விஸ்வா | VISWA Profile picture
Jun 21 18 tweets 6 min read Twitter logo Read on Twitter
#என்ன_செய்தார்_கலைஞர் 2

ஆங்கில இணையதளம் ஒன்றில் ஓய்வுபெற்ற பத்திரிக்கையாளர் கலைஞர் குறித்து ஒரு கட்டுரை எழுதினார்

அதில் "தமிழக_அரசில் மேலோங்கி இருந்த #பிராமண ஆதிக்கத்தை ஒழித்து எல்லோரும் அதில் இடம்பெறச் செய்தார் கருணாநிதி.

ஆனால் அதைத்தவிர பெரிய சாதனை ஒன்றும் செய்யவில்லை" Image
இதில் சிறுமைப்படுத்துவதாக எண்ணி கலைஞரை புகழ்ந்திருக்கிறார்.

#நெல்சன்மண்டேலா கறுப்பினத்தவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்தார் மற்றபடி பெரிதாக ஒன்றும் செய்யவில்லை எனச் சொன்னால் எவ்வளவு அபத்தமோ அப்படித்தான் இதுவும்.

கலைஞர் என்ற அந்த பிரம்மாண்டத்தை சிறுமைப்படுத்த பலர் தங்கள்
வாழ்க்கையையே அர்ப்பணித்து அதேபணியாய் இருந்தும்கூட இறுதியில் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்

ஐ ரோபோட் என்ற ஆங்கிலப்படத்தில், “நாங்களும் மனிதர்களுக்கு இணையானவர்கள் தான்” எனச் சொல்லும் ரோபோட்டைப் பார்த்து அப்படத்தின் நாயகன் வில் ஸ்மித், " உன்னால் சிம்பொனி எழுத முடியுமா?" என்பார் Image
அதற்கு அந்த ரோபோட், “உன்னால் முடியுமா?” எனத் திருப்பிக் கேட்கும்.

வில் ஸ்மித் மூக்குடைபட்ட அதிர்ச்சியில் அமைதியாகிவிடுவார்.

1970 களில் கலைஞருக்கு கணிணி அறிமுகம் செய்யப்பட்டபோது, கம்ப்யூட்டர் எல்லாமே செய்யும் அய்யா,” என யாரோ சொல்ல, கவிதைஎழுதுமா?” என சிரித்தபடியே
திருப்பிக் கேட்டிருக்கிறார் கலைஞர்.

ஒருவேளை ஐ ரோபோட் திரைப்படத்தில் ரோபோட்டுக்கும் வில் ஸ்மித்துக்கும் நடந்த உரையாடல் ரோபோட்டுக்கும் கலைஞருக்கும் இடையே நிகழ்ந்திருந்தால் ரோபோட் மூக்குடைபட்டிருக்கும்.

முதன்முதலில் திமுக தேர்தலில் நிற்கும் என அறிவிக்கப்பட்டபோது கலைஞர் பெரிதும் Image
எதிர்பார்த்த நாகப்பட்டினம் தொகுதிக்கு பதிலாக குளித்தலை அவருக்கு தரப்பட்டது.

எந்த முகசுழிப்பையும் கலைஞர் காட்டவில்லை. கட்சிக்கு கட்டுப்பட்டு குளித்தலையில் நின்று வெற்றி பெற்றார்.

தேர்தல் நிதி பத்து லட்சம் திரட்டப்போவதாக மேடையில் தன்னிச்சையாக அறிவித்தார்.

அண்ணாவுக்கே அதிர்ச்சி
மேடையில் இருந்து இறங்கியபின், “என்னப்பா இப்படி அறிவித்துவிட்டாய்? பத்து லட்சம் நம்மால் எப்படித் திரட்ட முடியும்? அதற்கு நாம் எங்கே போவது?” என வருந்தினாராம்.

கலைஞர் திரட்டிக் கொடுத்ததோ பதினொரு லட்சம்!

காமராசர் தோற்கடிக்க நினைத்த 15 பேர்கள் கொண்ட லிஸ்டில் அண்ணா உட்பட 14 பேர் Image
காமராசரின் திட்டப்படி தோற்க, வெற்றிபெற்றதோ கலைஞர் ஒருவர்தான்.

மிசா காலத்தில் அதே காமராசரின் ஆதரவைப் பெற்றவரும் கலைஞர் தான்.

இந்தியாவெங்கும் மிசாவைக் கண்டு நடுங்கிக்கொண்டிருக்க, சினிமாக்களில் வாள் சுழற்றிய எம்.ஜி.ஆர் கூட மிசாவை ஆதரித்து தீர்மானம் போட்ட சூழலில் Image
தனியாளாக மெரினா கடற்கரையில் மிசாவுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தவர் கலைஞர்.

