ஸ்ரீபாதராய அல்லது லக்ஷ்மிநாராயண தீர்த்தர் அல்லது ஸ்ரீபதராஜா (1422-1480) ஒரு த்வைத ஆசார்யர், மத்வாச்சார்யா மடத்தின் மடாதிபதி ஆவார்.
நரஹரி தீர்த்தருடன் இணைந்து ஹரிதாச இயக்கத்தை நிறுவியவர். கிருஷ்ணரைப் புகழ்ந்து எழுதப்பட்ட அவரது பாடல்கள் மற்றும் கீர்த்தனைகள் மற்றும் த்வைத கொள்கைகளின் கருத்துக்கள் உள்ளன. அவர் ஹரியைப் புகழ்ந்து பல கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். சாளுவ நரசிம்ம தேவராயரின் குருவாக இருந்த அவர், இளம்
வியாசதீர்த்தருக்கு வழிகாட்டினார். ஜெயதீர்த்தரின் நியாய சுதாவுக்கு வாக்வஜ்ரா என்ற வர்ணனையையும் எழுதியுள்ளார். #தாஸ_ஸாகியத்தின்_பிதாமகர் என்ற சொல்லுக்கு சொந்தக்காரரான இவர் கர்நாடக மாநிலத்தில் கன்வா நதிக்கரையில் அப்பூருக்கு
அருகில் உள்ள சென்னப்பட்னாவைச் சேர்ந்த சேஷகிரிக்கும்
கிரியம்மாவிற்கு 1404ம் ஆண்டு மகவாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் லஷ்மி நாராயணா. சிறு வயதில் நண்பர்களுடன் லஷ்மி நாராயணா விளையாடிக் கொண்டிருக்கையில், அங்கே வந்த ஸ்வர்ணவர்ண தீர்த்தர் (ஸ்ரீ பத்மநாப தீர்த்த சமஸ்தானத்தை சேர்ந்த எட்டாவது பீடாதிபதி பத்மநாப தீர்த்தர் என்பவர்
ஸ்ரீ மத்வரின் நேரடி சிஷ்யர்) அப்பூருக்கு (புருஷோத்தம தீர்த்தரை பார்ப்பதற்காக) எப்படி போக வேண்டும் என்று லஷ்மி நாராயணாவிடம் கேட்கவே அதற்கு “சூரியன் மறைய தொடங்கிவிட்டது, நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறோம், இதனால் அப்பூர் எவ்வளவு தூரம் என்று நீங்கள் ஊகிக்கலாம்” சிறுவன் சொன்ன பொருள்
நாங்கள் சூரியன் மறையும் போதும் விளையாடிக் கொண்டு இருப்பதால் அப்பூர் அருகிலேயே உள்ளது என்பதே. சிறுவனின் புத்திசாலித்தனத்தை பார்த்து வியந்த ஸ்வர்ணவர்ண தீர்த்தர், அப்போதே இந்த சிறுவன் தான் தனக்கு பிறகு பட்டத்திற்கு வர வேண்டும் என்று முடிவு செய்து விட்டார். ஸ்வர்ணவர்ண தீர்த்தரின்
தோற்றம் ப்ரம்ம தேஜசும், தங்க சாயலை கொண்டிருப்பார், அதனால் அப்பெயர் பெற்றார். ஸ்வர்ணவர்ண தீர்த்தர் தன் ஆசையை புருஷோத்தம தீர்த்தரிடம் கூறவே, அவரும் லஷ்மி நாராயணாவின் பெற்றோரை தான் சம்மதிக்க வைக்கிறேன் என்று கூறினார். ப்ரம்மண்ய தீர்த்தரும் (புருஷோத்தம தீர்த்தரின் சிஷ்யர்) லஷ்மி
நாராயணாவும் உறவினர் என்பதால் சேஷகிரியும் கிரியம்மாவும் தன் மகனை துறவறத்திற்கு அனுமதித்தனர். ஸ்வர்ணவர்ண தீர்த்தர் லஷ்மி நாராயணாவிற்கு “லஷ்மி நாராயணா யோகி” என்று பட்டம் இட்டார். அப்போது அவருக்கு வயது 16. தன் குருவான ஸ்வர்ணவர்ண தீர்த்தரிடம் வேதம், உபநிடதம், சாஸ்திரங்கள், மத்வ
