33.5 லட்சம் கோடி அந்நிய முதலீட்டை கவர, ஒரு மொட்டைத்தலை சாமியார் எந்த அந்நிய தேசத்துக்கும் போகவில்லை. சூட்டு பூட்டு போட்டு, ஸ்டில்ஸ் போட்டு கவரவில்லை...!
தான் இருந்த இடத்திலேயே உலகளாவிய முதலீடுகளை அள்ளி உள்ளார்...!
அவர் மாநிலம் போதுமான முந்தைய கட்டமைப்பு இருந்ததில்லை.
சென்னை போல துறைமுகம் இல்லை.
காமராஜர் போன்ற பெரிய முன்னோர்கள் போட்ட அஸ்திவாரம் இல்லை.
சென்னை உள்ளது போன்ற திறமையான தொழில்நுட்ப தகுதி கொண்ட தொழிலாளர் அதிகம் இல்லை.
கார் உற்பத்தி மற்றும் இதர முக்கிய தொழில் அடையாளம் கொண்ட சென்னை போல எதுவும் உலகம் அறியும் அளவில் அங்கே இல்லை.
தமிழகம் போன்ற ஆண்டு முழுதும் சாதகமான இயற்கை சூழல் அங்கில்லை.
அமைதிப்பூங்கா என பீற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு தாதாக்கள் ராஜ்ஜியமாக இருந்த உ.பியில்.
தமிழகம் போன்ற சட்டம் ஒழுங்கில் அமைதிப்பூங்கா என பீற்றிக் கொள்ள வழி இல்லை.
மேலும் 1967 முதல் மாநிலம் ஆண்ட பரம்பரை முதல்வர் அவரில்லை.
இதை போல எத்தனையோ சாதகமான விசயம் சென்னை தமிழகம் கொண்டது போல உத்திரப் பிரதேச பகுதியில் இருந்தது இல்லை.
ஆனால், காவி ஜிப்பா வேட்டி கட்சிய சன்னியாசி, ஆட்சியில் எதுவுமே இல்லாத மிகவும் பின் தங்கிய ஏழ்மையும் வறுமையும் மட்டுமே நிறைந்த சட்டம் ஒழுங்கு சீரில்லாத மாநிலத்தில் ஒருவர் வந்து,...
எல்லா வகையிலும் முன்னேறியதாக தம்பட்டம் அடிக்கும் நமது தமிழக முதல்வரே முக்கி முக்கி தேசம் தேசமாக போய், வெறும் 6000 கோடிக்கு ஒப்பந்தம் போடுவது எப்படி(அது கூட பினாமி என சத்தம் வருது)
இவர் எங்குமே போகாமல், இத்தகைய ஈர்ப்பு செய்தது எப்படி,...
இங்கு தான் கவர்னர் சொன்னதை சிந்தித்து பார்க்க வேண்டியது உள்ளது.
சும்மா சூட்டு பூட்டு போட்டு உலகம் பூரா சுற்றினால், முதலீடுகள் வந்துவிடாது,...
இதற்கு யோகி செய்த அர்ப்பணிப்பு உழைப்பு மிக அதிகம்...
உ.பி-யில் சட்டம் ஒழுங்கை சீராக்கினார்,...
எப்பேர்ப்பட்ட கொம்பனையும் எப்படி அழிக்கணுமோ, அரக்கனையும் அடக்கணுமோ அப்படி செய்தார். அந்த வீரத்தை நமது மாநிலத்தில் எதிர்பார்க்க முடியாத நிலை.
அப்புறம் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அயராது உழைத்தார்.
சர்வதேச விமான நிலையங்கள் கொண்டுவந்தார்,...
இந்தியாவிலேயே மிகப்பெரிய விமான நிலையம் கட்டுமானம் நடக்கிறது.
சாலைகள் எல்லாம் மிகப்பெரிய வளர்ச்சி. விமானப்படை விமானம் இறங்கி புறப்படும் அளவுக்கு சாலை மேம்பாடு,...
இங்கே நான்கு வழிச்சாலைக்கே எதிர்ப்பை தூண்டி, அரசியல் செய்தால் எப்படி மேம்படும்..?
ரயில்வேயில் மேம்பாடுகள். ரயில்வே சரக்கு வாகன மேம்பாடுகள் என எல்லாவகையான தொழில் துறை சார்ந்த நல்ல சூழலை உருவாக்கினார்.
