குருக்ஷேத்திரத்தில்,
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில், ஒன்பது நாள்கள் முடிந்துவிட்டன. "ஒன்பது நாட்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே" என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம், தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான்.
"பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை" என்று நினைத்தான். தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடம் தெரிவித்தான். துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதேக் கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார்.
ஆனால் துரியோதனனோ, "பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீர்கள். அவர்களை போரில் கொல்வேன் என்று சொல்லுங்கள்" என்றான். செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமே என்பதற்காக பீஷ்மரும், "அப்படியே ஆகட்டும்" என்று கூறிவிட்டார்.
அதே தருணத்தில் பாண்டவர்களின் பாசறையில் இருந்த கண்ணன் லேசாகச் சிரித்தான். அவனுடைய சிரிப்பின் காரணம் அங்கிருந்த பாண்டவர்களுக்குப் புரியவில்லை. சற்றுநேரத்தில், பீஷ்மர் செய்த சபதம் பாண்டவர்களுக்குத் தெரியவந்தது. அர்ஜுனன் உட்பட அனைவருக்கும் கலக்கம் ஏற்பட்டுவிட்டது.
"பிதாமகர் பீஷ்மர் எவராலும் வெற்றிக் கொள்ளமுடியாதவர் ஆயிற்றே. நன்றிக் கடனுக்காக அவர் துரியோதனன் பக்கம் இருந்தாலும், 'தர்மம் வெல்லும்' என்று நமக்கு ஆசி கூறியவர் ஆயிற்றே. அவரே இப்போது நம்மை ஒழிப்பதாக சபதம் செய்திருப்பதால், நிலைமை நமக்கு பாதகமாகத்தானே இருக்கும்" என்று நடுங்கினார்கள்.
பாண்டவர்களின் கலக்கத்தைக் கண்ட பாஞ்சாலி,மிகவும் கவலை கொண்டாள். "இனி தன்னுடைய சபதம் என்னாவது? போரின் திசையே மாறிவிடும் போலிருக்கிறதே. இந்தக் கண்ணன் என்ன ஆனார்? அவருக்கு இதெல்லாம் தெரியுமா?" இப்படியெல்லாம் பாஞ்சாலி நினைத்துக்கொண்டிருந்தபோதே, கண்ணன் அங்கே வந்து சேர்ந்தான்.
பாஞ்சாலியைப் பார்த்து,"சத்தம் செய்யாமல் என் பின்னால் வா" என மிக மெல்லியக் குரலில் கூறி, அந்த நள்ளிரவில் அவளை எங்கேயோ அழைத்துச் சென்றான். போர்க்களத்தினூடே கண்ணன் நடந்து சென்றுகொண்டிந்தான். ரணகளமாக மாறியிருந்த யுத்தபூமியில் மரண அவஸ்தையில் வீரர்கள் எழுப்பிய அவலக் குரல்களின் ஒலி,
அந்தப் பிரதேசத்தையே இருட்டாக அமானுஷ்யமாக மாற்றியிருந்தது.ஆனாலும் கண்ணன் உடனிருக்கிறான் என்ற தைரியத்தில் பாஞ்சாலிக்குச் சிறிதும் அச்சம் ஏற்படவில்லை. எதையும் பொருட்படுத்தாமல் கண்ணனின் பின்னால் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தாள்.யுத்தகளத்தைவிட்டு சற்று விலகியதும் மற்றொரு சத்தம் கேட்டது.
அரசகுலத்தில் பிறந்தவள் ஆதலால், பாஞ்சாலி அணிந்திருந்த விலையுயர்ந்த காலணிகள் எழுப்பிய ஓசைதான் அது. திடீரென்று ஓரிடத்தில் நின்ற கண்ணன், பாஞ்சாலியைப் பார்த்து,"சகோதரி, உன் காலணிகள் மிகவும் சத்தமெழுப்புகின்றன.அவற்றை கழற்றிப் போடு’’ என்று கூறினான்.
பாஞ்சாலியும் அப்படியே காலணிகளைக் கழற்றி வீசினாள்.பின்னர் தொலைவிலிருந்த ஒரு கூடாரத்தை சுட்டிக் காட்டிய கண்ணன், "பாஞ்சாலி, நீ எவரும் அறியாமல் அந்தக் கூடாரத்துக்குச் செல். உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருக்கும் மனிதரின் காலில் விழு.
மற்றபடி ஏன், எதற்கு என்றெல்லாம் கேட்காதே"என்றான். அவளும் கண்ணன் சொற்படி கூடாரத்துக்குள் சத்தம் செய்யாமல் நுழைந்து, அங்கே குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்த மனிதர் திரும்பிப் பார்ப்பதற்குள், அவருடைய காலில் வேகத்துடன் விழுந்தாள் பாஞ்சாலி.