சித்தாங்கள் கற்றுக் கொண்டு சிறந்து விளங்கினார். திக்விஜயங்கள் மேற்கொண்டு இறைவனை கண்டுகொண்டும், த்வைத கொள்கைகளை பரப்பியும், பல வாதிகளை வென்றார். லஷ்மி நாராயணா யோகி எப்போது ஸ்ரீ ஸ்ரீபாதராஜர் ஆனார் என்று கேள்வி எழலாம். ஸ்வர்ணவர்ண தீர்த்தர் பிருந்தாவன பிரவேசத்திற்கு பிறகு,
ஸ்ரீரங்கத்தில் இருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள முலுபாகலு என்ற இடத்தில் தன் வாழ்நாளை கழித்தார்
அப்போது இருந்த குருவான ஸ்ரீ விபூதீந்திர தீர்த்தரிடம், லஷ்மி நாராயணா யோகி வித்யா கற்றுக் கொண்டார். விபூதீந்திர தீர்த்தர் லஷ்மி நாராயணா யோகியுடன் உத்திராதி மடத்தின் பீடாதிபதியான ரகுநந்தன
தீர்த்தரை சந்தித்தனர். இந்த ரகுநந்தன தீர்த்தரே லஷ்மி நாராயணா யோகிக்கு ஸ்ரீ ஸ்ரீபாதராஜர் என்று பெயர் இட்டார். இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. ஒருமுறை லஷ்மி நாராயணா யோகி #ஸ்ரீசுதா க்ரந்தத்தை படித்துக்கொண்டிருந்த போது மிகவும் கடினமான சொற்களையும், பொருள்களையும் மிக எளிமையாக
விளக்கியதால் ஆச்சரியத்தோடு பார்த்தார் ஸ்ரீ ரகுநந்தன தீர்த்தர். அப்போது ஸ்ரீ ரகுநந்தன தீர்த்தர், நாங்கள் எல்லாம் வெறும் சன்யாசிகளே, நீயோ சன்யாசிகளுக்கே ராஜா #பாதராஜர் என்றார். அன்று முதல் ஸ்ரீ ஸ்ரீபாதராஜராக மாறினார். மற்றொரு காரணமாக கருதப்படுவது, லஷ்மி நாராயணா யோகி ஓர் இறந்த
சிறுவனை உயிர்த்து எழவைக்க, ரகுநந்தன தீர்த்தர் அதிசயத்தோடு பார்த்து ஸ்ரீ ஸ்ரீ பாதராஜர் என்று பெயர் இட்டார் என்றும் கூறப்படுகிறது. அந்த காலத்தில் விஜயநகர சாம்ராஜ்யம் பரந்து விரிந்து இருந்தது. முலுபாகலு என்ற ஊரும் விஜய நகர சாம்ராஜ்யத்தின் கீழே வந்தது. வியாஸராஜர் #ஸ்ரீபாதராஜராஷ்டகம
என்ற நூலில் சாளுவ நரஸிம்மனின் அரசவையில் ஸ்ரீ பாதராஜரின் செல்வாக்கை பற்றி எழுதியுள்ளார். ஸ்ரீ ஸ்ரீபாதராஜர் பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றில் பிரம்மகீதா, வேணுகீதா, கோபிகீதா, மத்வ நாமா புகழ் பெற்றது. அவர் பல பாட்டுகளையும் எழுதியுள்ளார். ஸ்ரீ ஸ்ரீபாதராஜர் துறவியாக இருந்தாலும்
ராஜாவாக வாழ்ந்தார். சுக ப்ராப்ததிற்கு சொந்தக்காரான இவர் துருவராஜனின் அவதாரமாக கலியுகத்தில் அவதரித்துள்ளார். ஸ்ரீ பத்மநாப மடம் என்று அழைக்கப் பட்ட குரு பரம்பரையில் வந்த இவரின் புகழ் உச்சி அடைந்ததால் ஸ்ரீபாதராஜர் மடம் என்று மாற்றப்பட்டது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் மன்னரான நரசிம்ம
பூபாலன் ஸ்ரீ ஸ்ரீபாதராஜரிடம் தன் அமைச்சரவையில் ராஜகுருவாக இருக்குமாறு கேட்டுக் கொள்ள, அதற்கு மறுப்பு தெரிவித்து, தன் சிஷ்யரான #வியாஸ_தீர்த்தரை அனுப்பினார். கிருஷ்ண தேவராயரின் அவையில் மன்னனை குகயோகம் என்ற மரண யோகத்தில் இருந்து காப்பற்றி ஒரு நாள் ஆட்சி செய்ததால் வியாஸ தீர்த்தர்
