அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த திரு ராஜா அண்ணாமலை செட்டியார் நினைவு நாள் இன்று ஜூன் 15, 1948
இன்றைய அரசியல் தலைவர்கள் பெரும்பாலோனோர் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களே! அவர்கள் மட்டுமா? ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், சட்ட வல்லுநர்கள், மாவட்ட ஆட்சித்
தலைவர்கள் என பலரும் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களே!
பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டிருந்த திரு அண்ணாமலை செட்டியார் அவர்கள் இசை மீது பேரார்வம் கொண்டிருந்தார்.
இசைக்கென தனி கல்லூரி ஒன்றையும் நிறுவினார்.
1928ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் தொடங்க அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார்.
அந்த சமயத்தில் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்து வந்தனர்.
இவரது கல்வித் தொண்டை அறிந்த சென்னை கவர்னர் மற்றும் வைஸ்ராய் ஆகிய இருவரும் பல்கலைக்கழகத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.
மேலும் இவர் நிறுவிய அத்தனை கல்வி நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டன.
அதுவே பின்னாளில் .
"அண்ணாமலை பல்கலைக்கழகம்' என்று அழைக்கப்பட்டது.
அதுவரை "சர். அண்ணாமலை செட்டியார்' என்று அழைக்கப்பட்ட இவரை "ராஜா சர் அண்ணாமலை செட்டியார்' என்று அனைத்து மக்களும் பெருமிதத்தோடு அழைத்தனர்.
மனிதநேயம் கொண்ட இக்கொடை வள்ளல் தமது 67வது வயதில் காலமானார்
நன்றி : TP. ஜெயராமன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு காலத்தில் இந்த பேருந்து சேவை இருந்தது என்பது உண்மைதான்
அப்போது உலகின் மிக நீளமான சாலை கல்கத்தாவிலிருந்து லண்டன் வரை இருந்தது
எனவே கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு பஸ்ஸில் செல்ல சாத்தியமானது
இந்தியன் அல்லது ஆங்கில கம்பெனி அல்ல, ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த ஆல்பர்ட் டூர் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கிய சேவை.
1950களின் முற்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் நீடித்தது, சில காரணங்களால் அதை மூட வேண்டியிருந்தது. பேருந்து கட்டணம் 85 - 145 பவுண்டுகள்
கொல்கத்தாவில் தொடங்கி பனாரஸ், அலகாபாத், ஆக்ரா, டெல்லி, லாகூர், ராவல்பிண்டி, காபுல், கந்தர், தெஹ்ரான், இஸ்தான்புல் முதல் பல்கேரியா, யூகோஸ்லாவியா, வியன்னா மேற்கு ஜெர்மனி, பெல்ஜியம் வழியே, சுமார் 20300 கிமீ ஓடி 11 நாடுகளைக் கடந்தது
இந்த பேருந்து லண்டனை சென்றடையும்.
#ஐஸ்_ஹவுஸ்
மெட்ராஸ் வணிக மையமாகத் தொடங்கப்பட்டபோது ஆரம்பப் பரிவர்த்தனைகள் ஜவுளியில் மட்டுமே நடந்தன. சில ஆண்டுகளில் வணிகம் வரம்பில்லாமல் விஸ்வரூபம் எடுக்கவே, வர்த்தக மதிப்புள்ள எதுவும் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டது. யானைகள் முதல் வைரங்கள் வரை இங்கும் அங்குமாகக் கடல்களைக் கடந்தன.
ஆர்மேனியர்கள், யூதர்கள் மற்றும் போர்த்துக்கீசிய வர்த்தகர்கள் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு பொருள்களைக் கொண்டு வந்து குவியல்களாகக் கடற்கரையில் கொட்டி வைத்தனர். அவற்றில் மிக விசித்திரமான இறக்குமதியானது இன்று நாம் அனைவரும் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயன்படுத்துவதாகும்.
அந்த நாட்களில் அது ஒரு பிரம்மப்பிரயத்தனத்திற்குப் பிறகுதான் சென்னைக்கு இறக்குமதி செய்தனர். 1800களில் அதை அமெரிக்காவிலிருந்து கடல் வழியாக 10,000 மைல் கொண்டு வர, மிகவும் விரிவான திட்டமிடல் மற்றும் கடினமான பயணம் தேவைப்பட்டது.
அந்த இறக்குமதி – தண்ணீர். ஆனால் திட வடிவத்தில் கட்டியாக