாலயத்தில் இருந்து ஆட்சி நடத்துவார்.
கலைஞரின் அறிக்கைகள் எதிர்க்கட்சியின் அரசாணை. எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோதெல்லாம் ஆளுங்கட்சிக்கு அழுத்தத்தை கொடுத்துக்கொண்டே இருந்தார். இவர் போன்ற ஒரு அரசியல் தலைவர் வேறெங்கும் இருந்தாரா என்றால் இல்லவே இல்லை." எனத்
அந்தப் பெரியவருக்கு வயதாகிறதே தவிர அறிவு சிட்டிகை அளவுதான். இன்னமும் கலர்கலராக உடை உடுத்துவதிலும் "தீம்" அடிப்படையில் விழாக்கள் கொண்டாடுவதிலும் ஆர்வமுடையவர். ஏதாவது ஃபங்சன் என்றால் காணாததைக் கண்டது போல் குதிப்பார். ஒருநாள் டிவியில் சார்லஸ் பட்டாபிஷேகத்தைப்
பார்த்துவிட்டார். "எனக்கும் அதே மாதிரி பண்ணனும்" என அழ ஆரம்பிக்க, "சூத்திரன் என்பதால் மராத்திய வீர சிவாஜிக்கே பட்டாபிஷேகம் பண்ணாத நம்மூர் பார்ப்பனர்கள் உனக்கெல்லாம் பட்டாபிஷேகம் பண்ண மாட்டார்கள். பேசாம கிட," எனச் சொல்லி இருக்கிறார்கள். பெரியவர் கைகாலை உதறி பிடிவாதம் பிடிக்க,
அப்படியென்றால் தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாத சாமியார்களைக் கூப்பிடலாமே என எவனோ ஐடியா கொடுக்க, கூடவே செங்கோலும் நினைவுக்குவர சாமியார்களிடம் அதையும் கொண்டு வர சொல்லிவிட்டார்கள். பட்டாபிஷேகத்தின்போது சார்லஸும் கையில் ஒரு குச்சி வைத்திருந்தது நினைவுக்கு வர, பெரியவருக்கு ஒரே குஷி.
வீக்கெண்ட் தெரியுமா?
ஐந்து நாள் ஆட்டம்
இரண்டு நாள் கூத்து;
வீக்கெண்டே இல்லாத
கூட்டம் ஒன்று உள்ளது;
ஹவுஸ் வைஃப் என்பார்கள்;
ஹோம் மேக்கர்கள் என்பார்கள்;
மகாலட்சுமிகள் என்றுகூட சொல்வதுண்டு;
வீக்கெண்ட்
அவர்களுக்கும் உண்டு;
காலை
கறிக்குழம்பும் இட்லியும்;
மதியம் சிக்கன்;
இரவில் சப்பாத்தியோ
தோசையோ;
ஞாயிறு விடுமுறை
என்பதையெல்லாம் அவர்கள்
கதையில் படித்திருக்கிறார்கள்;
சினிமாவில் பார்த்திருக்கிறார்கள்;
அவர்களுக்கோ
ஞாயிறு என்றால் ஓவர்டைம்;
ஆரியபவன் சாம்பாரில் இருந்து
அம்மா மெஸ் மீன் குழம்புவரை
அச்சு அசலாய் வைப்பார்கள்;
நீங்கள் கேடிவியில்
சுறா
பார்த்துக்கொண்டிருக்கும்போது
அவர்கள் மீன் வறுத்துக்கொண்டிருப்பார்கள்;
நீங்கள் தீபாவளிக்கு
சாலமன் பாப்பையாவை ரசித்துக் கொண்டிருக்கும்போது
அவர்கள் கறி வறுவல்
கருகாமல் காத்துக்
கொண்டிருப்பார்கள்;
B.A, B.Sc, M.A, M.Sc, M.Phil
படித்திருந்தாலும்
அவர்கள் இழியாட்கள்;
சாவைச் சுவைப்பவர்கள்!
அவர்களின் புரோக்கர்கள்
தெரு ஓரத்தில் நிற்பார்கள்.
சிலநேரம் அவர்களேகூட
நிற்பார்கள்;
போரின் ஆரம்பத்தில்
நம்மை எதிர்ப்பார்கள்;
போரின் நடுவே,
நாம் சரணடைய
அவதூறு வீசுவார்கள்;
பணியவே மாட்டோம்
எனத் தெரிந்தவுடன்
"வர்ர்றியா?" என
ஃபோட்டோ போட்டு
ஐம்பது லைக் அதிகமாகத் தேற்றலாம்தான்;
"எனக்கும்
வயிறென்பது இல்லையா?
வாயென்பது இல்லையா?
பிள்ளைகுட்டி இல்லையா?
ஆசை இருக்காதா?"
என இரண்டு
தலையாட்டி பொம்மைகளை
உட்கார வைத்து
பாடம் எடுக்கலாம்தான்!
ஆனால் ஏதோ ஒரு
ஆடம்பரப் பின்னிரவில்
ஆடித்தீர்த்து அயர்ந்த நேரத்தில்,
17-19ஆம் நூற்றாண்டு வரை 6 லட்சம் ஆப்ரிக்க, ஆசிய மக்களை அடிமைகளாக வர்த்தகம் செய்தது நெதர்லாந்து. அதற்காக நெதர்லாந்து பிரதமர் இன்று பொது மன்னிப்பு கேட்டிருக்கிறார். அடிமைத்தனம் என்பது மனிதகுலத்திற்கு எதிரான பெருங்குற்றம் என்றும் பேசியுள்ளார். நிற்க.
உலகமயமாக்கல் நடந்து, மனித
உரிமை பற்றியெல்லாம் பேச ஆரம்பித்து ஒரு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் ல், பொறுப்பிலுள்ள ஒரே ஒரு பார்ப்பனராவது சாதியும், வர்ணாசிரம தர்மமும் மனிதனுக்கு எதிரானது என்றோ, தங்கள் முன்னோர்கள் செய்த/செய்யும் குற்றத்துக்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றோ பேசியிருப்பார்களா? மாறாக, புதுப்புது
வழிகளில் அல்லவா சாதியத்தைப் புகுத்துகிறார்கள். செய்யும் எல்லாவற்றையும் நியாயப்படுத்துகிறார்கள், புனிதப்படுத்துகிறார்கள். இட ஒதுக்கீடு தவறு என்பான். ஆனால் EWS எனும் பெயரில் திருடித் தின்பான். மருத்துவக்கல்லூரிகளில் சேர சமஸ்கிருதம் தேவையில்லை என சட்டம் போட்டது நீதிக்கட்சி, இதோ
வரும்போதெல்லாம் ஹார்லிக்ஸ் பிஸ்கட்
வாங்கி வரும் சித்தப்பா
இப்போதெல்லாம் வருவதில்லை;
வயதாகிவிட்டது அவருக்கு.
என் அப்பாவும் அவரும் போல
நாங்களும் அவர் பிள்ளைகளும் இல்லை;
அவர் எங்கிருக்கிறார்
என்றே தெரியவில்லை;
மதுரை வரும்போதெல்லாம்
உயர்ரக கேக்குகளை வாங்கிவரும்
என் திருச்சி மாமாவுக்கு
பக்கவாதம்;
நகர்வதே இல்லை;
"வர்ற வழில சூடா பஜ்ஜி போட்டாங்க,
அதான் வாங்கிட்டு வந்தேன்," என
பஜ்ஜி பொட்டலம் நீட்டும் பெரியப்பாவுக்கு காலில்
இரண்டு விரல்களை எடுத்துவிட்டார்கள்;
அப்பாவின் உயிர் நண்பரான
அவரது மகன்கள்
என்னைப் பார்த்தால் ஒரு
புன்சிரிப்போடு
நிறுத்திக்கொள்வார்கள்;
எனக்கும் உயிர் நண்பர்கள் உண்டு;
எனக்கு மகள் பிறந்தபோது
ஹார்ட்டின் ஈமோஜிக்கள் அனுப்பினார்கள்;
அவள் பள்ளி போனபோது
"அவ்ளோ வளந்துருட்டாளா மச்சி!!!"
என வாட்ஸப்பில் மகிழ்ந்தார்கள்!
இன்னொரு நண்பன்
கொரியரில் ஒரு ஜம்ப்சூட்
அனுப்பினான்;
ஒரு சேவை வழங்கும் இடத்திலோ, கடையிலோ ஏசி, எஸ்கலேட்டர், லிஃப்ட் என ஏதேதோ வசதிகள் இருக்கலாம். சில கடைகளில் கூல்ட்ரிங்க்ஸ் கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு பொம்மை கொடுக்கும் கடை கூட உண்டு. ஆனால் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வசதிகளுக்கெல்லாம் சேர்த்து நம்மிடம்
வசூலித்துவிடுவார்கள். உதாரணத்திற்கு, தனியார் மருத்துவமனையில் லாபியில் கூட ஏசி இருக்கும், பல கூடுதல் வசதிகள் இருக்கும். அதற்கேற்ப கட்டணமும் இருக்கும். அரசு மருத்துவமனையில் என்னவெல்லாம் மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவையோ அது மட்டுமே இருக்கும். அதனால்தான் அரசு மருத்துவமனை இலவசமாக
மருத்துவம் பார்க்கிறது. இந்த வித்தியாசம் கடைகள், வங்கிகள் என எல்லாவற்றுக்கும் பொருந்தும். நிற்க.
தமிழக அரசு பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்குகிறது. இந்தியாவிலேயே இது எங்கும் இல்லை. பெண்கள் இந்தக் காசைச் சேமிக்கிறார்கள், குடும்பச் செலவுக்கோ வேறு விஷயங்களுக்கோ