சினிமா நடிகன் எனும் கவர்ச்சி இல்லை. என்ன இயல்பான மனிதர். ஒரு மேக்கப் இல்லை. பந்தா இல்லை. வெள்ளந்தியான மகிழ்ச்சி,...
எல்லாவற்றிற்கும் மேலாக, முன்னாள் முதல்வரின் மகன் எனும் அடையாளமும் இல்லை,...
அதிகாரி என்ற நிலையை தாண்டி, கைதேர்ந்த அரசியல்வாதியாக தமிழகத்தை வலம் வரும் காட்சி அற்புதம்.
எந்த குறிப்பும் இல்லாமல், சா்வ சாதாரணமாக விசயங்களை கணகச்சிதமாக ஆதாரத்துடன் பதட்டமில்லாமல் பேசும் பாங்கு. தேவையற்ற விசயங்களை கண்டு கொள்ளாமல் நகர்வது,...
திராவிட அரசியல் கட்சிகள் இவரை எப்படி எதிா்கொள்வது என்று தெரியாமல் திணறுவது தான், தமிழகத்தின் இன்றைய அரசியல் லேட்டஸ்ட்,...
அண்ணாமலை கையில் எடுத்திருப்பது சாதாரண விஷயம் இல்லை. இத்தனை வருடங்களாக பலர் பேச கூட தயங்கும் விஷயம்,...
"இரும்பு பெண்மணி" என்று அழைக்கப்படும் ஜெயலலிதாவே, இவர்களின் எதிர்ப்பை கண்டு கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் வாங்கினார் என்றால், இவர்கள் ECO SYSTEM -உடைய வீரியத்தை புரிந்து கொள்ளுங்கள்.
இதனால், இப்போது உள்ள அலறல்கள் நாம் எதிர்பார்த்த ஒன்று தான்,...
சிறுபான்மையினர், இந்து பெயரில் இருந்து கொண்டு சத்தம் போட்டு கத்துகின்றனர் நடுநிலை இந்துக்கள் ஒட்டை திமுக பக்கம் ஈர்க்க. ஆனால், உண்மையை என்றாவது, யாராவது பேசித்தான் ஆக வேண்டும்.
டெல்லியில் மோடியை யாராலும் அசைக்க முடியாது,...
அவரின் ஆசி பெற்ற அண்ணாமலையின் வீச்சும், பெரிய அளவில் அன்று வளந்திருக்கும்.
அண்ணாமலை அரசியலுக்கு வராமல் போயிருந்தால், கர்நாடக மாநில டி.ஜி.பி-யாக ஓய்வு பெற்றிருப்பார். இப்போது தமிழக மக்கள் இவரை பயன்படுத்தாவிட்டாலும் கூட, அவர் நிச்சயமாக இன்னும் ஒரு சில ஆண்டுகளில்,...
மத்திய அமைச்சராக உலா வருவார். அரசியயில் எதிர்காலம் இல்லாமல் போக, அவருக்கு 60 வயதோ அல்லது 70 வயதோ இல்லை. வெறும் 37 வயது தான்,...
ஆகவே, அண்ணாமலை அவர்களுக்கு இழப்பதற்கு எதுவுமே இல்லை என்ற நிலையில், நன்றாக அடித்து ஆடுகிறார்...
பொதுவாக, கூட்டணி பேச்சுவார்த்தைகளில், வாரக்கணக்கில் அசடு வழிவது தான் தமிழக பாஜக-வின் வழக்கம். இடது கையால் டீல் செய்யும் கழகங்களின் காலில் விழுந்து, அவர்கள் தூக்கி போடும் ஓரிரு இடங்களை வாங்கி கொண்டு, மூச்சு காட்டாமல் வருவதே அன்றைய பாஜக-வின் ஸ்டைல்.
அண்ணாமலை அவர்கள் ஒரே ஒருமுறை பேச்சுவார்த்தைக்கு சென்றார். இது சரிப்படாது என்று தெரிந்தவுடன் தனித்து போட்டி என்று துணிந்து அறிவித்தார். இரண்டு வாரமே எஞ்சி இருந்தது.
அவர் வேட்பாளர்களை அறிவித்த வேகத்தைப் பார்த்தால், முன்கூட்டியே இதற்குத் தயாராக இருந்திருப்பார் என்பது தெரிகிறது,...
நான் பார்த்தவரை, அறிவிக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவருமே தகுதியானவர்கள், திறமையாளர்கள், கடுமையாக உழைக்கக் கூடியவர்கள்(சில விதிவிலக்குகள் இருக்கக்கூடும்).
அதோடு மட்டுமல்ல,...
வேறு எந்த தலைவரும் செய்யாத அளவுக்கு மிகக் கடுமையான உழைப்பை, இந்த தேர்தலுக்காக அவர் கொடுத்தார்...
முதல் நாள் பார்த்தால் மதுரை, அடுத்த நாள் திருச்சி, அதற்கடுத்த நாள் கோவை,...
அதுவும் ஜெயலலிதா பாணி வேன் பிரச்சாரம் அல்ல,...
ஒரு இடத்தில் பைக் பேரணி, இன்னொரு இடத்தில் சைக்கிள் பேரணி, இன்னொரு இடத்தில் நடைப்பயணம், இன்னொரு இடத்தில் பொதுக்கூட்டம்,...
எதற்கும் சளைக்காமல், உணவு உறக்கத்தைப் பற்றிக் கவலைப் படாமல், இரண்டு வாரங்களாக திராவிட கட்சிகளின் பணபலத்தை மீறி, எப்படி வெற்றி கொள்ள போகிறோம் என்பதை பற்றி எல்லாம் கவலைபடாமல், மிகக் கடுமையான உழைப்பைக் கொடுத்தார்,...