வியாஸ ராஜராக மாறினார். ஒரு முறை உடல் நலக்குறைவால் படுத்திருந்த ஸ்ரீ ஸ்ரீபாதராஜர், தன் சிஷ்யரான வியாஸராஜரை பூஜை செய்யுமாறு கூறினார். ஒரு ஸ்வாமி பெட்டி மட்டும் பல வருடமாக திறக்க முடியாமல் இருந்தது. அன்று பூஜை செய்த வியாஸராஜர் திறக்கவே, பெட்டியில் இருந்த அழகான வேணுகோபால ஸ்வாமி
விக்கிரகம் குழல் ஊதியபடி நடனமிட தொடங்கியது. வியாஸராஜர்
தாளம் போட்டு பாடவே, படுத்திருந்த ஸ்ரீ ஸ்ரீபாதராஜர் எழுந்து வந்து கோபாலனின் நடனத்தை மெய்சிலிர்த்துப் பார்த்தார். நடனமாடிய வேணுகோபால ஸ்வாமி அதற்கு பின் விக்கிரஹமாக மாறியது. அந்த விக்கிரஹத்தை வியாஸராஜரிடம் பரிசாக கொடுத்தார்
ஸ்ரீபாதராஜர். இன்றும் அந்த விக்கிரஹத்தை வியாஸராஜமடத்தில் காணலாம். ஸ்ரீபாதராஜர் வியாஸராஜருக்கு பல அதிசயத்தை கற்றுக்கொடுத்துள்ளார். அதனால் தன் குருவை பக்த மந்திரா என்று வியாஸராஜ அழைப்பார். ஸ்ரீபாதராஜரின் வாழ்க்கை நிகழ்வுகளை வியாஸராஜர் தன் சமஸ்கிருத நூலான #பஞ்சரத்னமாலாதுதியில் எழுதி
உள்ளார். விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசனுக்கு பிரம்மத்ய தோஷம் இருக்கவே அதை நிவர்த்தி செய்ய தன் குருவிடம் வேண்டினார் மன்னர். குருவும் யாக பூஜைகள் செய்து தோஷத்தை தீர்க்கவே, மன்னர் குருவை அரியணையில் அமரவைத்து கனகாபிஷேகம் செய்து கெளரவித்தார். குருவின் எதிரிகளுக்கு இதனால் ஒரே பொறாமை.
இந்த குரு, மன்னரை ஏமாற்றி விட்டார் எனவும், மன்னரின் தோஷம் நீங்கவில்லை என கதை கட்டினர். இதை அறிந்த குரு அவர்களை அழைத்து ஓர் வெள்ளைத்துணியை ஆளிவிதை எண்ணெய்யில் போடுமாறு கேட்டுக் கொண்டார். பின் எடுக்க சொல்லவே வெள்ளைத்துணி கருப்பாக இருந்தது. அந்த கருப்புத்துணியில் தான் ஜபித்த கமண்டல
நீரை தெளித்தவுடன், துணி முழுவதும் வெள்ளையாக மாறியது. குருவின் எதிரிகள் அவரின் மஹிமையை ஆச்சரியத்தோடு பார்த்தனர். தங்களின் தவற்றை உணர்ந்த எதிரிகள் குருவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். அவரே #ஸ்ரீஸ்ரீபாதராஜர் எதிரிகளையும், தூற்றுவோரையும் சிரித்தே மன்னித்து விடுவார். தன் வயதான
காலத்தில் கங்கா நதிக்கு போகமுடிய வில்லையே என்ற வருதத்தில் இருந்தார் ஸ்ரீபாதராஜர். அவரின் கனவில் தோன்றிய கங்கா தேவி மறுநாள் நரஸிம்ம தீர்த்தர் குளத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ள, மறுநாள் மேகங்கள் சூழ கங்கா தேவியின் அருள் மழை பொழிந்தது. அந்த அளவிற்கு சக்தி படைத்தவர் ஸ்ரீ ஸ்ரீபாதராஜர்
