மஹாலக்ஷ்மி இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை வழிபட்டால் திருவருளைப் பெறலாம்:
1. திருமால் மார்பு:
திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். ஆதலின் திருவுறைமார்பன்-ஸ்ரீநிவாசன் என்று திருமாலுக்குப் பெயர். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும்.
திருமகளைப் புருஷாகாரம் என்பர். அடியாருக்கு அருள்புரியும்படித் திருமாலைத் தூண்டுபவள் திருமகளே.
2. பசுவின் பின்புறம்:
பசு தேவராலும்,மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா.காரணம்,பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு
தெய்வம் இருப்பதுதான். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி
வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத்தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப்பது 32 வகை அறங்களுள் ஒன்றதாகும். ‘யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாயிறை’ என்றார் திருமூலர்.
4. தாமரை:
மலர்களில் சிறந்தது தாமரை.‘பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை’ என்றும் கூறுவர். தாமரை செல்வத்தைக் கொடுக்கும். பொன்னின் அளவைப் பத்மநிதி,சங்கநிதி என்பர். பத்மம் என்றால்
தாமரை. எல்லாத் தெய்வங்களுமே பத்மத்தில்தான் அமர்ந்துள்ளனர்.
பத்மாசனத்தில் அமர்வதே சிறப்பு. திருமகளுக்குரிய இடம் தாமரை. ஆதலின் அவளை மலர்மகள் என்பர்.
6. சந்தனம்:
மங்கலப்பொருளான சந்தனத்தில் மகாலட்சுமி உறைகிறாள். தெய்வங்களுக்குரிய சோடச உபசரணையில் சந்தனம் அணிவிப்பதும் ஒன்று. சுபகாரியஙக்ளில் சந்தனம் அவசியம்.
7. தாம்பூலம்:
தாம்பூலம் மங்களகரமானது. சுபகாரியங்களுக்கும் பூஜைக்கும் தேவையானது. தாம்பூலத்தை மாற்றிக் கொண்டால் சம்மதம் தெரிவித்தாயிற்று என்றே பொருள்.
8. கோமயம்:
பசுவிடமிருந்து வெளிப்படும் கோஜலம்,கோமயம் (சாணம்) பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் இறைவனுக்கு உகந்தவை. இதனைப் பஞ்சகவ்யம் என்பர்.வாயிலில் சாணம் தெளித்தால்,வீட்டைச் சாணத்தால் மெழுகினால் கிருமிகள் வாரா, லட்சுமி வருவாள். பஞ்சகவ்யம் பருகினால்
நோய் வராது. பஞ்சகவ்யம் பரம ஒளஷதம் என்பர்.
9. கன்னிப்பெண்கள்:
தூய கன்னியர் தெய்வ நலம் பொலிபவர்.அவர்களிடத்து லட்சுமி கடாட்சம் உண்டு.
10. உள்ளங்கை:
உள்ளங்கையில் லட்சுமி உள்ளாள். காலையில் எழுந்ததும் கையைப் பார்க்க வேண்டும்.
11. பசுமாட்டின் கால்தூசு
புனிதமான பசுவின் பாதம் பட்ட
இடத்தில் பாவம் நில்லாது. அதன் கால் தூசுபட்ட இடத்தில் செல்வம் கொழிக்கும்.
12. சங்கு:
சங்கும் அதன் ஒலியும் மங்களகரமானவை. நிதியின் ஓர் அளவை சங்கம் என்பர். ‘சங்கநிதி பதுமநிதி இரண்டுந்தந்து’ எனும் நாவரசர் சொல் உணர்வோம்.
13. வில்வமரம்:
வில்வ மரத்தடியில் ரைவத மன்வந்திரத்தில் மகாலட்சுமி
தோன்றினாள். வில்வம் சிவபெருமானுக்கு உகந்த பத்திரம். அதைவிடச் சிறந்த பத்திரம் ஒன்றும் இல்லை. வைணவத்தலமான ஸ்ரீரங்கத்தில் தலவிருட்சம் வில்வம், திருநகரிக்கு வில்வாரண்யம் என்று பெயர்.
திருவஹிந்திரபுரத்தில் மகாலட்சுமிக்கு வில்வத்தால்தான் அர்ச்சனை. வில்வ மரத்தடியில் செல்வம் தரும் நாயகி வசிக்கிறாள்.