அப்புறம் தொழில் துவக்குவோருக்கு உகந்த வகையில் அரசின் முழு ஒத்துழைப்பு.
முக்கியமாக ஊழல், கமிஷன், கட்டிங் இல்லாமல். இதெல்லாம் தமிழகத்தோடு ஒப்பிட்டு பார்க்கவும்...
இதை எல்லாம் செய்தால் தான் முதலீடு வரும் என கவர்னர் சொல்வது உதாரணமாக யோகி அரசே சாட்சியாக உள்ளது.
பான்பராக் வாயன், பீடா வாயன், படிப்பறிவில்லாதவன் என அமைச்சர் முதல் முகநூல் வரை, உபீஸ் எல்லாம் படுபாதக பிரிவினை பேச்சு பேசி திரிந்தால், தொழில் முன்னேற்றம் வந்து விடுமா...?
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்,...
உ.பி தொழிலாளர் எவரும், இனி ஐந்தாண்டு பத்தாண்டு கழித்து இங்கு தேடித்தான் பார்க்க வேண்டும்.
இந்தியா உலகின் மிக வேகமாக முன்னேறும் நாடு எனும் பெருமை கொண்டுள்ளது.
இந்தியாவில் மிக வேகமாக வளரும் மாநிலம் என்றால், அது உ.பி தான்...!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணி அமைக்கும் வேளையில் கூட்டணி கட்சிகளை சேர்க்க ஆரம்பித்தாரோ, 4 மாநிலம் அவுட்,...
கர்நாடகாவில் தேவே கவுடா, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு இவர்கள் அமித்ஷா-மோடியை சந்திக்கிறார்கள்,...
பாஜக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை என்று சொல்லுகிறார்கள்,...
இன்னும் சொல்லறேன் கேளுங்கள்,...
களநிலவரம் நிலவரம் இதுதான்,...
ஆந்திராவில் ஜெகன், காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைக்க மாட்டார்...
ஒடிசா நவின் பட்நாயக், காங்கிரஸ் உடன் சேர மாட்டார்...
டெல்லி, பஞ்சாப் இரண்டு மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைக்காது,...
அப்படியே கூட்டணி வைத்தால், டெல்லியில் காணமல் போனது போல காங்கிரஸ் கட்சி பஞ்சாப் இல் போய் விடும்...!
2022-23 நிதி ஆண்டில் பொருளாதாரத்தில், உலக அளவில் வளர்ச்சி அடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம்.
சீனா ஐந்தாவது இடம்.
அமெரிக்கா எட்டாவது இடம்.
இங்கே கடந்த ஆறு ஆண்டுகளாக, அதிலும் கொரோனா வந்த பின்பு கடந்த மூன்று ஆண்டுகளாக இங்குள்ள முரசொலி குரூப்புகள், இத்தாலி குரூப்புகள் மற்றும் டோழர்கள் என்ன சொல்லி கொண்டிருந்தனர் என்றால், இந்தியா இனி பிச்சைகார நாடாகிவிடும்,..
மோடி அரசு நிறுவனத்தோடு சேர்த்து இந்தியாவையும் விற்றுவிடுவார் என இன்னும் என்னென்னவோ சொல்லி உருட்டிகொண்டிருந்தார்கள். ஆனா இப்போ நடந்துகொண்டிருப்பது என்ன...❓
இந்தியா தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்குது. இந்த வீடியோவை பார்க்கும் சிலபேருக்கு வயிறு எரிவது உறுதி...!
அதில் சொல்லப்பட்ட விஷயங்களை, தொடர்புள்ள விஷயங்களை பகிர்கிறேன். அது பற்றிய புரிதலை உங்களிடமே விட்டு விடுகிறேன்..!!
இரும்பு தாது பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த கூட்ஸ் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வழி விட லூப் லைனில் நிறுத்தப்பட்டுள்ளது. இது 75 வேகன்களை பார்க் செய்யும் ஒரு முழு கொள்ளலவு கொண்ட லூப் லைன். இதில் எந்த பிரச்சினையும் இல்லை, செயல் சரியானதே...!
128 கி.மீ வேகத்தில் வந்த சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், லூப் லைனில் திருப்பப்பட்டுள்ளது. அது லூப்லைனில் எக்ஸ்பிரஸுக்காக வழி விட நின்று கொண்டிருந்த கூட்ஸ் ரெயிலின் மீது மோதி, பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளது. இதில் தான் உயிர் சேதம் அதிகம்.