யாரோ ஒரு பெண் தன் காலில் விழுவதைக் கண்ட பீஷ்மர், "தீர்க்கசுமங்கலி பவ" என்று வாழ்த்தினார். பின்னர் அவளை எழுந்திருக்கச் சொன்னதுடன், இருட்டில் அவள் யாரென்றும் கேட்டார். பாஞ்சாலி எழுந்தாள்.அவளைப் பார்த்ததுமே பீஷ்மர் திடுக்கிட்டார்.
நாளையப் போரில் யாரை ஒழித்துக்கட்டப்போவதாக துரியோதனனுக்கு வாக்களித்திருந்தாரோ, அந்தப் பாண்டவர்களின் பத்தினியை,"தீர்க்கச் சுமங்கலியாக இரு"என்றல்லவா வாழ்த்திவிட்டார். தெய்வம் தன்னை மிகவும் சோதிப்பதாக எண்ணி வருந்தினார் பீஷ்மர்.
பாஞ்சாலியைப் பார்த்த பீஷ்மர்,"அம்மா பாஞ்சாலி, பிணங்கள் குவிந்திருக்கும் இந்த யுத்தக் களத்தினூடே நீ தனித்தா வந்தாய்? உன்னை யார் இங்கே அழைத்து வந்தார்கள்?’"என்று கேட்டார். அப்போது கூடாரத்தின் வாயிலில் ஏதோ நிழல் அசைவதுபோல் தெரிந்தது. அங்கே கண்ணன் நின்றுகொண்டிருந்தான்.
பீஷ்மருக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்துவிட்டது."வா கண்ணா. இது உன் வேலையாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். இது என்ன கையில் ஏதோ துணிமுடிச்சு?’’ என்று கேட்டார். "இதுவா? பாஞ்சாலியின் பாதணிகள்தாம் இவை. அதிக ஓசை எழுப்பியது என்று கழற்றச் சொன்னேன்.
அதைத்தான் என் மேலங்கியில் முடிந்துவைத்திருக்கிறேன்" என்றான். கண்ணன் சொன்னதுதான் தாமதம், திரௌபதி பாய்ந்து சென்று அதைப் பிடுங்கினாள். "கண்ணா! இது என்ன சோதனை. என் காலணிகளை நீ சுமப்பதா? என்னை மகாபாவியாக்க வேண்டுமென்பதுதான் உன் எண்ணமா?’’ என அவள் கண்கள் கண்ணீரை உகுத்தன.
"தங்கையின் செருப்பை அண்ணன் தூக்குவது தவறல்ல, பேசாதிரு. பெரியவர் பீஷ்மரிடம் உன் கோரிக்கையைச் சொன்னாயல்லவா?" என்றான் கண்ணன். பீஷ்மர் குறுக்கிட்டு,"மாயவனே!அவள் ஏதும் என்னிடம் சொல்லவில்லை.ஆனால் நான் என்ன சொல்ல வேண்டுமென்று நீ நினைத்தாயோ,அதை நான் ஆசிமொழியாகச் சொல்லிவிட்டேன்.
நீ பொல்லாதவன். உன்னை அபயம் என்று எண்ணுபவரைக் காக்க, அவர்களின் பாதணிகளைக்கூட தாங்கிக்கொண்டிருப்பாய். பாண்டவர்களுக்கு உன் அருள் இருக்கும்போது,என்னால் அவர்களை என்ன செய்துவிட முடியும்? கோபாலா, நீ யார் என்பதை நன்றாக அறிந்தவன் நான்.
ஏதோ உணர்ச்சிவசத்தில் என்னால் எல்லாம் ஆகுமென்று நினைத்துவிட்டேன். அந்தத் தவற்றைச் சுட்டிக்காட்ட, பக்தர்களை ரட்சிக்கும் பக்தவத்சலனாக இப்படி பாஞ்சாலியின் பாதணிகளைச் சுமந்து வந்து நிற்க வேண்டுமா?’’என்று வினவினார்.
பிதாமகரின் கண்களிலும் நீரருவிகள் கொப்பளித்தன. மறுநாள் போரில் அந்தப் பழுத்தபழம் அம்புப் படுக்கையில் விழுந்ததைத்தான் பாரதம் சொல்லுமே..?
பராசர பட்டர் என்பவர் ஒருமுறை காட்டுபாதையில் சென்றுக் கொண்டிருந்தார்.திடீரென்று அங்கே ஏதோ ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்துவிட்டார்.நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாததால் அவரைத் தேடிச்சென்ற சீடர்கள்,அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள்.அவரை மெதுவாக வீட்டுக்கு அழைத்து வந்து
மயக்கம் தெளிவித்தனர். பட்டர் எழுந்தவுடன், “காட்டில் என்ன ஆயிற்று? கொடிய மிருகங்கள் ஏதாவது உங்களைத் தாக்க வந்தனவா? இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டனவா?” என்றெல்லாம் வினவினார்கள் சீடர்கள்.ஒன்றுமே இல்லை. நான் ஒரு காட்சியைக் கண்டேன். அதனால் மயங்கி விழுந்துவிட்டேன்"என்றார் பட்டர்.
