#ஹனுமந்த_வாகனம்
ஹனுமன் கருடனை போல் நித்யசூரி இல்லை. அவன் ஒரு சிரஞ்சீவி இன்னும் பூமியில் தானே வசிக்கிறான். அப்படி இருக்க ஏன் ஹனுமந்த வாகனம்?
இராமாயணத்தில் ஶ்ரீஇராம இராவண யுத்ததத்தில் ஒரு நிகழ்வு. ஶ்ரீராமனுடன் போரிட வந்த இராவணனை லக்ஷ்மணன் முதலில் எதிர்த்து போரிடுகிறார். ராவணன்
எய்யும் ஒவ்வொரு அஸ்திரத்தையும் செயலிழகச் செய்து கொண்டே வருகிறான். ஶ்ரீலஷ்மணனின் போர் திறமையை கண்டு வியந்த ராவணன் இலக்குமணனை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது என கண்டு கொண்டு பிரம்மா விசேஷமாக தனக்கு தந்த அஸ்திரத்தை லஷ்மணன் மேல் ஏவுகிறான் ராவணன். தன் மார்பை நோக்கி வரும் அஸ்திரத்தை
மகிமையை உணர்ந்த லஷ்மணன் அதனை எதிர்க்காமல் விட அந்த வேல் மார்பில் பட்டு இலக்குமணன் மூர்ச்சை ஆகிறான். ராவணன் வேகமாக வந்து லஷ்மணனை இலங்கையின் உள்ளே தூக்கி செல்ல எத்தனிக்கிறான். அவனால் துளிகூட லக்ஷ்மணன் உடலை அசைக்க முடியவில்லை பத்து கைகளை கொண்டும் முயல்கிறான் ஹும் முடியவில்லை. இதை
தூரத்தில் இருந்த கவனித்த ஹனுமான் லஷ்மணன் உடல் அருகே வேகமாக வந்து ஒரு குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் காக்கும் தாயைப் போல லக்ஷ்மணனை கைகலால் தூக்கி கொண்டு ராவணன் கண்முன்னாடியே வேக வேகமாக ஶ்ரீஇராமர் இருக்குமிடம் மூர்ச்சையாகிக் கிடந்த லக்ஷ்மணனை அவனெதிரே கிடத்தினான். மூர்ச்சையாகி கிடந்த
லக்ஷ்மணனைப் பார்த்து தன்னிலை இழந்த ஸ்ரீராமர் சற்றைக்கெல்லாம் சுதாரித்து, மிகுந்த சினத்துடன் தம்பியை இப்படி ஆளாக்கிய ராவணனை போரில் சந்திக்கப் புறப்பட்டார். அதே நேரம் ராவணனும் ஶ்ரீராமனுடன் போர் புரிய ஶ்ரீராமன் முன் தனது தேரை கொண்டு வந்து நிறுத்தினான். அதர்மத்தையே தொழிலாக கொண்ட
ராவணன் தேரில் போரிட வருகிற போது அதுவும் மாயப் போர் அந்தரத்தில் பறந்து கொண்டே, தர்மத்தின் தலைவனான ஶ்ரீராமன் அவனெதிரே வெறும் தரையில் நின்று கொண்டிருப்பதை கண்டண்டான் வாயுபுத்திரன். மனம் நெகிழ, ஶ்ரீராமன் அருகே சென்று இருகரம் கூப்பி, ப்ரபோ! அந்த அதர்ம சொரூபமான ராவணன் ஆயிரம் குதிரை
பூட்டின தேரில் உங்கள் முன் போரிட வந்துள்ளான். அவன் எதிரில் தர்மமே வடிவமான தாங்கள் வெறும் தரையில நின்று போரிட போவது ரொம்ப வருத்தமாக உள்ளது. அடியேனை ஒரு அல்பமான வானரம் என எண்ணாமல் பெரிய மனது கொண்டு என் தோள் மேல் ஏறிக் கொண்டு அவனுடன் போரிட வேண்டும் என வேண்டினான். ஹனுமனின் அன்பு
வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தித்த ஸ்ரீராமன், ஹே வாயுபுத்ரா! எனக்கு இதை விடச் சிறந்த உபகாரம் இந்நேரத்தில் வேறென்ன இருக்க முடியும். அதுவும் இல்லாமல் உன்னை போன்ற அன்பான சீடன் என்னுடன் இருக்கும் போது எனக்கு ஏது குறை என சொல்லிக் கொண்டே ஹனுமனின் தோள்களில் உடனே ஏறி அமர்ந்தார். மேன்மை
மிகுந்த மேருமலை மேல் கம்பீரமாய் அமர்ந்திருக்கும் ஒரு ஆண்சிங்கம் போல் ஹனுமன் தோளில் ஶ்ரீராமன் காட்சி கொடுக்க, இந்தக் காட்சியை கண்ட விண்ணுலக தேவர்கள் தங்களது நல்லாசியை இருவருக்கும் பூமாரி பொழிந்து வாரி வழங்க, காலம் காலமாய் நடந்தால் குடையாக நின்றால் மரவடியாக சயனித்தால் படுக்கையாக
திருமாலை தாங்குகின்ற பெருமையை கொண்டிருந்த ஆதிசேஷனும், திருமாலுக்கு ஊர்தியாய் வாயுவேக மனோவேகமாய் எப்போதும் சுமந்து செல்லும் பெரிய திருவடியான கருடனும் பொறாமை கொண்டு நாணி தலைகுனிந்தனர். ஹனுமனின் மீதமர்ந்த ஶ்ரீராமனோ, ஹே வானரவீரா! வெகு காலமாக நான் தேடிய எனக்கேற்ற வாகனம் ஆசனம் இன்றே
கிட்டியது என்னும் விதமாக ஹனுமனின் தோள்களில் வெகு பாந்தமாய் ஆரோகணித்திருந்தான். அதே கோலத்துடன் ராவணனுடன் அதிதீவீரமாக போர் புரிந்து அவனது அரக்கர் படைகளையும் அழகிய தேரையும் பலவித அஸ்திரங்களையும் அவனின் வில்லையும் செயலிழக்கச் செய்து நிராயுத பாணியாக நிறுத்தி, ஹே ராவணா நிராயுதபாணியான
உன்னை இன்று கொல்ல மனம் ஒப்பவில்லை. இன்று போய் நாளை வேறு மீதமுள்ள படைகளுடன் வா என கூறி அனுப்பிய வரலாறு உலகமே அறியும். அந்த போர்கள ஶ்ரீராமனின் வாகனமான ஹனுமந்த வாகனத்தை நினைவு கூறவே இன்றும் பூர்வர்களால் ஏற்படுத்தபட்டு இன்றும் வைணவ திவ்ய அபிமான கோயில்களில் ஹனுமந்த வாகனம் மேல் பகவான்
புறப்பாடு கண்டருளப்படுகிறது எப்போதெல்லாம் ஹனுமந்த வாகனத்தில் பகவானை காண்கிறோமோ அப்போது எல்லாம் இந்த நிகழ்வு நினைவுக்கு வரவேண்டும். ஶ்ரீராமதூதனான ஹனுமனை போல் பகவத் கைங்கர்யம் செய்ய மனம் துடிக்க வேண்டும். ஹனுமன் வானரமோ மானுடமோ அல்ல அவன் அளப்பறிய இயலாத ருத்ர சக்தி கொண்ட ஶ்ரீராம
தூதன். எனவே ஹனுமந்தனை போல் ஶ்ரீராமனை தூக்கி கொண்டு போக இயலாவிடினும் அந்த வாகனத்தை எழுந்தருள பண்ணும் ஒரு ஶ்ரீபாதம் தாங்கியாகவாவது இருப்போம். அனைத்து பகவத் ஶ்ரீபாதம் தாங்கும் அன்பர்களுக்கும் வந்தனம்.