அந்த குளத்தில் குளித்தால் கங்கையில் குளித்ததற்கு சமம். 98 வயது வரை வாழ்ந்த மஹான் ஜேஷ்ட, சுத்த சதுர்தசி அன்று முலுபாகலுவில் உள்ள நரஸிம்ம தீர்த்தருக்கு அருகில் 1502ல் பிருந்தாவனவாசியானார். மூல பிருந்தாவனம் சென்னையில் இருந்து 240 கிமீ.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#குறுங்காலூஸ்வரர்_கோவில் கோயம்பேடு (கோ - பசு, அயம் - இரும்பு வேலி, பேடு - காப்பிடம், வால்மீகி காலத்தில் பசுகள் சம்ரக்ஷணை செய்யும் இடமாக இருந்தது)
கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே (நாதெள்ளா திருமண மண்டபம் எதிரே) மெயின் ரோட்டில் இருந்து பிரியும் தெருவுக்குள் நுழைந்தால், கூப்பிடு
தூரத்தில் இருக்கிறது கோயில். இடைக்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த பெரிய குளத்தை உள்ளடக்கிய கோயில். சிறிய ஆவுடையாரின் மேல் சுமார் 4 அங்குல உயரம் கொண்ட பாணம். லவனும் குசனுக்கு ஸ்தாபித்து வணங்கி வழிபட்ட லிங்கத் திருமேனி. அறம் வளர்த்த நாயகி பாசம், அங்குசம், வரதம், அபயம் தாங்கிய 4
கைகளுடன், இடது பாதத்தை முன் எடுத்து வைத்த நிலையில் வீற்றிருக்கிறார். சீதையை விட்டுவிட்டு வருமாறு இராமர் ஆணையிட இலட்சுமணர் சீதையை அழைத்துக் கொண்டு இங்கு வந்து விட்டு விட்டு சென்றுவிட்டார். தனிமையில் விடப்பட்ட சீதையை திருவான்மியூர் வனப் பகுதியில் ஆசிரமம் அமைத்து தங்கி இருந்த
#மகாபெரியவா அருள்வாக்கு
நம் அப்பாவையும் அம்மாவையும் ஸ்வாமியாக நினைக்க வேண்டும். இதையே மாற்றி ஸ்வாமியையும் அப்பா அம்மா என்ற உருவங்களில் நினைக்க வேண்டும். ‘கொன்றை வேந்தன்’ என்ற நீதி நூலில் ஒளவைப் பாட்டி முதலில் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்கிறாள். இது தாய் தந்தையரைத்
தெய்வமாக நினைப்பது. இதை அடுத்தே ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்கிறாள். ‘ஆலயம் தொழுவது’ என்றால் ஆலயத்திலுள்ள தெய்வத்தைத் தொழுவதேயாகும். அப்படித் தொழும்போது அத்தெய்வத்தையே தாய் தந்தையர் என அன்புடன் எண்ண வேண்டும். ஸ்வாமி எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்றால் அவருக்கு நம்மைப்போல்
உருவம் இருக்க முடியாது. ஆனால் உருவம் இல்லாத ஒருவரை எப்படி நினைப்பது? அதனால் அவரை அப்பா அம்மா என்ற இரு உருவங்களில் நினைக்க வேண்டும். நமக்குத் தெரிந்தவர்களில் நம்மிடம் ரொம்ப அன்பாக இருப்பது தாய், தந்தையர் தானே? அன்பாக இருப்பவர்களை நினைத்துக் கொண்டால்தான் நமக்கும் சந்தோஷமாக
#மகாபெரியவா
தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
சொன்னவர்- எம். சுப்புராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
மும்பை வேத ரக்ஷண நிதிக்குழுவினர் (சுமார் 150 பேர்) தரிசனத்துக்கு வருவதாக முன்னதாகவே தகவல் கொடுத்திருந்தோம்.
சாதுர்மாஸ்ய விரதத்தைப் பக்திப் பரவசத்துடன் நடத்தி வந்த
உள்ளூர்ப் பிரமுகர்களை அழைத்தார்கள் பெரியவா.
