மனிதனின் பழங்கால ஆசைகளில் ஒன்று பறவைகள் போல வானில் பறக்க வேண்டும் என்பது.
பறக்கும் தொழில்நுட்பம் அமெரிக்காவில் தேர்ச்சி பெற்றபோது மெட்ராஸ் பின்தங்கியிருக்கவில்லை.
ரைட் சகோதரர்கள் தங்கள் விமானத்தைப்
பறக்கவிட்டு 6 ஆண்டுகளுக்குப் பிறகு, மெட்ராஸ் அதன் வானத்தில் ஒரு விமானத்தைக் கண்டது.
நகரத்தின் விமானப் போக்குவரத்து வரலாறு 1910இல் தொடங்கியது.
கோர்சிகா தீவைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஜியாகோமோ டி ஏஞ்சலிஸ் ஒரு விமானத்தை உருவாக்கினார்.
ஜூலை 1909இல் ஆங்கிலக் கால்வாயை முதன்முதலில்
பறந்து கடந்த பிரெஞ்சுக்காரரால் ஈர்க்கப்பட்ட டி’ஏஞ்சலிஸ், நகரத்தின் முன்னணித் தொழிலதிபரான சிம்ப்ஸனுடன் இணைந்து விமானத்தை உருவாக்கினார். இந்த விமானம் முழுக்க முழுக்க டி’ஏஞ்சலிஸின் சொந்த வடிவமைப்பு.
ஒரு சிறிய சக்தி எஞ்சின் பொருத்தப்பட்ட விமானத்தை 10 மார்ச் 1910 அன்று, டி’ஏஞ்சலிஸ்
பல்லாவரம் புறநகரில் சோதனை செய்தார். இது ஆசியாவிலேயே முதல் விமானமாக அமைந்தது. விமானம் சிறப்பாக செயல்பட்டதால் அவர் விமானம் பறக்கும் கண்காட்சியைத் தீவுத்திடல் மைதானத்தில் பறக்க ஏற்பாடு செய்து டிக்கெட்டுகளுக்குப் பணம் வசூலித்தார்.
விமானங்கள் போக்குவரத்தைவிட ஒரு பொழுதுபோக்காகப்
பார்க்கப்பட்ட காலமது. எனவே நகரத்தின் பணக்காரர்களிடையே பறக்கும் ஆர்வத்தை உருவாக்க 1911ஆம் ஆண்டு ஐரோப்பிய விமான விற்பனையாளர்களின் குழு மெட்ராஸ் வந்தது. ஒரு விமானத்தை வாங்கும் அளவுக்குப் பணக்காரர்களாக இருந்தவரைக் கவர, அவர்கள் பறந்து காட்டினார்கள். அதுவும் பல்லாவரத்தில்தான். மலைகளால்
சூழப்பட்டிருந்தாலும், புனித தாமஸ் குன்றுக்கும் பல்லாவரத்துக்கும் இடையே இருந்த பரந்த இடம் விமான ஆர்வலர்களையும் ஈர்த்தது.
விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, மெட்ராஸ் ஃப்ளையிங் கிளப் என்று அக்டோபர் 1929ல் ஒரு தனியார் சங்கம் நிறுவப்பட்டது.
ஹாக்கர் என்ற ஆசிரியருடன், முதல் கற்பித்தல் விமானம் 1930ல் வானில் பறந்தது. அன்றிலிருந்து 90 ஆண்டுகளில், மெட்ராஸ் ஃப்ளையிங் கிளப் 1,500க்கும் மேற்பட்ட விமானிகளை உருவாக்கியுள்ளது.
மற்றொரு பறக்கும் பயிற்சியாளர் 1935இல் சென்னையிலிருந்து கொழும்புக்கு முதல் சர்வதேச விமானத்தை இயக்கினார்
1914ஆம் ஆண்டு, நீர்நிலைப் பொறியாளரான மேட்லி, (இன்றும் மேட்லி சுரங்கப்பாதைக்கு அவரது பெயர் உள்ளது) தான் தயாரித்த விமானத்தை ரெட் ஹில்ஸ் நீர்த்தேக்கத்தின் மீது ஓட்டி விமானத்தில் இருந்து மெட்ராஸின் முதல் வான்வழி புகைப்படங்களைப் படம்பிடித்தார்
அக்காலகட்டத்தில் செட்டியார்கள்
பர்மாவிலும் கிழக்கு ஆசியாவிலும் பெரும் செல்வத்தை ஈட்டியதால், அவர்களின் வாழ்க்கை முறை அரசர்களுக்குச் சமமாக இருந்தது. அவர்களின் பொழுதுபோக்கில் ஒன்று வானத்தில் பறப்பது என்பதில் ஆச்சரியமில்லை.