“என்ன காட்சி?” என்று பதற்றத்துடன் சிஷ்யர்கள் கேட்டார்கள். “ஒரு வேடன் ஒரு முயல்குட்டியைப் பிடித்தான். அதை ஒரு சாக்குப்பையில் மூட்டைக்கட்டி எடுத்துச்சென்றான். இதைக்கண்ட அந்த முயல்குட்டியின் தாய்முயல், அந்த வேடனைத் துரத்திச்சென்று, அவன் கால்களை பிடித்துக்கொண்டு மன்றாடியது.
ஒரு மன்னன், தெரியாத்தனமாக ஒரு பிராமணனைக் கொன்றதால், அவரை ‘பிரம்மஹத்தி’ பாவம் பிடித்துக் கொண்டது. ஒரு ரிஷியின் ஆஸ்ரமத்துக்குச் சென்று பரிஹாரம் கேட்க முடிவு செய்தார். அங்கே சென்றபோது ரிஷி இல்லை. அவருடைய மகனே இருந்தார். அவரிடம் தான் வந்த காரணத்தை மன்னன் கூறினார். #Spirituality
அவர் “நானே பரிஹாரம் சொல்கிறேன். பக்தியுடன் மூன்று முறை 'ராம, ராம, ராம' என்று சொல்லுங்கள். அந்தப் பாவம் போய்விடும்” என்றார். இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த தருணத்தில் ரிஷியும் வந்துவிட்டார். என்ன விஷயம் என்பதை அறிந்தார். அவருக்கு மகன் மீது கடும் கோபம் வந்தது.
“அட மூடனே! ஜன்ம ஜன்மாந்தரங்களில் செய்த பாவங்களும், ராமனின் நாமத்தை ஒரு முறை சொன்னாலேயே போய்விடுமே. உனக்கு எப்படி நம்பிக்கை குறைந்து மூன்று முறை சொல்லச் சொன்னாய்? இந்த நம்பிக்கைக் குறைவினால் அடுத்த ஜன்மத்தில் நீ வேடனாகப் பிறப்பாயாக” என்று சபித்தார்.
மஹாலக்ஷ்மி இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை வழிபட்டால் திருவருளைப் பெறலாம்:
1. திருமால் மார்பு:
திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். ஆதலின் திருவுறைமார்பன்-ஸ்ரீநிவாசன் என்று திருமாலுக்குப் பெயர். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும்.
திருமகளைப் புருஷாகாரம் என்பர். அடியாருக்கு அருள்புரியும்படித் திருமாலைத் தூண்டுபவள் திருமகளே.
2. பசுவின் பின்புறம்:
பசு தேவராலும்,மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா.காரணம்,பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு
தெய்வம் இருப்பதுதான். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி
வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத்தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப்பது 32 வகை அறங்களுள் ஒன்றதாகும். ‘யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாயிறை’ என்றார் திருமூலர்.
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ - அவன்
வாய் நிறைய மண்ணையுண்டு மண்டலத்தை காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ.
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
மந்திரத்தில் அவன் மயங்க மயக்கத்திலே இவன்
உறங்க மண்டலமே உறங்குதம்மா தாலேலோ.
நாகப்படம் மீதிலவன் நர்த்தனங்கள் ஆடியபின்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ
அவன் மோகலீலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ.
நாரதர் ஒரு சமயம் "கிருஷ்ணா! உங்களுடைய மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.பிரம்மத்தை (தெய்வத்தை) உணர்ந்த பிரம்மஞானி தேவரிஷியாகிய நானும் மாயையால் பாதிக்கப்படுவேனா?"என்று கேட்டார்.கிருஷ்ணர், நாரதரின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்,
சற்று தூரத்திலிருந்த ஒரு குளத்தை சுட்டிக்காட்டி,"நாரதரே!அதோ அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து வாருங்கள்"என்று கூறினார். கிருஷ்ணர் கூறியபடியே,நாரதர் தன் கையில் இருந்த மகதி என்ற வீணையை,குளக்கரையில் வைத்துவிட்டு,குளத்தில் சென்று மூழ்கி எழுந்தார்.மூழ்கி எழுந்தாரோ இல்லையோ,
அவர் அழகிய இளம் பெண்ணாக மாறியிருந்தார்!தான் நாரதர் என்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவருக்கு அறவே இல்லாமல் போயிற்று.குளக்கரையில் அவர் வைத்த வீணையும் இல்லை. கிருஷ்ணரும் அங்கு இல்லை.இப்போது நாரதப் பெண்,குளத்தின் படிகளில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தாள்.அந்த வழியாக அந்த நாட்டு அரசன்,