பாஜக தனித்து நிற்பதை ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்துக் கொண்ட இரண்டு திராவிட கட்சிகளும், பாஜக-வினரின் தீவிர பிரச்சாரத்தினால், ஒட்டு சதவிகிதம் கூடியதால் விழி பிதுங்கி நிற்கின்றன.
ஆரம்பத்தில் முணுமுணுப்பாக கேட்ட அலறல் சத்தம், சத்தமாகவே கேட்கிறது. 2 திராவிடமும் சேர்ந்து ஊளையிடுகின்றன.
தமிழக வாக்காள பெருமக்களே, பெருந்தலைவர் காமராஜருக்கு பிறகு, நல்ல நோக்கத்திற்காக அரசியலுக்கு வந்த பெரிய தலைவர்கள் இரண்டு பேர் மட்டும் தான், ஒன்று விஜயகாந்த் இரண்டாவது அண்ணாமலை.
விஜயகாந்த் அவர்களை கோமாளி ஆக்கி ஓரம் கட்டி விட்டார்கள்.
அடுத்து அண்ணாமலையை அவ்வாறு செய்ய திமுக மீடியாக்கள் முயற்சி செய்கிறது. அது நடக்காது என்று தெரிந்ததனால், இப்போது அடக்கி வாசிக்கிறது. இத்தனை காலமாக நாம் எந்த மாதிரியான ஒரு தலைமைக்கு ஏங்கிக் கிடந்தோமோ, அதை அப்படியே நிறைவேற்றும் விதமாக வந்திருக்கிறார்,...
இப்படி ஒரு தலைவருக்காகத் தான் தமிழகம் இத்தனை நாள் காத்துக்கிடந்தது.
அதனால், மக்களாகிய நாம் தான் விழித்து கொள்ள வேண்டும். இப்போது, இல்லை என்றால் எப்போதும் இல்லை. முழித்து கொள் தமிழா,...
அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பார்கள்,...
பேச பேசத்தான் மக்களும் புரிந்து கொள்வார்கள். Temporary Set Back -களை எதிர்க்கொள்ள தயாராக இருப்போம்,...
என்ன ஆனாலும், அண்ணாமலை பின்னால் நிற்கவேண்டியது நம் தார்மீக கடமை...!
அவரையே விமர்சிக்கும் கீழ்த்தனமான எண்ணம் உள்ளவர்கள்,...
மேலும், ரஜினியின் மகுடத்தை உடைக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு செயல்படும், புதிதாக முளைத்து சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தகுதி இல்லாமல், ஆசைப்படும் எண்ணம் இருக்கும் பிம்பங்களை உடைக்கும் வகையில் தான் இந்த நிகழ்வு இருந்தது...
"ரஜினி மேல் மதிப்பு போய்விட்டது, ரஜினிக்கான மவுசு குறைந்துவிட்டது" என செய்யப்படும் பிரச்சாரத்துக்கு மத்தியில் இப்படி ஒரு நிகழ்வு, கண்டிப்பாக கெட்ட எண்ணம் இருப்பவர்களுக்கு வயிறு எறியதான் செய்யும்.
"சூப்பர்ஸ்டார்" மற்றும் "தலைவர்" என்றாலே, அது திரு. ரஜினிகாந்த் மட்டுமே,...
முன்பு நமக்கு பிடித்திருந்த நடிகர்கள் எல்லாம், இப்போது நமக்கு பிடிக்காமல் போய்விட்டது...
காரணம், இந்து மதத்தின் மீதான அவர்களின் பேச்சுக்கள், விமர்சனங்கள், இவர்களின் படங்களில் இந்து மதத்தைப் பற்றிய தவறான எண்ணங்களைப் பரப்புதல் போன்றவை.
அந்த நடிகர்களில் சிவகுமாரும் உண்டு.
ஒரு காலத்தில் ராமாயணத்தை கரைத்துக்குடித்து சொற்பொழிவாற்றியவர் சிவகுமார். ஆனால், இன்று அவர் மகன் சூர்யா இஸ்லாமியப் பெண் ஜோதிகாவை திருமணம் செய்த பின், இவரின் இந்து மத வெறுப்பு மேலோங்கியதாக அவரது பொது வெளி பேச்சுக்களில் தெரிகிறது.
கமல்ஹாசன், ஜோசப் விஜய், ஜோதிகா, சூர்யா, கார்த்தி, சித்தார்த், விஜய்சேதுபதி. இன்னும் நிறையபேர் உண்டு. இவர்களைப் பார்த்தாலே எரியுது பிடிக்கவில்லை...
டிவியில் அவர்கள் நடித்த படங்கள் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பானால், உடனே வேறு சேனல் மாற்றிச்செல்லும் அளவிற்கான வெறுப்பே மிஞ்சியிள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணி அமைக்கும் வேளையில் கூட்டணி கட்சிகளை சேர்க்க ஆரம்பித்தாரோ, 4 மாநிலம் அவுட்,...
கர்நாடகாவில் தேவே கவுடா, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு இவர்கள் அமித்ஷா-மோடியை சந்திக்கிறார்கள்,...
பாஜக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை என்று சொல்லுகிறார்கள்,...
இன்னும் சொல்லறேன் கேளுங்கள்,...
களநிலவரம் நிலவரம் இதுதான்,...
ஆந்திராவில் ஜெகன், காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைக்க மாட்டார்...
ஒடிசா நவின் பட்நாயக், காங்கிரஸ் உடன் சேர மாட்டார்...
டெல்லி, பஞ்சாப் இரண்டு மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைக்காது,...
அப்படியே கூட்டணி வைத்தால், டெல்லியில் காணமல் போனது போல காங்கிரஸ் கட்சி பஞ்சாப் இல் போய் விடும்...!