மெட்ராஸ் ஃப்ளையிங் கிளப் முதல் உறுப்பினர்கள் ஆவடையப்பன், எஸ்.ஏ.ஏ. அண்ணாமலை மற்றும்
சோலையப்பன் ஆகிய நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் மூவரும் விமானங்களைச் சொந்தமாக வைத்திருந்ததால், சென்னைக்குத் தெற்கே 250 மைல் தொலைவில் உள்ள செட்டிநாடு கிராமத்தில் மற்றொரு பறக்கும் கிளப்பைத் தொடங்கினர். 1931ல் தனியார் விமானி உரிமம் பெற்ற முதல் தென் இந்தியர் ஆவடையப்ப செட்டியார்.
1932ஆம் ஆண்டில், ஜே.ஆர்.டி. டாடா, கராச்சி ஏரோட்ரோமில் இருந்து பம்பாய்க்கு அஞ்சல் கடிதங்களை ஏற்றிச் செல்லும் ஒற்றை எஞ்சின் கொண்ட டி ஹேவிலாண்ட் விமானத்தை ஓட்டினார். விமானி நெவில் வின்ட்சென்ட் என்பவரால் பம்பாயிலிருந்து பெல்லாரி வழியாக மெட்ராஸ் வரை அந்த விமானம் தொடர்ந்தது.
இரண்டாம் உலகப் போரின் போது, சிங்கப்பூரின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்த விமான ஓடுபாதையை மேம்படுத்துவதற்கான வேலை நடந்தது. மெட்ராஸை வைத்து உலகப்போரை வென்றுவிடலாம் என்று மிகவும் ஆர்வமாக இருந்த ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF), ரெட் ஹில்ஸ் நீர்த்தேக்கத்தில் கூடக் கடல் விமானங்களைத் தரையிறக்கியது
தென்னிந்தியாவில் 13 ஏரோட்ரோம்கள் இயக்கப்பட்டன. ஏற்கெனவே உள்ள விமான நிலையங்கள் RAF ஆல் கையகப்படுத்தப்பட்டன. பல்லாவரம் விமான ஓடுதள பயன்பாடு இரண்டாம் உலகப் போரின் போது ராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. விமான நிலையம் செயின்ட் தாமஸ் மவுண்ட் பேஸ் என அழைக்கப்பட்டது
போர் முடிந்தவுடன், அழகப்ப செட்டியார் போர் உபரி விமானங்களை ஏலத்தில் வாங்கி, இந்த விமான நிலையத்தை மையமாக வைத்து தனது ஜூபிடர் ஏர்வேஸ் தொடங்கினார்.
1954இல் ஒரு நாகரீகமான விமான நிலையம் உருவாக்கப்பட்டது. ஆர்ட் டெகோ என்ற அப்போதைய பிரபலமான கட்டடக்கலை வடிவமைப்பு கட்டடத்திற்கு மென்மையான
வளைவுகளை வழங்கப் பயன்படுத்தப்பட்டது. விமான நிலைய நுழைவாயில் மீனம்பாக்கம் கிராமத்தில் இருந்ததால், மீனம்பாக்கம் ஏர்போர்ட் என்று அப்பெயரில் அழைக்கப்பட்டது.
1980 களில் விமான நிலையக் கட்டடங்கள் சோழர்களின் பழமையான கோயிலைக் கொண்ட திருசூலம் என்ற அடுத்த கிராமத்திற்கு மாற்றப்பட்டன.
தேசிய மற்றும் சர்வதேச விமான நிலையங்களுக்குத் தமிழகத்தின் இரண்டு முன்னாள் முதல்வர்களான காமராஜ் மற்றும் அண்ணாதுரை பெயர் சூட்டப்பட்டது. மீனம்பாக்கத்தில் உள்ள பழைய விமான நிலையம் சரக்குகளைக் கையாளும் விமான நிலையமாக மாறியது.
மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் ஆகஸ்ட் 2, 1984
அன்று ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மொத்தம் 33 பேர் கொல்லப்பட்டனர் .மற்றும் 27 பேர் காயமடைந்தனர். தமிழீழ ராணுவம் (TEA) இலங்கை விமானத்தில் வெடிகுண்டை அனுப்ப முயன்றதாகத் தெரிய வந்தது. ஆனால் பெட்டி ஏற்றப்படவில்லை. விமான நிலையத்தில் வெடித்தது.
இன்று இந்தியாவில் நன்கு
பயன்படுத்தப்படும் விமான நிலையங்களில் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு 5வது இடம். ஒரு வருடத்தில் இந்த விமான நிலையத்தை 1.8 கோடி பயணிகள் பயன்படுத்துகின்றனர். சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் ஒன்றையொன்று ஒட்டி அமைந்துள்ள இந்தியாவின் முதல் விமான நிலையமும் இதுவாகும்.