“எனக்காக (வேதத்துக்காக) உழைக்கும் பக்தர்கள் மும்பையில் இருந்து வருகிறார்கள். அவர்களை நல்ல முறையில் வரவேற்க வேணும்”
பெரியவா ஒரு வார்த்தை சொன்னால் போதாதா! ரயில்வே ஸ்டேஷனில் எங்களுக்கெல்லாம் மாலை மரியாதை; வழி நெடுகிலும் தோரணங்கள்! கோலாகலம்
உற்சாகம், அமர்க்களம் எங்களுக்கு எல்லாம் ரொம்பவும் திகைப்பாக இருந்தது. நாங்கள் என்ன முக்கியப் பிரமுகர்களா? கோடீஸ்வரகளா? பலவித அலுவல்கள் செய்து வரும் சாதாரண மக்கள். எங்களுக்கு ஏன் இவ்வளவு தடபுடலான வரவேற்பு? எங்களில் ஒருவர், உள்ளூர்ப் பிரமுகரைக் கேட்டேவிட்டார்.
“ஸ்ரீசரணாளே
#மகாபெரியவா
திருமதி பிரேமா ரமணி அவர்களின் அனுபவங்கள்.
சுமார் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நாங்கள் ஹைதராபாத்தில் இருந்தபோது ஒரு தோழியின் திருமணத்திற்கு புடவை வாங்க அவளுடன் காஞ்சிபுரம் வந்தேன். அங்கே ஒரு தோழி வீட்டில் தங்கினோம். காலையில் மகா பெரியவாளை தரிசித்து விட்டு பின் மாலை
புடவை வாங்கப் போகலாம் என்று இருந்தோம். அவர்கள் வீட்டு மாடியில் ஒரு மாமி குடியிருப்பதாகவும் பக்ஷணங்கள் நன்றாகச் செய்வதாகவும் தங்கியிருந்த வீட்டுத் தோழி சொன்னாள். அப்போது அந்த மாமியே கீழிறங்கி வந்தார். அவர் கையில் ஒரு தட்டு. அதில் அழகழகாய் சீனி மிட்டாயில் விதவிதமான பொம்மைகள்.
கல்யாணத்தில் மாலைநேரம் விளையாடலில் வைப்பார்கள். தான் முதன் முதலாக செய்ததாகவும் முதலில் பெரியவாளுக்கு படைத்தபின் பிறருக்கு செய்யப் போவதாகவும் சொன்னார். நாங்களும் பெரியவாளைத்தான் பார்க்கப் போகிறோம் என்றவுடன் எங்களுடனேயே வந்தார். நாங்கள் சீக்கிரமே போய் விட்டதால் மடத்தில் அதிகம்
#மகாபெரியவா
இராமேஸ்வரத்திலிருந்து ஒரு புரோகிதர் வந்தார். மூன்று தலைமுறைகளாக அந்த ஊரிலேயே இருந்து வருவதாகச் சொன்னார்.
"ராமநாதஸ்வாமி கோவில் நடராஜாவைப் பார்த்திருக்கியோ?"
"பார்த்திருக்கேன். சேவார்த்திகளை அழைத்துக் கொண்டு போய் காட்டியிருக்கேன்."
"நடராஜாவுக்கு ஏழு திரைகள் உண்டோ?"
புரோகிதருக்குக் குழப்பம் வந்து விட்டது. என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை.
பெரியவர் சொன்னார்.
"திருவாதிரை அன்னிக்கு, ஏழு படுதாக்கள் திரையாகப் போட்டு, நடராஜருக்குப் பூஜை செய்வார்கள். ஏழு திரை விலகியதும் நடராஜரைத் தரிசிக்கலாம். சரி அந்தக் கோவிலில் எத்தனை நடராஜர் இருக்கு?"
ராமேஸ்வரத்தாருக்குக் கொஞ்சம் நடுக்கம்.
"நான் ஒரு நடராஜரைத் தான் பார்த்திருக்கேன்"
"மூணு நடராஜர் இருக்கு! போய்ப் பார்."
"ராமேஸ்வரம் கோவிலில், குருவாயூரைப் போல், செக்கு ஆட்டிய நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது வழக்கமா?"