திண்டுக்கல் மாவட்டம் #தாடிக்கொம்புவில் வரலாற்று சிறப்பு மிக்க #சௌந்தரராஜப்_பெருமாள் கோவில் அமைந்துள்ளது. விஜயநகர பேரரசர்களான அச்சுத தேவராயர் மற்றும் ராமதேவராயர் ஆகிய மன்னர்களால் கலைச்சிற்ப நுணுக்கத்துடன் இந்த கோவில் அமைக்கப்பட்டது. இக்கோவிலில் உள்ள பெருமாள் பக்தர்களால் அழகர்ப்
என்று அன்போடு அழைக்கப்பட்டு, வணங்கப்பட்டு வருகிறார். தாடிக்கொம்பு அருகே வடக்கு நோக்கி செல்லும் குடகனாறு ஆற்றங்கரையில் அமர்ந்து மண்டூக முனிவர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டு இருந்தார். அவரது தவத்திற்கு இடையூறு செய்யும் விதமாக தாளாசூரன் என்ற அரக்கன் பல்வேறு இடையூறுகளை செய்து
வந்தான். இதனால் மதுரையை அடுத்த அழகர்மலையில் உள்ள திருமாலிருஞ்சோலை கள்ளழகரை நோக்கி தனது தவத்திற்கு உதவி செய்ய வேண்டி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தால் ஈர்க்கப்பட்ட திருமாலிருஞ்சோலை அழகர், மண்டூக முனிவருக்கு இடையூறு செய்த தாளாசூரன் என்ற அரக்கனை வதம் செய்து முனிவரின் தவத்தை தொடர
உதவி செய்தார். பின்னர் முனிவரிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அவரும் கள்ளழகர் இப்பகுதியில் வாசம் செய்து இப்பகுதியில் வாழும் மக்களை காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முனிவரின் வேண்டுதலை ஏற்று தாடிக்கொம்பு பகுதியிலேயே கள்ளழகர் என்ற சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி,
வீற்றிருக்கிறார். இந்த கோவிலில் சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாளுடன் நின்றகோலத்தில் எழுந்தருளி உள்ள மூல சன்னதியும், சவுந்தரவல்லி தாயாருக்கு என தனி சன்னதியும், ஆண்டாளுக்கென்று ஒரு தனி சன்னதியும் அமையப்பெற்றுள்ளது.
இது தவிர பரிவார மூர்த்திகளான நம்மாழ்வார்,
இரட்டை விநாயகர், ஹயக்ரீவர், தன்வந்திரி பெருமாள், லட்சுமி நரசிம்ம பெருமாள், வேணுகோபால சுவாமி, ராம பக்த ஆஞ்சநேயர், சொர்ண ஆகர்ஷண பைரவர், விஸ்வக்சேனர் ஆகிய தெய்வங்களுக்கும் சன்னதிகள் உள்ளன. மேலும் கோவிலுக்கு வெளியே தென்புறத்தில் சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்
பாலிக்கிறார். கல்விக்கு ஹயக்ரீவர், உடல்நலத்திற்கு தன்வந்திரி பெருமாள், கடன்களில் இருந்து மீள லட்சுமி நரசிம்மர், திருமண தடை நீங்க ஆண்டாள், ரதி, மன்மதன், குழந்தை பாக்கியம் கிடைக்க வேணுகோபால சுவாமி, பொருளாதார சிக்கல்கள் நீங்க சொர்ண ஆகர்ஷண பைரவரை பக்தர்கள் வணங்கினால் தங்களது
வேண்டுதல் நிறைவேறும். அனைத்தும் நிறைவேற திருவோண நட்சத்திரம் அன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் சவுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு சகல வரங்களையும் அளிக்கும் ஒரே தலமாக இக்கோவில் விளங்குகிறது. இந்த கோயில் பொ.யு 12ஆம் நூற்றாண்டில் சுந்தரபாண்டியன் காலத்து 800 ஆண்டுகள்
பழமையான திருக்கோயில் என்ற போதிலும் விஜயநகர பேரரசு காலத்தில் அச்சத தேவராயர், ராமராயர் ஆகியோர் கோயிலை கட்டியுள்ளனர். ஊஞ்சல் மண்டபம், மகா மண்டபம், அரங்க மண்டபம் ஆகியவை விஜயநகர பேரரசு காலத்தினால் கட்டப்பட்டது. மகா மண்டபத்தின் முகப்பில் இருபுறங்களிலும் இசை தூண்களும் பிரம்மாண்ட
யாளிகளும் உள்ளன. ஒவ்வொரு தூண்களும் ஒவ்வொரு இசை வெளிப்படுத்துவது இந்த கோயிலின் தனிச்சிறப்பாகும். கோயிலின் திருச்சுற்று மதில் சுவற்றில் கிழக்கு நோக்கி ராஜகோபுரம் 5 நிலைகளையும் ஐந்து கலசங்களையும் கொண்டுள்ளது. விஷ்ணுவின் தசாவதார சிற்பங்கள் பல வண்ணங்களில் கோபுரத்தை அலங்கரிக்கின்றன.