இந்திய_அமைதிப்படையை வரவேற்கப் போகாதது ப்ரோட்டோக்கால் மீறல் எனத் தெரிந்தும் அதை துணிச்சலாகச் செய்து ஆட்சியை இழந்தவர் கலைஞர்.

லோக் ஆயுக்தாவுக்கு முன்னோடியாக ஓய்வுபெற்ற நீதிபதிகளின் தலைமையில்
ஊழல் வழக்குகளை விசாரிக்கலாம், அதில் இந்நாள் முன்னாள் முதல்வர்களை சேர்த்துக்கொள்ளலாம் என சட்டமியற்றிவர் கலைஞர்.

அதை ரத்து செய்ததோ #எம்_ஜி_ஆர்!

மதுவிலக்கை ரத்து செய்து விட்டு ஒரே ஆண்டில் அதை மீண்டும் அமல் படத்தியவர் கலைஞர்.

மீண்டும் ரத்து செய்ததோ எம்ஜிஆர்.

பழியோ கலைஞர் மேல் Image
#சர்க்காரியா_கமிஷன் பற்றித் தெரிந்த நமக்கு எம்.ஜி.ஆர் மீதான #ரே_கமிஷன் பற்றித் தெரியுமா?

கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான தீர்மானத்தை திமுக நிறைவேற்றியபோது அதிமுகபுறக்கணித்தது.

ஆனால் பழியோ கலைஞரின் மேல்!

இப்படி எத்தனையோ விஷயங்களில் எவ்வளவு விஷயங்கள் நமக்கு
உண்மையாக கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று பார்த்தால் கலைஞர் மீதான விமர்சனங்களில் 99% உண்மைக்கு புறம்பாகவோ அல்லது மறைக்கப்பட்டோதான் வைக்கப்பட்டிருக்கின்றனவே தவிர நேர்மையானதாக இல்லை என்பது தெரியும்.

கொஞ்சநாள் முன்பே திருமணம் ஆன தன் மகனை_மிசாவில் கைது செய்ய போலீஸ் வீடுதேடி Image
வந்திருக்கும்போது, “அவன் வீட்டில் இல்லை. வந்தவுடன் நானே அனுப்பிவைக்கிறேன்,”

எனச் சொல்லிவிட்டு அதேபோல் மகன் வந்தவுடன் அவரை அனுப்பிவைக்க அவரால்தான் முடியும்.

இத்தனைக்கும் அப்போது கலைஞர் முதல்வர்

நடு இரவில் கைதாகி கையை உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு அதை போலீஸ் முறுக்கியபோதும்
பிரஸ்மீட்டில், “முருகேசன் அல்லவா அதான் முறுக்கிவிட்டார்,” என அவரால் ஜோக் அடிக்க முடியும்.

தேர்தலில் தோல்வியுற்ற அடுத்த நாளே அதே புன்னகையுடன் பத்திரிக்கையாளர்கள் முன்தோன்றி, எதிர்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்பட முடியும். மழையையும், வெயிலையும் அவரால் ஒன்றாகப் பார்க்க முடியும். Image
வெற்றியும், தோல்வியும் அவருக்கு இரவு பகல் போல இயல்பானதொன்றுதான்.

புறச்சூழல் எதுவுமே அவரை பாதிப்பதில்லை. அந்த மூளையையோ, அந்த இதயத்தையோ எந்த பதட்டமும், கோபமும், எரிச்சலும் ஆட்கொண்டு யாருமே பார்த்ததில்லை.

அந்த மனிதன் ஒரு எஃக்கு கோட்டை. அதனால்தான் 94 வயது வரையிலும், Image
“நீயா நானா பார்க்கலாம்,” என காலத்துடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

காலத்தால் அழிக்கப்படும் காலத்தை எல்லாம் கலைஞர் எப்போதோ தாண்டிவிட்டார் என்பது காலத்துக்கும் தெரியும்.

கலைஞரை தலைவராக ஏற்பதும் ஏற்காததும் அவரவர் அரசியல் கொள்கைகளைப் பொறுத்தது.

ஆனால் நம் வாழ்க்கையின் சோதனையான
ஒவ்வொரு காலகட்டங்களிலும் அவர் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஏராளமான விஷயங்கள் உண்டு.

இப்போது பேசிக்கொண்டிருப்பது கலைஞர் எனும் மனிதனைப் பற்றியல்ல, கலைஞர் எனும் சூப்பர் ஹீரோவைப் பற்றி.