#கீழப்பாவூர்_நரசிம்மர்_கோவில்
இந்தியாவில் உள்ள நரசிம்மர்
கோவில்களில் அபூர்வமானதும்,
வேறெங்கும் காண இயலாத பல்வேறு
சிறப்புகள் நிறைந்த தலமாக கீழப்பாவூர் நரசிம்மர் கோவில். நரசிம்மருக்குத் தன் பக்தர்கள் மீது பிரியம் அதிகம். நம்மை அறியாமலே, அவர் நாமத்தை சொன்னாலே போதும், ஓடோடிவந்து
காப்பான் என்று எம்பெருமானின் ஈகைக் குணத்தை எடுத்துக் கூறுகிறார் #பொய்கையாழ்வார். முதன் முதலில் நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது அகோபிலம் திருத்தலத்தில். மீண்டும் அவதாரம் எடுத்த தலம் கீழப்பாவூர். அகோபிலத்தில் இருந்து வைகுண்டம் திரும்பி விட்டாலும் நரசிம்மரின் மனம் முழுவதும் பக்தர்களைச்
சுற்றிச் சுற்றியே வந்ததாம். கலியுகத்தில் கலி புருஷனின் மாயையில் சிக்கி, பக்தர்கள் அல்லலுறுவார்களே, அவர்களை மாயையில் இருந்து விடுவித்துக்
காக்க வேண்டுமெனத் தவித்தார் திருமால். அகோபிலத்தில் வெறும் இரண்டு நாழிகைகள் நீடித்திருந்து பணியை முடித்துவிட்டு அவசர அவசரமாகத் திரும்பிவிட்டார்
வழக்கம்போல அந்த ஒரு ஏகாதசியன்றும் நானும் என் நண்பர் கோபுவும் காஞ்சி ஸ்ரீமடத்திற்கு சென்றிருந்தோம். அப்பொழுது எல்லாம் மஹாப்பெரியவாள் எப்பொழுது வேண்டுமானாலும் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீசங்கர மடத்தின் பின்புறத்தில் அவர் உபயோகித்த
மேனாவிற்கு அருகில் தரிசனம் தருவது வழக்கம். நாங்கள் சென்றிருந்த பொழுது அந்த மஹான் 2 வெளி நாட்டுப் பெண்களுடன் கொஞ்சம் தள்ளி வேறுபக்கமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த வெளிநாட்டுப் பெண்கள் இருவரும் 25 வயதுக்குள்ளானவர்கள். நாங்கள் மற்றவர்களுடன் சுமார் 45 நிமிடங்கள் பெரியவர்
தரிசனத்திற்காக காத்துக் கொண்டு இருந்தோம். பரமாச்சாரியாரும் தொடர்ந்து அந்தப் பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர் மூவரைத் தவிர, அந்த பக்கத்தில் வேறு ஸ்ரீமடத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே இல்லை. அந்தப் பெண்களிடம் பெரியவாள் என்ன பாஷையில் பேசுகிறார்கள் என்று எங்கள் எவருக்குமே
#திருமலையில்_மணி
திருமலையில் இன்றும் பூஜை தீபாராதனை நேரங்களில் மணி அடிப்பது இல்லை. காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள துப்புல் கிராமத்தை சேர்ந்தவர்கள் அனந்தசூரி தோத்தாரம்பா என்கிற வைணவ தம்பதியர். குழந்தை பாக்கியம் வேண்டி இருவரும் கால்நடையாக திருப்பதி சென்றனர். அன்றிரவு இருவரும்
சத்திரத்தில் தங்கியிருந்த போது திருமலைவாசனின் சந்நிதியில் அடிக்கப்படும் மணியை, தான் விழுங்கியது போன்று கனவு கண்டார் தோத்தாரம்பா அம்மையார். திடுக்கிட்டு கண் விழித்த அவர், தான் கண்ட கனவை கணவரிடம் கூறிக் கொண்டிருந்த அக்கணம் திருமலை சந்நிதியில் ஒரே பரபரப்பு. பூஜை மணியை காணாததால்
ஆளுக்கொரு பக்கமாக அனைவரும் பதட்டத்துடன் தேடிக் கொண்டு இருந்தனர். அப்போது அசரீரியாய் ஒரு குரல் “அந்த மணியை யாரும் தேட வேண்டாம். புரட்டாசி சிரவண நட்சத்திரத்தில் அந்த மணி ஒரு அற்புத மனிதராக, வேங்கடநாதன் என்கிற பெயரில் துப்புல் அனந்தசூரி தோத்தாரம்பா தம்பதியருக்கு பிறப்பார். அவர்
#ஶ்ரீராகவேந்திரசுவாமி
ஸ்ரீ ராகவேந்திரர் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். இறந்தவரையும் கூட உயிர்ப்பித்திருக்கிறார். கிரீடகிரி என்னும் கிராமத்தில் அவர் நிகழ்த்திய அற்புதம், இறைவனுக்கு எவ்வளவு நெருக்கமானவர் என்று உலகுக்கு எடுத்துச் சொன்னது! கிராமத் தலைவரின் வீட்டில் மூலராமருக்கான
பூஜையும், அதன்பின் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருக்கும் பக்தர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தில் பரிமாறுவதற்காக மாம்பழச் சாறு ஒரு அண்டா நிறைய நிரப்பப்பட்டிருந்தது.