14. நெல்லி மரம்:
நெல்லி ஆயுளை வளர்க்கும். ஆரோக்கியம் தரும். அதனடியில் மகாலட்சுமி உறைகிறாள். நெல்லி திருமாலின் அருள் பெற்றது. 'ஹரிபலம்' என்று இதற்கு ஒரு பெயர்.
நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள். துவாதசியன்று நெல்லிக்காய் சேர்த்தால்தான் ஏகாதசிப் பலன் உண்டு.
குருக்ஷேத்திரத்தில்,
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில், ஒன்பது நாள்கள் முடிந்துவிட்டன. "ஒன்பது நாட்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே" என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம், தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான்.
"பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை" என்று நினைத்தான். தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடம் தெரிவித்தான். துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதேக் கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார்.
ஆனால் துரியோதனனோ, "பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீர்கள். அவர்களை போரில் கொல்வேன் என்று சொல்லுங்கள்" என்றான். செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமே என்பதற்காக பீஷ்மரும், "அப்படியே ஆகட்டும்" என்று கூறிவிட்டார்.
ஒரு மன்னன், தெரியாத்தனமாக ஒரு பிராமணனைக் கொன்றதால், அவரை ‘பிரம்மஹத்தி’ பாவம் பிடித்துக் கொண்டது. ஒரு ரிஷியின் ஆஸ்ரமத்துக்குச் சென்று பரிஹாரம் கேட்க முடிவு செய்தார். அங்கே சென்றபோது ரிஷி இல்லை. அவருடைய மகனே இருந்தார். அவரிடம் தான் வந்த காரணத்தை மன்னன் கூறினார். #Spirituality
அவர் “நானே பரிஹாரம் சொல்கிறேன். பக்தியுடன் மூன்று முறை 'ராம, ராம, ராம' என்று சொல்லுங்கள். அந்தப் பாவம் போய்விடும்” என்றார். இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த தருணத்தில் ரிஷியும் வந்துவிட்டார். என்ன விஷயம் என்பதை அறிந்தார். அவருக்கு மகன் மீது கடும் கோபம் வந்தது.
“அட மூடனே! ஜன்ம ஜன்மாந்தரங்களில் செய்த பாவங்களும், ராமனின் நாமத்தை ஒரு முறை சொன்னாலேயே போய்விடுமே. உனக்கு எப்படி நம்பிக்கை குறைந்து மூன்று முறை சொல்லச் சொன்னாய்? இந்த நம்பிக்கைக் குறைவினால் அடுத்த ஜன்மத்தில் நீ வேடனாகப் பிறப்பாயாக” என்று சபித்தார்.
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ - அவன்
வாய் நிறைய மண்ணையுண்டு மண்டலத்தை காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ.
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
மந்திரத்தில் அவன் மயங்க மயக்கத்திலே இவன்
உறங்க மண்டலமே உறங்குதம்மா தாலேலோ.
நாகப்படம் மீதிலவன் நர்த்தனங்கள் ஆடியபின்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ
அவன் மோகலீலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ.
நாரதர் ஒரு சமயம் "கிருஷ்ணா! உங்களுடைய மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.பிரம்மத்தை (தெய்வத்தை) உணர்ந்த பிரம்மஞானி தேவரிஷியாகிய நானும் மாயையால் பாதிக்கப்படுவேனா?"என்று கேட்டார்.கிருஷ்ணர், நாரதரின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்,
சற்று தூரத்திலிருந்த ஒரு குளத்தை சுட்டிக்காட்டி,"நாரதரே!அதோ அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து வாருங்கள்"என்று கூறினார். கிருஷ்ணர் கூறியபடியே,நாரதர் தன் கையில் இருந்த மகதி என்ற வீணையை,குளக்கரையில் வைத்துவிட்டு,குளத்தில் சென்று மூழ்கி எழுந்தார்.மூழ்கி எழுந்தாரோ இல்லையோ,
அவர் அழகிய இளம் பெண்ணாக மாறியிருந்தார்!தான் நாரதர் என்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவருக்கு அறவே இல்லாமல் போயிற்று.குளக்கரையில் அவர் வைத்த வீணையும் இல்லை. கிருஷ்ணரும் அங்கு இல்லை.இப்போது நாரதப் பெண்,குளத்தின் படிகளில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தாள்.அந்த வழியாக அந்த நாட்டு அரசன்,