கலைஞர் எனும் சின்னத்தைப் பற்றி. சிறுவயதில் ராணி காமிக்ஸ் வாசித்திருப்பவர்களுக்குத் Image
தெரியும். மாயாவியின் முத்திரை சின்னம் எப்படி எதிரிகளுக்கு உதறல் எற்படுத்துமோ, அதைப் போல கலைஞர் எனும் அந்தச் சின்னம், அந்த வார்த்தை இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமூகநீதி எதிரிகளுக்கு உதறலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with விஸ்வா | VISWA

விஸ்வா | VISWA Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VIS1976AL

Jun 20
#என்ன_செய்தார்_கலைஞர் 1

நான் சார்ந்திருக்கும் கவுண்டர் சமூகத்திற்கு கலைஞர் என்னதான் புடுங்கினார் என்பவர்களுக்கு நான் என்னில் இருந்தே விளக்குகிறேன்.

நான் 10வது தேர்ச்சி பெற்றவருடம் 1985.

டிசியை வாங்குகிறேன் அப்பவெல்லாம் சாதிச்சான்றிதழைப்பற்றி ஒரு மயிறும் தெரியாது. Image
டிசியில் வெள்ளாளார் என்று இருக்கு.

அதற்குப்பிறகு தொழில்கல்வி அதாவது கோவை ITI யில் எலக்ட்டீரிசியன் மோட்டார் மெக்கானிக்கல்.

இரண்டிற்கும் என் தாயாரின் தோழியான சுகுணா டீச்சரின் கணவர் அன்றைக்கு ITI ஆசிரியர் அவரிடம் சொல்லி அவர் விண்ணப்பிக்கிறார்.

கொங்கு வேளாளர் என்று டிசியில்
இருந்தால் உங்கள் மகனுக்கு எளிதாக ஐடிஐயில் வாய்ப்புடைக்கும் என்று என்று என் அம்மாவிடம் சுகுணாடீச்சரின் கணவர் சொல்லுகிறார்

அன்றைக்கு என்பெரியப்பாவான நடராசன் ஆசிரியர் தலைமை துணை ஆசிரியர்.

அவரிடம் என்னை அழைத்து முறையிட்டபோது இனி யெல்லாம் மாற்ற முடியாது என்றார்.
Read 10 tweets
Jun 19
வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையை திறந்து

பரிவை விதைத்து பாசத்தை அறுவடை செய்த ராகுல்

இதனால் தான் ராகுல் பெற்ற ஆதரவில் 1% கூட தமிழ்நாட்டில்
போஸ் பாண்டி பெற முடியவில்லை

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் #RahulGandhi
இந்தியாவின் மாபெரும் ஆளுமைக்கு பேரனாக பிறந்தவரை பப்பு என்று கட்டமைக்க பல்லாயிரம் கோடி செலவு செய்து ஆர்எஸ்எஸ் செய்த முயற்சியை எல்லாம் முறியடித்து தன்னுடைய புத்திசாலித்தனத்தால் உலகின் அறிவு ஜீவிகள் கவனிக்கும் தலைவராக உருவெடுத்து இருக்கிறார் ராகுல். Image
பத்து ஆண்டு பிஜேபி ஆட்சி உண்மை பப்பு யார் என்பதை, ஒத்த பைசா செலவு செய்யாமலே உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.

சூரியனின் எழுச்சி வரை ஊளையிட்டுக் கொண்டிருந்த சிருநரிகள் இருக்கும் இடம் தெரியாது பதுங்க

சிங்கம் நீ தான் என விடியலின் வெளிச்சம் காட்டி விட்டது Image
Read 5 tweets
Jun 18
90 வயது முதியவருடன் குஷ்புவை இணைத்து பேசிய நாகரீகமான உலகம் அல்லவா இது...!?

அதை கண்டும் காணாது, கேட்டும் கேளாமலும் நகர்ந்த நாகரீகமானா பெண்ணியங்கள் நிறைந்த உலகம் இல்லயா இது..!? Image
@magorarasigan @its_me_King1 @Pugal0405gmail4 @IlovemyNOAH2019 @vasantalic @VetriKondanPDKT @karikaalan555 சங்கிகள் உடன் சண்டை போட்டு அடிக்கடி கூப்பில் அமருபவர்களுக்கு தெரியும்.
கலைஞர் குடும்பத்தை தரம் தாழ்ந்து பேசுவதில் என்ன உச்சம் தொடுவார்கள் என்று.

அப்படி என்ன பேசி விட்டார் இந்த மனிதர்? ஒட்டுமொத்தமாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தூக்குவதெல்லாம் அதீதம்

ஆழ்ந்த வருத்தங்கள் Image
@magorarasigan @its_me_King1 @Pugal0405gmail4 @IlovemyNOAH2019 @vasantalic @VetriKondanPDKT @karikaalan555 இந்த வேகத்தை

திருமதி. கனிமொழி அக்காவை கீழ்த்தரமான வார்த்தைகளில் விமர்சிக்கும் சங்கிகளிடமும் அடிமைகளிடமும் காட்டி இருந்தால்

பதிலுக்கு விமர்சனம் என்ற பேச்சே வந்திருக்காதே..