விளையாடிக் கொண்டிருந்த அந்த வீட்டுக் குழந்தை, மாம்பழச்சாறு நிரம்பியிருந்த அண்டாவுக்குள்
எட்டிப் பார்க்க முனைந்து, தடுமாறி அண்டாவினுள் விழுந்து விட்டது. வெளியே வர முடியாமல் தத்தளித்து மூழ்கி விட்டது. அத்தனை பேரும் ஸ்ரீ ராகவேந்திரர் செய்யும் மூலராமரின் பூஜையிலிருந்து விழிகளை அகற்ற இயலாமல் ஈடுபட்டிருந்தனர். சமையல் அறையில் நடந்த விபரீதம் அவர்கள் யாருக்குமே தெரியாது!
#மகாபெரியவா
ஒருமுறை காஞ்சிப் பெரியவா மயிலாப்பூர் வந்த போது, "மணி அய்யர் வீட்டில் இருக்கிறாரா" என்று சீடர்களிடம் விசாரித்தார். அது காலை நேரம். வீட்டில் தான் இருப்பார் என்று தெரிந்ததும், உடனே கிளம்பி கற்பகாம்பாள் நகரில் இருக்கும் மதுரை மணியின் வீட்டுக்கு வந்துவிட்டார். மணி
அய்யருக்கு தூக்கிவாரிப் போட்டு விட்டது. மகா பெரியவாளை பக்தியுடன் வரவேற்றார்.
"ம்....பாடு!" என்றார் மகா பெரியவா.
"நான் இன்னும் ஸ்நானம் கூடப் பண்ணலை, பெரியவா!"
என்றார் மணி அய்யர்.
"நீ சங்கீதம் என்கிற சாகரத்தில் மூழ்கி இருப்பவன். குளிக்காவிட்டாலும் பரவாயில்லை.. பாடலாம்!" என்றார்.
"மிருதங்கம் வாசிக்கிறவா இப்போதான் போனா" என்று இழுத்தார் மணி அய்யர்.
"நான் தாளம் போடுகிறேன், நீ பாடு!" என்று அங்கேயே உட்கார்ந்து கைகளால் தாளம் போட ஆரம்பித்து விட்டார் மகா பெரியவா.
வேறு வழி இல்லை. காஞ்சி மகான் முன் அந்தக் காலை நேரத்தில் பாடினார் மதுரை மணி அய்யர்.
#அகிலாண்டேஸ்வரி_சமேத_ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர்_கோவில் ஊட்டத்தூர்
பல கோடி சூரிய சக்திகள் கொண்ட அபூர்வ நடராஜர் சிலை கொண்டிருக்கும் கோவில், திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த விக்ரகம் உளி கொண்டு செதுக்கப்பட்டது அல்ல. சித்தர்களின் நவலிங்க பூஜையால் சித்தர்கள் வழிபாட்டிற்கு பின் தானாகவே
உருவாகிய அற்புதமான விக்ரகம் ஆகும். இது உருவான பாறை பஞ்சநத பாறை என்று கூறுகிறார்கள். இது மிகவும் அபூர்வமான பாறையாகும். 10 லட்சம் பாறை பூமியில் உருவானால் அதில் ஒன்று தான் பஞ்சநாத பாறையாக இருக்கும். அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கக்கூடிய
கற்கள்தான் பஞ்சநதன பாறை. ஆதலால் இவர் #பஞ்சநதன_நடராஜர் என்று அழைக்கப் படுகிறார். சூரியன் காலையில் புறப்படும் போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக் கூடிய சக்தி இங்கு உள்ள நடராஜருக்கு உண்டு. ஆதலால் நாம் இவரை என்ன நினைத்து வணங்குகிறோமோ அது அப்படியே நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி