Ashok R Profile picture
Dialog/Screenwriter/Author/Columnist/Speaker. Dad. Thinker. Humane Human! Bohemian! Pro People!
Vasan MSV Profile picture 1 subscribed
Aug 31, 2023 5 tweets 1 min read
பார்ப்பனக் கொழுப்பு, பார்ப்பனத் திமிர். இதற்கு உதாரணம்தான் தினமலத்தின் இன்றைய தலைப்பு. குழந்தைகள், மாணவர்கள் மீதே இவ்வளவு வன்மமும் எரிச்சலும் இருந்தால் நம் இனத்தின் இளைஞர்கள் மீதும் பெரியவர்கள் மீதும் இவர்களுக்கு எவ்வளவு இருக்கும்? BC/MBC/SC/STயின் கல்வி என்றாலே ஆரியப் பொறுக்கிகளுக்கு 9 ஓட்டைகளிலும் நெருப்பு வைத்ததைப் போல் எரியும். அந்த நெருப்பைதான் நீதிக்கட்சி தொடங்கி இன்று திமுகவரை 100 ஆண்டுகளாக திராவிட இயக்கம் செய்துகொண்டிருக்கிறது.

இவ்வளவு இனப்பகையை வைத்துக்கொண்டு "இந்துவாய் ஒன்றிணைவோம் வா" என நம்மை அழைப்பது எதற்கு? நம் எல்லோரையும் நம்
Jun 3, 2023 13 tweets 2 min read
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், கலைஞரின் அரசியல் பங்களிப்பு, தொலைநோக்குப் பார்வை பற்றி நமது ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார் எழுத்தாளரும் திராவிட இயக்க செயற்பாட்டாளருமான டான் அசோக்.

டான் அசோக் பேசுகையில், "60களில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் உத்தர பிரதேசமும், தமிழ்நாடும் ஒன்றுதான். எல்லா மாநிலங்களும் ஒன்றுதான். இந்த 60 வருடங்களில் எப்படி மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு வித்தியாசப்படுகிறது? யார் மூலம் இந்த வளர்ச்சி நடந்திருக்கிறது? எதனால் பாஜகவால் மதத்தை அரசியல்
May 28, 2023 7 tweets 1 min read
அந்தப் பெரியவருக்கு வயதாகிறதே தவிர அறிவு சிட்டிகை அளவுதான். இன்னமும் கலர்கலராக உடை உடுத்துவதிலும் "தீம்" அடிப்படையில் விழாக்கள் கொண்டாடுவதிலும் ஆர்வமுடையவர். ஏதாவது ஃபங்சன் என்றால் காணாததைக் கண்டது போல் குதிப்பார். ஒருநாள் டிவியில் சார்லஸ் பட்டாபிஷேகத்தைப் பார்த்துவிட்டார். "எனக்கும் அதே மாதிரி பண்ணனும்" என அழ ஆரம்பிக்க, "சூத்திரன் என்பதால் மராத்திய வீர சிவாஜிக்கே பட்டாபிஷேகம் பண்ணாத நம்மூர் பார்ப்பனர்கள் உனக்கெல்லாம் பட்டாபிஷேகம் பண்ண மாட்டார்கள். பேசாம கிட," எனச் சொல்லி இருக்கிறார்கள். பெரியவர் கைகாலை உதறி பிடிவாதம் பிடிக்க,
Mar 20, 2023 4 tweets 1 min read
வீக்கெண்ட் தெரியுமா?
ஐந்து நாள் ஆட்டம்
இரண்டு நாள் கூத்து;
வீக்கெண்டே இல்லாத
கூட்டம் ஒன்று உள்ளது;
ஹவுஸ் வைஃப் என்பார்கள்;
ஹோம் மேக்கர்கள் என்பார்கள்;
மகாலட்சுமிகள் என்றுகூட சொல்வதுண்டு;
வீக்கெண்ட்
அவர்களுக்கும் உண்டு;
காலை
கறிக்குழம்பும் இட்லியும்;
மதியம் சிக்கன்; இரவில் சப்பாத்தியோ
தோசையோ;
ஞாயிறு விடுமுறை
என்பதையெல்லாம் அவர்கள்
கதையில் படித்திருக்கிறார்கள்;
சினிமாவில் பார்த்திருக்கிறார்கள்;
அவர்களுக்கோ
ஞாயிறு என்றால் ஓவர்டைம்;
ஆரியபவன் சாம்பாரில் இருந்து
அம்மா மெஸ் மீன் குழம்புவரை
அச்சு அசலாய் வைப்பார்கள்;
நீங்கள் கேடிவியில்
சுறா
Mar 19, 2023 6 tweets 1 min read
அவர்கள் இழியாட்கள்;
சாவைச் சுவைப்பவர்கள்!
அவர்களின் புரோக்கர்கள்
தெரு ஓரத்தில் நிற்பார்கள்.
சிலநேரம் அவர்களேகூட
நிற்பார்கள்;
போரின் ஆரம்பத்தில்
நம்மை எதிர்ப்பார்கள்;
போரின் நடுவே,
நாம் சரணடைய
அவதூறு வீசுவார்கள்;
பணியவே மாட்டோம்
எனத் தெரிந்தவுடன்
"வர்ர்றியா?" என ஆசைகாட்டி அழைப்பார்கள்!
போகலாம்தான்!
EMIகள் மூச்சு முட்டும்போது
போகலாம்தான்;
கடன்கள் கழுத்தை நெறிக்கும்போது
போகலாம்தான்;
ஆண்டிராய்டில் இருந்து
ஆப்பிளுக்கு மாறலாம்தான்!
டாஸ்மாக் சரக்கு
வேகமாய்க் கொல்லும்போது,
மெதுவாய்க் கொல்லும்
வெளிநாட்டுச் சரக்கைப்
பருகலாம்தான்!
ஃபாரீன் டூர்
Dec 20, 2022 9 tweets 1 min read
17-19ஆம் நூற்றாண்டு வரை 6 லட்சம் ஆப்ரிக்க, ஆசிய மக்களை அடிமைகளாக வர்த்தகம் செய்தது நெதர்லாந்து. அதற்காக நெதர்லாந்து பிரதமர் இன்று பொது மன்னிப்பு கேட்டிருக்கிறார். அடிமைத்தனம் என்பது மனிதகுலத்திற்கு எதிரான பெருங்குற்றம் என்றும் பேசியுள்ளார். நிற்க.

உலகமயமாக்கல் நடந்து, மனித உரிமை பற்றியெல்லாம் பேச ஆரம்பித்து ஒரு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் ல், பொறுப்பிலுள்ள ஒரே ஒரு பார்ப்பனராவது சாதியும், வர்ணாசிரம தர்மமும் மனிதனுக்கு எதிரானது என்றோ, தங்கள் முன்னோர்கள் செய்த/செய்யும் குற்றத்துக்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றோ பேசியிருப்பார்களா? மாறாக, புதுப்புது
Sep 28, 2022 5 tweets 1 min read
வரும்போதெல்லாம் ஹார்லிக்ஸ் பிஸ்கட்
வாங்கி வரும் சித்தப்பா
இப்போதெல்லாம் வருவதில்லை;
வயதாகிவிட்டது அவருக்கு.
என் அப்பாவும் அவரும் போல
நாங்களும் அவர் பிள்ளைகளும் இல்லை;
அவர் எங்கிருக்கிறார்
என்றே தெரியவில்லை;

மதுரை வரும்போதெல்லாம்
உயர்ரக கேக்குகளை வாங்கிவரும் என் திருச்சி மாமாவுக்கு
பக்கவாதம்;
நகர்வதே இல்லை;

"வர்ற வழில சூடா பஜ்ஜி போட்டாங்க,
அதான் வாங்கிட்டு வந்தேன்," என
பஜ்ஜி பொட்டலம் நீட்டும் பெரியப்பாவுக்கு காலில்
இரண்டு விரல்களை எடுத்துவிட்டார்கள்;
அப்பாவின் உயிர் நண்பரான
அவரது மகன்கள்
என்னைப் பார்த்தால் ஒரு
புன்சிரிப்போடு
Aug 9, 2022 17 tweets 2 min read
ஒரு சேவை வழங்கும் இடத்திலோ, கடையிலோ ஏசி, எஸ்கலேட்டர், லிஃப்ட் என ஏதேதோ வசதிகள் இருக்கலாம். சில கடைகளில் கூல்ட்ரிங்க்ஸ் கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு பொம்மை கொடுக்கும் கடை கூட உண்டு. ஆனால் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வசதிகளுக்கெல்லாம் சேர்த்து நம்மிடம் வசூலித்துவிடுவார்கள். உதாரணத்திற்கு, தனியார் மருத்துவமனையில் லாபியில் கூட ஏசி இருக்கும், பல கூடுதல் வசதிகள் இருக்கும். அதற்கேற்ப கட்டணமும் இருக்கும். அரசு மருத்துவமனையில் என்னவெல்லாம் மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவையோ அது மட்டுமே இருக்கும். அதனால்தான் அரசு மருத்துவமனை இலவசமாக
Aug 5, 2022 12 tweets 2 min read
2G ஏலத்தின்போது 1,76,000 கோடி என தினமலர் பல பூஜ்ஜியங்களோடு எழுதியது. 1,76,000 கோடி ரூபாயை நீளவாக்கில் அடுக்கினால் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமர் வரை அடுக்கலாம் எனவும் எழுதியது. சமூகவலைதள புரோக்கர் ஒன்று "ஆண்டிமுத்து (ஆ.ராசாவின் தந்தை) மட்டும் இரவு ஆட்டத்திற்கு போயிருந்தால் இந்தியாவுக்கு 176000 கோடி நட்டம் ஏற்பட்டிருக்காது," என நாகரீகம் பொங்க எழுதினார். இவ்வளவு பெரிய ஊழலுக்கு நிஜமாகவே சாத்தியம் உண்டா? அதன் மூலம் என்ன? அது ஒரு மதிப்புதானே தவிர நிஜ பணம் அல்ல என்பதையெல்லாம் பற்றி யாரும் கவலைப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் "திமுகவை அடிக்க
Jul 17, 2022 10 tweets 1 min read
கள்ளக்குறிச்சியில் சம்பந்தப்பட்ட பள்ளி உரிமையாளர் ரவிகுமாரும், தனியார் பள்ளி கூட்டமைப்புத் தலைவர் நந்தகுமாரும் RSSகாரர்களாக இருப்பதும் ஏதேச்சையானதல்ல!

தமிழகத்தில் பல்வேறு காலகட்டங்களில் பல பள்ளிகளில் பிரச்சினை நடந்துள்ளது. ஆனால் அது கலவரம் ஆனதில்லை.
இந்த அதீத எதிர்வினை தன்னிச்சையாக நடந்ததில்லை என்றும் இந்தக் கலவரத்தை சாதாரண மக்கள் செய்ததாகவும் பார்க்க முடியவில்லை.

இதன் பின்னணியில் தமிழக அரசின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமே முழுக்க முழுக்க இருக்கிறது. அதனால்தான் 'கலவரம்' செய்வதற்கென்றே வாட்ஸப் க்ரூப்புகளை உருவாக்கி அதில்
Apr 13, 2022 9 tweets 1 min read
எங்களுக்கு தீவிரவாதிகளை அறிமுகப்படுத்தியது வல்லரசு படம்தான். (ரோஜா எல்லாம் பின்னர்தான் பார்த்தோம்.) வாசிம் என்றால் ஃபாஸ்ட் பவுலர் வாசிம் அக்ரம் என்ற நினைவு மாறி, வாசிம் என்றால் தீவிரவாதி வாசிம்கான் என மனதில் பதிந்தது. அதே பெயர் பல படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி எண்ணற்ற இஸ்லாமியப் பெயர்கள் தீவிரவாதிகளாகவே பதியவைக்கப்பட்டன.

குண்டு வைக்கிற தீவிரவாதிகள் நமக்கு அறிமுகம் ஆனதைப்போல, அவர்கள் நம் ஊருக்குள் வரக் காரணமாக இருந்த மசூதி இடிப்புத் தீவிரவாதிகள் நமக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்களா? வாசிம்கான் என்றால் தீவிரவாதி என நினைவுக்கு வருவதைப் போல எந்த
Mar 19, 2022 4 tweets 1 min read
தமிழக அரசின் பட்ஜெட்டை அண்ணாமலை விமர்சித்திருக்கிறார். அதில் இரண்டு பாயிண்ட்டுகள் என்னை ஈர்த்தன.

பாயிண்ட் 1: மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது.

பாயிண்ட் 3. தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது. மத்திய அரசின் திட்டங்கள் எல்லாம் தொலைநோக்கு இல்லாத பகல் கனவு என இதைவிட எவனாவது ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க முடியுமா? இவரை ஆட்டுக்குட்டி என அழைக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஆட்டுக்குட்டிகள் கூட புத்திசாலித்தனமாக ஏதாவது செய்து நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர் அப்படி ஏதாவது
Jan 10, 2022 9 tweets 2 min read
ஒரு பெரிய குடும்பம். நிறைய அறைகள் இருக்கும் வீட்டில் வசிக்கிறார்கள். அதில் நிறைய சம்பாரிப்பது தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம் பேசுகிறவர்கள் தான். அவர்கள் கொடுக்கும் காசில்தான் பிற அறைகளில் உள்ள இந்தி பேசுகிற குடும்பங்களின் பிழைப்பு ஓடுகிறது. இப்படி காசைப் பிரித்துக்கொடுக்கும் வேலையை ஹாலில் வசிக்கும் ஒரு இந்திக் குடும்பம் செய்கிறது. நீங்கள் ஊதாரிகள், நாங்கள் உழைப்பாளிகள், எங்கள் காசில் தின்றுவிட்டுப் போங்கள் என விட்டுவிடலாம். ஆனால், திமிரெடுத்த இந்தி ஊதாரிகள் என்ன செய்கிறார்கள் என்றால், பக்கத்து தெருக்களில் எல்லாம் அவர்கள் மொழியை வளர்ப்பதற்காக, பெருமை
Dec 7, 2021 5 tweets 1 min read
"எப்படி காசு வருகிறது எப்படி பிழைப்பை ஓட்டுகிறீர்கள்?" என சீமானிடமும் கெளதமனிடமும் பேட்டியில் கேட்கிறார்கள். சீமான், "வாடகை கட்டணும் ஒரு 1 லட்சம் கொடுத்துவுடுனு ஒவ்வொருத்தருக்கா ஆள் அனுப்பிவிடுவேன். கொடுத்து விடுவாங்க," என்றார். சமீபத்தில் கூட தனக்கு பங்களா இல்லாதது பெரிய வரலாற்றுத் துயரம் என வருத்தப்பட்டார். கெளதமனும் இதே மாதிரிதான் சொல்கிறார். "வாடகை ஒருத்தர் கொடுத்துருவாரு. மளிகை சாமான் ஒருத்தர் கொண்டு வந்து போட்டுருவாரு..." என்று. நல்ல வாழ்க்கை முறை.

ரஜினிமுருகன் படத்தில் ஏழரை மூக்கன் என ஒரு கேரக்டர் வரும். சமுத்திரக்கனி நடித்திருப்பார்.
Nov 26, 2021 11 tweets 2 min read
இந்த வயதிலும் தன்னால் முடிந்தவரை எனர்ஜியாக நடித்துக் கொடுத்திருக்கும் ரஜினியைப் பார்த்தால் நிஜமாகவே பாவமாக இருக்கிறது. அதனால் அண்ணாத்த படத்தில் எல்லோரும் கவனிக்க வேண்டிய இரண்டு பாசிட்டிவ்வான விஷயங்களை மட்டும் சொல்லிவிடுகிறேன்.

1) பிரகாஷ்ராஜை அடிக்கும் ரஜினி திடீரென நடுநடுவில் நிறுத்துவார். காரணம் பிரகாஷ்ராஜின் குழந்தை தன் அப்பா அடி வாங்குவதைப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக. நிற்க.

ஒருமுறை நானும் என் மகளும் காரில் பயணித்துக்கொண்டிருந்த போது ஒருவன் திடீரென உரசிவிட்டான். உரசியதும் அல்லாமல் போலீஸிடம் சொல்கிறேன் என கீழே இறங்கி கண்டபடி கத்தினான்.
Jun 17, 2021 7 tweets 1 min read
அதில் இருக்கும், "அணு உலையை ஆதரித்தேன்"மற்றும் "ஸ்டெர்லைட்டை ஆதரித்தேன்" என்கிற இரண்டு பெரும்பொய்கள் ஒரு சோற்றுப் பதம். அணு உலையை கடுமையாக எதிர்த்துக் கடுமையாகக் கட்டுரை எழுதியவன் நான். ஸ்டெர்லைட் கொலைகளைப் பற்றி ஈழத்தமிழர்கள் நடத்தும் ஈழமுரசில் நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறேன் ஆனாலும் என்மேல் எண்ணற்ற அவதூறுகள் அந்த அறிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. அதெல்லாம் போக பெரும் நகைச்சுவையாக, 2016ல் மநகூ அமைத்த வைகோவை நான் திட்டியெதையெல்லாம் ஆதாரமாகக் கொடுக்கிறார்கள். 2016ல் வைகோ மட்டும் திமுகவை கொஞ்சிக் கொண்டிருந்தாரா என்ன?
Apr 4, 2020 7 tweets 1 min read
கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். இந்திய மக்கள் தெருக்களில் பைத்தியங்களை போல எவர்சில்வர் தட்டுகளை அடித்துக்கொண்டு, கைகளைத் தட்டிக்கொண்டு ஓடியபோதும் சரி, நாளை விளக்கேற்றி மேலும் பல கிறுக்குத்தனங்களை அரங்கேற்றும்போதும் சரி, மோடி அதை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பார். 2. அவர் ஈகோ போதை உச்சக்கட்டத்தில் திருப்தியடைந்து கொண்டிருக்கும். "நான் என்ன சொன்னாலும் செய்யிதுங்க பாரு. அறிவுகெட்ட குரங்குகள் மாதிரி," என தன் அருகிலிருப்பவரிடம் சொல்லி சிரித்துக்கொண்டிருப்பார். அடுத்து இதுங்களுக்கு என்ன உத்தரவு போடலாம் என யோசிப்பார்.