தமிழ்நாடு அரசியலை சீரழித்து தனி நபர் தாக்குதலை தொடங்கி வைத்ததே சங்கிக தானே..
Read 4 tweets
Jun 18
மஹாபாரத ஆத்தாவுக்கு ஜெய் எனக் கோசம் போட்டது, மீடியாக்காரன் காதில் பாரத் மாதா கி ஜெய் என விழுந்திருக்கும் போல..

#பாஞ்சாலியும்_5பிஜேபிக்காரனும்
.
திரு வெங்கடேஷ் பூரண நலம் பெற்று திரும்ப வேண்டும் Image
எண்ணற்ற நகைச்சுவை மேடை நிகழ்ச்சிகள் தயாரித்து அளித்து வருபவர். பல வெளி நாடுகளிலும் அவருடைய காமெடி நிகழ்ச்சிகள் சக்கை போடு போட்டு வருகின்றன. சின்னத்திரை மட்டுமல்லாது சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் Political Satire - அரசியல் நய்யாண்டி யில் அவருக்கு ஈடு இணை யாருமில்லை எனலாம்
சமூக வலைத்தளங்களில் அவருடைய நய்யாண்டி பதிவுகளை தழுவி நான் மீம்ஸ் தாயாரித்து பதிவிட்டுள்ளேன். வெளியே அனைவரையும் சிரிக்கவைத்து வருபவர்களின் சொந்த வாழ்க்கையில் பல சோகங்கள் மறைந்துள்ளன அவருக்கும் அவருடைய துணைவியாருக்கும் மணமுறிவு ஏற்படும் அளவுக்கு பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன
Read 5 tweets
Jun 11
ஓகே...ஓகே... ஜண்டா ஜி....

9 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து எவ்வளவு லட்சம் கோடிகள் வரி வருமானமாக ஜிஎஸ்டி..தனிநபர் வருமானவரி...பிற வரிகள்....நீங்க ( ஒன்றிய அரசு) வாங்கினீங்க ???
அதில் எத்தனை % தமிழ் நாட்டிற்கு கொடுத்தீங்க.????
அதையும் சொன்னாத்தானே... மக்கள் நம்புவாங்க....
ஹலோ... Image
இது தமிழ் நாடு...எதை சொன்னாலும்....சொன்னதை‌ நோண்டி நொங்கை எடுத்திடுவோம்.. ...
So... எதையும் பைத்தியக்கார தனமாக உளற‌ வேண்டாம்......
🤪🤪🤪

வெளிநாடுகளில் தமிழ் மொழி னு நீங்க பேசி விட்டால் உடனே தமிழுக்கு பெருமை சேர்த்தது பிஜேபி ஆகிவிடுமா????

இதை கேட்டு உண்மை னு நம்ப நாங்க என்ன Image
வடமாநில முட்டாள்களா???😡😡😡😡😡😡

தமிழன் தமிழ் னு எவன் கத்துனாலும்.தமிழ் காக நின்றது DMK தான் அதன் கொள்கை தான் 🤔🤔🤔

மறுக்க முடியுமா??????

1965இந்தி எதிர்ப்பு போராட்டம் அன்றே நடத்தி பல தொண்டர்கள் துப்பாக்கி சூட்டையையும் மீறி தமிழுக்காக நின்றவர் கலைஞர் மட்டுமே .... Image
Read 4 tweets
Jun 11
#சூரரைப்_போற்று

கோரமண்டல் விபத்துக்குள்ளான
10 நாளில் மேலும் 6 விபத்துக்கள்.

அதனைத் தொடர்ந்து சங்கி கூட்டம் முன்வைக்கும் ரயில்வேயை தனியார் மயமாக்கு கோஷம்.

இதற்கு முன்பும் ரயில்வேயை கைவிட அரசு முயன்ற போது கோமாளி என்று சங்கிகளால் அழைக்கப் பட்ட லாலு பொறுப்பேற்று லாபகரமாக்கினார் Image
2004-09 இல் லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சர் ஆவதற்கு முன்பு நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று இந்திய பொருளாதார மேதையும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் இணை கவர்னருமான ராகேஷ் மோகன் தலைமையில் பொருளாதார வல்லுனர்கள் கூடிய குழு கலந்தாலோசித்து Image
முடிவில் இனி ரயில்வேயை தனியார் மயமாக்கிவிடுதல் நல்லது நஷ்டத்தில் இருந்து மீளவே முடியாது என்று அறிக்கை அளித்தது.

இந்தச்சூழ்நிலையில் தான் லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சர் என்ற பொறுப்பை ஏற்கிறார். லல்லு ஒன்றும் பொருளாதார மேதை அல்ல ரயில்வே துறை என்பது மிகப்பெரிய பொறுப்பு. Image
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(