இந்த கோயிலின் வளாகத்தில் நான்கு பிரகாரங்கள் சன்னதி மண்டபம், சிற்பங்கள், வண்ண சுவரோவியங்கள் காணப்படுகின்றன. செளந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற திருக்குரத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஸ்ரீ கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் விரிந்த
சிறகுகளுடனும் பக்தர்களின் துயர் தீர்க்க பகவான் புறப்பட்டால் சுமந்து செல்ல தயார் நிலையில் மூவர்களுக்கு எதிரே எழுந்தருளி உள்ளார். பிரகாரத்தின் தென் திசையில் செளந்தரவல்லி தாயார் சன்னதியும் வட மேற்கில் ஸ்ரீ ஆண்டாள் சன்னதியில் உள்ளன. கோயிலின் சுற்றுப் பயாரங்களில் ஸ்ரீ ஆனந்த விநாயகர்,
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ வேணுகோபால் சுவாமி, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என பரிகார தெய்வங்கள் உள்ளன. சிவப்பெருமானின் ஒரு அவதார மாக இருப்பவர் பைரவர். பெரும்பாலும் வைணவ திருத்தலங்களில் பைரவர் எழுந்தருள்வது கிடையாது. ஆனால் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில்
வடகிழக்கு மூலையில் பெருமாளின் பொக்கிஷ காவலராகவும், சேத்திர பாலகராகவும் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். தேய்பிறை அஷ்டமி தினத்திலும், ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலையில் ராகு கால நேரத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு வழிபடுவதன் மூலம் வராக்கடன்கள் வரப்
பெறுவதுடன், இழந்த சொத்துகள் மீளபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடைபெறும் பூஜையில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக வந்து சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பால், இளநீர், தேன் மற்றும் அரளிப்பூ உள்ளிட்ட பூஜை பொருட்களை
காணிக்கையாக அளித்து வழிபாடு செய்கின்றனர். ஞானசக்தி அருளும் ஹயக்ரீவர், கல்வியின் கடவுள் சரசுவதி. அந்த சரசுவதிக்கு ஆசானாக திகழ்ந்தவர் ஹயக்ரீவர். இவர் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளில் முதலாவதாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இவரை திருவோண நட்சத்திரம்
மற்றும் புதன்கிழமைகளில் ஏலக்காய் மாலை சாத்தி தேன் மற்றும் துளசியுடன் பிரார்த்தனை செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு ஞானசக்தி ஏற்படுவதுடன் அவர்களின் கல்வி வளர்ச்சிகளும் மேன்மை பெறும். பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன் நம் வேண்டுதல்களை சௌந்தரவல்லி தாயாரிடம் சமர்ப்பித்தால், அவர் மூலமாக
நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் சௌவுந்தரவல்லி தாயார் சன்னதியில் 14 தனித்தனி தூண்களும், 2 இசை தூண்களும் உள்ளன. இந்த தூண்கள் சிறந்த சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. இவை அனைத்தும் ஒரே கல்லால் ஆனவை! இந்தத் தூண்களில் சக்கரத்தாழ்வார், வைகுண்டநாதர், ராமர்,
ஊர்த்தவ தாண்டவர், இரண்ய யுத்தம், மன்மதன், உலகளந்த பெருமாள், கார்த்தவீரிய அர்ச்சுனன், மகாவிஷ்ணு, அகோர வீரபத்திரர், தில்லை காளி, இரண்ய சம்ஹாரம், ரதி ஸ்ரீ வேணுகோபாலன் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர நின்ற நிலையில் விநாயகரும் எழுந்தருளியுள்ளார்.
இது தவிர புகழ்பெற்ற 2 இசை தூண்களிலும் தட்டினால் ஏழு ஸ்வரங்கள் எதிரொலிக்கிறது. தும்பிக்கை ஆழ்வார்தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், ராஜகோபுரத்தில் உள் நுழைந்த உடன் தெற்கு நோக்கி எழுந்தருளி உள்ள விஸ்வக் சேனரை வணங்கி ஆலயத்துக்குள் பிரவேசம் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து
பரிவார சன்னதிகளில் தென்பகுதியில் முதலாவதாக நம்மாழ்வார் எழுந்தருளி உள்ளார். இவரை அடுத்து தும்பிக்கை ஆழ்வார் என்று வைணவத்தில் அழைக்கப்படும் விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. பின் மேற்கூரிய அனைத்து தெய்வங்களையும் வரிசையாக தரிசிக்கலாம். நம் வாழ்க்கையில் நிச்சயம் தரிசிக்க வேண்டிய மிக
முக்கிய கோவில் இது.