அடையாறு ஆறு, விமான நிலையத்தின் எல்லையை ஒட்டி ஓடுகிறது. சென்னை விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகள் உள்ளன,ஒன்று 3.5 கிமீ நீளமும் மற்றொன்று 3 கிமீ நீளமும் கொண்டது. இரண்டாவது ஓடுபாதையின் தேவையால் ஆற்றின் மேல் பாலம் அமைக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு அதிக மழை பெய்து ஏரிகள் திறக்கப்பட்டபோது
பாலத்தின் அடியில் இருந்த சிறிய இடைவெளியால் அடையாறு தண்ணீர் வரத்து தடைப்பட்டது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து விமான நிலையத்திலும் நகரத்திலும் பெரும் அழிவை ஏற்படுத்தியது.
மெட்ராஸ் ஃப்ளையிங் கிளப், போயிங் மற்றும் ஏர்பஸ் விமானங்களுடன் போட்டியிட முடியாமல், திருச்சிக்குப் புறப்பட்டது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1964 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் பல பல இடங்களில் Whites only போர்டுகள் இருந்திருக்கின்றன.
இங்கே வெள்ளையர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற மிக மோசமான நிறவெறி கொள்கையை ஹோட்டல்கள், தியேட்டர்கள், ஸ்விமிங் பூல்கள் என்று பல
இடங்களில் பின்பற்றி இருக்கின்றனர்.
கறுப்பினத்தவர் இதை எதிர்த்து கடுமையாக போராட அதிபர் கென்னடி இந்த நிறவெறியை தடை செய்யும் சட்டம் கொண்டு வர அதற்கான முன் ஏற்பாடுகள் செய்து அதை அறிமுகப்படுத்தும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன் பிறகு லிண்டன் பி ஜான்சன் அதிபராக பொறுப்பேற்றார்
கிட்டத்தட்ட ஒருவருடம் அச்சட்டத்தை கிடப்பில் போட்டு விடுகிறார். St. Augustine movement என்ற அமைப்பு இப்பிரச்சனையில் மிக தீவிரமாக இறங்கி போராடுகிறது.
அதனால் ஈர்க்கப்பட்ட பல இளைஞர்கள் வெள்ளையர்களின் நிறவெறியை எதிர்த்து அதிரடிக்கின்றனர்.
ஒரு காலத்தில் இந்த பேருந்து சேவை இருந்தது என்பது உண்மைதான்
அப்போது உலகின் மிக நீளமான சாலை கல்கத்தாவிலிருந்து லண்டன் வரை இருந்தது
எனவே கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு பஸ்ஸில் செல்ல சாத்தியமானது
இந்தியன் அல்லது ஆங்கில கம்பெனி அல்ல, ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த ஆல்பர்ட் டூர் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கிய சேவை.
1950களின் முற்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் நீடித்தது, சில காரணங்களால் அதை மூட வேண்டியிருந்தது. பேருந்து கட்டணம் 85 - 145 பவுண்டுகள்
கொல்கத்தாவில் தொடங்கி பனாரஸ், அலகாபாத், ஆக்ரா, டெல்லி, லாகூர், ராவல்பிண்டி, காபுல், கந்தர், தெஹ்ரான், இஸ்தான்புல் முதல் பல்கேரியா, யூகோஸ்லாவியா, வியன்னா மேற்கு ஜெர்மனி, பெல்ஜியம் வழியே, சுமார் 20300 கிமீ ஓடி 11 நாடுகளைக் கடந்தது
இந்த பேருந்து லண்டனை சென்றடையும்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த திரு ராஜா அண்ணாமலை செட்டியார் நினைவு நாள் இன்று ஜூன் 15, 1948
இன்றைய அரசியல் தலைவர்கள் பெரும்பாலோனோர் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களே! அவர்கள் மட்டுமா? ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், சட்ட வல்லுநர்கள், மாவட்ட ஆட்சித்
தலைவர்கள் என பலரும் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களே!
பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டிருந்த திரு அண்ணாமலை செட்டியார் அவர்கள் இசை மீது பேரார்வம் கொண்டிருந்தார்.
இசைக்கென தனி கல்லூரி ஒன்றையும் நிறுவினார்.
1928ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் தொடங்க அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார்.
அந்த சமயத்தில் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்து வந்தனர்.
இவரது கல்வித் தொண்டை அறிந்த சென்னை கவர்னர் மற்றும் வைஸ்ராய் ஆகிய இருவரும் பல்கலைக்கழகத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.
மேலும் இவர் நிறுவிய அத்தனை கல்வி நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டன.