திண்டுக்கலில் இருந்து 18 கி.மீ தொலைவில் கரூர் - சேலம் நெடுஞ்சாலையில் உள்ளது.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
@threadreaderapp unroll
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவாமகா பெரியவாளின் இளமைக் கல்வி பற்றி எஸ்.கணேச சர்மா தட்டச்சு வரகூரான் நாராயாணன். காமகோடி பீடம் ஸர்வக்ஞ பீடம் எனப்படும். இதன் பொருள் எல்லாம் தெரிந்தவர் என்பது. 5 ஆண்டுகள் வேத,வேதாந்தம் முதல் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தை யும் நம் ஆசார்யர் கற்றறிந்தார். திருச்சிக்கு
அருகிலுள்ள மகேந்திரமங்கலம் என்ற இடத்தில் பெரியவாளுக்கு படிப்பு தொடர்ந்தது. இறைவனே இறங்கி வந்திருக்கிறார் என்ற உண்மை தெரிந்தவர்களுக்கு பெரியவா படித்துத் தான் எதையும் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுவது நியாயமே. உலக மரியாதையை ஒட்டித்தான் அவர் இந்த ஏற்பாட்டுக்கு உட்பட்டிருக்க
வேண்டும். ஆனால் படித்த முறையில் அவர் தன்னை மறைக்க முடியாமல் வெளிப்படுத்திய சம்பவங்கள் உண்டு. இவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவர்கள் அந்தக் கால கட்டத்தில் பெரிய மேதைகள். அவர்கள் மற்ற இடங்களிலிருந்து கும்பகோணத்திலும், மகேந்திரமங்கலத்திலும் பெரியவாளுக்குப் பாடம் சொல்லித் தருவதற்கு
மலையடிப்பட்டிக்குச் சென்றால் 5 கோலங்களில் பெருமாளையும், 8 கோலங்களில் லட்சுமியையும் தரிசனம் செய்யலாம். 1300 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில் #மலையடிப்பட்டி_கண்_நிறைந்த_பெருமாள் கோவில். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து
கிள்ளுக்கோட்டை வழியாகச் சென்றால் 17 கிமீ தொலைவில் உள்ளது இந்தக் கோயில். நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும், அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர், நரசிம்மர் மற்றும் பரமபதனாத வடிவிலும், கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகவும் பெருமாள் காட்சிதருகிறார். ஆதிசேஷன் மேல் பள்ளிகொள்ளும் அரங்கனின் திருவடி
அருகே பூதேவி, நாபிக்கமலத்தில் பிரம்மா, சுற்றிலும் அஸ்வினி, தேவர்கள், கின்னரர், கிம்புருடர் அப்ஸரஸ்கள் சூழ திவாகரமுனிக்குக் காட்சிகொடுத்தபடி இருக்கிறார். பெருமாளுக்கு அருகிலேயே #திவாகர_முனி அமர்ந்து அருளுகிறார்.
அரங்கர் திருமார்பில் ஒரு லட்சுமியும், புண்டரீகப் பெருமாள் மற்றும்
#SriDurga_Sapt_Sloki is a collection of seven shlokas from Devi Mahatmyam or Durga Saptashati, which is a sacred text containing 700 verses describing Devi as the primordial force behind the creation of the Universe. Let us chant it with devotion for the grace of Goddess Durga.
#MahaPeriyava
Written by Mrs Saraswathi Thiagarajan
When I was 15 years old my mother used to fall sick very often. Ours was a big family. My father traveled a lot for his business. Though we had household help it was difficult to manage the family properly. Once my father went
for the Dharshan of Maha Periyava and explained the family situation. Periyava immediately said ask your daughter to chant #Durga_Sabdha_Sloki every day and gave instructions as to how it should be chanted. My father said I have gotten my daughters married. Periyava replied, why
you have one daughter to be married yet, ask her to chant. My father came and told me. I learnt from him the way it should be chanted. Must place a manai (wooden plank asana) in the north east corner of the house, put rangoli and keep a plate on top of it with rice spread all
#மச்சாவதாரம் #மத்ஸ்யாவதாரம்
படைக்கும் தொழிலைச் செய்பவர் பிரம்மன். பிரம்மன் உறங்கும் காலமே உலகத்தின் பிரளய காலமாகும். மீண்டும் அவர் விழிக்கும்போது புது உலகம் சிருஷ்டிக்கப் படும். அவர் ஒரு சமயம் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் வாயிலிருந்து வேதங்கள் கீழே விழுந்து விட்டன. என்ன
அச்சமயத்தில், குதிரை முகம் கொண்ட ஹயக்கிரீவன் என்னும் அசுரன் வேதங்களை அபகரித்துக் கொண்டான். வேதங்களின் உதவியால் தான் பிரம்மன் படைக்கும் தொழிலை் செய்து வருகிறார். அதைக் கெடுக்கவே ஹயக்கிரீவன் அவ்வாறு செய்தான். அப்போது மகாவிஷ்ணுவை நோக்கி, சத்தியவிரதன் என்ற ராஜரிஷி நீரையே உணவாகக்
கொண்டு தவம் செய்து கொண்டிருந்தார். அவர் பூஜைக்காக நதி நீரைக் கையில் அள்ளும் போது, கையில் ஒரு சிறு மீன் காணப்பட்டது. அந்த மீன் மகாவிஷ்ணுதான் என்பதை அறியாத முனிவர், அந்த மீனை மீண்டும் நீரில் விட முயலும் போது, அந்த மீன், "மகரிஷியே என்னை நீரில் விடாதீர்கள். பெரிய மீன்கள் என்னை